வியாழன், 14 ஜனவரி, 2016

ஒரு அவசரப் பதிவு.

                                    Image result for ஏர்டெல் 4ஜி

நான் "பிஎஸ்என்எல்" ஐ விட்டு ஜகா வாங்கி ஏர்டெல்லுக்குப் போன கதை யை முன்பே எழுதியுள்ளேன்.

நேற்று ஏர்டெல் ஆபீசிலிருந்து ஒருவர் என் மொபைலில் பேசினார். சார், புதுசா ஒரு ஆஃபர் வந்திருக்கு. நீங்க இப்போ வச்சிருக்கிற பிராட்பேண்ட் ஸ்பீட் 4MBPS. 60 GB வரைக்கும்தான் இந்த ஸ்பீட். அப்புறம் 512 KBPS க்கு குறைஞ்சிடும். இப்போ பதுசா ஒரு ஆஃபர் வந்திருக்கு. அதுல ஸபீட் 16 MBPS. 100 GB வரைக்கும் இந்த ஸ்பீடுலேயே வேலை செய்யும். சார்ஜ் சும்மா ஒரு இருநூறு ரூபாய்தான் அதிகமாகும். நீங்க உபயோகிக்கிற அளவிற்கு இந்த ஆஃபர் ரொம்ப நல்லா இருக்கும் என்று சொன்னார்.

நானும் சரி, 16 MBPS ஸ்பீட் எப்படியிருக்கும் பார்த்து விடலாம் என்று நினைத்து சரி என்று சொல்லி விட்டேன். இன்று காலை முதல் அந்த 16 MBPS ஸ்பீடில் என் பிராட்பேண்ட் வேலை செய்கிறது. டவுன்லோடு செய்வதெல்லாம் டக் டக்கென்று நடக்கிறது.

போகப்போகப் பார்க்கவேண்டும்.

"என் ஆசிரியர் பாகம் இரண்டு" ஞாபகம் இருக்கிறது. பொங்கல் கழித்து வெளியாகும்.

16 கருத்துகள்:

  1. //இன்று காலை முதல் அந்த 16 MBPS ஸ்பீடில் என் பிராட்பேண்ட் வேலை செய்கிறது. டவுன்லோடு செய்வதெல்லாம் டக் டக்கென்று நடக்கிறது.//

    மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள், சார்.

    //போகப்போகப் பார்க்கவேண்டும்.//

    போகப்போக தொடர்ந்து வேறு ஏதாவது ஆஃபர் தந்துகொண்டே இருப்பார்கள். அதனால் கவலையே பட வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  2. ஆனால் மாசத்திற்கு 1500 தீட்டிவிடுவார்களே? அதாவது ஒரு நாளைக்கு 50 ரூபாய்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு இந்த உள் விஷயமெல்லாம் அத்துபடி போல இருக்கு. பரவாயில்லைங்க. எனக்கு வேற என்ன செலவு? ஓட்டலுக்குப் போறதில்ல. அது ஒத்துக்குறதில்லை. பீடி சிகரெட் வெற்றிலை பாக்கு, டாஸ்மாக் ஒண்ணும் கிடையாது. மேஜர் சிலவு இந்த பிராட்பேண்ட் மற்றும் காருக்கு பெட்ரோல். இந்த இரண்டுக்கும் மாதம் 3000 ரூபாய். போகட்டும். காச மேல போறப்ப கொண்டுபோக முடியாதாமே! இங்கயே செலவழிப்போம். சும்மா சேத்து வச்சு என்ன சொகத்தை அனுபவிக்கப் போகிறோம்?

      நீக்கு
    2. இந்த பின்னூட்டத்தில் தங்களின் நகைச்சுவை மிளிர்கிறது அய்யா! மிகவும் ரசித்தேன்.

      நீக்கு
  3. மாதம் 1500 ரூபாயா? 100 GB கணக்கு சரியாக மெயின்டெயின் ஆகிறதா, ஃபிராடு அடிக்கிறார்களா?

    பதிலளிநீக்கு
  4. ஐயா.... டவுன்லோடு லிஸ்ட் பதிவாக போட்டால் என்ன...?

    பதிலளிநீக்கு
  5. Airtel இன் புதிய திட்டத்தில் சேர்ந்துள்ளதால் இணையத்தில் தரவிறக்கம் விரைவாக செய்யலாம் என்பது மகிழ்ச்சியான தகவலே. ஆனால் அதே நேரத்தில் இந்த Airtel நிறுவனத்தினர் சொல்லாமல் கட்டணத்தை ஏற்றிவிடுவார்கள். எனவே கவனமாக இருங்கள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். அதாவது இந்த ஏர்டெல் மட்டுமல்ல, வேற எந்த இன்டர்நெட்காரனாக இருந்தாலும் தமக்கு சரிப்பட்டு வரலைன்னா தூக்கிட்டுப்போடா என்று கடையைக் கட்டி விடுவேன்.

      இப்பத்தான் ஆளாளுக்கு விளம்பரம் செய்துட்டு இருக்காங்களே. எல்லாத்தையும் சேம்பிள் பாத்துடுவோம். வேற என்ன வேலை நம்மளுக்கு?

      ACT காரன் 40 MBPS 60 MBPS என்று கேட்டுக்கு கேட் விளம்பரம் பண்ணியிருக்கிறான். அவனையும் பார்ப்போம்.

      பொங்கல் வாழ்த்துக்கு நன்றி.

      நீக்கு
  6. உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் பலரும் இந்த ஆஃபருக்குச் சென்றால், வேகம், பழைய குருடி கதவைத் திறடி மாதிரி ஆகிவிடப்போகிறது.

    உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. ஏர்டெல்லிடம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! என்னிடம் 9 ஜி.பி கொள்ளையடித்தவர்கள் அவர்கள்.

    பதிலளிநீக்கு
  8. போகப் போகத் தெரியும் இந்த பூவின் வாசம் புரியும்.

    பதிலளிநீக்கு
  9. தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
    மகிழ்வோடு நவில்கின்றேன்
    கனிவோடு ஏற்றருள்வீர்

    பதிலளிநீக்கு
  10. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. பொங்கல் வாழ்த்துக்கள்!
    புதிது புதிதாக இங்கும் பல விளம்பரம் செய்வார்கள்.ஆனாலும் 10 ஆண்டுகள் ஒரே நிறுவனமே!

    பதிலளிநீக்கு