திங்கள், 14 ஜனவரி, 2013

நல்ல குளியல் அறை அமைப்பது எப்படி?

நான் கட்டிடப் பொறியாளன் இல்லை. ஆனால் கட்டிட அமைப்புகளில் ஆர்வம் மிக்கவன். எங்கள் வீட்டுக் குளியலறையில் நானே டிசைன் செய்து அமைத்தவைகளை இங்கே பகிர்ந்துள்ளேன். இதற்கு மேல் பலமடங்கு வசதிகளும் டிசைன்களும் கொண்ட பாத் ரூம்களை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் ஒரு நடுத்தரக் குடும்பத்தில், பாத்ரூமை அதிக செலவில்லாமல் எப்படி அமைக்கலாம் என்று இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் படம் மட்டும் கூகுளில் இருந்து எடுத்தது.
மற்ற படங்கள் அனைத்தும் என் வீட்டில் எடுத்தது.

குளியலறை குறைந்தது 50 சதுர அடியாவது இருக்கவேண்டும். அதில் ஒரு புறம் டாய்லெட் இருக்கும். வெஸ்டர்ன் டைப் டாய்லெட்டே சிறந்தது. வயதானபின் இந்த உண்மையை எல்லோரும் உணர்வார்கள்.

அதை அடுத்து குளிப்பதற்கான இடம். அதற்கடுத்து உடை மாற்றுவதற்கான இடம். இந்த இடம் குளிக்கும் இடத்தைவிட சிறிது உயரமாக இருக்கவேண்டும். அப்போதுதான் இந்த இடம் ஈரமாகாமல் இருக்கும்.

குளியலறையில் தண்ணீர் எங்கும் தேங்காமல் வடிந்து போகவேண்டும். இதை பாத்ரூம் தரை அமைக்கும்போது கூடவே இருந்து சரி பார்க்கவேண்டும். இல்லாவிட்டால் கொத்தனார்கள் சொதப்பி விடுவார்கள்.

இந்தப் பதிவில் கொடுத்திருக்கும் வசதிகள் ஒரு மத்தியதரக் குடும்பத்திற்கானது.

1.  வெஸ்டர்ன் டைப் டாய்லெட். (மூடியிருக்கிறது)


உபயோகத்திற்காக திறந்திருக்கும்போது


பிளஷ் டேங்க்



2. குளிக்கும் இடமும் அதற்கான வெந்நீர், தண்ணீர் பைப்புகளும். (மிக்சிங்க் டைப்)


புதிதாக உபயோகப்படுத்துபவர்கள் வெந்நீர் மற்றும் தண்ணீர் எதில் வரும், இந்தப் பைப்புகளை உபயோகப்படுத்துவது எப்படி என்று கேட்டுத் தெரிந்து கொள்வது நலம். இது தெரியாமல் உபயோகப்படுத்தினால் பைப்புகள் உடைந்து போகும். ரிப்பேர் செய்வது எளிதல்ல. அதிகம் செலவு ஆகும்.

அருகில் செல்லும் குழாய் கையில் பிடித்துக்கொள்ளும் ஷவருக்காக.


சாதாரண ஷவர்




3. முகம் கழுவும் பேசின்.


இரு பக்கத்திலும் கூடுதலாக கண்ணாடி ஸ்டேண்டுகள் இருப்பதைக் கவனிக்கவும். இந்த ஸ்டேண்டின் உபயோகத்தைக் காணுங்கள்.


4. அன்றாடம் மாற்றும் உள் ஆடைகளுக்காக தனி ரேக்குகள். இதில் தேவையான டாய்லெட் ஐட்டங்களையும் வைத்துக் கொள்ளலாம். குளிக்கப் போன பிறகு "அதை எடுத்து வா, இதை எடுத்து வா" என்று பெண்டாட்டியை ஏவ வேண்டியதில்லை.



ஒரு கடிகாரம் இருப்பதைக் கவனிக்கவும். இரவில் பாத்ரூம் உபயோகப்படுத்தும்போது நேரம் தெரிவதற்காக.

5. துண்டு போடுவதற்கான ராடு.


6. பாத்ரூம் கிளீன் செய்வதற்கான பலவகை மருந்துகள். 



குளியலறையில் எக்ஹாஸ்ட் பேனும் வெளிச்சம் வருவதற்காக கிரவுன்ட் கிளாஸ் போட்ட, திறக்க முடியாத ஜன்னலும் அவசியம். 

7. கிளீன் செய்யத் தேவையான பிரஷ்களும் அதை தொங்க விடத்தேவையான ஸ்டேண்டும்.


8. குளிக்குமுன் உடுத்தியிருந்த துணிகளைப் போட்டு வைக்க ஒரு தொட்டி அமைப்பு.


9. வழுக்கலில்லாத தரை அமைப்பு







ஒரு புறம் தரை சிறிது உயரமாக இருப்பதைக் கவனியுங்கள்.


10. வயதானவர்களுக்கு இன்றியமையாத ஒரு அமைப்பு. வயதானவர்கள் தடுமாறினால் பிடித்துக்கொள்ள வலுவான கைப்பிடிகள்.



கைப்பிடிக்கு வலது பக்கத்தில் இருப்பதுதான் "பிடெட்"

11. கால் கழுவ - பிடெட் (இதன் உபயோகம் பற்றி அடுத்த பதிவில்)


இப்பொழுதெல்லாம் தரை முதல் சீலிங்க் வரை டைல்ஸ் ஒட்டுவது என்பது அடிப்படைத் தேவையாக மாறி விட்டது. அதனால் அதைப்பற்றி தனியாகச் சொல்லவில்லை.


இந்த வகையான குளியலறையைக் கட்டுவது பெரிதல்ல. அதை முறையாகப் பயன்படுத்துவதுதான் மிகவும் முக்கியம். அதைப்பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். 

27 கருத்துகள்:

  1. உங்கள் அனுபவத்தில் சிறப்பான யோசனைகளை வடிவமைத்து இருக்கிறீர்கள். முக்கியமாக குளியறையின் தரை வழுக்காமல் இருக்கும்படி எப்போதும் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியான நீட்டிக் கொண்டிருக்கும் பொருட்களை சரியான முறையில் வைக்க வேண்டும்.
    எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.

      நீக்கு
  2. அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு
    படங்களுடன் சொல்லிய விதமும் அருமை
    பகைர்வுக்கு நன்றி.தொடர வாழ்த்துக்கள்


    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி, ரமணி அவர்களே. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. நன்றி. உங்களுக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

      நீக்கு
  4. படங்களோடு கூடிய விளக்கங்கள் இனி குளியலறை கட்டுவோருக்கு உதவும் குறிப்பு என்பதில் ஐயமில்லை.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு !

    படங்களுடன் சொல்லிய விதமும் அருமை

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. பயனுள்ள அனுபவப்பகிர்வுகள் ..

    இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. பயனுள்ள பதிவுகள்.அய்யாவிற்கு உள்ளம் கனிந்த பொங்கால் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. மிக அருமையான அனைவருக்கும் பயன்படும் பதிவு.. படங்களும் அருமை. பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. வெஸ்டர்ன் டாய்லெட், கைப்பிடி இரண்டும் இது அனுபவப் பகிர்வு என்பதை தெளிவாகச் சொல்லுகின்றன. உங்களின் எழுத்துக்களை அப்படியே வழி மொழிகிறேன்.

    இன்னொன்று குளியறை எப்போதுமே உலர் நிலையில் இருப்பது மிக மிக முக்கியம். (இதைத்தான் நீங்கள் தண்ணீர் எங்கும் தேங்காமல் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்)

    சில வீடுகளில் குளியறையின் உள்ளே லைட் சுவிட்சுகள் இருக்கும். அப்படி இல்லாமல் வெளியே இருப்பது அவசியம். முதலில் விளக்கைப் போட்டு விட்டு பின் குளியலறையில் நுழையலாம். வீட்டிற்குப் புதிதாக வருபவர்களுக்கு இது உதவிகரமாக இருக்கம்.வயதானவர்கள் தடுமாற வேண்டாம்.

    இதையெல்லாம் அடுத்தடுத்த பதிவில் சொல்வீர்கள், ஆனாலும் முந்திக் கொண்டு விட்டேன்.





    பதிலளிநீக்கு
  10. நல்லதொரு பகிர்வு.ஜன்னல் கண்ணாடிபற்றிக் கேள்ப் பட்டதில்லை. பாதுகாப்பிக்கு இது ரொம்ப நல்லது. உபயோகமானபல விஷயங்கள்.எங்கள்வீட்டிலும் இந்தக் கைப்பிடிகள் போட்டிருக்கிறோம். முழங்கள் வலிக்கு இவை உபயோகமாக இருக்கும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  11. இப்படி நம் தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப கட்டுவதை விட்டுவிட்டு, வாஸ்த்து பிரகாரம், கழிப்பிடமும் குளியல் அறையும் அருகில் இருக்கக்கூடாது என்று ஏதோ உளறலை நம்பி தாறுமாறாக கட்டுபவர்கள்தான் அதிகம். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  12. மிகவும் யோசித்து, நல்ல பயனுள்ள முறையில் அமைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்திற்கு மிக்க நன்றி, ஸ்ரீராம். உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

      நீக்கு
  13. அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு
    படங்களுடன் சொல்லிய விதமும் அருமை
    பகைர்வுக்கு நன்றி.தொடர வாழ்த்துக்கள்


    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. அருமையான பயனுள்ள பதிவு.
    நன்றி ஐயா.
    எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. பகிர்வுக்கு நன்றி. தமிழ்நாட்டில் ஷவர் ஹெட்ஸ் மற்ற் பாகங்கள் எங்கு கிடைக்கின்றன என்பதைப் பற்றியும் எழுதவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்து பாத்ரூம் சாதனங்களும் கோவையில் கிடைக்கின்றன. சென்னையிலும் பெங்களூரிலும் கிடைக்கும். வாங்கும்போதே நல்ல தரமானவைகளை வாங்கவேண்டும். உங்கள் வீட்டில் நல்ல தண்ணீர் இல்லாவிட்டால் அவைகள் சீக்கிரம் மங்கிப்போகும். இதைத் தவிர்க்க நல்ல வாட்டர் ட்ரீட்மென்ட் மெஷின் வைக்கவேண்டும். அது ஒன்றும் அதிக செலவில்லை.

      நீக்கு
  16. நன்றாக கட்டி இருக்கிறீர்கள் .குளிப்பதற்கு கண்ணாடி தடுப்பு சுவரும் ,குளியல் தொட்டியும் இருந்தால் அசல் வெளி நாட்டு குளியல் அறை தான் .இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  17. பயனுள்ள பதிவு ஐயா. திட்டமிட்டு சிறப்பாக அமைத்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  18. Hot water tap must be higher level,to keep the bucket at higher level, so that you need not bend to take water while bathing especially at old age.
    Either western or indian closet the P tet or water tap must on the right side so that water can easily used by right hand.
    I am sorry I tried to write in Thamizh but the blog does not accept. I do not how to post Thamizh in this.
    Kumar

    பதிலளிநீக்கு