செவ்வாய், 14 மே, 2013

திரு. பட்டாபட்டி - இறுதி சடங்குகள்.


திரு.பட்டாபட்டியின் நிஜப் பெயர் வெங்கிடபதி. அவர் அப்பா பெயரையும் சுருக்கி ராஜ் வெங்கிடபதி என்ற பெயரில் சிங்கப்பூரில் "Global Foundries" என்னும் ஸ்தாபனத்தில் சீனியர் இஞ்சினீயராக வேலை பார்த்துள்ளார். ஏதோ விஷயமாக பேங்காக் சென்றிருந்தபோது ஒரு மாலுக்குள் சென்றிருக்கிறார். அங்கு உள்ளே நுழைந்த சில நிமிடங்களிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாக இறந்துவிட்டார். அவரின் ஒரு சகோதரர் சிங்கப்பூரிலேயே இருக்கிறார். அவர் உடனடியாக பேங்காக் சென்றிருக்கிறார்.

திரு. பட்டாபட்டி இறந்தது 12-5-2013, ஞாயிற்றுக்கிழமை. அடுத்த நாளான 13ந் தேதி, திங்கட்கிழமை, தாய்லாந்தில் லீவு. ஒரு காரியமும் நடக்கவில்லை. இன்றுதான் (14-5-2013) பேப்பர் வொர்க் முடிந்து மதியத்திற்கு மேல் பேங்காக்கில் விமானத்தில் ஏற்றுவார்கள். இன்று இரவு(அதாவது 15-5-2013 அதிகாலை)  1 மணி சுமாருக்கு சென்னை வரும். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவருடைய சொந்த ஊரான பெரியநாயக்கன்பாளையத்திற்கு (கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 20 கி.மீ. தூரம்) அநேகமாக நாளை (15-5-2013, புதன்கிழமை) காலையில் 8 லிருந்து 9க்குள் சடலம் வரலாம்.  அன்றே இறுதிச்சடங்குகள் நடக்கும்.

இறந்தவருக்கு வயது 46. மனைவியும் இரு பெண் குழந்தைகளும் இருக்கின்றன. எனக்கு நெருங்கிய நண்பர். அந்த விபரங்களை பிற்பாடு எழுதுகிறேன்.

அவருக்கு சொந்த ஊரில் ஏகப்பட்ட நண்பர்கள். ஊரெங்கும் இரங்கல் நோட்டீஸ் அடித்து ஒட்டியிருக்கிறார்கள்.


61 கருத்துகள்:

  1. அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிறோம்..

    பதிலளிநீக்கு
  2. தங்களின் நெருங்கிய நண்பர் திரு வெங்கடபதி அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  3. மனம் வருந்துகிறோம்:(

    தகவல்களுக்கு நன்றி.

    குடும்பத்தினருக்கு நெஞ்சார்ந்த அனுதாபங்கள்:(

    பதிலளிநீக்கு
  4. பதிவர் நண்பர்கள் அனைவருக்குமே கடந்த 2 நாட்களாக இது அதிர்ச்சியான செய்தி ;

    உங்கள் பதிவின் மூலம் தான் பலரும் அவர் முகம் மற்றும் பெயர் பார்த்திருப்பர்

    அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்

    பதிலளிநீக்கு
  5. மிக வருத்தமாக இருக்கிறது. ஆரம்பகாலங்களில் இவரது எழுத்துகளின் பால் கவரப்பட்டு அவரது வலைத்தளம் பக்கம் அடிக்கடி சென்றதுண்டு. மிக நகைச்சுவையாக எழுதுவார். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவர் குடும்பத்தாருக்கு எங்கள் ஆருதல்கல்லும் அனுதாபங்களும்.

    பதிலளிநீக்கு
  6. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
  7. அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிறோம்

    பதிலளிநீக்கு
  8. ;((((( அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.

    பதிலளிநீக்கு
  9. இறைவனுக்குக் கண் தெரியாமல் போகும் சமயங்கள் பல. அதில் இதுவும் ஒன்று.

    அவரது குடும்பத்தாருக்கு யார்தான் ஆறுதல் சொல்வது.
    ஸ்ரீராம் சொல்வது போல அவர் முகம் கூடத் தெரியாது.
    அவருக்கு என் அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  10. அண்ணாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்

    பதிலளிநீக்கு
  11. மனம் வருந்துகிறோம்
    தகவல்களுக்கு நன்றி.
    குடும்பத்தினருக்கு நெஞ்சார்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  12. ஆழ்ந்த இரங்கல்கள்! அவரது ஆத்மா சாந்தியடையட்டும்!

    பதிலளிநீக்கு
  13. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...RIP...

    பதிலளிநீக்கு
  14. வருத்தமான செய்தி :(( ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  15. வெங்கிடு அண்ணா, இத்தினி நாள் வலையில இருந்திருக்கே.... தெரியாமலே போச்சே? பாவி, பாவி!!

    பதிலளிநீக்கு
  16. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் அய்யா

    பதிலளிநீக்கு
  17. ஆழ்ந்த இரங்கல்கள் ...அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதல் தருவாராக

    பதிலளிநீக்கு
  18. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    --Maakkaan.

    பதிலளிநீக்கு
  19. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்!!

    பதிலளிநீக்கு
  20. மனம் வருந்துகிறோம்
    தகவல்களுக்கு நன்றி.
    குடும்பத்தினருக்கு நெஞ்சார்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  21. மிக வருத்தம் தந்த செய்தி. அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  22. வருந்துகிறோம் சார் ,பகிர்வுக்கு நன்றி ,
    நண்பரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் .அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்போம் ,

    பதிலளிநீக்கு
  23. வருத்தமான செய்தி .அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.குடும்பத்தினருக்கு நெஞ்சார்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  24. மிகவும் வேதனையாக உணருகிறேன். ஆழ்ந்த இரங்கல்கள். RIP

    பதிலளிநீக்கு
  25. வருத்தமான செய்தி. ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  26. அவ‌ரை என‌க்குத் தெரியாது,ஆனால் ப‌ல‌ராலும் விரும்பப்ப‌ட்ட‌ ப‌திவ‌ர் போல் தெரிகிற‌து, அன்னாருக்கு எனது ம‌ன‌மார்ந்த‌ அஞ்ச‌லிக‌ள்.

    பதிலளிநீக்கு
  27. வருந்துகிறேன். சிங்கப்பூரில் அதுவும் என் வீட்டிற்கருகில் இருக்கும் நிறுவனத்தில்தான் வேலை செய்திருக்கிறார்.பார்த்தது போலவும் இருக்கிறது. ஆழ்ந்த வருத்தங்கள். ஆன்மா சாந்தியடையட்டும்.

    பதிலளிநீக்கு
  28. வருந்துகிறேன்.
    ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  29. மறுபடியும் ஒரு முறை இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு

  30. அவர் இன்னாரென்று தெரியவில்லை. உங்களுக்கு நெருங்கியவர் எனக்கும் நெருங்கியவரே. அவருக்கு இறக்கும் வயதல்ல. இருந்தாலும் தவிர்க்கப் பட முடியாதவை அனுபவிக்கப் பட்டே ஆக வேண்டும் அல்லவா. அவரது மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  31. மிகவும் வருத்தமான செய்தி. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

    பதிலளிநீக்கு
  32. அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  33. நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளை இணைத்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  34. "என்ன வாழ்க்கை" !
    மிகத் துயரமாக உள்ளது.
    என் ஆழ்ந்த அனுதாபங்கள். காலம் தான் அவர் உறவுகளுக்கு ஆறுதல் தரவேண்டும்.
    மனதைத் தேற்றுங்கள்.

    பதிலளிநீக்கு
  35. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.கண்டிப்பாக அவரை பற்றி அறிந்த விஷயங்களை பதிவுடுங்கள்.

    பதிலளிநீக்கு
  36. வருந்துகிறேன். அன்னாரின் குடும்பத்துக்கு பதிவுலகம் சார்பில் வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவியுங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  37. என் இரங்கலையும் இங்கே பதிவு செய்கிறேன். உங்கள் பதிவிலிருந்துதான் அவர் புகைப்படத்தை எடுத்து என் பதிவில் பயன்படுத்தியிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  38. வருத்தமான செய்தி. எனது அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  39. அனுதாபங்களைப் பதிவு செய்த அனைத்துப் பதிவர்களுக்கும் திரு.பட்டாபட்டியின் குடும்பத்தாரின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தப் பதிவை அப்படியே ஒரு காப்பி பிரின்ட் எடுத்து அவருடைய குடும்பத்தாருக்கு அனுப்பி வைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  40. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
  41. வேதனை தரக்கூடிய செய்தி...உங்கள் பதிவின் மூலம் அவரது குடும்பம் பற்றி தெரிந்து கொண்டேன். வருத்தமாக இருக்கிறது. அவருக்கு எனது அஞ்சலிகள். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் துக்கத்தில் இருந்து விரைவில் மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  42. அவரது இறப்புக்கு மதுவும் ஒரு காரணம் என்று யாரோ ஒரு நண்பர் எழுதி இருக்கிறார். நீங்களும் அதை தெளிவு படுத்தவும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவர் இறந்த பிறகு அவருடைய நற்பண்புகளை மட்டுமே பேசவேண்டும் என்பது மரபு.

      நீக்கு
  43. குடிப்பது கெட்டது என யாரும் இங்கு சொல்ல வரவில்லை. மதுவுக்கு அடிமையாதல் தான் கெட்டது. வயதானாலும் உமக்கு குசும்பு போவதில்லை! அப்படி அவரது நற்பண்புகளைப் பற்றியும் கூட ஒரு வார்த்தை பதிவிடவில்லை! வயதாக ஆக நானும் இப்படி கேனையாகி விடுவோனோ என்று பயம் வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேனையன்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டியதாகி விட்டதற்கு என் விதியைத்தான் நோகவேண்டும்.

      நீக்கு
  44. அப்ப மூடிக் கொண்டு இருக்க வேண்டியதுதானே! ஏன் இப்படி பதிவெல்லாம் எழுதி எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்று காட்டிக்கொள்ள வேண்டும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீ உன்னோடத சரியா மூடீருக்கயா பாருடா அநாமதேயம். உனக்குப் பேரே இல்ல, அடுத்தவனுக்கு மூட வந்துட்டே.

      நீக்கு
  45. அடடே..இவர்தான் பட்டாபட்டியா... சாலையில் பேனர்கள் காண நேர்ந்தது... தெரிந்த வீதியில் வசித்து இருக்கிறார்.. அறிந்தும் அறிய படாதவராக இருந்து இருக்கிறார்.. அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்....mano

    பதிலளிநீக்கு
  46. எனது ஆழ்ந்த இரங்கல்கள்...

    நிறைய நாட்களா ப்ளாக் போஸ்ட் எதுவும் போடலையேன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். எதேர்சையா "வால் பையன்" ப்ளாக் ல பார்த்து புதுசா ஏதோ கும்மி அடிக்கிறாங்கன்னு நெனச்சேன். பட்டாபட்டியோட மறைவு உண்மைன்னு தெரிஞ்சபோது மனசு அழ ஆரம்பிச்சிடுச்சு.....

    பல முறை அலுவலகத்தில் இவரது ப்ளாக் போஸ்ட படிச்சிட்டு சிரிப்பை அடக்க முடியாமல் தவிச்சிருக்கேன். அவரை நேரில் பார்கல பேசலைன்னாலும் ஒரு நெருங்கிய நண்பரை இழந்த ஒரு வருத்தம்.

    அவருடைய ஆன்மா சாந்தியடைய கடவுளை பிரார்த்திக்கிறேன். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு கடவுள் எல்லா வகையிலும் துணையிருக்கட்டும்...

    சுரேஷ்....

    பதிலளிநீக்கு