வெள்ளி, 8 நவம்பர், 2013

நேத்து ராத்திரி தூக்கம் போச்சுதே!


போன வாரம் நான் இரண்டாவது பெண்டாட்டி கட்டினேன். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் உண்மை. அதிலிருந்து ராத்திரியில் சரியாகத் தூங்க முடிவதில்லை. காலையில் இரண்டு மணிக்கு விழிப்பு வந்து விடுகிறது.

எழுந்தவுடன் அவள் முகத்தில்தான் முழிக்கிறேன். அவளுடன் என் நேரத்தை முழுவதுமாக செலவழிக்கிறேன். அவளை அணு அணுவாக ஆராய்கிறேன். புது டிரஸ் வாங்கிக்கொடுத்தேன். என்னால் முடிந்த அளவு அவளுக்கு சேவை செய்கிறேன். இருந்தாலும் அவள் என் வழிக்கு வரமாட்டேனென்கிறாள்.

இதனால்தான் காலையில் எழுந்தவுடன் "நேத்து ராத்திரி..." பாடவேண்டி வருகிறது. புதுப்பொண்டாட்டி என்றால் அப்படித்தான் இருக்கும் என்று அனுபவம் கூறுகிறது. என்னதான் புதுப்பொண்டாட்டி என்றாலும் இப்படி இருக்கக் கூடாது என்று அறிவு கூறுகிறது. நீங்கள் என்ன கூறப்போகிறீர்கள் என்று தெரியவில்லை.

கெழவனுக்கு வந்த வாழ்வைப் பாருங்கய்யா என்றுதான் கூறுவீர்கள் என்று தெரியும். ஆகவே மர்மத்தை விடுவிக்கிறேன்.

போனவாரம் என் நண்பர் ஒருவர் வைத்திருந்த மொபைல் போன் புதிதாக இருந்தது. அதைப் பற்றிய விவரங்கள் விசாரித்தேன். போனை கையில் வாங்கிப் பார்த்தேன். கண்டவுடன் காதல் என்பார்களே, அது அன்று என் வாழ்வில் வந்து விட்டது. அந்த போனை வாங்கியே தீரவேண்டும் என்ற தணியாத தாகம் தோன்றி விட்டது.

அடுத்த நாளே அந்த நண்பரையும் உடன் அழைத்துக்கொண்டு போய் அந்த போனை வாங்கியே விட்டேன். அதிலிருந்துதான் சோதனை பிறந்தது. "நேத்து ராத்திரி" பாட்டும் அன்றிலிருந்துதான் பாட ஆரம்பித்தேன்.

அந்த போன் இதுதான்.


Nokia Lumia 520


இது விண்டோஸ் 8 ஆபரேடிங்க் சிஸ்டம் உள்ள போன். விலை 9500 ரூபாய். கம்ப்யூட்டரில் என்னென்ன வசதிகள் உள்ளனவோ அதில் பாதிக்கு மேல் இதில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் எனக்குத்தான் ஒன்றும் தெரியவில்லை.

ஒன்று மட்டும் புரிகிறது. என்ன வேலை செய்தாலும் உடனே காசு கேட்கிறது. ஏனெனில் எல்லா வேலைகளும் இன்டர்நெட் மூலமாகத்தான் நடக்கிறது. நான் தெரியாத்தனமாக முதல் நாள் ஏகப்பட்ட நேரம் அதில் செலவழித்து விட்டேன். அவ்வளவுதான் என் இருப்பில் உள்ள காசெல்லாம் காலி. (நான் BSNL Prepaid பிளானில் இருக்கிறேன்.)

அடுத்த நாள் முதல் வேலையாக டெலிபோன் ஆபீசுக்கு ஓடினேன். என்னய்யா இது அநியாயமாக இருக்கிறது. இந்த போன் ஒரே நாளில் என்னை ஓட்டாண்டி ஆக்கிவிட்டதே என்று மூக்கால் அழுதேன். அங்கிருந்த இன்ஜினியர் பொறுமையாக என் கதையைக் கேட்டுவிட்டு சொன்னார். இந்த போனில் நீங்கள் "டேட்டா பிளான்" ஒன்றை இன்ஸ்டால் செய்யவேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் எத்தனை ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தாலும் அத்தனையையும் இது விழுங்கி விடும் என்றார்.

அதுக்கு எவ்வளவு செலவு ஆகும் என்றேன். அதிகம் ஒன்றமில்லை, மாதம் 139 ரூபாய்தான். ஒரு மாதத்திற்கு 1 ஜிபி உபயோகித்துக் கொள்ளலாம் என்றார் சரியென்று அதற்கு பணத்தைக் கட்டி அந்த பிளானையும் கம்ப்யூட்டரில் ஏற்றினேன், புதுப்பெண்டாட்டிக்கு பூவும் அல்வாவும் வாங்கிக் கொடுத்துத்தானே ஆகவேண்டும். செய்கிறேன் வேறு வழி?

ஆகவே வாசக நண்பர்கள் எல்லாம் என் கதையைக் கேட்ட பிறகு ஜாக்கிரதையாய் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

40 கருத்துகள்:

  1. ‘இரண்டு பெண்டாட்டி கட்டியவர்கள் பாடு திண்டாட்டம்’ என்பார்களே அது இதானா? புதிய கைபேசி பற்றி சொல்லி சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து விட்டீர்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மட்டுமில்லை.
      நோக்கியா 520 மாடல் andriod சிஸ்டத்தில் இல்லை. விண்டோஸ் 8 ஆபரேடிங் சிஸ்டம் உள்ளடக்கியது. எனவே விண்டோஸ் 8 ஆபரேடிங் சிஸ்டத்திற்கே உரிய அனைத்து தொந்திரவுகளும் உண்டு என்று ஒரு ரிவ்யுவில் படித்தேன். இன்னும் சில நாட்கள் (மாதங்களாக இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம்) கழித்து அடிக்கடி ஹேங் ஆகிவிடும் என்கிறார்கள் உபயோகித்தவர்கள். ஒரு வேலைக்கு நான்கைந்து ஆபரேஷன்கள் செய்ய வேண்டியதிருக்கிறது என்கிறார்கள். நானும் பத்தாயிரத்துக்குள் ஒரு மொபைல் வாங்க உத்தேசித்து இருந்ததால் இதை பற்றி விசாரித்ததில் வந்த செய்திகள் இவை. இன்னும் வாங்கவில்லை.

      சேலம் குரு

      நீக்கு
  2. உங்க அக்மார்க் எழுத்து நடையில் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறீர்கள் ஐயா... சூப்பர்...

    Typed in KM Tamil Keyboard for Android...

    பதிலளிநீக்கு
  3. இங்க எல்லோரும் ரெண்டு கல்யாணம் கட்டுனவங்கதான். முதல் ரெண்டு வரியிலேயே உங்க செகண்ட் பெட்டர் ஹாஃப் யாருன்னு புரிஞ்சுக்கிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவசாலியல்லவா டக் என்று புரிந்து கொண்டு விட்டீர்கள்
      நாமெல்லாம் இந்த வயதில் ரெண்டாவது பொண்டாட்டிக்கு ஆசைப்படத்தான் முடியும். நிஜத்தில் நடக்குமா?

      சேலம் குரு

      நீக்கு
  4. ஐயா, வணக்கம்.....
    தாங்கள் வாங்கியுள்ள போன்.....
    http://www.flipkart.காம் - ல் Nokia Lumia 520 (Black)
    Rs. 8180...ரூபாய் தான்...
    நன்றி...
    - அப்பாஜி, கடலூர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி இன்டர்நெட் மார்கெட்டின் வழியாக எந்த பொருள் வாங்கினாலும் விலை மலிவாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் ஒரு பயம். பார்களில் செங்கல் வந்து விடுமோ என்று.
      e-bay, flipcart, myntra என்று இன்னும் பல இன்டர்நெட் மார்கெட் தளங்கள் உள்ளன. என்னுடைய எக்ஸ்பீரியன்சில் இந்த தளங்கள் வழியாக வாங்குவது உத்தமம். சரியில்லை என்று சொன்னாலும் பணம் திரும்பி வந்து விடும். பொருளை நாம் திருப்பி அனுப்பும் கட்டணம் மட்டுமே நமது செலவு. இப்படி நேர்மையாக நடந்து கொள்ளும் மற்ற தளங்களும் இருக்கலாம் என்று நினைகிறேன். இருந்தாலும் ஒவ்வொரு முறை இன்டர்நெட் மார்க்கெட்டிங் செய்யும்போதும் பொருள் வந்து சேரும் வரை உதறல்தான்.

      திருச்சி காயத்ரி மணாளன்

      நீக்கு
  5. நல்ல எச்சரிக்கைப் பதிவு
    அதை மிக மிகச் சுவாரஸ்யமாகச் சொன்னது
    அருமை.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. தமிழ் தளங்களை வாசிக்க முடிகிறதா, தமிழில் டைப் செய்ய முடிகிறதா என்பதை தெரிவிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் தளங்களை வாசிக்க முடிகிறது. தமிழில் டைப் அடிக்க வழி உண்டா என்று தெரியவில்லை.

      நீக்கு
    2. பொதுவாக பேருந்துகளில் பயணிக்கும்போது பார்த்திருக்கிறேன். தோளில் ஒரு பேகை மாறிக்கொண்டிருக்கும் இள வயது பெண்கள் இரு கைகளிலும் மொபைலை ஆபரேட் செய்து கொண்டே இருப்பார்கள். அப்படை என்னதான் குறும் செய்தி அனுப்புவார்களோ என்று புரியா விட்டாலும் மனது ரெண்டு விசயத்திற்கு சஞ்சலப்படும். ஒன்று அடுத்த மாதம் அவர்களுக்கு வரப்போகும் பில்லுக்காக. ரெண்டாவது அந்த விரல்கள் நோபிளில் புரியும் அந்த நடனத்தை நம்மால் செய்ய முடியாத அளவு நமாகு வயதாகி விட்டதோ என்ற எண்ணம்.
      இந்த வயதுக்கு நமது விரல்களின் dexterity குறைந்து விட்டிருக்கும். எனவே அந்த மாதிரி சின்ன உபகரணத்தில் டைப் செய்வது விரல்களுக்கு தொந்திரவு டாக்டர்களுக்கு பண வரவு. எனவே தமிழில் டைப் செய்ய வழி இருந்தாலும் முயல வேண்டாம்

      திருச்சி காயத்ரி

      நீக்கு
  7. :) ரெண்டு பொண்டாட்டி கட்டுனவங்க பாடு திண்டாட்டம் தான்!

    கொஞ்சம் நாளைக்குப் பிறகு பழகிடும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழகிவிட்டால் பரவாயில்லை. தொந்திரவு குறைவு. மூன்றாவது நான்காவது என்று அடுத்தடுத்து புதிது புதிதாக பொண்டாட்டி தேட ஆரம்பித்து விட்டால்? மொபைலை பொறுத்த வரை அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

      திருச்சி காயத்ரி மணாளன்

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. என் கணக்கில் ஒரு தப்பு பண்ணிவிட்டேன். சரியாக சொல்லவேண்டுமென்றால் இது மூன்றாவது பொண்டாட்டிதான். இரண்டாவது பொண்டாட்டி கம்ப்யூட்டர்தான் ஏற்கனவே இருக்கிறதே. நாலாவது (டேப்ளட்) கட்ட ஆசைதான். ஆனால் அத்தனை பெண்டாட்டிகளையும் மேய்ப்பது இந்த வயசில் கஷ்டம் என்பதால் தயங்கிக்கொண்டு இருக்கிறேன். மனசு மாறி திடீரென்று கட்டினாலும் கட்டுவேன்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. இப்படி மொபைல் வாங்கவா? இல்லை நிஜமாகவே ரெண்டு பொண்டாட்டி கட்டவா?

      சேலம் குருப்ரியா

      நீக்கு
  9. புதிதாக வேறு கம்யூட்டர் வான்கியிருபீர்கள் என நினைத்தேன்.இந்த மொபைல் போனை சதா நோனண்டிக்கொண்டிருப்பவர்களை பார்த்தால் பாவமாக இருக்கம்.எல்லோரும் வயது வேறுபாடு இன்றி எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் இதே வேலையாகவே இருப்பதை பார்த்து,இது வருவதற்கு முன்பு இவர்கள் எல்லாம் என்னத்தை நோண்டிக்கொண்டிருந்தனர் என்று வியப்பாக இருக்கும் .எல்லாம் பேஸ் புக் பண்ணும் மாயம் .ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது முற்ற முழுக்க சரிதான்.
      மொபைலை தகவல் பரிமாற்றத்துக்கு மட்டும் உபயோகித்தால் மிக்க நலன் பயக்கும். இப்போது இளைஞர்கள் இளைஞிகள் தம்மை இளைஞர்கள் என்று நினைத்து கொள்வோர்கள் அனைத்து பேரும் பொழுபோக்காக இதை உபயோகிப்பது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. எவ்வளவு மனித நேரம் விரயப்படுத்தப்படுகிறது என்பதை நினைத்தால் ஒரு வேதனையான விசயம்தாம்

      திருச்சி அஞ்சு

      நீக்கு





  10. இது மூனாவது பொண்டாட்டி. இரண்டாவது தான் கணினி முன்பே உண்டல்லவோ

    --
    Jayakumar


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான்காவது பொண்டாட்டிக்கு ஒரு ஐடியா
      டாப்ளேட். என்ன சற்றே பெரிதாக இருக்கும். ஆனால் நம்மை மாதிரி வீட்டிலேயே இருந்து உபயோகிப்பவர்களுக்கு அருமையான சாதனம். அப்புறம் முதல் ரெண்டாவது மற்றும் மூன்றாவது பொண்டாட்டிகள் அவரவர்கள் வேலையை பார்த்துகொண்டு சும்மா இருக்க வேண்டியதுதான். நாமாச்சு நமது நான்காவது பொண்டாடியாச்சுன்னு நிம்மதியாக இருக்கலாம்

      திருச்சி தாரு

      நீக்கு
    2. ஐடியா கொடுத்திட்டீங்கல்ல, ஜமாய்ச்சுடுவோம். அடுத்தபடி இந்த வேலைதான்.

      நீக்கு
  11. //போனை கையில் வாங்கிப் பார்த்தேன். கண்டவுடன் காதல் என்பார்களே, அது அன்று என் வாழ்வில் வந்து விட்டது. அந்த போனை வாங்கியே தீரவேண்டும் என்ற தணியாத தாகம் தோன்றி விட்டது.//

    ;))))) இதுபோல எனக்கும் பலமுறை தாகமும் மோகமும், கண்டதும் காதலும் ஏற்பட்டது உண்டு. ;)))))

    இருப்பினும் பின் விளைவுகள் பற்றி ஓரளவு அறிந்துள்ளதால், மனதைக்கட்டுப்படுத்திக் கொண்டதும் உண்டு. ;(((((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வை.கோபாலகிருஷ்ணன் என்ற முனிபுவங்கரே, இந்த அளவு மனசை கட்டுபடுத்த முடிந்தால் உமக்கு இந்த பூவுலகில் நிம்மதியை தவிர வேறொன்றும் கிடைக்காது என்று நான் சாபமிடுகின்றேன்.
      அந்த வித்தை எப்படி என்று கொஞ்சம் சொல்ல முடியுமா?

      சேலம் குரு

      நீக்கு
  12. கைபேசி பிறரை அழைக்கவும் பிறரிடமிருந்து அழைப்புப் பெறவும் என்று மட்டும் இருந்தால் இந்தத் தொல்லைகள் இருக்குமா. எல்லா செயல் பாடுகளையும் ஒரே போனில் விரும்பினால் இந்த தொல்லை வரும் என்று நினைக்கிறேன். இந்த மாதிரி கை பேசியில் தமிழ் எழுத்துக்களுக்குப் பதில் சதுரம் சதுரமாக வருமாமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சதுரம் சதுரமாக வருவது சாதாரணமாக நமது கணினியிலும் வருமே. அந்த particular font நமது கணினியில் load செய்யாமலிருந்தால் இப்படித்தான் வரும். பக்கத்திலிருக்கும் பேர குழந்தைகளிடம் வெட்கத்தை பார்க்காமல் கொடுத்து என்னவென்று பார்க்க சொல்லுங்கள். நிமிடத்தில் சரி செய்து கொடுத்து விடுவார்கள். மனைவியிடம் மட்டும் அட்ஜஸ்ட் செய்து கொள்வது பெரிசில்லை இதை மாதிரி புது புது உபகரணங்களை உபயோகிக்கும்போது இந்தக்கால சிருசுகளிடமும் அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டியதிருக்கிறது. நான் அப்படித்தான்

      சேலம் குரு

      நீக்கு
  13. //கெழவனுக்கு வந்த வாழ்வைப் பாருங்கய்யா என்றுதான் கூறுவீர்கள் என்று தெரியும்.//

    உருவத்தில்தான் கிழவன். மனதளவில் இளைஞன்தானே நீங்கள்
    இந்த வயதில் இந்த அளவு ஆர்வத்துடன் இருக்கும் உங்களை பாராட்டத்தோன்றுகிறது. எங்கள் போன்ற நடுத்தர வயது "இளைஞர்களுக்கு" நீங்கள் ஒரு மோட்டிவேட்டிங் இளைஞர்.
    எனவே கிழவன் என்ற வார்த்தையெல்லாம் உபயோகிக்க வேண்டாம் அய்யா

    திருச்சி காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  14. //அதிலிருந்துதான் சோதனை பிறந்தது.//

    எதையும் ஆராயாமல் செய்தால் இப்படித்தான். கண்டதும் காதல் இப்போது விண்டு போச்சா? இப்போது வெறும் 139 ரூபாய் இன்னும் எவ்வளவு endru தெரியவில்லை. மனது அடித்து கொள்கிறதா?

    சோதனைகளை சாதனையாக்கி விடுங்கள்.
    எங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான பதிவு கிடைத்தது.

    சேலம் அஞ்சு

    பதிலளிநீக்கு
  15. //இல்லாவிட்டால் நீங்கள் எத்தனை ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தாலும் அத்தனையையும் இது விழுங்கி விடும் என்றார்.//

    இதுதான் சுமை கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்பது.
    பத்தாயிரம் பக்கம் செலவு செய்து வாங்கி விட்டு அதற்கு மாதா மாதம் பில் கட்டுவது போதாது என்று இந்த மாதிரி புது புது செலவுகள் வேறு. என்ன செய்வது யானை வாங்கியாகி விட்டது அங்குசம் வாங்கித்தானே ஆகவேண்டும். ஆனால் இங்கு மாசாமாசம் அங்குசம் வாங்க வேண்டியதாயிருக்கு.

    திருச்சி காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  16. //இந்த போன் ஒரே நாளில் என்னை ஓட்டாண்டி ஆக்கிவிட்டதே என்று மூக்கால் அழுதேன்.//

    செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
    செய்யாமை யானும் கெடும்
    எனபது குறள். செய்யவேண்டியவற்றை செய்யாமலிருந்தாலும் குற்றம். செய்யக்கூடாததை செய்தாலும் குற்றம் என்பது பொருள்.
    இதில் மொபைல் வாங்கியது இரண்டாவது அறிவுரையை மீறியதாகும். இப்படிப்பட்ட மொபைல்களை விசாரிக்காமல் வாங்கிவிட்டு பின்னர் அழுது என்ன பயன்.
    முதல் அறிவுரையின்படி இப்போது செய்யவேண்டியது என்ன என்று பார்க்க வேண்டியதுதான். செய்த செலவுக்கு எப்படி நல்ல பலன்களை பெறுவது - அது இன்னும் சில செலவுகளை செய்ய வேண்டியிருந்தாலும் கூட - என்று ஆராய வேண்டியதுதான்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
      செய்யாமை யானும் கெடும் //

      எனக்கு மிகவும் பிடித்த குறள். நான் "செயத்தக்க" செயத்தக்க அல்ல" என்ற வேறுபாடு பார்ப்பதில்லை. ஒன்றையும் செய்யமாட்டேன். வாழைப்பழ சோம்பேறி என்பார்களே அந்த ரகம். அன்றைக்கு வீட்டைவிட்டுக் கிளம்பும்போதே எதிரில் சனி பகவான் வந்திருப்பார் போல. ஒரு விநாடி என் புத்தி பேதலித்து விட்டது.

      நீக்கு
  17. அய்யா அவர்களே பயப்பட வேண்டாம்.
    இதோ நோக்கியா 520 மொபைலின் ரிவியூ

    நல்லதே செய்திருக்கிறீர்கள்

    A. இது ப்ராசசிங்கிலோ வேலை செய்வதிலோ அதிக அளவு குறைபாடு இல்லாத ஒரு ஸ்மார்ட் மொபைல்தான்
    B. wifi நன்கு வேலை செய்கிறது. நல்ல வேகமும் கூட. 3G அப்ளிகேசன்ஸ் downloading பரவாயில்லை. 2G அப்ளிகேசன்ஸ் கூட சராசரிக்கு மேல்தான்.
    C. தொடுதிரை ஐஸ் மேல வழுக்கிங் கொண்டு போவது போல உள்ளது. கிராபிக்ஸ்க்கு நல்ல சப்போர்ட் உள்ளது
    D. மற்றும் Music, Game, images போன்ற மற்ற அம்சங்களும் நன்றாகவே உள்ளன .
    E. ஈமெயில், குறுஞ்செய்திகளும் விரைவாகவே உள்ளன

    சந்தோஷபட்டுவிடாதீர்கள்

    அவசரப்பட்டுவிட்டீர்களே

    A. பேட்டரி சீக்கிரம் தீர்ந்து விடுகிறது (அதனாலென்ன நான் அடிக்கடி சார்ஜ் செய்து கொள்கிறேன் என்றால் சரிதான்) .
    B. Windows 8 OS கே உரிய குறைபாடுகள் உள்ளன என்று சொல்கிறார்கள். இது android போன் அல்ல.என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
    - memory card க்கு மாற்றுவது சற்றே கடினம் & தடைகள் உள்ளன
    - ப்ளூ டூத் வழியாக பகிர்ந்து கொள்வது சற்றே இம்ப்ரூவ் செய்யப்படவேண்டும்.
    - Sound profiles இல்லை
    - Multiple home ஸ்க்ரீன்ஸ் இல்லை
    -. ஸ்லைட் டௌன் மெனு இல்லை.
    - லாக்/அன்லாக் பட்டன் கொஞ்சம் ஸ்டர்டியாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
    - android போனில் உள்ள பல விஷயங்கள் இதில் இல்லை. பாங்கிங் சம்பந்தப்பட்ட விஷயங்கள்.
    - android போன் உபயோகித்தவர்களுக்கு இதற்கு மாறுவது சற்றே கடினம்தான்
    - Windows 8 OS இந்தியாவுக்கு பதுசு. பழக நாளாகும். அப்ளிகேசன்ஸ் உருவாக நாளாகும்.

    இப்படிப்பட்ட இல்லைகளுக்கு மாற்று கண்டுபிடித்து சேர்த்துகொண்டால் இந்த விலைக்கு இந்த போன் நல்ல ஒரு பொருள்தான்

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஆண்ட்ராய்டு போன் உபயாகித்தது இல்லை. அதனால் எனக்கு அதிக வித்தியாசம் தெரியவில்லை. நீங்கள் சொன்ன மாதிரி பேட்டரி அடிக்கடி சார்ஜ் பண்ணவேண்டியிருக்கிறது. இன்டர்நெட் கொஞ்சம் வேகமாக இருக்கிறது.

      முக்கியமாக எனக்கு உபயோகமாய் தெரிவது, வேர்டு டாகுமென்ட்களை சேமித்து வைத்துக்கொண்டு சௌகரியமாகப் படிக்கலாம். சில தொடர் பதிவுகளை நான் இந்த பார்மேட்டில் பதிவு செய்து வைத்துள்ளேன். அவைகளைப் படிப்பது சுலபமாக இருக்கிறது. பேங்க் பேலன்ஸ் பார்க்க, ரயில் ரிசர்வேஷன் செய்ய சுலபமாக இருக்கிறது.

      நீக்கு
  18. //வாசக நண்பர்கள் எல்லாம் என் கதையைக் கேட்ட பிறகு ஜாக்கிரதையாய் இருப்பார்கள் என்று நம்புகிறேன்//

    நாங்கள் ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறோம்.
    பழிய காலத்து ஆளாக இருந்தும் எப்படி இந்த வலையில் விசாரிக்காமல் விழுந்து விட்டீர்கள். மனதை தேற்றி கொள்ளுங்கள். சிலது செய்துவிட்டால் பரிகாரமே இல்லை

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  19. அதுசரி... நோக்கியாவைவிட தற்போது சாம்சங் மற்றும் சோனியில் ஆண்ட்ராய்டு மொபைல்கள் நல்ல வசதியுடன் வருகின்றனவே ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டின பொண்டாட்டியை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடலாமா? விட்டு விடத்தான் முடியுமா?

      நீக்கு
  20. ஐயா நானும் சமிபத்தில் இந்த போன் தான் வாங்கினேன்...உங்களை போல் இல்லாமல் ஒரு மாதம் கழித்து தான் வாங்கினேன்.அப்போது பத்து ஆயிரம் ரூபா...இப்பதான் நான் பத்தி கத்துகிட்டேன்..நிறைய இருக்கிறது இந்த போனில்.நம் தகவல் அனைத்தும் இன்டர்நெட்டில் சேமித்து வைக்கும் தேவையான போது எடுத்து பயன்படுத்தலாம்.இந்த மொபைல் தொலைந்தாலும் கண்டுபிடிக்க ஏகப்பட்ட வழிகள் இருக்கிறது. ஏதேனும் தகவல் தேவைபட்டால் என்னை அழைக்கவும்.தெரிந்தவரை சொல்கிறேன். என் e mail : rsenthil@live.com

    பதிலளிநீக்கு