புதன், 2 டிசம்பர், 2015

சென்னை வெள்ளம்.

                                      Image result for சென்னை வெள்ளம்
சென்னையில் குடியிருப்போருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

சென்னையில் இருக்கும் பதிவர்கள் அங்கு நிலவும் நிலையை முடிந்த அளவு பதிவுகளில் தெரிவித்தால் நாங்கள் நிலைமையைத்தெரிந்து கொள்வோம்.

உணவு, குடி நீர், தங்குமிடம் இந்த மூன்றும்தான் அவசியத்தேவை. ஆனாலும் செய்திகளும் தேவை.

மின்சாரம் இல்லை. தொலைதொடர்பு சாதனங்கள் வேலை செய்யவில்லை. கணினி வேலை செய்யும் இடங்களில் உள்ள பதிவர்கள் சென்னை நிலைமையைத் தெரிவியுங்கள்.

சென்னை இன்று இருக்கும் நிலையில் வெளியூரில் இருக்கும் தனி நபர்கள் செய்வதற்கு ஒன்றும் இல்லை எனக் கருதுகின்றேன். அரசு மேற்கொள்ளும் நிவாரணப் பணிகளுக்கு சேவை மனப்பான்மை கொண்ட குழுக்கள் ஏதாவது உதவி செய்ய முடியும். மக்களின் அனுதாபத்தை சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்பவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

8 கருத்துகள்:

  1. ஐயா!
    இங்கிருந்து , இணையத்தின் மூலம் கிடைக்கும் செய்திகளே! மிக அவலம் ஒரு நாளா இருநாளா?
    ஒற்றுமையாக அனைவரும் இணைந்து செயற்பட்டு, பாதிக்கப்பட்டோரை இடரில் இருந்து காப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
    சுனாமியில் சென்னை, தமிழகம் மீண்டது, ஒன்றுபட்ட செயற்பாட்டால், அது மீண்டும் நடக்கப் பிரார்த்திப்போம்.
    இங்குள்ள ஊடகங்கள் பெரிதாக இதைக் கண்டு கொள்ளவில்லை.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஐயா !

    அவசியமான பதிவு அனைவரும் சிந்தித்து செயற்ப்பட வேண்டும்

    பதிலளிநீக்கு
  3. சரி தான்...குடும்பம் சென்னையில் இருக்கிறது..காலையிலிருந்து நான் படும் வேதனை எழுத்தில் முடியாது....பிள்ளை கூறப்போகும் அப்பாவுக்காக இரண்டுநாட்களாய் விழித்துக்கிடக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் துயரை உணர்கிறேன். நல்லது நடக்கும் நண்பரே! நம்புங்கள்.

      நீக்கு
  4. சென்னையில் வெள்ளமா ..... வெள்ளத்தில் சென்னையா ..... என மிகவும் கவலைக்கிடமான நிலையே ஆங்காங்கே நீடித்து வருவதாகத் தெரிகிறது.

    அவர்கள் ஒவ்வொருவரின் நிலைமையும் மிகவும் சங்கடமானதே.

    உதவிக்கரங்கள் நீண்டு, மழையும் ஓய்ந்து, நீரெல்லாம் வடிந்து, வெயில் கொளுத்தி, சாலையெல்லாம் செப்பனிடப்பட்டு, பள்ளங்களும் குழிகளும் மறைந்து, போக்குவரத்துக்கள் யாவும் மீண்டும் துவங்கி, பழையபடி சகஜநிலை சீக்கரமாக ஏற்பட்டால் மிகவும் நல்லது.

    அதற்காக அனைவரும் கூட்டாகப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  5. நாங்கள் நான் சார்ந்திருக்கிற அமைப்பின் மூலம்
    பாதிக்கப்பட்டோரின்அடைப்படைத் தேவைக்கான பொருட்களை
    சேகரம் செய்து கொண்டு உள்ளோம்.
    இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும்
    பணி செய்வது மகிழ்வளிக்கிறது
    முதல் தவணைப் பொருட்கள் வருகிற வெள்ளியன்று
    அனுப்பப்பட உள்ளது.

    எல்லோரும் அவரவர்களால் முடிந்த அளவு
    பிரிவினை எண்ணங்கள் ஏதும் இன்றி
    அங்கீகரிக்கப் பட்ட சேவை அமைப்புகள் மூலம்
    செய்வதே இப்போதயத் தேவை

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  6. தங்களின் பதிவு எங்களுக்கு ஒரு தெம்பூட்டி (Tonic) போல. இந்த இடர்பாட்டிலிருந்து மீண்டு வருவோம். பதிவுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு