வியாழன், 28 நவம்பர், 2013

ஆம்ஸ்டர்டாம் அனுபவங்கள் - பாகம் 3


நான் பலமுறை முயன்றும் கதவைத் திறக்க முடியவில்லை. வேறு வழி தெரியாமல் ரிசப்ஷனில் சென்று முறையிட்டேன். அவர்கள் நீங்கள் சாவியை எப்படி போட்டீர்கள் என்று கேட்டார்கள். நான் காட்டினேன். அவர்கள் இப்படிப் போட்டால் உங்கள் ஆயுளுக்கும் அந்தக் கதவு திறக்காது. சாவியைத் திருப்புங்கள் என்றார்கள். திருப்பினேன். இப்போது இந்த சாவியின் ஒரு மூலையில் ஒரு கருப்பு புள்ளி இருக்கிறதல்லவா? அந்தக் கருப்பு புள்ளி தெரிகிற மாதிரி வைத்துக்கொண்டு சாவியைப் போட்டால்தான் கதவு திறக்கும் என்றார்கள்.

நான் திரும்ப ரூமுக்கு வந்து அதே மாதிரி சாவியைப் போட்டேன். மந்திரம் போட்ட மாதிரி கதவு அழகாகத் திறந்தது. ஆஹா, இப்படியா இருக்கிறது சூட்சுமம் என்று நினைத்துக்கொண்டு கதவைப் பூட்டிவிட்டு வெளியில் வந்தேன். ரிசப்ஷனில் உள்ள பெண்கள் என்னைப் பார்த்து சிரிப்பது போல் ஒரு உணர்வு வந்தது. என்ன செய்ய முடியும்? உள்ளூர் யானை அசலூரில் பூனைதானே!

என்னுடைய அன்றைய பிளான் சும்மா ஊரைச்சுற்றிப் பார்ப்பதுதான். பக்கத்திலிருந்த பஸ் ஸடாப்பிற்குப் போனேன். அங்கு ஒரு அறிவிப்பு இருந்தது. ஒரு நாள் முழுவதும் அல்லது இரண்டு, மூன்று, நான்கு நாட்கள் வரையில் அங்கு சுற்றிப்பார்க்க விரும்பினால் ஸ்பெஷல் டூரிஸ்ட் பாஸ்கள் கிடைக்கும், இந்த பாஸ்களை பஸ்களிலேயே வாங்கிக்கொள்ளலாம் என்று போட்டிருந்தது. விலையோ மிகவும் சலீசாக இருந்தது. இரண்டு ட்ரிப் தனித்தனியாக வாங்கும் டிக்கட் சார்ஜை விட கொஞ்சம்தான் அதிகம்.

அடிச்சது லக்கி சான்ஸ் என்று பஸ்சில் ஏறினதும் இந்த பாஸை வாங்கிவிட்டேன். அந்த ஊரில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், அங்கு உள்ளூர் போக்குவரத்திற்கு மூன்று வகையான வசதிகள் இருக்கின்றன.

ஒன்று - நம்ம ஊர் டவுன் பஸ் மாதிரியான சர்வீஸ். நம்ம ஊர் பஸ் மாதிரி என்று நான் எழுதியுள்ளதை அந்த ஊர்க்காரர்கள் பார்த்தால் என் மேல் கேஸ் போட்டுவிடுவார்கள்.

இரண்டு - சென்னையிலுள்ள லோகல் மின்சார வண்டிகள் மாதிரியான ஒரு சர்வீஸ். இந்த சர்வீசிலுள்ள ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் நேரம் தவறாமை. 9.22 ரயில் என்றால் சரியாக 9.21க்கு பிளாட்பாரத்தில் வந்து நிற்கும். 9.22 க்கு புறப்படும். எப்பொழுதும் எந்த மாறுபாடும் இல்லாமல் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப் படுகிறது. தவிர, இந்த ரயில்களின் அட்டவணை காலம் காலமாக மாற்றப்படாமல் அப்படியே இருக்கிறது.

மூன்று - டிராம் வண்டி. இந்தக் காலத்து இளைஞர்கள் சென்னையில் பார்க்கக் கிடைக்காத ஒன்று. ரோட்டின் நடுவில் தண்டவாளம் பதித்து அதில் போகும் ரயில் மாதிரி ஒரு வாகனம்.

எதற்கு இந்த மூன்றையும் குறிப்பிட்டேனென்றால், இந்த மூன்றுக்கும் ஒரே டிக்கட்தான். நாம் போகவேண்டிய இடத்திற்கு இந்த மூன்றிலும் மாறி மாறிப் போகவேண்டியிருந்தால், ஆரம்பத்தில் ஒரு டிக்கட் வாங்கினால் போதும். எல்லா வண்டிகளுக்கும் அது செல்லுபடியாகும்.

நான் வாங்கிய மூன்று தினங்களுக்கான பாஸ் இந்த மூன்று வகை வாகனங்களுக்கும் செல்லுபடியாகும். எங்கு வேண்டுமானாலும் ஏறி, எங்கு வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ளலாம். சின்னப்பிள்ளை மாதிரி அன்று முழுவதும் இப்படி ஊர் சுற்றினேன்.

இப்படி ஒரு ரயிலில் போய்க் கொண்டிருந்தபோது டிக்கட் இன்ஸ்பெக்டரிடம் மாட்டிக்கொண்டேன்.

20 கருத்துகள்:

  1. டிக்கெட் இன்ஸ்பெக்டரிடம் மாட்டிக்கொண்டீர்களா ஏன் ஐயா? விறுவிறுப்பு ஏறிக்கொண்டே போகிறது

    பதிலளிநீக்கு
  2. //உள்ளூர் யானை அசலூரில் பூனைதானே!//

    அதே அதே ! ;)


    பதிலளிநீக்கு
  3. அதான் டிக்கட் வாங்கியிருன்தீங்களே... அப்புறமென்ன பயம்...

    பதிலளிநீக்கு
  4. //நம்ம ஊர் பஸ் மாதிரி என்று நான் எழுதியுள்ளதை அந்த ஊர்க்காரர்கள் பார்த்தால் என் மேல் கேஸ் போட்டுவிடுவார்கள்.//

    ஆமாம் ஐயா, பார்த்து ஜாக்கிரதையா இருங்கோ.

    //இப்படி ஒரு ரயிலில் போய்க் கொண்டிருந்தபோது டிக்கட் இன்ஸ்பெக்டரிடம் மாட்டிக்கொண்டேன்.//

    ஆஹா, மாட்டினீங்களா ....... நல்ல சஸ்பென்ஸ் ..... அறிய ஆவலுடன்.

    பதிலளிநீக்கு
  5. ஒரே டிக்கட் மூன்று வகையான வண்டிகளுக்குமா? அட!

    பதிலளிநீக்கு
  6. நிச்சயம் அந்த டிக்கெட் இன்ஸ்பெக்டர் தமிழனாத்தான் இருப்பான் சரியா?

    பதிலளிநீக்கு
  7. என்ன காரணத்திற்காக பயணச்சீட்டு ஆய்வாளரிடம் மாட்டிக்கொண்டீர்கள என அறிய தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  8. பதிவு தவறாம சஸ்பென்சா? சுவைக்கிறது.

    நிறைய எழுதுங்கள். நூலாக வெளியிடலாம்.

    பதிலளிநீக்கு
  9. புதுப்புதுபிரச்சனைகளில் மாட்டிக் கொண்டாலும் அவை சுவையான அனுபவங்களாகவே இருந்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. உள்ளூர் யானை அசலூரில் பூனைதானே!

    அருமையான பயண அனுபவங்கள்..!

    பதிலளிநீக்கு
  11. நீங்கள் குறிப்பிட்ட மூன்று வகை வண்டிகளையும் நானும் அங்கு பார்த்தேன் எனக்கு இந்த
    அனுபவம் ஏற்பட வாய்ப்பில்லை! காரணம் குழுவாக சுற்றுலா ஏற்பாடாளரின் மூலம் சென்றதாகும்!

    பதிலளிநீக்கு
  12. சொல்லவேண்டியவைகளை
    பயனுள்ளவைகளாயினும்
    சுவாரஸ்யமாகச் சொல்லிச் செல்வதற்க்கு
    அதிகத் திறமை வேண்டும்
    அது உங்களிடம் கூடுதலாகவே இருக்கிறது
    ஆர்வத்துடன் தொடர்கிறேன்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. அங்கே சீனியர் சிட்டிசன் டிக்கெட் இல்லையா? அல்லது அப்பொழுது தாங்கள் சீனியர் சிட்டிசனாகவிலையா?

    பதிலளிநீக்கு
  14. வழக்கம்போல இங்கேயும் உங்கள் நகைச்சுவை மிளிர்கிறது.
    CARD KEY - முறை இங்கு திருச்சியிலும் வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  15. பேருந்து, ரயில், டிராம் மூன்றுக்கும் ஒரே பயணச்சீட்டு! //உள்ளூர் யானை, அசலூரில் பூனை// சொலவடை மிகவும் பிடித்திருக்கிறது!

    பதிலளிநீக்கு