சமீபத்தில் ஒரு
நாள் என்
மச்சினன் வந்திருந்தான்.
அவன் வரும்போது
நான் கணினியில்
மும்முரமாக இன்டர்நெட்டில்
பிளாக் பார்த்துக்
கொண்டிருந்தேன். அவன்
வந்ததைக் கூட
கவனிக்கவில்லை. அவனாக
என்னைக் கூப்பிட்டபோதுதான்
அவன் வந்திருப்பது
தெரிய வந்தது. பிறகு
நடந்ததைப் பாருங்கள்.
மச்சினன்:
என்னங்க மாமா, நான்
வந்ததக் கூடப்
பாக்காமெ என்ன
பண்ணிட்டிருக்கீங்க?
மாமா:
வா மாப்ளே, கம்ப்யூட்டரில்
இன்டர்நெட் பார்த்திட்டிருக்கேன்.
மச்சினன்:
இன்டர்நெட்னா அது
என்னங்க மாமா?
மாமா:
டேய், அதெல்லாம்
சொன்னா உனக்குப்
புரியாதுடா.
மச்சினன்:
உங்களுக்குச் சொல்லத்
தெரியல்ல, அத
மறைக்கறதுக்கு இந்த
சமாதானம் சொல்றீங்க.
மாமா:
டேய், அது
தெரியாமயா கம்ப்யூட்டர்
வாங்கி வச்சிருக்கிறேன்.
மச்சினன்:
அப்போ எனக்கு
இன்டர்நெட்டுன்னா என்னன்னு
சொல்லுங்க.
மாமா: அது
ஒரு பிரபஞ்சம்
மாதிரி. ஆரம்பம்
எது, முடிவு எதுன்னே
தெரியாது. சுரங்கத்தை
வெட்டினா எப்படி
போய்ட்டே இருக்குமோ
அந்த மாதிரி
இதுலயும் போய்ட்டே
இருக்கும். சில
சமயம் உள்ளே
போய்ட்டு வெளில
வரமுடியாமயும் போயிடும்.
மச்சினன்: அதுல
நீங்க என்ன
பண்ணறீங்க.
மாமா:
நானா, அதுல
பிளாக் எழுதறேன்.
மச்சினன்: அதென்னங்க
பிளாக்கு, அப்படீன்னா
என்னங்க மாமா?
மாமா: அது
வந்து இன்டர்நெட்
ஒரு பெரிய
உலகம்னு சொன்னனில்லயா?
அதுல ஒரு
ஊர்ல ஒருத்தன்
பெரிய சுவர்
கட்டி உட்டுருக்கான்.
யார் வேணும்னா
போயி அந்த
செவுத்தில அவங்கவுங்களுக்கு
தோண்றத எழுதி
வச்சுக்கலாம். அதுதான்
பிளாக்கு.
மச்சினன்: ஏன்
மாமா அப்ப
அந்த செவுத்த
கட்டி வச்சிருக்கிறவன்
ஏதாச்சும் வாடகை
கேக்கமாட்டானா?
மாமா: இப்பத்திக்கு
சும்மாதான் கொடுத்திருக்கான்.
பின்னாடி எப்பவாச்சும்
காசு கேட்டாலும்
கேப்பான். அப்படி
காசு கேட்டான்னா,
இப்ப பிளாக்
எழுதிட்டு இருக்கறவென்லாம்
துணியக் காணோம், துண்டக்
காணோம்னு ஓடிப்போயிடுவாங்க.
மச்சினன்: இப்படி
பிளாக் எழுதறீங்களே,
அதனால என்ன
வருதுங்க மாமா?
மாமா: ஒரு
சிங்கிள் டீக்குக்
கூட வக்கில்லே
மாப்பளே.
மச்சினன்: அப்பறம்
எதுக்கு இந்த
கசமாலத்தைக் கட்டீட்டு
அளுகிறீங்க, மாமா?
மாமா: அதுல பாரு மாப்ள,
இந்த பிளாக்
எழுதறது சீட்டாட்டம்
மாதிரி. காசு
வருதோ இல்லையோ,
காலைல எந்திருச்ச
ஒடனே கம்ப்யூட்டரத்
தொறந்து பிளாக்கப்
பாக்கலீன்னா பைத்தியம்
புடிச்ச மாதிரி
ஆகிப் போகுது
மாப்ள.
மச்சினன்: அக்கோவ்,
மாமாவுக்கு பயித்தியம்
நல்லா முத்திப்போச்சு,
அதுக்கு மந்திரிக்கோணும்
அக்கா, எங்கூர்ல
ஒரு நல்ல
மந்திரவாதி இருக்கான்
அக்கா, நான்
இப்பவே போயி
அவன கூட்டிட்டு
வந்து ஒரு
மண்டலம் மந்திரிச்சாதான்
மாமா வழிக்கு
வருவாரு அக்கா.
அக்கா: என்னமாச்சும் பண்ணி உங்க மாமாவை இந்தப் பயித்தத்திலிருந்து காப்பாத்திடறா
தம்பி.
மச்சினன்: இப்பவே
ஊருக்குப் போறேன்
அக்கா.
முற்றிற்று
வணக்கம்!
பதிலளிநீக்குஇண்டர்நெட் > சுரங்கம் : பிளாக்கு > பெரிய சுவர், கிறுக்கல்கள்
நல்ல ஒப்புவமை.. உங்க மச்சான் ஊர் மந்திரவாதியைப் பற்றி அந்த பெரிய சுவரில் அறிவிப்பு செய்தால் நிறைய பேருக்கு பிரயோசனமாய் இருக்கும். கலைவாணர் என்.எஸ்.கே யின் நகைச்சுவை போன்று சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது
Dear sir,
பதிலளிநீக்குThe nigalvu made me smile. But i do not know why all gents like to bully their machhinans.
Narmi
மந்திர வாதி வந்து மாமா சரியாகிவிட்டர்னா ஒரு பதிவு போடுங்க இங்க நிறைய பேருக்கு மந்திரிக்க வேண்டி இருக்கு,
பதிலளிநீக்குநகைச்சுவையாய் உண்மையை சொல்லியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குAbdul Basith
பதிலளிநீக்கு//முற்றிற்று//
எது?
கற்பனை நாடகம் முற்றிற்று.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஇனிய காலை வணக்கம் ஐயா,
பதிலளிநீக்குயதார்த்தத்தினை மாமன், மருமகன் உரையாடல் மூலமா அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.
எதற்கும் நாம் அடிமையாகாத வரைக்கும் பிரச்சினையே இல்லை!
உண்மையில் ப்ளாக் எழுதுவதும் ஒரு வித போதை போல் ஆகிப் போட்டுதுங்க.
செம காமெடி !
பதிலளிநீக்குஹா..ஹா... நிதர்சன உண்மையை உணர்த்தியுள்ளது தங்கள் உரையாடல் பகிர்வு....
பதிலளிநீக்கு//முற்றிற்று// எது? கற்பனை நாடகம் முற்றிற்று//
பதிலளிநீக்குஉண்மை நிலையை பதிந்திருக்கிறீர்கள்
(அவர் கேள்வியில் 'பைத்தியமா' என்பது போல தொணிக்கிறதே!
//வியபதிJan 30, 2012 04:07 AM
பதிலளிநீக்கு//முற்றிற்று// எது? கற்பனை நாடகம் முற்றிற்று//
உண்மை நிலையை பதிந்திருக்கிறீர்கள்
(அவர் கேள்வியில் 'பைத்தியமா' என்பது போல தொணிக்கிறதே!//
சந்தேகம் துளியும் வேண்டாம். பைத்தியமேதான். Confirmed.
மன்னிக்கவும் ஐயா! பதிவில் உள்ள கற்பனைக்கு ஏற்றவாறு தான் அப்படி நகைச்சுவையாக கருத்திட்டேன். தற்போது அதனை நீக்கிவிட்டேன். தங்கள் மனம் புண்பட்டிருந்தால் தயவு செய்து என்னை மன்னிக்கவும். தங்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்.
நீக்குஅன்புள்ள அப்துல் பசீத்,
நீக்குநான் இன்னும் இரண்டு வருடங்களில் 80 -வது வயதைத் தொட இருக்கிறேன். வாழ்க்கையை அதன் ஓட்டத்திலேயே அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். எதிர் நீச்சல் போடுவது இல்லை. யார் பேரிலும் எதற்காகவும் வருத்தம் வருவது இல்லை.
மன்னிக்கத் தேவையான குற்றம் நீங்கள் எதிவும் செய்ததாக நான் நினைக்கவில்லை.
இனிதாகப் பழகுவோம்.
நன்றி ஐயா!
நீக்குஇதே கூத்து தானுங்கோ எங்க வீட்லயும், வீட்டு அம்மிணி நெதம் இந்த ப்ளோக்ல என்னத்த எழுதறே, முகம் தெரியாத மக்களோடு பேசறே, இங்கனேயே இருக்கேரே என்கிட்டே பேச மாட்டின்கேறேனு ஒரே ரெவ்சு
பதிலளிநீக்கு//மாமா: அதுல பாரு மாப்ள, இந்த பிளாக் எழுதறது சீட்டாட்டம் மாதிரி. காசு வருதோ இல்லையோ, காலைல எந்திருச்ச ஒடனே கம்ப்யூட்டரத் தொறந்து பிளாக்கப் பாக்கலீன்னா பைத்தியம் புடிச்ச மாதிரி ஆகிப் போகுது மாப்ள. //
பதிலளிநீக்குVERY VERY CORRECT. அதே அதே !
//முற்றிற்று//
பதிலளிநீக்குஎன்ன பைத்தியமா?
...\\\\\\\\\\\\\
சும்மா விளையாட்டுக்குத்தான்
அருமையாகச் சொல்லி இருக்கின்றீர்கள். அனேகமாக எல்லா வீட்டிலேயும் நடக்கும் சம்பாஷனை தான் . தெரியாமலா மன அலை என்று பெயர் வைத்திருக்கின்றீர்கள். அழகாகச் சொல்லுங்கள் ஐயா எனக்கு அதி ஆத்மா திருப்தி இருக்கின்றது என்று. ஒரு வேளை அதுவும் அலுத்து விடுமோ தெரியாது. இதுதானே வாழ்க்கை
பதிலளிநீக்குமச்சினன்: அக்கோவ், மாமாவுக்கு பயித்தியம் நல்லா முத்திப்போச்சு, அதுக்கு மந்திரிக்கோணும் அக்கா, எங்கூர்ல ஒரு நல்ல மந்திரவாதி இருக்கான் அக்கா, நான் இப்பவே போயி அவன கூட்டிட்டு வந்து ஒரு மண்டலம் மந்திரிச்சாதான் மாமா வழிக்கு வருவாரு அக்கா.
பதிலளிநீக்குமந்திரிச்சா அக்காகிடே சொல்லி எல்லோருக்கும் ஒரே நேரத்தில் மந்திரிச்சி விடச்சொல்லுங்க ஐயா...
நல்லாதான் மந்திரிச்சு விட்ட கோழிமாதிரி காலையிலிருந்து கணிணியைக் கொத்திக்கிட்டிருக்காங்க..
மந்திரவாதிகிட்ட மொத்தமா ஒரு ரேட் பேசிடலாமுங்க.
நீக்குஅதுல பாரு மாப்ள, இந்த பிளாக் எழுதறது சீட்டாட்டம் மாதிரி. காசு வருதோ இல்லையோ, காலைல எந்திருச்ச ஒடனே கம்ப்யூட்டரத் தொறந்து பிளாக்கப் பாக்கலீன்னா பைத்தியம் புடிச்ச மாதிரி ஆகிப் போகுது மாப்ள. //
பதிலளிநீக்குஉண்மை தான் சார்.
இன்று வலைச்சரத்தில் ஸாதிகா இந்த கற்பனை கதையை குறிப்பிட்டு இருந்தார்கள்.
மிகவும் ரசித்து சிரித்தேன்.
ஸாதிகாவுக்கு மிக்க நன்றி.
நீக்கு