திங்கள், 30 மார்ச், 2015

அக்ரி காலேஜ் ஆபீசர்ஸ் கிளப் - தொடர்ச்சி

                                          Image result for hanging portraits

அவர் சொல்ல நினைத்தது - "நானும் ஒரு நாள் பெரிய ஆபீசர் ஆக பிரபலமாகி, என் படமும் ஒரு நாள் இங்கு இதே மாதிரி தொங்கும்" என்பதே. ஆனால் இதை நல்ல ஆங்கிலத்தில் சொல்ல அவருக்குத் தெரியவில்லை. ஏன், பெரும்பாலானவர்களுக்கே கடினமான விஷயம்தான்.

அவர் என்ன சொன்னார் என்றால் - "one day I will hang like this"  இதன் அர்த்தம் என்னவென்றால் "ஒரு நாள் நான் இங்கு இது மாதிரி (தூக்கில்) தொங்குவேன்".

இந்த வாக்கியமானது பல வருடங்கள் பிரபலமாக இருந்தது. இந்த வாக்கியத்தைச் சொன்னவர்தான் எங்களுக்கெல்லாம் அன்அஃபிசியல் தலைவர் அதாவது லீடர். நல்ல தைரியசாலி. இவருடைய தலைமையில்தான் நாங்கள் ஆபீசர்ஸ் கிளப்பில் பல லீலைகள் புரிந்தோம்.

இந்த ஆபீசர்ஸ் கிளப்புக்கென்று ஒரு மெஸ் உண்டு. அதற்கு ஆபீசர்ஸ் மெஸ் என்று பெயர். அதை நடத்த ஒரு கான்ட்ராக்டரிடம் ஒப்பந்தம் போட்டு அவர் நடத்தி வந்தார். நான் கல்லூரியில் படிக்கும்போது சில வகுப்புகள் காலை 6.30 மணிக்கே தொடங்கும். நான் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கவில்லை. காரணம் வீடு பக்கத்தில் ஆர்எஸ்புரத்தில் இருந்ததால் 10 நிமிடத்தில் கல்லூரிக்கு வந்து விடலாம்.

இப்படி 6.30 மணி வகுப்பிற்கு வரும்போது வீட்டில் டிபன் ரெடியாகி இருக்காது. அதனால் இந்த ஆபீசர்ஸ் மெஸ்சில்தான் டிபன் சாப்பிட்டு விட்டு வகுப்பிற்குப் போவேன். நான் வழக்கமாகச் சாப்பிடுவது - இரண்டு இட்லி (ஒரு அணா), ஒரு தோசை (ஒன்றரை அணா) ஒரு காப்பி (ஒன்றரை அணா), ஆக மொத்தம் நான்கு அணா அதாவது 25 நயா பைசா.

அன்று இருந்த விலைவாசி நிலவரம் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியட்டும் என்றுதான் இவ்வளவு விவரம் கொடுத்தேன். இன்று அந்த 25 பைசாவே இல்லை.

இந்த ஆபீசர்ஸ் கிளப்பின் அங்கத்தினர்கள் எல்லோருக்கும் இந்த மெஸ்சில் கணக்கு உண்டு. எது வேண்டுமானாலும் சாப்பிட்டு விட்டு கணக்கில் எழுதச் சொல்லி விட்டு வந்து விடலாம். மாதக் கடைசியில் ஒவ்வொருவரும் சாப்பிட்ட கணக்குகளை ஒன்று சேர்த்து மெஸ் பில் தயாரித்து நோட்டீஸ் போர்டில் போடுவார்கள். 10 தேதிக்குள் அங்கத்தினர்கள் பில்லைக் கட்ட வேண்டும். அவர்களில் ஒரு சிலர் கட்டாவிட்டாலும் கிளப்பிலிருந்து மெஸ் கான்ட்ராக்டருக்கு 10 ம் தேதி பணம் கொடுக்கப்பட்டு விடும்.

இந்த வழக்கம் எல்லாம் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வழக்கங்கள். இங்கிலீஷ்காரன் ஆண்டு கொண்டு இருக்கும் வரையில் எல்லாம் ஒழுங்காகப் போய்க்கொண்டிருந்தது. அவனைக் கப்பல் ஏற்றி அனுப்பியவுடன் அவன் கற்பித்த ஒழுங்கு முறைகளையெல்லாம் நம்மவர்கள் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள்.

பல அங்கத்தினர்கள் இந்த மெஸ் பில்லை ஒழுங்காகக் கட்டாததினால் ஆபீசர்ஸ் கிளப் திவாலாகும் நிலமைக்கு வந்து விட்டது. கிளப் நிர்வாகத்திற்கு வேறு வழி தெரியவில்லை. ஆகவே இந்த கடனில் சாப்பிடும் முறையை ஒழித்துக் கட்டினார்கள். பழைய பாக்கிகளை முடிந்தவரை வசூல் செய்தார்கள். பலர் பாக்கிகளை ஏப்பம் விட்டு விட்டார்கள்.

இந்தக்கால கட்டத்தில்தான் நாங்கள் முதுகலைப் படிப்பு முடிந்து எல்லோரும் வேலையில் சேர்ந்திருந்தோம். எங்கள் எல்லோருக்கும் அப்போது நான்-கெஜட்டெட் ஆபீசர்ஸ் என்று பெயர். எப்படியோ நாங்களும் ஆபீசர்ஸ் ஆகிவிட்டோம். அந்த ஜபர்தஸ்தைக் காட்டவேண்டாமா? ஆகவே ஆபீசர்ஸ் கிளப்பில் மெம்பர்களானோம்.

இந்தக் கிளப்பில் பெரிய ஆபீசர்கள், சின்ன ஆபீசர்கள், எங்களைப் போன்ற கத்துக்குட்டி ஆபீசர்க்ள எல்லோரும் மெம்பர்களாக இருந்தோம். ஆபீஸில் காட்டும் பந்தா, தோரணை எல்லாம் இங்கு இல்லை. எல்லோரும் சமமாகப் பழகுவார்கள்.

கிளப்பில் சில தினப் பத்திரிக்கைகள், வார, மாதப் பத்திரிக்கைகள் வாங்கி அங்கத்தினர்கள் படிப்பதற்காகப் போட்டிருப்பார்கள். கேரம்போர்டு, டேபிள் டென்னிஸ், செஸ் ஆகிய உள்ளே விளையாடும் விளையாட்டுகளும், வெளியில் விளையாடும் டென்னிஸ் ஆகியவை உண்டு. நாங்கள் எல்லாம் புது அங்கத்தினர்களானதால் மிகவும் பவ்யமாக பேப்பர் படித்துக்கொண்டு மற்றவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்போம்.

முக்கியமான விளையாட்டு ஒன்றைக் குறிப்பிட மறந்து விட்டேன். அதுதான் சீட்டாட்டம். அதில் காசு வைத்துத்தான் ஆடுவார்கள். காசு இல்லாவிட்டால் அதில் சுவாரஸ்யம் ஏது? ஆனால் காசை வெளிப்படையாக டேபிளில் வைத்து விளையாடக் கூடாதல்லவா? அதனால் பல வர்ணங்களில் டோகன்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மதிப்பு. ரொம்ப அதிகப் பணம் வைத்து ஆடமாட்டார்கள். ஆனாலும் ஒரு நாளைக்கு ஐம்பது, நூறு என்று வரும்,  போகும்.

கொஞ்ச நாள் ஆனதும் நாங்களும் டேபிள் டென்னிஸ், கேரம் ஆகிய விளையாட்டுகள் விளையாட ஆரம்பித்தோம். நான் கேரத்தில் ஓரளவு தேர்ச்சி பெற்றேன். நாங்கள் ஒரு நாலு பேர் ஒரு டீமாகச் சேர்ந்தோம். ஒரு டீம் கேரம் விளையாட ஆரம்பித்தால் அவர்க்ள ஒரு முழுமையான கேம் விளையாடி முடிக்கும் வரை அடுத்தவர்கள் கேரம் விளையாட உரிமை கோர முடியாது. அப்படி ஒரு எழுதப்படாத சட்டம் எங்கள் கிளப்பில் அமுலில் இருந்தது.

                                           Image result for carrom board

கேரம் விளையாட்டு ஆடினவர்களுக்குத் தெரியும். எந்த டீம் முதலில் 29 பாய்ன்ட் எடுக்கிறதோ அந்த டீம்தான் வென்றதாக கருதப்படும். நாங்கள் நால்வரும் மாலை ஆறு மணிக்கே போய் கேரம் போர்டைப் பிடித்துக் கொள்வோம். முதலில் ஒழுங்காக அவரவர் சாமர்த்தியத்திற்கு ஏற்ப விளையாடுவோம். ஏதாவது ஒரு டீம் 25 அல்லது 26 பாய்ன்ட் எடுத்த பிறகு அந்த டீம் அதற்குப் பிறகு வேண்டுமென்றே அடுத்த டீமுக்கு பாய்ன்ட் ஏறும்படியாக விளையாடும்.

இப்படி விளையாடி இரண்டு டீமும் தலா 28 பாய்ன்ட் எடுத்து விடும். அதற்குள் ஏறக்குறைய இரவு 8.45 மணி ஆகிவிடும். அதற்குப் பிறகுதான் கடைசி ஆட்டம். இரு டீமும் போட்டி போட்டுக் கொண்டு ஆடும். ஏதாவதொரு டீம் ஜெயிக்கும். இதற்குள் மணி 9 ஆகியிருக்கும். 9 கணிக்கு கிளப் மூடும் டைம். ஆகவே அன்று வேறு யாரும் கேரம் விளையாட முடியாது.

மறுநாளும் இப்படியே. இப்படியாக இரண்டு வருடம் நாங்கள் மட்டும்தான் கேரம் விளையாட்டை ஏகபோக உரிமையாக்கி விளையாடினோம். வேறு மெம்பர்கள் ஆட்சேபணை தெரிவித்தால் எங்கள் தலைவர் அடாவடியாகப் பேசி அவர்களை அடக்கி விடுவார். "நீங்களும் நேரத்தோடு வந்து கேரம் விளையாட்டை ஆரம்பிக்கவேண்டியதுதானே? இப்போது இவர்கள் நேரத்தோடு வந்து விளையாட்டை ஆரம்பித்து விட்டார்கள். இந்த கேம் முடியட்டும், அடுத்த கேம் நீங்கள் விளையாடலாம்" என்று பேசி அவர்களை அடக்கி விடுவார்.

நாங்கள்தான் எங்கள் டெக்னிக் பிரகாரம் ஆடி கிளப் மூடும் சமயத்தில்தான் கேமை முடிப்பதாச்சே? அப்புறம் எங்கே மற்றவர்கள் விளையாடுவது? இப்படியாக அந்த இரண்டு வருடமும் வேறு யாரும் எங்கள் கிளப்பில் கேரம் விளையாட நாங்கள் விடவில்லை.

இப்படியாக நாங்கள் அட்டுழியம் பண்ணிக்கொண்டு இருக்கும்போது இந்த சீட்டாட்டக்காரர்களுடன் ஒரு மோதல் ஏற்பட்டது. அது என்னவென்று அடுத்த பதிவில் சொல்லுகிறேன்.18 கருத்துகள்:

 1. அடுத்தப் பதிவிற்காகக் காத்திருக்கிறேன் ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
 2. மொழி பெயர்ப்பு... ஹா... ஹா...

  சுவாரஸ்யமான லீலை ஐயா...!

  பதிலளிநீக்கு
 3. பிறர் விளையாட அனுமதிக்காததை ரசித்தோம். சீட்டாட்டக்காரர்களுடனான மோதலைத் தெரிந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு

 4. ஐயா, இது போல் சிலர் Just passed out என்பதற்கு பதிலாக Just passed away என்று சொன்னதாக சொல்வார்கள். தங்களின் கேரம் விளையாட்டின் இரகசியத்தை சொல்லி மற்றவர்களுக்கும் எப்படி மற்றவர்கள் ஆடாமல் இருக்க ‘வழி’ காட்டிவிட்டீர்கள்!

  தங்களிடம் படித்தவர்களுக்கு பாடத்தை நகைச்சுவையோடு சொல்லிக் கொடுத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். கல்லூரியில் எனக்கு கசப்பான பாடமே வேளாண் வேதியல் பாடம் தான். ஒருவேளை தங்களிடம் படித்திருந்தால் அந்த கசப்பு இருந்திருக்காதோ என்னவோ!

  பதிலளிநீக்கு
 5. மலரும் நினைவுகள் ஆர்வத்தை தூண்டுகின்றன.
  த ம 5

  பதிலளிநீக்கு
 6. சுவாரஸ்ய அனுபவங்கள். மொழிபெயர்ப்பு ஜோக்கை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 7. ஒரு கல்லூரியில் மாணவன் பாடங்களில் கவனம் செலுத்தாமல் அரட்டை அடித்துக் க்ண்டிருந்தானாம் கோபமடந்த ஆசிரியர் “GET OUT OF THE CLASS. OR I WILL ASK THE PRINCIPAL TO GET OUT" என்றாராம். நினைவுக்கு வந்தது. இருந்தாலும் கிளப்பில் உங்கள் செய்கை அடாவடிதானே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சந்தேகமில்லாமல் அடாவடிதான். நாங்கள் ஒரு கூட்டமாக இருந்ததால் இந்த அடாவடி செல்லுபடியாகியது.

   நீக்கு
 8. ஆங்கிலத்தில் அதே போன்று ஒரு பையன் எங்களுக்குத் தெரிந்தவன் பாவம் அப்போது "People are standing out" என்று சொல்ல வேண்டியதை "People are outstanding" என்று சொல்லுவான்...ஆங்கிலத்தில் பேச மிகவும் ஆசை அவனுக்கு அதனால்....பாவம்..அப்புறம் நாங்கள் அவனுக்குத் திருத்திச்சொல்லிக் கொடுப்போம்......

  சுவாரஸ்யமாக இருக்கின்றது ஐயா தங்களது நினைவலைகள்...மோதலை அறிய ஆவலுடன் வெய்ட்டிங்க்.....

  பதிலளிநீக்கு
 9. These are taken from another blog which I forget. These are for FUN and FUN only, and No offence or criminal intent is involved. Just enjoy.

  JPR jokes

  college students have collected & published a book by name "Jappier's Spoken English"
  ...... Njoy ............with his......... .....English. ......... .......
  Now , here are some classic English sentences from the great "Jappier's Spoken English"

  # At the ground:
  ------------ -----
  All of you stand in a straight circle.
  There is no wind in the balloon.
  The girl with the mirror please comes her...{Means: girl with specs
  please come here).

  # To a boy , angrily:
  ------------ ---------
  I talk , he talk , why you middle middle talk?

  # While punishing students:
  ------------ --------- --
  You , rotate the ground four times...
  You , go and understand the tree...
  You three of you stand together separately.
  Why are you late - say YES or NO .....(?)

  # While addressing students about Dress Code: (he is very strict about this )
  ------------ --------- --
  Every body should wear dress to college
  Boys no proplum
  Girls are pig proplum . (pig=big)
  Girls should wear only slawar no nitee.
  Girls should not wear T shirt , U shirt , V shirt.. but if you want to
  wear
  ..... remove it when inside the campus and put it oout side the campus

  # Sir at his best:
  ------------ ---
  Sir had once gone to a film with his wife. By chance , he happened to
  see one of our boys at the theatre , though the boy did no t see them.
  So the next day at s school... (to that boy) - "Yesterday I saw you
  WITH MY WIFE at the Cinema Theatre"

  # Sir at his best inside the Class room:
  ------------ --------- --------- --------- -------
  Open the doors of the window. Let the atmosphere come in.
  Open the doors of the window. Let the Air Force come in.
  Cut an apple into two halves - I will take the bigger half.
  Shhh...Quiet , boys...the principal JUST PASSED AWAY in the corridor
  You , meet me behind the class. (Meaning AFTER the class..)
  This one is cool >> "Both of u three get out of the class."
  Close the doors of the windows please. I have winter in my nose today...
  Take Copper Wire of any metal especially of Silver.....
  Take 5 cm wire of any length....

  Last but not the least some Jeppiar experiences ...
  Once Sir had come late to a college function , by the time he reached , the function had begun , so he went to the dais , and said , sorry I am late ,
  because on the way my car hit 2 muttons (Meaning goats).

  At Sathyabama college day 2002:
  "This college strict u the worry no .... U get good marks , I the happy , tomorrow u get good job , jpr the happy , tomorrow u marry I the enjoy"

  At St. Josephs college of engineering fresh years day 2003:
  "No ragging this college. Anybody rag we arrest the police "

  Jayakumar

  Wait a minute for five minutes

  பதிலளிநீக்கு
 10. Sir

  I now remember Shasi Tharoor's (Our Thiruvananthapuram M.P former minister and former UN Under sec.) tweet about Governor Sadhasivam's (FMR. Supreme Chief Justice) wife making pongal in Attukkal Temple Festival with a photo. "First Wife" of Governor offering Pongala in Attukkal Temple.

  Jayakumar

  பதிலளிநீக்கு
 11. And here are some more

  1. A lady is lost in Dadar Bombay. She asks the fellow for directions, and he says: 'Lady, are you a citizen of Dadar?'
  2. The LIC clerk asks for leave, and the officer says that as many staff are absent during that time, could he take leave later? The clerk responds: 'Sir, what is the point of granting me leave posthumously?'
  3. The chap is treating his guests to a lavish dinner at home. Some guests are a bit shy at the buffet table. Noticing this, he announces, 'Eat shamelessly, people!' (In Hindi, sharmao math - don't be shy; sharam also implies shame).
  4. Tamil Prof LPKR (Lepa Karu Ramanathan Chettiar) was fond of breaking into Tamilised English: To some naughty students, he wanted to say, you leave the class or I will ask the Principal to order you to leave. Instead: 'Either you get out or I will ask the principal to get out'.
  5. On Annadurai's death he was buried near the beach. LPKR thought that the cancer that killed him was contagious, and burying him exposed others to risk. So he pronounced: 'He should not have been buried. He should have been fired!'
  6. Announcing the date by which students must pay their fees to the college: 'Please tie the fees in front of the 15th'
  ('சம்பளத்தை பதினைந்தாம் தேதிக்கு முன்னர் கட்டி விடவும்')
  Enjoy!

  jayakumar

  பதிலளிநீக்கு
 12. And Yet some more

  Some Leave letters

  As I am going to my native place to sell my land along with my wife, please grant me two days leave.

  As I am going to the cremation ground and may not return, please grant me half a day leave.

  As I am having severe headache please give me a holiday.

  And Sri. Nadana Sabhapathy may be interested in this since it is from his Syndicate Bank.

  A manager from one officer branch wanted leave for wife delivery.Sent telegram to HO
  Wife delivered .Arrange substitute.
  Reply telegram .Not possible. Arrange locally

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது உண்மையோ அல்லது கற்பனையோ அறியேன். இருப்பினும் இரசித்தேன். சிரித்தேன் திரு ஜெயக்குமார் அவர்களே!

   நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
 13. நினைவலைகள் அருமையாக செஸ்கிறது அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்க்.

  பதிலளிநீக்கு
 14. அன்புள்ள அய்யா,

  அக்ரி காலேஜ் ஆபீசர்ஸ் கிளப் - தாங்கள் செய்த அட்டூழிய ஆட்டமான கேரம் விளையாட்டை... பழைய நினைவுகளைப் பகரிந்து கொண்டதை இரசித்துப் படித்தோம்.

  டைரக்டர் பாக்கியராஜ் கேரம் சிறப்பாக விளையாடக் கூடியவர். போட்டியில் மற்றவர் வெற்றி பெற வேண்டி வலியனாக விட்டுக் கொடுத்ததைப் பற்றி... விட்டுக்கொடுத்ததால் விளைந்த நன்மை பற்றியும் ஒரு முறை சொல்லியிருந்தார்.

  என்ன சீட்டாட்டக்காரர்களுடன் ஒரு மோதலா.....?

  நன்றி.

  த.ம. 8.

  பதிலளிநீக்கு