வெள்ளி, 13 ஜனவரி, 2012

பாதி கிணறு தாண்டினால் போதுமா?



சிலரிடம் ஏதாவது ஒரு பொறுப்பான வேலையை ஒப்படைத்துவிட்டு சிலநாள் கழித்து அதைப் பற்றிக் கேட்டால்முக்கால்வாசி முடிஞ்சிட்டுதுங்கஎன்ற பதில் வரும். இதற்கு என்ன அர்த்தம் என்றால் அவர் அந்த வேலையைப் பற்றி இதுவரையிலும் எதுவும் செய்யவில்லை என்று அர்த்தம்.

அந்த வேலை நடக்கவேண்டுமென்றால் அதை நீங்களே செய்து முடிப்பது உத்தமம். ஒரு வேலை செய்ய ஆரம்பித்தால் அதை முழுவதும் செய்து முடிப்பவனே செயல் வீரன். முக்கால்வாசி முடிந்தது, முக்காலே மூணு வீசம் முடிந்தது என்று சொல்வதெல்லாம் கவைக்குதவாது.

கிணற்றை தாண்டுவதென்றால் முழுவதும் தாண்டினால்தான் கிணறு தாண்டியதாக அர்த்தம். 99 % தாண்டிவிட்டேன் என்றாலும் கூட அதனால் பலன் இல்லை. கிணற்றுக்குள்தான் விழவேண்டிவரும். ஆகவே எந்த வேலை செய்தாலும் அதை முழுமையாக செய்து முடித்தால்தான் விரும்பிய பலன் கிடைக்கும்


6 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஜயா நல்ல ஒரு கருத்தை சொல்லியிருக்கிறீங்க

  பதிலளிநீக்கு
 2. ஏண்ணே.. எங்களுடைய பொறுப்பான வேலையே.. “பாதி கிணறு தாண்டுவதுதான்”..
  அப்புறம் எப்படி, நாங்க எங்க வேலைய முடிக்கலேனு சொல்லுவீங்க?..

  ஹிஹி

  பதிலளிநீக்கு
 3. ஜயா வணக்கமுங்க!உங்க தளத்துக்கு இப்பதான் மொத தடவையா வரேன்!கிணறு தாண்டுறதுன்னா முழுசா தாண்டணும்!நேசம் தாங்க!!!!!

  பதிலளிநீக்கு
 4. ஆள்காரன் செஞ்சா அந்திமம்.
  மகன் செஞ்சா மத்திமம்
  தான் செஞ்சா உத்தமம்.

  இத எங்க அப்பா அடிக்கடி சொல்வாருங்கண்ணா....

  அவ்வ்...

  பதிலளிநீக்கு
 5. தற்கொலை செஞ்சிக்கலாமுன்னு போய்ட்டு பாதியிலேயே மனசு மாறி வந்தா ......ஹி...ஹி.... :-)))))

  பதிலளிநீக்கு