செவ்வாய், 10 நவம்பர், 2015

மேக்கி நூடுல்ஸ்

                                               Image result for மேக்கி நூடுல்ஸ்

ஆறு மாத த்திற்கு முன் 10-6-2015 அன்று மேக்கி நூடுல்ஸ் பற்றி நான் போட்ட பதிவு.

லிங்க்: http://swamysmusings.blogspot.com/2015/06/blog-post_10.html

அதில் கடைசி பாரா;

இந்த மேட்டர் சூடு தணிய கொஞ்ச நாள் ஆகும். சூடு எப்படி தணியும் என்று விவரமானவர்கள் அறிவார்கள். இதற்கு அதிக பட்சம் ஒரு ஆறு மாதம் ஆகலாம். அது வரையில் மேக்கி வாங்கி ஸ்டாக் வைத்திருப்பவர்கள் மேக்கி சாப்பிடுங்கள். மற்றவர்கள் எல்லாம் அவர்கள் வாயைப் பார்த்துக்கொண்டு ஆறு மாதம் பொறுத்திருங்கள். மேக்கி இதே பெயரில்  New Maggi என்றோ அல்லது வேறு ஏதாவது ஒரு பெயரிலோ வரும்.பிறகு எல்லோரும் மேக்கி சாப்பிடலாம்.

இன்றைய செய்தித்தாள்களில் வந்த செய்தி. 100 நகரங்களில் மேக்கி நூடுல்ஸ்சுக்கான தடை நீக்கப்பட்டது. ஜிங்க் மற்றும் எம்எஸ்ஜி, ஜீபூம்பா என்று காணாமல் போயிற்று. எல்லோரும் தீபாவளிக்கு மேக்கி நூடுல்ஸ் சாப்பிட்டு ஆனந்தமாக இருக்க நரகாசுரனை வேண்டிக்கொள்கிறேன்.

வாழ்க மேக்கி.

19 கருத்துகள்:

 1. :) உங்கள் வாக்கு அப்படியே பலிச்சிடும் போலிருக்கு ! :)

  இதனால் தெரிவது என்னவென்றால் உங்களிடம் அனைவரும் (குறிப்பாக பதிவர்கள்) எச்சரிக்கையாக இருக்க வேண்டும். :)

  பதிலளிநீக்கு
 2. மேகி கெடுதல்,மது கெடுதல்,சிகரெட் கெடுதல்,கெடுதலனைத்தையும் தெரிந்தே விரும்பி வாங்கும் மக்கள் இருக்கும் வரை வியாபாரிக்கு கொண்டாட்டம் தானே..அப்பா.

  பதிலளிநீக்கு
 3. உங்களின் ஞான திருஷ்டி அபாரமானது! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. எதிர்பார்த்ததுதான். நடக்கக் கூடிய ஒன்றுதானே..நீங்களும் சரியாக கணித்திருந்தீர்கள்..இதுதானே இந்தியா ஐயா...சரி யாராவது பரிசு கொடுத்தாங்களா ஐயா உங்கள் கணிப்பிற்கு...ஹஹ

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.  பதிலளிநீக்கு
 5. ஆறு மாதத்திற்கு முன்பு தாங்கள் எழுதிய கட்டுரையைப் படித்தவர்களில் நானும் ஒருவன். நீங்கள் அன்று சொன்னது போலவே மேகிக்கு இன்று தடை நீக்கம் வந்து விட்டது. இதுதான் இந்தியா!

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.


  பதிலளிநீக்கு
 6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. ஐயா நீங்கள் சொல்வது பலிக்கிறதே! ESP வேலையோ?

  பதிலளிநீக்கு
 8. மக்களுக்கு விழிப்புணர்வு வரவில்லை பிறகு வியாபாரிகளை குறைசொல்லி என்ன செய்வது ?
  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
 9. மிகப் பெரிய நிறுவனம்
  எப்படியும் எல்லோரையும் விலைக்கு
  வாங்கி விடும் என நானும்
  எதிர்பார்த்தேன்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
  அனைவருக்கும் இனிய தீபவளித் திரு நாள்
  நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. நூடுல்ஸின் வாழ்வு தன்னை கோர்ட் கவ்வும்.....
  மீண்டும் நூடுல்ஸ் வெல்லும்......நமக்குத்தான் நூடுல்ஸ் சிக்கல்....அவர்களுக்கு எதுவும் கடந்து போகும்...

  அய்யா...உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. பதில்கள்
  1. 500 பாலோயர்ஸை சொல்லுகிறீர்கள் என்று அப்புறம் புரிந்தது. என் மூளைக்கு வயசாயிருச்சு. எனக்கில்ல. நான் இன்னும் இளைஞன்தான்.

   நீக்கு
 12. இன்று (11 நவ 2015) snapdeal மாகி நூடில்ஸ் வாங்க பதிவு செய்து நாளை விற்பனை செய்கிறார்கள்.
  12 பாகெட் 144 ரூபாய்.
  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 13. எப்படியும் திரும்ப வரும் என்று தெரியும். இதோ வந்துவிட்டது!

  பதிலளிநீக்கு