ஞாயிறு, 24 நவம்பர், 2013

ஆம்ஸ்டர்டாம் அனுபவங்கள் - பாகம் 1


நான் முன்பு ஒரு தரம் நெதர்லாந்து அனுபவம் பற்றி எழுதியிருந்தது நினைவிருக்கலாம். அப்போது ஒருவர் பின்னூட்டத்தில் "உங்கள் அனுபவங்களை விரிவாக சொல்லியிருக்கலாமே" என்று எழுதியிருந்தார். "அடிச்சது ஒரு லக்கி சான்ஸ் - என்னுடைய பிரதாபங்களை பறை சாற்ற" என்று இந்த தொடர் பதிவு எழுதுகின்றேன்.

என்னுடைய நெதர்லாந்து டூர் நாங்கள் ஆராய்ச்சி தொடர்பு கொண்டுள்ள ராயல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி சார்பில் திட்டமிடப்பட்டது. மேலை நாடுகளில் ஒரு பிரயாணத் திட்டத்தை வகுப்பது என்பது மிகவும் துல்லியமாக இருக்கும்.

ஆம்ஸ்டர்டாம் நெதர்லாந்தின் தலைநகர். அந்த ஊர் டூருக்கான குறிப்புகள் ஒரு நான்கு வரிகளில் டைப் செய்து கோடுத்திருந்தார்கள். நான் தங்கவேண்டிய ஓட்டலின் பெயர், தங்கும் நாட்கள் ஆகிய விபரங்கள் அதில் இருந்தன.

வெளிநாடுகளில் டூர் செல்லும்போது நாம் நம் பொது அறிவையும் நன்றாக பயன்படுத்தவேண்டும். (இருந்தால்! இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லவேண்டாம்).  ஆம்ஸ்டர்டாம் ஏர்போர்ட்டின் பெயர் "ஷிபோல்" Schipol. அங்கு இறங்கியதும் நான் தேடியது சாமான் வைக்கும் அறை. ஏனெனில் என்னிடம் நான்கு ஐட்டங்கள் சேர்ந்து விட்டன. அவைகள் அனைத்தையும் தூக்கிக்கொண்டு போவது சிரமம் மற்றும் தேவையில்லை. அதனால் இரண்டு சாமான்களை ஏர்போர்ட்டிலேயே வைத்து விட்டு, திரும்பும்போது எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். அந்த அறை இருக்கும் இடத்தை விசாரித்து அங்கு சென்றேன்.

அங்கே ஒருவரையும் காணவில்லை. நமக்கு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் க்ளோக் ரூம்தான் பரிச்சயம். கூச்சல் போட்டு முண்டியடித்து லக்கேஜைக் கொடுத்தால் அங்கிருக்கும் ஆள் அந்தப் பூட்டைத் தொட்டவுடன் திறந்து கொள்ளும். வேற பூட்டு போட்டு கொண்டு வாருங்கள் சார் என்று முகத்திலடித்தாற்போல சொல்லி விடுவான்.

என்ன செய்வது என்று யோசித்தேன். ஆள் இல்லையே தவிர அந்த அறையை எப்படி உபயோகிப்பது என்பதைப் பற்றி விரிவான குறிப்புகள் எழுதி வைத்திருந்தார்கள். அங்கு நிறைய கப்போர்டுகள் இருந்தன. ஒவ்வொன்றிலும்  ஒரு நெம்பர் லாக் வைத்திருந்தார்கள். அதை நமக்கு வேண்டிய ஒரு நெம்பருக்கு செட் செய்து கப்போர்டை மூடிவிட்டால் லாக் ஆகிவிடும். பிறகு திறக்கும்போது அதற்குண்டான வாடகைப்பணத்தை அந்த கப்போர்டில் உள்ள துவாரத்தில் போட்டு விட்டு நாம் லாக் செய்த நெம்பரை செட் செய்தால் கப்போர்டு திறக்கும்.

சரி என்று சாமான்களை வைத்துவிட்டு, நெம்பரை செட் செய்து விட்டு பூட்டினேன். கதவை இரண்டு தரம் இழுத்துப் பார்த்தேன். திறக்கவில்லை. சரியாகத்தான் பூட்டியிருந்தது. பிறகுதான் என் குயுக்தி மூளை வேலை செய்தது. நாம் திரும்பி வரும்போது இது சரியாகத் திறக்குமா என்ற சந்தேகம் வந்தது.

நாமதான் வீட்டைப் பூட்டிவிட்டு ஒரு பர்லாங்க் வந்த பிறகு திரும்பவும் வீட்டிற்குப் போய் பூட்டை இழுத்துப் பார்க்கும் ரகமாயிற்றே. அப்படிப் பார்த்து விட்டு கல்யாண வீட்டில் சாப்பிடும்போது பொண்டாட்டி கிட்ட வீட்டைச் சரியாகப் பூட்டினோமா என்று கேட்போம். தவிர இந்த மாதிரி லாக்கர்களை முன்பின் பார்த்துவுமில்லை. எதற்கும் டெஸ்ட் செய்து பார்த்து விடலாம் என்று  அந்த லாக்கரில் சொன்ன பணத்தைப் போட்டு நெம்பரை செட் செய்து லாக்கர் கதவை இழுத்தேன்.

மீதி அடுத்தபதிவில். இந்தப் பதிவை ஒரு மாதத்திற்கு ஜவ் மிட்டாய் மாதிரி இழுப்பதுதான் என் நோக்கம். என்ன செய்வது? பதிவெழுத தலைப்புகள் கிடைப்பது குதிரைக் கொம்பாய் இருக்கிறது.

26 கருத்துகள்:

  1. லாக்கர் திறந்ததா இல்லையா. ஆவலுடன் காத்திருக்கின்றேன்

    பதிலளிநீக்கு
  2. அடுத்து என்ன நடந்தது? உடனேயே திறக்க முற்பட்டதால் அலார்ம் அடித்து ஊரைக் கூட்டி விட்டதா? :)))

    பதிலளிநீக்கு
  3. பூட்டிய லாக்கர்கள் திறபட்டனவா ,அப்படியே ஒருவேளை
    திறபடாது போயிருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று
    சிந்திக்கும் படி இன்னொரு தொடர்வரைக் காத்திருக்க வைத்து
    விட்டீர்களே :) நாளையே இதன் தொடரைப் போடுங்கள் ஆவலுடன்
    காத்திருக்கின்றோம் ஐயா .

    பதிலளிநீக்கு
  4. ஹா ஹா... காசு கேட்டதா? அல்லது அலறல் ஏதும் வந்ததா?

    பதிலளிநீக்கு

  5. Motherland யே இன்னும் முழுதுமாக பார்க்காத நான் உங்கள் உபயத்தால் Netherland ஐ பார்க்கப்போகிறேன் என்பதில் மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி!

    // அந்த லாக்ரில் சொன்ன பணத்தைப் போட்டு நெம்பரை செட் செய்து லாக்கர் கதவை இழுத்தேன்.//

    அது திறந்திருக்காது என எண்ணுகிறேன். இல்லாவிடில் இதை எழுதியிருக்கமாட்டீர்களே!

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் சிறிய பகுதிகளாக எழுதுவதால் படிக்க பிரச்சனையை இல்லை.
    லாக்கரை திறந்து விட்டால் இனொரு முறை பணம் செலுத்த வேண்டி இருக்குமே

    பதிலளிநீக்கு
  7. வெளிநாடுகளில் டூர் செல்லும்போது நாம் நம் பொது அறிவையும் நன்றாக பயன்படுத்தவேண்டும். (இருந்தால்! இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லவேண்டாம்).

    சரியான யோசனை..!

    பதிலளிநீக்கு
  8. //இந்தப் பதிவை ஒரு மாதத்திற்கு ஜவ் மிட்டாய் மாதிரி இழுப்பதுதான் என் நோக்கம்.//

    அருமையான திட்டமிட்ட நோக்கம் தான். அப்படியே செய்யுங்கள், ஐயா.

    தொடக்கம் மிக அருமை. இதே போல ஜவ் மிட்டாய் போலவே இழுத்து, கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுங்கோ. மிகவும் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் உள்ளது.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  9. இவ்வாறு இங்கு சாதாரணமான பல களிலும் இருக்கின்றது . தொடருங்கள் உங்கள் அனுபவத்தையும் பார்ப்போம். நம்பரை மறந்து விட்டால் அவ்வளவுதான் .

    பதிலளிநீக்கு
  10. வாசித்தேன் .. ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. ஒரு மாதம் என்ன, ஒன்பது மாதம் வேண்டுமானலும் இழுங்கள்

    படிக்கச் சுவையாக இருப்பதால் தினம் ஒரு பதிவு போட்டுவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  12. ஆஹா..... அனுபவங்கள் தொடரா... எழுதுங்க....

    அடுத்தது என்ன என யோசிக்க வைத்தது... சீக்கிரம் எழுதுங்க!

    பதிலளிநீக்கு
  13. அநேகமாய் அங்குள்ள ஊழியர் சேப்டி கீயை போட்டபின் திறந்து இருக்குமென நினைக்கிறேன் !
    த.ம 8
    உங்களின் ஆசி வேண்டி ஜோக்காளியின் பதிவு ...காண்க >>>http://jokkaali.blogspot.com/2013/11/blog-post_3165.html

    பதிலளிநீக்கு
  14. கந்தசுவாமி ஐயா,

    உங்கள் ஆம்ஸ்டர்டாம் பயணம் பற்றிய விவரங்களுக்காக காத்திருக்கிறேன். நான் இங்கே வசித்துக்கொண்டிருக்கிறேன் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. முதல் மகிழ்ச்சி, நீங்களும் கோவைக்காரர் என்பது. ஆம், நானும் கோவையைச் சேர்ந்தவன் தான். டிசம்பர் 15க்கு மேல் அங்கு விடுப்பில் இருப்பேன். உங்களைக்காண ஆவல். மேலும், நீங்கள், விவசாய பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றதாக எழுதி இருந்தீர்கள். எனக்கும் மிக அதிக தொடர்பு உள்ளது. மற்றவை நேரில்..

    அன்புடன்,
    சங்கர நாராயணன்.தி
    ஹார்லம்/ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சங்கரநாராயணன்,

      உங்கள் பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. உங்களைக் காண நானும் ஆவலாக உள்ளேன். கோவையில் என்னுடைய விலாசம். 450, கே.கே.புதூர் 6 ம் நெம்பர் ரோடு, சாய்பாபா காலனி, கோயமுத்தூர் -641038. போன். 9422-2444441 , 94420 06871. இங்கு வந்தவுடன் போன் செய்யுங்கள்.

      நீக்கு
    2. நன்றி ஐயா...

      என்னுடைய உள்ளூர் அலை பேசி எண் 975 1981 889. ஆனால், நான் அங்கு வந்த பின் தான் என் கைக்கு கிட்டும்.

      அங்கு வந்த பின் அழைக்கிறேன்.

      அன்புடன்,
      சங்கர நாராயணன்.தி

      நீக்கு
    3. இப்படி முழுவிலாசத்தை சொல்லி இருக்கீங்க பார்த்துங்க இந்த காலத்துல பொண்ணுங்க ரொம்ப மோசாமாம் பார்த்துங்க பார்த்துங்க இதைப் பார்த்துவிட்டு ஏதாவது ஒரு பொண்ணு உங்க வீடு தேடி வர உங்க வூட்டுகாரம்மா பூரிக்கட்டையை எடுக்க விபரிதம் ஏதும் நடக்க போதுங்க

      நீக்கு
    4. இந்த வயசுக்கு மேலயா என்னைத் தேடி பொண்ணுங்க வரப்போறாங்க? இப்படியெல்லாம் கேலி பண்ணப்படாதுங்க! அப்படி தப்பித்தவறி வந்துட்டா அதுக்கு தனி பிளான் வச்சிருக்கிறேனே!!!!!!!!!

      நீக்கு
  15. //என்ன செய்வது? பதிவெழுத தலைப்புகள் கிடைப்பது குதிரைக் கொம்பாய் இருக்கிறது.///

    haa haa

    பதிலளிநீக்கு
  16. /////இந்தப் பதிவை ஒரு மாதத்திற்கு ஜவ் மிட்டாய் மாதிரி இழுப்பதுதான் என் நோக்கம்.//

    அப்படின்னா அடுத்த பதிவு அடுத்தமாதம்தான் வரும்மா......

    பதிலளிநீக்கு
  17. //நாமதான் வீட்டைப் பூட்டிவிட்டு ஒரு பர்லாங்க் வந்த பிறகு திரும்பவும் வீட்டிற்குப் போய் பூட்டை இழுத்துப் பார்க்கும் ரகமாயிற்றே///

    அதுமட்டுமல்ல பதிவர்களாகிய நாம் பின்னுட்டம் போட்டுவிட்டு அது வந்திருக்கான்னு பாத்துவிட்டு வரலைன்னு தெரிஞ்சதும் மீண்டும் ஒரு முறை போட்டுவிட்டு பார்ப்போம் என்கிற மாதிரி இருக்குதுல்ல

    பதிலளிநீக்கு
  18. பதிவின் பலன் உடன் தெரிகிறதே.ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  19. எல்லோரும் அடுத்து என்னவாயிற்று என்று கேட்டிருக்கிறார்கள். நான் தாமதமாக வந்ததால் அடுத்த பதிவைப் படிக்க போகிறேன். Open secret!

    பதிலளிநீக்கு