செவ்வாய், 10 ஜனவரி, 2012

அதிசயம் ஆனால் உண்மை

செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ரூ. 5 1/2 கோடி பரிசு விழுந்ததாகக் கூறி நூதன மோசடி. என்ஜினீயரிங்க் மாணவர் ரூ.5 லட்சம் பறி கொடுத்தார். தினத்தந்தி செய்தி 10-1-2012.

இதைப் படித்தவுடன் எனக்குத் தோன்றிய ஒரு திட்டம். அதன் விளம்பரத்தை தொடர்ந்து பார்க்கவும்.

அதிசயம் ஆனால் உண்மை.

தமிழ் நாட்டின் செல்போன் உபயோகிப்பாளர்களே. அதிர்ஷ்டம் உங்கள் வீட்டுக்கதவை தட்டுகிறது. விட்டு விடாதீர்கள்.

ஒரு தென் ஆப்பிரிக்க வைர சுரங்க அதிபர் தன்னுடைய கோடிக்கணக்கான சொத்துக்களை தமிழ்நாட்டு செல்போன் உபயோகிப்பாளர்களுக்காக விட்டுச் சென்றிருக்கிறார்.

உங்கள் செல்பொன் நம்பரில் இரண்டு தடவை பூஜ்யம் இருக்கிறதா? நீங்கள் அதிர்ஷ்டசாலி. உங்களுக்கு 10 லட்சம் பரிசு காத்திருக்கிறது.

நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் இதுதான். உங்கள் பேங்க் அக்கவுன்ட் நெம்பர் மற்றும் உங்கள் ரேசன் கார்டு காப்பியுடன் வருகிற 11-1-11 ந் தேதி சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் வெயிட்டிங்க் ஹாலில் காத்திருக்கவும். உங்களை அடையாளம் காண்பதற்காக கருப்புச் சட்டையும் வெள்ளை பேன்ட்டும் போட்டுக்கொண்டு வரவும்.

உங்கள் பரிசுத்தொகை அங்கேயே ரொக்கமாக கொடுக்கப்படும். அதை கொண்டு போகத் தேவையான அளவு பைகளை நீங்களே கொண்டு வரவும். கம்பெனியின் நிர்வாகச் செலவுகளுக்காக ஒரு 10000 ரூபாய் கொடுக்க வேண்டும்.

முந்துங்கள். அதிர்ஷ்டம் ஒரு தடவைதான் கதவைத் தட்டும். தவறவிடாதீர்கள்.

இந்தக் கம்பெனியில் கூட்டு சேர விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.11 கருத்துகள்:

 1. நூதன மோசடி அப்படீன்னு தினத்தந்திக்காரன் போட்டிருக்கானே, அப்படி இதில் என்ன நூதனம் இருக்கிறது? காலம் காலமாக நடப்பதுதானே!

  பதிலளிநீக்கு
 2. சென்னைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நான் தேதியை 11-1-11 என்று போட்டிருந்தாலும் நாளைக்கு மாக்கான்கள் யாராவது சென்டிரலுக்கு வர வாய்ப்புள்ளது. யாராவது சென்டிரலுக்குப் போனால், அப்படி மாக்கான்கள், யாரும் வந்திருந்தால் ஒரு போட்டோ எடுத்து அனுப்பும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. இந்த கம்பெனியில் சேர என்னன்ன தகுதிகள் வேணும்னு சொல்லலையே..?

  பதிலளிநீக்கு
 4. எனக்கு இதுபோல அடிக்கடி SMS தகவல்கள் வருவதுண்டு. அவற்றை உடனடியாக Delete செய்து விடுவேன்.

  விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. பயனுள்ள பதிவு
  எனக்கும் அப்படி நிறைய இ.மெயில் வந்தது நிஜம்
  நல்லவேளை நான் ஏற்கெனவே நிறைய தகவல்கள்
  கேட்டிருந்தபடியால் மாட்டிக் கொள்ளவில்லை
  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 6. இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. எளிதாக ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் புதிது புதிதாக , அதிசயமான திட்டங்களுடன் வந்து கொண்டே இருப்பார்கள் போல..... :-))))

  பதிலளிநீக்கு
 8. ஹா,,,ஹா,,,, விசயத்தை நக்கலா சொல்லி இருக்கீங்க...

  காசுக்காக தானே ஏமாளியும், ஏமாற்றுபவனும்???!!!

  பதிலளிநீக்கு
 9. உங்கள் கைவசம் நிறைய திட்டம் இருக்கும் போலிருக்கிறதே? உஷாராய்யா உஷாரு

  பதிலளிநீக்கு
 10. அடடா எத்தனை விதமான திட்டங்கள் உங்க கிட்ட இருக்கு... :)))))

  பதிலளிநீக்கு