திங்கள், 9 நவம்பர், 2015

பந்தி நாகரிகம் தெரியுமா ?

                                                                                                                                                                   

பந்தி நாகரிகத்தைப் பற்றி பல கட்டுரைகள் இணையத்தில் விரவிக்கிடக்கின்றன. அவைகளிலிருந்து சில கருத்துகள்.

                                         
                 

இலையில் சாப்பிடுவதுதான் தமிழ்நாட்டு வழக்கம். இலையில் எது எதை எந்த இடத்தில் பரிமாறவேண்டும் என்ற முறையை இந்தப் படம் காட்டுகிறது.

கையினால் சாப்பிடுவதுதான் நம்ம ஊரில் பொதுவான பழக்கம். அதற்காக ஐஸ்கிரீமையும் கையினால்தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கப்படாது.

ஏன் விருந்து படைக்கவில்லை என்று யாரையும் யாரும் கேட்கக் கூடாது. விருந்தளிப்பது அவரவர்கள் உரிமை.

விருந்தினர்கள் கேட்கும் பதார்த்தங்களை அவர்கள் விரும்பும் அளவிற்கு பரிமாறுவதே நற்பண்பு.

தமிழ் நாட்டில் வலது கையினால் சாப்பிடுவதே முறை.

தனிப்பட்ட விருந்துகளுக்கு முறையான அழைப்பு இருந்தாலொழிய போகக்கூடாது. பொதுவான சத்திரங்களில் நடக்கும் அன்னதானங்களில் யார் வேண்டுமானாலும் அழைப்பில்லாமலேயே கூடப் போகலாம்.

சில சமயங்களில் சத்திரங்களில் அன்னதானம் நடக்காமல் போகலாம். அப்போது உணவு விடுதிகளில் சாப்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

எந்த விருந்தானாலும் விருந்தினர்கள் தாங்களாக எந்தப் பொருளையும் கொண்டுவந்து பந்தியில் சாப்பிடக்கூடாது.

முறையான அழைப்போடு வந்திருக்கும் எந்த விருந்தினரையும் எந்த வகையிலும் அவமானப்படுத்தக்கூடாது.

விருந்தில் படைக்கப்படும் எல்லாவற்றையும் உண்பதே பண்பு.

விருந்து சாப்பிட்ட பின் கை கழுவ வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னால் கை கழுவுவது அவரவர்கள் விருப்பம்.

அப்புறம் இப்படி சாப்பிடக்கூடாது.

​இப்படித்தான் சாப்பிடவேண்டும்.
அவ்வளவுதானுங்க. எல்லாம் சரியா இருக்குங்களா? ஒண்ணும் தப்பாயிடலயே?

22 கருத்துகள்:

 1. நீங்கள் சொல்லிய எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால் நீங்கள் எப்ப விருந்து எங்களுக்கெல்லாம் வைக்கின்றீர்கள் என்பதை சொல்லாமல் விட்டதுமட்டும்தான் தப்பாயிருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகிற நவம்பர் 15 ம் தேதி காலை எட்டரை மணிக்கு கோயமுத்தூர் சத்தி ரோட்டில் பாரதி நகரில் இருக்கும் அன்னபூர்ணா ஹோட்டலுக்கு வந்து விடுங்கள். அருமையான விருந்து காத்திருக்கிறது.

   நீக்கு
 2. நீங்க எழுதறது எப்பவும் தப்பாகாது அய்யா..! விருந்தில் பரிமாறப்படும் எல்லவாற்றையும் உண்பதே பண்பு என்பதை அறிந்துகொண்டேன். பகிர்விற்கு நன்றி.


  எனது வலைப்பூவில் பயனுள்ள பதிவொன்று:


  கம்ப்யூட்டர் வேகம் 500 மடங்கு அதிகரிக்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்ப இருக்கற வேகத்திலேயே தலை சுத்துகிறது. இன்னும் வேகம் அதிகமானால் ஒடம்பு தாங்காதுங்க.

   நீக்கு
 3. உண்மை தான்பா சங்க இலக்கியம் ஆசாரக்கோவையில் எப்படி அமர்வது,குளிப்பது உண்பது என பாடல்களே எழுதி வைத்துள்ளனர்..

  பதிலளிநீக்கு
 4. பந்தி நாகரீகம் பற்றிய தகவலுக்கு நன்றி! சாப்பிடும் இலையை எப்படி போடவேண்டும், சாப்பிட்ட பின் எப்படி மூட வேண்டும் இன்னும் பல பேருக்கு தெரியவில்லை. அதையும் எழுதியிருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 5. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 6. பந்தி நாகரீகம் குறித்துப்
  பரிமாறிய விதம் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. நவம்பர் 15 இல் கோவையில், தங்களுக்கும் தங்கள் இல்லத்தரசிக்கும் நடைபெற இருக்கும் விழா மிகச்சிறப்பாக அமையவும், தாங்கள் இருவரும் மேலும் பல்லாண்டுகள் இன்றுபோல மிகவும் சந்தோஷமாக வாழவும் என் அன்பான வாழ்த்துகள்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. வாழை இலையில் எது எது என்ன என்ன பேருன்னு எழுதினது எனக்கு ரொம்பப் புடிச்சது.
  இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. நல்ல ஒரு கொங்கு நாட்டு விருந்து படைப்பீர்கள் என்று எதிர்பார்த்தோம் ஐயா..பந்தி நாகரீகம் என்றவுடன் சில அடித்துப் பிடித்து இடம் போடுவார்கள் என்பதும் நினைவுக்கு வந்தது...

  நல்ல குறிப்புகள்...

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்க்ள் மனமார்ந்த இனிய தீபாவளி வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 10. உண்மையிலேயே எனக்கு இது புதிய தவல்தான் ஐயா. இதை நான் மற்ரவருக்கும் பகிர்வேன் ..நன்றி ஐயா..இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. பந்தியில் எப்படி சாப்பிட வேண்டும் என்று அருமையான விளக்கம்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 12. //ஐஸ்கிரீமையும் கையினால்தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கப்படாது.//
  //ஏன் விருந்து படைக்கவில்லை என்று யாரையும் யாரும் கேட்கக் கூடாது. //
  //விருந்து சாப்பிட்ட பின் கை கழுவ வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னால் கை கழுவுவது அவரவர்கள் விருப்பம்.//
  //அப்புறம் இப்படி சாப்பிடக்கூடாது.- இட்ட படம்//
  இவை ஐயாவின் , பதிவில் உள்ள தூக்கல்கள்.
  //விருந்தில் படைக்கப்படும் எல்லாவற்றையும் உண்பதே பண்பு.// ஆனால் சக்கரை வியாதிக்காரருக்கு பாயாசம் படைத்தால் உண்ணமுடியுமா?
  உங்களிடம் ஒரு விருந்துண்ணும் ஆசையை ஏற்படுத்தியுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பந்தியில் என்னென்ன பரிமாறப்படுகிறது என்று உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருக்கவேண்டும். பக்கத்து இலைக்கு பாயசம் பரிமாறப்படும்போதே அட்வான்ஸ் ஆக வேண்டாம் என்று மறுதளித்து விடவேண்டும்.

   நீக்கு
 13. உண்மைதான் பந்தியில் வைத்தவைகளை நமக்குப் பிடிக்காவிட்டாலும் சாப்பிடவேண்டும் அதுதான் பண்பு மரியாதை.
  முனைவர் ஐயாவிற்க்கும், தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
 14. சுவாரஸ்யமான விளக்கங்கள்.

  நமக்குப் பிடிக்காத ஐட்டங்களை, பரிமாறப்படும்போதே வேண்டாம் என்று தடுத்து விட்டால் வீணாகாது! பிடிக்காதவற்றை முதலில் காலி செய்தோமானால் ஒரு ஆபத்து. மறுபடி கொண்டு வந்து பரிமாறி விடுவார்கள். எனவே கடைசி வரை அவற்றை வைத்திருந்து, ஆனால் வீணாக்காமல் கடைசியில் அதையும் காலி செய்து விட வேண்டும்!

  பதிலளிநீக்கு
 15. நல்ல குறிப்புகள்.

  நவம்பர் - 15 - வாழ்த்துகள் ஐயா!

  பதிலளிநீக்கு
 16. அய்யா.. நான் ரொம்ப லேட்டா வந்திருக்கிறேன்.
  இலையில் எதைப் பறிமாற வேண்டும் என்ற படம் இப்போதைய முறை. நம் பாரம்பர்ய முறை வேறு. (இது இடத்துக்கு இடம் மாறுபடலாம்). சாதம், பருப்பு, சாம்பார் படத்தில் உள்ளதுபோல்தான். இலையில் முதலில் பழம்+ஜீனி (இதுவும் பிற்காலத்தது) இடது ஓரம். பாயாசம், வலது கீழ். கூட்டு, கறி நடு மேல். இது நம் சாப்பிடும் சௌகரியத்துக்காக. பந்தி நாகரிகம், கூட சாப்பிடுபவர்கள் அருவருப்படையாமல் நாம் சாப்பிடுவதுதான். படத்தில் உள்ள டப்பா சாப்பாட்டிற்கும், ஹோட்டல் சாப்பாட்டிற்கும் எதுவும் வித்யாசம் இல்லை. பாரம்பர்ய விருந்து இப்போது எங்கே இருக்கிறது என்று தேட வேண்டும்.

  பதிலளிநீக்கு