செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

பதிவர் சங்கம் தேவையா?

வியாழன், 15 டிசம்பர், 2011

பல வருடங்களுக்கு முன்பு 2011 ல் நான் எழுதிய ஒரு பதிவு. இப்போது பதிவர் சங்கம் பற்றிய பதிவுகள் வருகின்றபடியால் அதை மீள்பதிவு செய்கிறேன்.பதிவுலகம் ஒரு மாயாலோகம். இங்கு பெரும்பான்மையோருக்கு நிஜமுகம் கிடையாது. கூகுளாண்டவர் புண்ணியத்தாலே நாம் எல்லோரும் எதையெதையோ எழுதிக்கொண்டிருக்கிறோம். கூகுள் பஸ் புஸ் ஆனதைப்போல பதிவுகளும் நித்திய கண்டம் பூர்ணாயுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

நாம் எழுதும் எழுத்துக்கள் விரசமாகவோ, புரட்சிகரமாகவோ இல்லாத வரை நம்மைக் கேட்பார் இல்லை. இதில் நமக்கு என்ன குறை இருக்கிறது அல்லது வரப்போகிறது என்று யாருக்கும் ஒரு கருத்தும் கிடையாது. இதில் சங்கம் வைத்து என்ன செய்யப் போகிறோம் என்று எனக்குப் புரியவில்லை.

தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களுக்கு முதலாளிகளிடமிருந்து பாதுகாப்பு தேவைப் பட்டதால் உருவான அமைப்புகள். இதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் அவரவர்கள் பாதுகாப்பைக் கருதி சங்கங்கள் உருவாக்கப் பட்டன. கோவையில் நடைப் பயிற்சியாளர்களும் கூட சங்கம் வைத்திருக்கிறார்கள். இவைகளுக்கெல்லாம் ஒரு பாதுகாப்பு நோக்கம் இருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு பல விதமான பாதுகாப்புகள் தேவைப்படுகின்றன.

ஆனால் கனவுலகப் பயணிகளான பதிவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு தேவைப்படுகிறது? பதிவர்கள் சந்தித்து கலந்துரையாட வேண்டுமென்றால் அதற்கு ஒரு அமைப்பு உருவாக்குவது தேவை. இந்த மாதிரியான அமைப்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஈரோடு பதிவர் சங்கமம் ஒரு நல்ல முன்மாதிரியாக செயல்படுகிறது. நெல்லையில் திரு. சங்கரலிங்கம் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

சென்னையில் பதிவர் சந்திப்பு அவ்வப்போது நடக்கிறது என்பது பதிவுகளிலிருந்து தெரிகிறது. அங்குதான் பதிவர்கள் அதிகம் இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் சென்னைப் பதிவர்கள் ஒரு சங்கம் ஆரம்பிக்க முயன்று அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்பது பல பதிவர்கள் அறிந்ததே.

பதிவர்கள் கலந்துரையாடல்களுக்காக மட்டும், எந்த வித சட்ட கட்டுப்பாடுகளும் இல்லாத அமைப்புகள்தான் வெற்றிகரமாக செயல்படும்.

21 கருத்துகள்:

 1. தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...
  பதிலளிநீக்கு
 2. //நாம் எழுதும் எழுத்துக்கள் விரசமாகவோ, பிரட்சிகரமாகவோ இல்லாத வரை நம்மைக் கேட்பார் இல்லை. இதில் தமக்கு என்ன குறை இருக்கிறது அல்லது வரப்போகிறது என்று யாருக்கும் ஒரு கருத்தும் கிடையாது. இதில் சங்கம் வைத்து என்ன செய்யப் போகிறோம் என்று எனக்குப் புரியவில்லை.//

  சங்கம் வைத்தால் இட்லி, வடை, பூரி, பொங்கல், டீ, காபி எல்லாம் கூட்டமாக சாப்பிடலாம்.
  பதிலளிநீக்கு
 3. V.Radhakrishnan said...

  சங்கம் வைத்தால் இட்லி, வடை, பூரி, பொங்கல், டீ, காபி எல்லாம் கூட்டமாக சாப்பிடலாம்.

  சங்கம் வைத்தால் இதெல்லாம் கிடைக்காது, ராதாகிருஷ்ணன்.
  பதிலளிநீக்கு
 4. தான் தன் சுகம் தன்குடும்பம் என இல்லாது
  பொது நல நோக்கில் சிந்திக்கவும் கருத்துக்களை
  எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியிடவும் செய்கிறவர்கள்
  தங்கள் நலன்களுக்கென அல்லது தங்கள் 
  கருத்துரிமைக்கு எதிராக வரும் விஷயங்களை
  தடுக்கவாவது ஒரு அமைப்பு இருப்பது 
  சரியெனத்தான் எனக்குப் படுகிறது
  த.ம 3
  பதிலளிநீக்கு
 5. ஏன் பதிவர்களுக்காக ஒரு சங்கம் முழுமையாக அமைக்கப் பெறக்கூடாது..?

  http://sattaparvai.blogspot.com/2011/11/100_21.html
  பதிலளிநீக்கு
 6. பாதுகாப்பு காரணத்தால் அல்ல; அனைத்து பதிவர்களும் ஓரிடத்தில் கூடி கலந்துரையாடலாம்.
  பதிலளிநீக்கு
 7. பாதுகாப்பு காரணத்தால் அல்ல; அனைத்து பதிவர்களும் ஓரிடத்தில் கூடி கலந்துரையாடலாம்.
  பதிலளிநீக்கு
 8. திருவாரூர் உள்ளிட்ட "தஞ்சை, நாகை மாவட்ட எழுத்தாளர்கள் கூட்டமைப்பு" வைத்து மாதநதோறும் சந்திப்புகள் செய்தோம். பெரும் எழுத்தாளர்களை அழைத்து சில ஆண்டு விழாக்கள் நடத்தினோம். சுமார் 12, 13 ஆண்டுகளுக்குப் பின் அந்த அமைப்பே இல்லை.
  பதிலளிநீக்கு
 9. Palaniappan Kandaswamy 

  அதென்ன முழுப்பெயராக மாற்றியுள்ளீர்களே? இதற்கு பின்னால் ஏதும் நுண்ணரசியல் உண்டோ?
  பதிலளிநீக்கு
 10. சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது நம் நாடு...

  கழ(ல)கம் தான் ஆரம்பிக்கக்க்கூடாது,,
  பதிலளிநீக்கு
 11. //ஜோதிஜி திருப்பூர் said...
  Palaniappan Kandaswamy 

  அதென்ன முழுப்பெயராக மாற்றியுள்ளீர்களே? இதற்கு பின்னால் ஏதும் நுண்ணரசியல் உண்டோ?//

  இதுதான் இனடர்நேஷனல் ஸடைல் என்று ஒரு அமெரிக்க அன்பர் எடுத்துக் காட்டினார். நல்ல சாமாசாரம் என்று உடனே எடுத்துக் கொண்டேன். வேறு ஒன்றும் இல்லை. ஜோதிஜி.

  தவிர பதிவுலகில் PhD யாவது DSc யாவது. எல்லாம் எண்ணுதான். எதற்கும் என்னுடைய முந்தைய பதிவையும் பார்த்து விடுங்களேன்.
  பதிலளிநீக்கு
 12. //இராஜராஜேஸ்வரி said...
  சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது நம் நாடு...
  கழ(ல)கம் தான் ஆரம்பிக்கக்க்கூடாது,,//

  சென்னையில் போன வருடம் ஒரு சங்கம் ஆரம்பிக்க போட்ட முதல் கூட்டத்திலேயே கலகம் வந்து சங்கம் என்ற சங்கதியையே விட்டுவிட்ட கதை தெரியுமுங்களா?
  பதிலளிநீக்கு
 13. அன்பின் கந்தசாமி அய்யா - சில சட்டப் பிரச்னைகள் வரும்போது - உதவுவதற்கு ஒரு சங்கம் இருப்பின் நலமாக இருக்கும் எனச் சிந்திக்கின்றனர். ஆனால் இணையயத்தில் உலவும் கருத்துகளையும் - பதிவர்களின் எண்ணிக்கையையும் பார்க்கும் போது சட்டச் சிக்கல்கள் பெரிதாக ஒன்றும் இல்லை. தற்போதைய நிலைக்குச் சங்கம் தேவை இல்லை. தேவைப்படும் போது அதனைப் பற்றிச் சிந்திக்கலாம். பதிவிற்கு நன்றி அய்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
  பதிலளிநீக்கு
 14. //cheena (சீனா) said...
  அன்பின் கந்தசாமி அய்யா - சில சட்டப் பிரச்னைகள் வரும்போது - உதவுவதற்கு ஒரு சங்கம் இருப்பின் நலமாக இருக்கும் எனச் சிந்திக்கின்றனர். ஆனால் இணையயத்தில் உலவும் கருத்துகளையும் - பதிவர்களின் எண்ணிக்கையையும் பார்க்கும் போது சட்டச் சிக்கல்கள் பெரிதாக ஒன்றும் இல்லை. தற்போதைய நிலைக்குச் சங்கம் தேவை இல்லை. தேவைப்படும் போது அதனைப் பற்றிச் சிந்திக்கலாம். பதிவிற்கு நன்றி அய்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

  பதிவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். சட்டச் சிக்கல்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பதிவர்களில் பல சட்ட வல்லுநர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பதிவுகளில் இதைப்பற்றி விழிப்புணர்வு பதிவுகள் போட்டால் பயனுள்ளதாக அமையும்.

  நீங்கள் வலைச்சரம் மூலமாக ஒரு வேண்டுகோள் வைக்க முடியுமானால் நன்றாக இருக்கும்.
  பதிலளிநீக்கு
 15. தவறு இல்லையென்றே நான் கருதுகிறேன்,பின்னாளில்
  பதிவர்களுக்கு சட்டரீதியான பிரச்சனைகள் வரலாம்,அது போன்ற சூல்நிலைகள் உருவாகின்றது எனவே கருதுகின்றேன்,பதிவர் சங்கமத்தில் கூடி இதை பற்றி அய்யா விவாதியுங்கள்....அங்கு சந்திப்போம் நன்றி!
  பதிலளிநீக்கு
 16. நாம் நன்றாகத் தானே போய்க் கொண்டுள்ளோம். இதில் சங்கம் ஏன்?.சங்கம் வந்து ஊர் இரண்டுபட வேண்டாம்.
  வேதா. இலங்காதிலகம்.
  பதிலளிநீக்கு
 17. நான் புதியவள் என்ன கருத்து சொல்வது என்று தெரியவில்லை.. 


  உங்கள் கருத்துக்காக 

  காதல் - காதல் - காதல்
  பதிலளிநீக்கு
 18. //எனக்கு பிடித்தவை said...
  நான் புதியவள் என்ன கருத்து சொல்வது என்று தெரியவில்லை.. 
  உங்கள் கருத்துக்காக 
  காதல் - காதல் - காதல்//

  புதியவர்களுக்குத்தான் புதுப் புதுக் கருத்துகள் தோன்றுமாமே! ஒன்றும் வேண்டாம், இப்படியான கருத்து ஒன்று பதிவுலகத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொண்டால் போதும்.
  பதிலளிநீக்கு
 19. கைபுள்ள ரேஞ்ஜில் சங்கம் ஆகிவிட போகிறது.

  ஆணீயே புடுங்க வேணாம். be care full.என்ன சொன்னேன்ங்க !
  பதிலளிநீக்கு

11 கருத்துகள்:

 1. ஐயா

  இப்படி செய்தால் என்ன. சங்கம் வைப்பவர்கள் வைத்துக் கொள்ளட்டும். ஆனால் அவர்கள் சங்கத்தில் இல்லாதவர்களைகளை ஒன்றும் சொல்லக்கூடாது கட்டுப்படுத்தக் கூடாது. நாங்கள் தான் ஒரிஜினல் என்று சொல்லக்கூடாது.

  பதிலளிநீக்கு
 2. தாங்கள் அன்று சொன்னது இன்றும் பொருந்தி வருகிறது ஐயா.

  பதிலளிநீக்கு
 3. முனைவர் அய்யா அவர்களின் மீள் பதிவினுக்கு நன்றி! நீங்கள் சொல்வது போல ” பதிவுலகம் ஒரு மாயாலோகம். இங்கு பெரும்பான்மையோருக்கு நிஜமுகம் கிடையாது”.

  அதிலும் ஒவ்வொருவரும் ஒரு தினுசு என்பது போல, ஜாதி, மதம், அரசியல் மற்றும் தனிநபர் சுதந்திரம் என்று பல்வேறு முகங்கள். எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வருவது என்பது பெரிய விஷயம்தான். புதுக்கோட்டை கணினி தமிழ்ச் சங்கம் போன்று, மாவட்டம் வாரியாக அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, பதிவர்கள் சந்திப்பின் போது மட்டும் ஒருங்கிணைப்பு குழு (இப்போது போலவே) ஏற்படுத்திக் கொண்டு வரவு – செலவு செய்து கொண்டால் பிரச்சினை இல்லை என்பது என் கருத்து.

  பதிலளிநீக்கு
 4. சங்கம் அமைப்பதில் பிரச்சினை இல்லை அதை வழி நடத்துவதில்தான் பிரச்சினைகள் வருகின்றது எப்படியாயினும் ஒரு அமைப்பு இருப்பது பதிவர்களுக்கு பெருமையான விடயம் என்பது எனது கருக்கு ஐயா.
  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
 5. எழுத்தைத் திரட்டித் தரும் திரட்டிகள் போல
  பதிவர்களுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தித் தரும்
  ஒரு நிரந்தர அமைப்பு இருப்பின் நல்லது

  இல்லாமல் இருப்பதை விட
  இருப்பது நிச்சயம் நல்லது

  பதிலளிநீக்கு
 6. சங்கமாய் சேருங்கள்...சங்கம் இல்லை..என்றால்..சங்கடங்கள் தீராது.. என்பது எனது கருத்து.த.ம் 6

  பதிலளிநீக்கு
 7. //சங்கமாய் சேருங்கள்...சங்கம் இல்லை..என்றால்..சங்கடங்கள் தீராது.. என்பது எனது கருத்து.த.ம் 6//

  பதிவர்களுக்கு அப்படி சங்கம் அமைத்து, தீர்க்கவேண்டிய பிரச்சினைகள் ஒன்று மட்டும் சொல்லுங்கள் போதும். நான் சங்கம் ஆரம்பிப்பதை ஆதரிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. பதிவர் சந்திப்பு உபயோகம். நேரடியாகப் பார்த்துக்கொள்ளலாம். எப்போதும், எழுத்தை ரசிக்கமுடியும். அதைவைத்துக்கொண்டு எழுத்தாளனை எடைபோடுவதோ ரசிப்பதோ கஷ்டம். மற்றபடி, சங்கம் என்பதெல்லாம் கொஞ்சம் சங்கடம்தான்.

  பதிலளிநீக்கு
 9. அந்தக் காலத்தில் பேனா நண்பர்கள் சங்கம், கணினியில் ஒருங்குறி (யுனிகோடு - தமிழ் எழுத்துரு) வந்த புதிதில் -2000 என்று நினைக்கிறேன்- மின்மடற்குழுக்கள் இயங்கின. இது ஒன்றும் புதிதல்ல.. இது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும் இல்லை. நல்லவற்றைப் பகிர்ந்து கொள்ளவும், முகம்பார்த்துப் பழகவும்தான். எனவே இதை எங்கள் புதுக்கோட்டை மாவட்டக் கணினித் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக வரவேற்கிறேன். இதையே தமிழ்இளங்கோ அய்யாவின் பதிவிலும் பின்னூட்டமாக இட்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. பதிவர்களுக்கு என்று ஒரு சங்கம் இருந்தால் நல்லதுதான் அய்யா... என்ன ஒன்று எழுத்தை ரசிக்கும் நாம் எழுத்தாளரைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.. முகம்பார்த்து பழக முடியாதவரை...

  பதிலளிநீக்கு