சனி, 14 நவம்பர், 2015

விதியின் விளையாட்டு-கடவுளைக் கண்டேன்.

                                                   Image result for பரமசிவன் பார்வதி

விதி ஒரு மனிதனை எந்த வகையில் எந்த ரூபத்தில் தாக்கும் என்று சொல்ல முடியாது. கொஞ்சமும் எதிர் பார்க்காத நேரத்தில்தான் அது தன் வேலைகளைக் காட்டும். பாருங்கள் நான் சிவனேயென்று நானுண்டு என் பதிவுகளுண்டு என்று இருந்தேன்.

எனக்கு விதி கில்லர்ஜி ரூபத்தில் அதன் வேலையைக் காட்டிவிட்டது. கீழே கொடுத்துள்ள ஸ்கிரீன் ஷாட்டைப் பாருங்கள்.


இந்த லிஸ்டில் நான்காவது பெயரைப் பாருங்கள். இதில் "அன்பிற்குரிய" என்ற அடைமொழி வேறு. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் ஆத்திர அவசரத்திற்கு அவரது பதிவைக் "காப்பி பேஸ்ட்" செய்யலாம் என்றால் ஒரு அட்சரத்தைக்கூட காப்பி பண்ண முடியாமல் மந்திரம் போட்டு வைத்திருக்கிறார். இதில் அன்பு எங்கே வந்தது?

அவரைப் பழி தீர்க்க எனக்கு ஒரே வழிதான் இருக்கிறது. அதைத்தான் இப்போது செய்யப்போகிறேன். நான் எப்படியோ கைலாசத்தில் பரமசிவன் முன்னால் நிற்கிறேன்.

அவர் பக்தா என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார். நான் பலமுறை அவரைத் தண்டனிட்டு நமஸ்கரித்து வேண்டிய வரம் என்னவென்றால்.

பிரபோ, நான் வசிக்கும் பூவுலகில் எனக்கு வேண்டிய வசதிகளையெல்லாம் முன்பே கொடுத்து விட்டீர்கள். அதுவே போதும். ஆனால் இப்போது புதிதாக ஒரு பிரச்சினை கில்லர்ஜி என்றி ஒருவரால் ஏற்பட்டிருக்கிறது. அதை மட்டும் தீர்த்து வைத்தால் போதும் என்றேன்.

அவர் அந்தக் கில்லர்ஜியினால் உனக்கு என்ன பிரச்சினை என்றார். அது வந்து பிரபோ நான் என் பாட்டுக்கு பதிவுகள் எழுதிக்கொண்டிருந்தேன். அவர் என்னை உடனடியாக உங்களை பேட்டி கண்டு விட்டு வந்து விபரங்களைச் சொல்லுமாறு என்னை நச்சரிக்கிறார் என்றேன்.

பரமசிவனும் அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றார். அதற்கு ஒன்றே ஒன்று செய்தால் போதும் பிரபுவே. அவர் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தால் அந்தக் கம்ப்யூட்டரின் கீபோர்டில் எழுத்துகள் மாயமாய்ப் போகவேண்டும். இது ஒன்றுதான் நான் கேட்கும் வரம் என்றேன்.

சிவனாரும் அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதித்து என்னைத் திரும்பவும் பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார். இனி மேல் கில்லர்ஜி பதிவுகள் எழுதமாட்டார். அப்படி எழுதினால் நான் பரமசிவன் மேல் நம்பிக்கைத் துரோகத்திற்காக கேஸ் போடுவேன்.

14 கருத்துகள்:

 1. ஆகா...! என்னவொரு நல்ல வரம்... ஹா... ஹா...

  நல்லவேளை இதை -->http://swamysmusings.blogspot.com/2015/05/blog-post_13.html<-- "காப்பி பேஸ்ட்" செய்யவில்லை ஐயா...

  பதிலளிநீக்கு
 2. இதற்குப் போய் “பிடி சாபம்” என்று சொல்லி விட்டீர்களே. சில பதிவுகளில், மந்திரம் போட்டு காப்பி / பேஸ்ட் செய்யமுடியாமல் செய்தாலும், நம்மிடமும் தெலுங்கு பட ஸ்டைலில் ஒரு மந்திரம் உண்டு. அந்த மந்திரம் கீழே:

  மேலே திரையில் – உள்ள Menu Bar – இல் செய்ய வேண்டியது. இதுதான். Edit > Select All > Copy & Paste (இதில் உள்ள ஒரே சங்கடம், குறிப்பிட்ட பகுதியை மட்டும் காப்பி / பேஸ்ட் செய்ய முடியாது. அந்த பதிவில் (பக்கத்தில்) உள்ள அனைத்தும் வந்து விடும். நாம் எடிட் செய்து கொள்ள வேண்டும் – நம்ப வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் தளத்தில் இந்த பாட்சா பலிக்காது)

  பதிலளிநீக்கு
 3. நீங்க ஒரு ஆசைய சொன்னது நூறு ஆசைய சொன்ன மாதிரி....

  பதிலளிநீக்கு
 4. என்ன ஐயா ? கடைசியில் எனக்கு ஆப்பு வைத்து விட்டீர்கள் அதுக்கும் Mr. சிவன் அனுமதி வழங்கி விட்டாரா....? ஐயய்யோ டெஸ்டுக்கு இன்றைக்கே ஒரு பதிவு போட்டுப் பார்க்கணுமே....
  ஐயோ சொக்கா நான் என்ன செய்வேன் ?
  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க ஊருக்கெல்லாம் வச்சீக. நான் உங்களுக்கு வச்சிட்டேன்.

   நீக்கு
 5. நான் நினைத்ததைத் தாங்கள் கூறிவிட்டீர்கள். இனிதான் நான் எழுதவேண்டும். வேறு யோசிக்கவேண்டியுள்ளது. நன்றி.

  பதிலளிநீக்கு
 6. முனைவர் ஐயா,

  உங்கள் வேண்டுகோளுக்கு உடனடியாக பதில் கிடைத்ததை எண்ணி பதிவுலகம் மகிழ்வடையும் என்று நம்புகின்றேன்.

  இருந்தாலும் , மீசை தாடி, தொப்பி இல்லாமல் கூட பதிவுலகில் தலை காட்டுவார் ஆனால் பதிவில்லாமல் தலைகாட்டாதா கில்லரின் கில்லராகா நீங்கள் மாறுவீர்கள் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை,.

  இனி கில்லர் மாற்று பரிகார பூசைகள் செய்து உங்களுக்கு கொடுக்கப்பட்ட வரத்தை முறிக்க முயற்சிப்பார் என நினைக்கின்றேன்.

  பதிவு அருமை.

  கோ

  பதிலளிநீக்கு
 7. அப்பா இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை...நான்..

  பதிலளிநீக்கு
 8. ஐயா நீங்கள் பரசிவனிடம் இன்னும் விவரமாக வரம் கேட்டிருக்கவேண்டும். ஏனெனில் நீங்கள் திரு KILLERGEE கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தால் அந்தக் கம்ப்யூட்டரின் கீபோர்டில் எழுத்துகள் மாயமாய்ப் போகவேண்டும். என்று கேட்டிருக்கிறீர்கள். ஒருவேளை அவர் கணினி முன் உட்காராமல் நின்றுகொண்டே தட்டச்சு செய்தால் அந்த விசைப்பலகையில் உள்ள எழுத்துக்கள் மறையாதே! மேலும் நீங்கள் கம்ப்யூட்டர் என்று பொதுவாக சொல்லிவிட்டீர்கள். கணினி மட்டுமல்லாமல், மடிக்கணினி பலகை கணினி மற்றும் கைப்பேசி ஆகியவற்றில் நின்றுகொண்டோ, உட்கார்ந்துகொண்டோ, அல்லது படுத்துக்கொண்டோ திரு KILLERGEE அவர்களோ அல்லது அவரது ஆணை பெற்று வேறு யாராவதோ பகலிலோ இரவிலோ விடியற் காலையிலோ அல்லது அந்தி வேளையிலோ அவரது வலைத்தளத்தை திறக்க முயற்சித்தால் விசைப்பலகையில் உள்ள எழுத்துக்கள் மறையவேண்டும் என திரும்பவும் சிவபெருமானிடம் வேண்டி வரம் வாங்குங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆன்மீகக் கதைகள் பல படித்திருப்பீர்கள். வரமோ அல்லது சாபமோ ஒரு loophole இல்லாமல் எங்கேயாவது யாராவது கொடுத்திருக்கிறார்களா அல்லது பெற்றிருக்கிறார்களா? ஒரு கோட்டையைக் கைப்பற்ற உள்ளே நுழைகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். தோற்றுவிட்டால் வெளியே வருவதற்கு ஒரு வழியைத் திறந்து வுத்துக்கொண்டுதானே உள்ளே நுழையவேண்டும். அது போல கில்லர்ஜியும் பிழைத்துப்போக ஒரு வழி வேண்டாமா?

   நீக்கு
 9. நல்ல நல்ல பதிவா போடுகிறவர் பாவம் உங்க சாபம் பலிச்சிட்டா என்ன பண்றது! பாவம்! வாபஸ் வாங்கிங்கோங்க!

  பதிலளிநீக்கு
 10. அஹஹஹஹஹ் ....மிக்க நன்றி ஐயா! கில்லருக்கு இப்படி ஒரு ஆப்பு வைத்ததற்கு! ஹஹ பின்ன எல்லாரையும் ஆசையைச் சொல்லுங்க என்று சொல்லி அந்தக் கடவுளையே திண்டாட வைத்து மூச்சுத் திணற வைத்தால்...ஹஹ்

  ரசித்தோம் ஐயா..

  பதிலளிநீக்கு
 11. நல்ல ஆசை தான்.... கில்லர்ஜி அடுத்த பதிவு போடலை போல இருக்கே! :)

  பதிலளிநீக்கு