செவ்வாய், 8 ஜனவரி, 2013

மருமகன்களுக்குப் பிடித்த மாமனார் எப்படியிருப்பார்?


வர வர பதிவுகளுக்கு சப்ஜெக்ட் தேத்தறது கஷ்டமாப் போச்சுதுங்க. எத்தனை நாட்களுக்கு விவகாரமில்லாத சப்ஜெக்டுகளை வைத்தே காலத்தை ஓட்டறது? அதனால கொஞ்சம் வெவகாரமான சப்ஜெக்டைப் பிடித்திருக்கிறேன். நண்பர் ஸ்ரீராம் தன் பின்னூட்டத்தில் ஒரு சப்ஜெக்ட் கொடுத்து உதவியிருக்கிறார்.

இது பெரிய உதவி அல்லவா? அவருக்கு மிக்க நன்றி.

பதிவிலிருந்து விலகி ஒரு கேள்வி... ஏன் மாமனாருக்கும் மருமகன்களுக்கும் ஒத்துக் கொள்வதேயில்லை?!! அதுபோலவே நாத்தனார் Vs அண்ணி..!

நான் மருமகனாக இருந்து இப்போது மாமனாராக இருக்கிறேன். எனக்கு மூல நட்சத்திரம் ஆனதால் மாமனார் இல்லாத வீட்டில் பெண்ணைக் கட்டினேன். ஆகவே எனக்கு மாமனாரை விரட்டும் பாக்கியம் இல்லாமல் போயிற்று.

எனக்கு இரண்டு பெண்கள். ஆகவே இரண்டு மாப்பிள்ளைகள்.

பொதுவாக அனைத்து தகப்பனார்களுக்கும் பெண் குழந்தைகள் பேரில்தான் பாசம் அதிகமாக இருக்கும் என்று சொல்வார்கள். எனக்கு இரண்டும் பெண்கள் என்பதால் இந்த வித்தியாசத்தை நான் அனுபவித்ததில்லை.

இந்த இயற்கையினால், பெண்ணுக்கு கல்யாணம் ஆகும்போது தன் சொத்தைப் பறிகொடுத்தது போல், ஒவ்வொரு தகப்பனும் உணருவான். தாய்க்கு அந்த உணர்வு வராது. ஏனென்றால், அவள் இந்த நடைமுறையை நன்கு அனுபவித்திருக்கிறாள்.

சொத்தைப் பறிகொடுத்தவனுக்கு, அந்தச் சொத்தை பிடுங்கி அனுபவித்துக் கொண்டிருப்பவனைப் பார்த்தால் எரிச்சல் வருவது இயல்புதானே. இதுதான் மருமகனுக்கும் மாமனாருக்கும் இடையில் வரும் பிரச்சினை.

அது போக, மாமனாரிடம் இருக்கும் மற்ற சொத்துக்ளையும் ஏன் நமக்கே, இப்பொழுதே  கொடுக்கக்கூடாது என்று ஒவ்வொரு மருமகனுக்கும் தோன்றுவது இயற்கை. இது மேலும் மேலும் பிரச்சினைகளை வளர்க்கிறது. இப்போதெல்லாம் பெண் பார்க்கப் போகும்போதே, மாமனாரின் உடல் நிலையையும் ஒரு நோட்டம் போட்டுவிடுகிறார்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருந்தால் வேறு இடம் பார்க்கலாம் என்று முடிவு செய்கிறார்கள்.

இதே மாதிரிதான் நாத்தனார்-அண்ணி பிரச்சினையும். இவ்வளவு நாளாக தங்கைக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்த அண்ணன்காரன், தனக்கு கல்யாணமானவுடன் தன் பெண்டாட்டிக்குத்தான் எல்லாம் வாங்கிக் கொடுப்பான். தங்கையை புறக்கணித்து விடுவான். இதனால் நாத்தனாருக்கு அண்ணி பேரில் பொறாமை வந்து விடுகிறது.

இது உலக இயற்கை. இந்த மனத்தாங்கல்கள் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும்.

இப்போ தலைப்புக்கு வருவோம்.

எல்லா மருமகன்களுக்கும் பிடித்த மாமனார் சொத்தையெல்லாம் மருமகன் பேரில் எழுதி வைத்துவிட்டு இப்படித்தான் சுவரில் தொங்கிக்கொண்டு இருப்பார்.



18 கருத்துகள்:

  1. அப்போ, மாமியார் மருமகள் பிரச்சினை பற்றி ஒரு பதிவையும் போடுங்களேன்?

    பதிலளிநீக்கு
  2. மண ஒற்றுமை இருந்தாலும் விவாதம் விட்டுகொடுத்தல் இல்லாத மாமனார் மருமகனுண்டோ?

    பதிலளிநீக்கு
  3. Social Science படிக்கும் மாணவர்கள் ஒரு முனைவர் பட்டம் பெரும் அளவிற்கு இதில் ஆராய்ச்சி செய்ய வாய்ப்புண்டு போல் உள்ளதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக செய்யலாம். ஏற்கனவே செய்திருந்தாலும் செய்திருப்பார்கள்.

      நீக்கு
  4. // வர வர பதிவுகளுக்கு சப்ஜெக்ட் தேத்தறது கஷ்டமாப் போச்சுதுங்க.//unmai. true. athanalthan en blog m sleeping.

    பதிலளிநீக்கு
  5. // வர வர பதிவுகளுக்கு சப்ஜெக்ட் தேத்தறது கஷ்டமாப் போச்சுதுங்க.//unmai. true. athanalthan en blog m sleeping.

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. அந்த ஆள் எதுக்கு கல்யாணம் பண்ணி பெண்ணைப் பெற்று கல்யாணம் செய்து கொடுக்கிறார்? பேசாம சாமியாராப் போகவேண்டியதுதானே!

      நீக்கு
  7. எல்லா மருமகன்களுக்கும் பிடித்த மாமனார் ...........!!????

    பதிலளிநீக்கு
  8. ஹா..ஹ்.ஹா..! வெகு நாட்களுக்குப் பிறகு ரசித்துப் படித்தேன்..வெடித்து சிரித்தேன் !

    பதிலளிநீக்கு
  9. மாமியாருக்கும், மருமகளுக்கும் ஒத்துப்போகாது. ஒன்றாக இருப்பதும் ஒரே காரணம்.
    ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம்.

    ஆனால் மாமனாருக்கும், மருமகனுக்கும் ஏன் ஒத்துப்போகாது. என்றோ சந்திக்கப் போகிறார்கள். அப்புறம் என்ன?

    //எல்லா மருமகன்களுக்கும் பிடித்த மாமனார் சொத்தையெல்லாம் மருமகன் பேரில் எழுதி வைத்துவிட்டு இப்படித்தான் சுவரில் தொங்கிக்கொண்டு இருப்பார்.//

    இதுதான் ஹைலைட்

    பதிலளிநீக்கு
  10. ஐய்யா, இதை உங்க மருமகன்கள் படிச்சிட்டாங்களா?

    பதிலளிநீக்கு
  11. \\இப்போதெல்லாம் பெண் பார்க்கப் போகும்போதே, மாமனாரின் உடல் நிலையையும் ஒரு நோட்டம் போட்டுவிடுகிறார்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருந்தால் வேறு இடம் பார்க்கலாம் என்று முடிவு செய்கிறார்கள்.\\ வேதனையான விஷயத்தையும் காமடியாக்குவதில் உங்களை அடிச்சுக்கவே முடியாது சார்!!

    பதிலளிநீக்கு

  12. திருமணம் ஆகி வந்த புதிதில் ஒவ்வொரு மனைவியும் 'எங்கப்பா இப்படிச் செய்ய மாட்டாரு' 'எங்கப்பா இப்படிச் சொல்ல மாட்டாரு', ' இதுவே எங்கப்பாவா இருந்திருந்தா' என்றெல்லாம் பேசிப் பேசியே புகை+பகை கிளப்பி விட்டு விடுகிறார்கள். எனவே அவர்களும் காரணம்! :)) இது அவர்களின் அண்ணன்கள், அதாவது மாப்பிள்ளைகளின் மச்சான்களுக்கும் பொருந்தும்!

    என் பெயர் குறிப்பிட்டு கவுரப்படுத்தியமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  13. சமூகத்தில் நடைபெறுகின்ற எதார்த்தமான உண்மை !

    நல்ல அலசல் !

    தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  14. நல்ல பதிவு சார்.

    ஸ்ரீராம்....நல்லா உணர்ச்சிவயப்படுறேள். சிரிங்க...ஆமா

    செங்கல்வராயன்
    ஊத்துக்குளி

    பதிலளிநீக்கு