சனி, 4 மே, 2013

செலவு 300 ரூபாய் வரவு 3 லட்சம்


பேராசையே பல சங்கடங்களுக்குக் காரணம் என்று பல அனுபவங்கள் மூலமாக உணர்ந்திருந்தாலும், மனிதன் அதற்கு சில சமயங்களில் இடம் கொடுத்து விடுகிறான். அதற்கு உண்டான பலனையும் உடனே அனுபவிக்கிறான்.

==================================================================
3-5-2013 தினத்தந்தி செய்தி

மதுரை திருநகரில் ஆட்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் சம்பவம்.

வங்கி முன்பு, அ.தி.மு.க. பிரமுகரிடம் 3 லட்சம் கொள்ளை.

மதுரை, மே 3.

மதுரை திருநகரில் வங்கி முன்பு, ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டு, நூதனமுறையில் ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

அ.தி.மு.க. செயலாளர்.

மதுரை திருநகர் 6 வது வார்டு அ.தி.மு.க. செயலாளர் செல்வராஜ். நேற்று காலை இவர் திருநகர், சித்ரகலா காலனியில் உள்ள ஒரு வங்கிக்குச் சென்றார். வங்கியில் 3 லட்சம் பணத்தை எடுத்து ஒரு பேக்கில் வைத்துக்கொண்டு, தனது காருக்குத் திரும்பினார்.

காரின் பின் சீட்டில் பணப்பையை வைத்துவிட்டு, காரை எடுப்பதற்காக முன் சீட்டுக்கு வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருநபர்கள், ரோட்டில் 100 ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடப்பதை காட்டி, "இந்த ரூபாய் உங்களுடையதா பாருங்கள்" என்று கூறினர். அதைப் பார்த்த செல்வராஜ் தனது பணப்பையில் இருந்து சிதறாயிருக்குமோ என்று நினைத்து சிதறிக்கிடந்த மூன்று 100 ரூபாய் தாள்களையும் எடுத்தார். இதை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், காரின் பின் சீட்டில் இருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.

சிதறிக்கிடந்த பணத்தை எடுத்தபின் காருக்கு வந்த செல்வராஜ், பின் சீட்டில் இருந்த பணப்பை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம மனிதர்கள் கீழே சில ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டு தனது கவனத்தை திசை திருப்பி, பணப்பையை எடுத்துச்சென்றதை உணர்ந்தார்.

300 ரூபாயை எடுத்து முடிப்பதற்குள் 3 லட்சத்தை இழந்துவிட்டதை நினைத்து திகைத்துப்போனார்.

====================================================================

இந்தச் செய்தியில் எனக்குப் புரியாத ஒரு பாய்ன்ட். நூதனமுறையில் இந்த திருட்டு நடந்தது என்று தினத்தந்தி குறிப்பிட்டிருக்கிறது. இந்த திருட்டில் நூதனம் எங்கே வந்தது? காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் அரதப்பழசான டெக்னிக்தானே இது.

அடுத்து ஒரு பாய்ன்ட் - இது நல்ல பிசினஸ் மாதிரி தெரிகிறது. ஆர்வமுள்ள பார்ட்னர்ஸ் விண்ணப்பிக்கவும்.

19 கருத்துகள்:

  1. பணப்பையை எதுக்கு பின் ஸீட்லே வைக்கணும்? இவர்தானே காரை ஓட்டப்போறார். கையோடு முன்பக்க ஸீட்டுலே வச்சுட்டு வண்டியை எடுக்கக்கூடாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துளசி மேடம்..... இனிமேல் அப்படித்தான் செய்வார்! :))))

      நீக்கு
    2. "இனிமே எங்கிட்ட காசு இல்லடா! என்னெ வுடுங்கடா!"

      நன்றி: "கரகாட்டக்காரன்" கவுண்ட மணி.

      :-D

      நீக்கு

  2. பத்திரிக்கையில் செய்திகளை தரும்போது, அவர்களுக்கென்று உள்ள ஒரு தனி நடையில் தான் எழுதுவார்கள். அந்த வகையில் ‘நூதனமுறையில்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் என் நினைக்கிறேன். (உ-ம்) ஒரு கூட்டம் பற்றிய செய்தியை தரும்போது, எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு கடைசியில் முடிக்கும்போது முன்னதாக கூட்டத்திற்கு வந்தோரை திரு... வரவேற்றார் என முடிப்பார்கள்.

    கடைசியில் ‘ஆர்வமுள்ள பார்ட்னர்ஸ் விண்ணப்பிக்கவும்’. என குறிப்பிட்டுள்ளீர்கள். ‘கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாது’ என்பதை மறந்துவிட்டீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுல நான் சைலன்ட் பார்ட்னர்தான். மற்ற பார்ட்னர்கள்தான் தொழிலில் ஈடுபடுவார்கள். போலீஸ்ல மாட்டினாலும் அவர்கள்தான் கம்பி எண்ணப் போவார்கள். நான் நோட்டை எண்ணுவதோடு சரி.

      நீக்கு
  3. ரொம்பப் பழைய முறையாச்சே என்று யோசிக்கும்போதே நீங்களும் அதையே குறிப்பிட்டிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  4. காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் அரதப்பழசான டெக்னிக்தானே ...!!!

    பதிலளிநீக்கு
  5. பழைய முறைதான் அய்யா. இருப்பினும் ஏமாறுகிறவர்கள் தொடர்ந்து ஏமாந்துகொண்டுதானே இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

  6. திருட்டுக்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். . கூட்டுசேரக் கூப்பிடும் உங்களை என்ன சொல்ல.....

    பதிலளிநீக்கு
  7. பக்கிப் பய புள்ள! இவ்ளோ பணத்த எடுக்கப் போறவன் தனியாவா வரணும்? கார்'ல ஒர்த்தன் தான் ஒக்கார முடியுமா? வீட்ல இருக்றவன், ஃப்ரெண்ட்'னு யாரயாச்சு கூப்டுட்டு வந்திருக்கலாம்ல? அப்டியே இருந்தாலும் பணம் செதறுனது கூடவா தெரியாம இருப்பான்? அப்டியே செதறுனாலும், 3 லட்சம் பணம் எடுக்க ஓட்டப் பையோடவா வருவான்? மட சாம்ப்ராணி!

    பதிலளிநீக்கு
  8. கையில் மூன்று லட்சம் வைத்துக்கொண்டு முன்னூறு ரூபாய்க்கு இந்த அலை அலைவானேன்?
    பேராசை பெரு நஷ்டம்!
    களவும் கற்று மற - ஐயாவின் உத்தேசம் இதுவோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, ரஞ்சனி நாராயணன். எதுவும் தெரிஞ்ச பிறகுதானே, அதுல இருந்து நம்மள எப்படி காப்பாத்திக்கிறது என்பது புரியும்?

      நீக்கு
  9. வங்கிக்கு வரும் எல்லோரும் லட்சக் கணக்கில் பணம் எடுப்பதில்லை. யார் எடுக்கிறார்கள் எப்போ வருவார்கள் என்று நோட்டம் விட்ட பின்னரே அடிக்க முடியும். அப்படிப் பார்த்தால் அந்த நபர்கள் அங்கேயே சுத்திக் கொண்டிருப்பவர்களாகத்தான் இருக்கணும். வங்கி காவலரோ பணத்தை பரி கொடுத்தவரோ முயன்றால் அவர்களை அடையாலம் கான முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். வங்கி காவலாளிக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.

      நீக்கு
  10. பெரிய தொகை வங்கியில் இருந்து எடுத்து வரவேண்டுமென்றால் துணையுடன் செல்வது நல்லது. காசோலை வசதிகள் இணையப் பரிமாற்றம் இவற்றையும் பயன் படுத்த வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. நானும் இப்படித் தான் ..காரின் பின் சீட்டில் தான் பணப் பையை வைப்பேன்...இனி மேல் ஜாக்கிரதையாக நடந்து கொள்வேன் ...Thanks for sharing...

    பதிலளிநீக்கு