ஞாயிறு, 14 ஜூன், 2015

கொள்கைப் பிடிப்பு - வைராக்கியம்

                                        Image result for உழைப்பாளர் சிலை


எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். 
     
அ- 67 கு-66


எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப் பெற்றால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.


வாழ்க்கையில் எல்லோரும் ஏதோ ஒரு குறிக்கோளுடன்தான் வாழ்கிறோம். சிலர் அவர்கள் நினைத்த குறிக்கோளை அடைகின்றனர். சிலரால் அவர்கள் நினைத்த குறிக்கோளை அடைய முடிவதில்லை. ஏன்?

இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பொதுவாக அவன் "விதிப் பயன்" என்று எல்லோரும் கூறிவிடுவார்கள். ஆனால் இது சரியா? அனைத்துக் காரியங்களும் விதிப்படிதான் நடக்கிறதென்றால் மனித முயற்சிக்குப் பலன் ஏதும் கிடையாதா?

இது காலம் காலமாகக் கேட்கப்பட்டு வரும் கேள்வி. இதற்குப் பதில்தான் இதுவரை யாரும் சொல்லவில்லை. பதில் கண்டுபிடிப்பதுவும் லேசான காரியம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு கேள்விக்கு பழனி. கந்தசாமி பதில் தேடுகிறார். என்ன தைரியம் பாருங்கள்.

பலருடைய அனுபவத்தில் நேர்மையாக உழைப்பவர்கள் அப்படி ஒன்றும் சீக்கிரத்தில் மேலுக்குப் போனதாக தெரியவில்லை. தில்லு முல்லு செய்பவர்கள் சீக்கிரம் மேலுக்குப் போவதை கண்கூடாகப் பார்க்கிறோம். இதை அவரவர்கள் விதி என்று சொல்லிவிட்டு நாம் நம் வேலையைக் கவனிக்கப் போய்விடுவோம்.

இங்குதான் நீங்கள் முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஒருவனுடைய விதி என்ன வென்று அவனுக்கும் தெரியாது. வேறு யாருக்கும் தெரியாது. ஆனாலும் நாம் உண்மையாக முயற்சி செய்தால் அதற்கு உண்டான பலன் கிடைக்கும் என்று தெய்வப்புலவர் திருவள்ளுவரே சொல்லிப் போயிருக்கிறார்.

தெய்வத்தாலாகாதெனினும் முயற்சி தன்
மெய்வருந்தக் கூலி தரும்.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் தம்மாலான முயற்சியைச் செய்வது அவசியமல்லவா? இதைத்தான் வைராக்யம் என்கிறோம். இப்படி ஒரு முயற்சி செய்வதைப் பற்றிய ஒரு பாடலைப் படியுங்கள்.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண் ஆயினார்.

எல்லோரும் தங்கள் தங்களை முயற்சியினால் வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துகிறேன். இதில் ஒரு ஒரு முக்கிய பாய்ன்டைக் குறித்துக்கொள்ளவும். இருட்டில் போகும்போது ஒரு விளக்கை கையில் எடுத்தப்போவது போல் இந்த மாதிரி முயற்சிகளுக்கு மோடி மாதிரி அல்லது அதானி மாதிரி ஒரு துணை இருந்தால் உங்கள் முயற்சி 100 சதம் வெற்றியடையும். அந்த மாதிரி துணை கிடைப்பதுவும் உங்கள் முயற்சியினால்தான் சாத்தியமாகும். 

10 கருத்துகள்:

  1. //தில்லு முல்லு செய்பவர்கள் சீக்கிரம் மேலுக்குப் போவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.//

    தில்லுமுல்லு பண்றதெல்லாம் கல்லு குண்டாட்டம் நூறு வரைக்கும் இருக்க ஆசைப்படுது. எங்கே மேலுக்கு போவுது?

    பதிலளிநீக்கு

  2. //இந்த மாதிரி முயற்சிகளுக்கு மோடி மாதிரி அல்லது அதானி மாதிரி ஒரு துணை இருந்தால் உங்கள் முயற்சி 100 சதம் வெற்றியடையும்.//

    மோடிக்கு அதானி மாதிரி ஒரு துணை இருந்தால் என்றிருக்கவேண்டும் என நினைக்கிறேன். இந்த மாதிரி துணை எல்லோருக்கும் கிடைக்கபோவதில்லை. எனவே எதையும் எதிர்பாராது நமது வேலையை தொடர்வதே சரி.

    பதிலளிநீக்கு
  3. ஐயா

    //
    வாழ்க்கையில் எல்லோரும் ஏதோ ஒரு குறிக்கோளுடன்தான் வாழ்கிறோம். சிலர் அவர்கள் நினைத்த குறிக்கோளை அடைகின்றனர்.
    //
    வாழ்க்கையின் குறிக்கோள் அவ்வப்போது மாறுபடும். நிலையான குறிக்கோள் எதுவும் கிடையாது. சின்னப்பிள்ளையில் நான் ரயில் என்ஜின் டிரைவர் ஆவேன் என்பது குறிக்கோள் என்று சொல்வோம். அதுவே +2 பாஸ் பண்னபின் டாக்டர் அல்லது எஞ்சினியர் அல்லது IAS ஆவது குறிக்கோள் என்று சொல்வோம். பட்டப்படிப்பு முடிந்து கல்யாணம் ஆகி விட்டபின் வீடு நிலம் வாகனம் வாங்குவது போன்றவற்றை குறிக்கோள்களாகச் சொல்வோம்.

    வாழ்வது என்பது மட்டுமே வாழ்க்கையின் நிரந்தர குறிக்கோள். தற்போது தமிழ் மணம் 1 ரேங்க் உங்களுடைய குறிக்கோள்.

    ஆக விதி மதி கொள்கை மோடி அதானி என்று பிதற்றாமல்

    வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர் நீச்சல்.
    சரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்

    திருமங்கலம் பார்முலா போன்று ஏதாவது வெற்றிக்குரிய பார்முலா ஒன்றைக் கண்டுபிடித்து முன்னேறுங்கள்.

    ஜெயகுமார்

    பதிலளிநீக்கு
  4. தங்களைப் போன்ற மூத்தோர் சொல் வழி கேட்பது எம்மைப் போன்ற இளையோருக்கு நற்பயன் தரும். தங்களது பட்டறிவும், அன்பும் ஆசீர்வாதங்களும் எம்மைப் போன்ற இளையோர் வாழ்வில் முன்னேற உரமாக அமையும். மிக்க நன்றிகள் ஐயா !

    பதிலளிநீக்கு
  5. ஆங்கிலத்தில் AIM AT THE STARS, AT LEAST YOU WILL REACH THE TREE TOP என்று படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
  6. ஆஹா, வழக்கப்போல மிகவும் பயனுள்ள பல விஷயங்களை, தங்கள் பாணியில் பகிர்ந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  7. முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லி முக்கிய பாயிண்ட் அதானிக்கு மோடி உதவியது மாதிரி என்று அரசியலையும் புகுத்தி அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. இலக்கு வைக்கக் கூறும் தங்களது கருத்துக்கு நன்றி. கடைசி பத்தியில் தாங்கள் தந்துள்ள உதாரணம் வேறு இலக்கிற்கு இழுத்துச்சென்றுவிடுமோ என்ற பயம் உள்ளது.

    பதிலளிநீக்கு
  9. கருமமே கண்ணாயினார்...சரிதான் ஐயா..

    பலருடைய அனுபவத்தில் நேர்மையாக உழைப்பவர்கள் அப்படி ஒன்றும் சீக்கிரத்தில் மேலுக்குப் போனதாக தெரியவில்லை. தில்லு முல்லு செய்பவர்கள் சீக்கிரம் மேலுக்குப் போவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.// இது எங்களுக்கும் புரியாத புதிராகத்தான் இருக்கின்றது. அப்படி என்றால் நேர்மையாக, உழைப்பாளியாக இருக்கக் கூடாது எங்கிறதா இந்த உலகம். உங்களுக்கு விடை கிடைத்தால் பதியுங்கள் ஐயா எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். சீரியஸாக ஐயா.

    அந்தக் கடைசி வெள்ளையில் வரும் எழுத்துக்கள் ஹஹாஹ்ஹ் உங்கள் நக்கல் செம கலக்கல் ஐயா...

    பதிலளிநீக்கு