திங்கள், 29 பிப்ரவரி, 2016

என் தலைக்கனம் மறைந்தது.


விவசாயக் கல்லூரியில் 1953 முதல் 1956 வரை படித்து பாஸ் செய்து இன்று வரை உயிருடன் இருக்கும் வகுப்புத் தோழர்கள் ஒன்று கூடி நாங்கள் பாஸ் செய்து 60 வருடங்கள் ஆனதைக் கொண்டாட முடிவு செய்தோம் என்கிற விபரம் அன்பர்களுக்கு ஏற்கெனவே தெரியும்.

இப்படி விழா ஒன்று கொண்டாடலாம் என்று சென்னையிலிருக்கும் எனது வகுப்புத் தோழர் முனைவர் வசந்தராஜ் டேவிட் என்பவருக்குத்தான் முதலில் ஞானோதயம் தோன்றியது. அதற்குக் காரணம் பத்து வருடங்களுக்கு முன் இதேமாதிரி என் வகுப்புத் தோழர்களின் சந்திப்பை அவர்தான் திட்டமிட்டு நடத்தினார்.


இவர்தான் வசந்த்ராஜ் டேவிட்
பிரபல பூச்சி இயல் விஞ்ஞானி

நாங்கள் படித்த கல்லூரி வளாகத்திலேயே கொண்டாடலாம் என்று அவர் முடிவு செய்து, என்னைத் தொடர்பு கொண்டார். காரணம் கோயமுத்தூரில் இருக்கும் என் வகுப்புத் தோழர்களில் இணைய வசதி வைத்துக்கொண்டு அதை நோண்டிக் கொண்டிருப்பவன் நான் ஒருவன் மட்டும்தான். அவர் கேட்டவுடன் நான் "அதற்கென்ன, கொண்டாடினால் போச்சு" என்று சொல்லிவிட்டேன். இது நடந்து கிட்டத்தட்ட மூன்று மாதம் ஆகியிருக்கும். அப்படியானால் அதற்கான வேலைகளைத் தொடங்குங்கள் என்று சொல்லிவிட்டார்.

எனக்குள் வேறு ஒரு மனிதன் ஒளிந்து கொண்டு இருக்கிறான். அவன் தன்னால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்ற எண்ணம் கொண்டவன். நான் சும்மா இருந்தால் கூட அவன் முந்திரிக்கொட்டை போல இந்த மாதிரி விஷயங்களில் என்ன இழுத்து விட்டு விடுவான். அப்படித்தான் இந்த வேலை என் தலை மேல் ஏறிவிட்டது. அதிலிருந்து எனக்கு ஒரே தலைக்கனம்தான்.

எனக்கு தலைக்கனம் ஏறிவிட்டது. அதாவது தலையில் பொறுப்பு ஏறி விட்டது.
மூன்று மாதமாக அல்லும் பகலும் இதே நினைப்புத்தான். இந்தப் பொறுப்பு என்பதை ஒரு சிரங்கு மாதிரி. சொறியச் சொறிய அரிப்பு அதிகமாகுமே தவிர குறையாது. அப்படிப்பட்ட ஒரு வேதனையை அனுபவித்து வந்தேன். ஒரு பொறுப்பு எடுத்தால் அதை குறைவில்லாமல் நிறைவேற்ற வேண்டுமே என்ற எண்ணம்தான் இப்படி ஒருவனை அலைக்கழிக்கும்.

எப்படியோ விழாவிற்கு வேண்டிய அத்தனை ஏற்பாடுகளையும் செய்து 27-1-2016 அன்று விழாவைக் கொண்டாடிவிட்டோம். எங்கள் ஆசிரியர்களில் நான்கு பேர் தவிர மற்றவர்கள் இப்போது இல்லை. அதில் ஒருவர் 97 வயது ஆகிவிட்டாலும் உற்சாகம் குறையாமல் எங்கள் விழாவில் கலந்து கொண்டார். அவர்தான் முனைவர் டேனியல் சுந்தர்ராஜ் அவர்கள்.


நடுவில் பட்டு வேஷ்டியுடன் இருப்பவர்தான் டாக்டர் டேனியல் சுந்தர்ராஜ் அவர்கள்.


விழாவில் ஒரு குறையும் ஏற்படவில்லை. தலையிலிருந்த கனம்  அதாவது தலைக்கனம் மறைந்து விட்டது. விழாவிற்கு வந்திருந்த நண்பர்கள்


டாக்டர் தனபாலன், திரு பார்த்தசாரதி, திரு சிவராமன்



விழாவின் விருந்தினர்கள் அனைவருமாக எடுத்துக்கொண்ட போட்டோ.



18 கருத்துகள்:

  1. எழுச்சிமிக்க இளைஞர்களின் கூட்டம் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    முதல் படத்தில் உள்ள வரவேற்பாளர்கள் பற்றி ஏதும் கூறவில்லையே?

    அது தங்களின் இந்த விழாவினில் எடுக்கப்பட்டதுதானா அல்லது சும்மாவாவது இங்கு இணைக்கப்பட்டுள்ளதா? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுய விளம்பரம் வேண்டாமே என்று தவிர்த்தேன். அது என் சகோதரியும் இளைய மகளும். அவர்களுக்கு அந்தப் பொறுப்பைக் கொடுத்தேன்.

      நீக்கு
    2. //சுய விளம்பரம் வேண்டாமே என்று தவிர்த்தேன். அது என் சகோதரியும் இளைய மகளும். அவர்களுக்கு அந்தப் பொறுப்பைக் கொடுத்தேன்.//

      தகவலுக்கு மிக்க நன்றி, சார்.

      எவ்வளவோ இதர குடும்பப்பொறுப்புகளுக்கும் நடுவே இங்கு வருகை தந்து வரவேற்பு என்ற மாபெரும் பொறுப்பினை ஏற்று விழாவினைச் சிறப்பித்துக் கொடுத்துள்ள அவர்கள் இருவருக்கும் நம் பாராட்டுகள் + வாழ்த்துகள்.

      நீக்கு
  2. பாராட்டப்பட வேண்டிய விஷயம். இந்த வயதிலும் பொறுப்புகளை எடுத்துக் கொண்டு அதைச் சுமையாகக் கருதாமல் நல்லபடி செயல் படுத்திக் காட்டி இருக்கிறீர்கள். குரு வந்தனம் என்பதை இந்த வயதிலும் இயன்றவரைத் தொடர வேண்டும் என்கிற உங்கள் எண்ணத்துக்குத் தலை வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ’என் தலைக்கனம் மறைந்தது’ என்ற தலைப்பினைப் பார்த்ததும், தாங்கள் பார்பர் ஷாப்புக்குப் போய்வந்த உடனே சுடச்சுட எழுதிய பதிவாக இருக்குமோ என நினைத்துப் படிக்க ஆரம்பித்தேன். :)

    பதிலளிநீக்கு
  4. படிக்கச் சந்தோஷமாக இருந்தது
    நிச்சயம் பழைய நினைவுகளைக் கிண்டிக் கிளறி
    அளாவியதில் நிச்சயம அனைவருக்கும்
    பத்து வயது குறைந்து போயிருக்கும்
    படங்களுடன் பகிர்வு அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. உங்கள் வாழ்வின் மறக்கமுடியாத நினைவுச்சுவடுகளாக அந்த சில மணித்துளிகள் இருந்திருக்கும் என்று கருதுகிறேன். மிக்க மகிழ்ச்சி ஐயா.

    பதிலளிநீக்கு
  6. "இந்தப் பொறுப்பு என்பதை ஒரு சிரங்கு மாதிரி. சொறியச் சொறிய அரிப்பு அதிகமாகுமே தவிர குறையாது." இது இந்த காலத்தில் உள்ள இளைஞர்களுக்கு இருக்கின்றதா?

    பதிலளிநீக்கு
  7. மகாமக எழுத்து, வாசிப்பு, பயணங்களால் வலைப்பூ பதிவுகளைக் காண தாமதம், பொறுத்துக்கொள்க.சீராக தங்களது எண்ணப்பதிவுகளைத் தரும் விதம் அருமை. நண்பர்களை ஒருங்கிணைத்த விதம் எங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. நன்றி.

    பதிலளிநீக்கு

  8. ஐயா! தாங்களும் தங்களின் வகுப்புத் தோழர்களும் கோவை வேளாண்மைக் கல்லூரியில் படித்து முடித்து 60 ஆண்டுகள் நிறைவானதை ‘வைர’ விழாவாக கொண்டாடியது அறிந்து மிக்க மகிழ்ச்சி! புகைப்படங்களைப் பார்க்கும்போது அனைவர் முகத்திலும் இளமை ஊஞ்சலாடுவது தெரிகிறது.

    இந்த விழா சிறப்பாக நடைபெற உதவிய தங்களுக்கு பாராட்டுக்கள்! இந்த ஆண்டு மே திங்களில் வேளாண் அறிவியல் படித்து முடித்து 50 ஆண்டு நிறைவடைவதால் நாங்களும் வருகிற செப்டெம்பர் 17 18 தேதிகளில் தஞ்சையில் பொன் விழா கொண்டாட இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  9. உண்மைதான் ஐயா விழா நிகழ்வுகளை ஏற்றுக்கொண்டால் அவை நிறைவேற்றி முடிக்கும் வரை மனப்பாரமாகவே இருக்கும் விழாவை சிறப்பித்தமைக்கு வாழ்த்துகள்.
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  10. இது பற்றி இன்னும் விலாவாரியாக எழுதி இருக்கலாமோ தலைக்கனம் குறைந்திருக்கும் போய் இருக்குமா

    பதிலளிநீக்கு
  11. அய்யா ’தலைக்கனம்’என்றவுடன் நானும் என்னவோ ஏதோவென்று நினைத்து விட்டேன். குரூப் போட்டோவில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள். மன்னிக்கவும். நீங்கள் படத்தில் இருப்பது போல் தெரியவில்லையே.

    பதிலளிநீக்கு
  12. ஆசிரியர் பக்கத்தில் அமரும்போது, மாணவர்கள் கொஞ்சம் தயக்கத்துடன் பவ்யமாக அமர்ந்திருப்பது, நம் பாரம்பர்யத்தைக் காட்டுகிறது. (டாக்டர் டேனியல் சுந்தர்ராஜன் அவர்களோடு மாணவர்கள் இருக்கும் படம்தான்). இப்படி, இந்த வயதில் சந்திப்பதும், மற்றவர்களை நினைவு வைத்துக்கொள்வதும் எனக்கு அபூர்வமாகப் படுகிறது. வாழ்த்துக்கள். (வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று எழுதுவது ரொம்ப செயற்கையாக இருக்கிறது)

    பதிலளிநீக்கு
  13. ஆஹா.... விழா சிறப்பாக நடந்திருக்கும் என்பது புரிகிறது. விரிவாக எழுதி இருக்கலாமே ஐயா.....

    பதிலளிநீக்கு
  14. நான் 1965-ல் திருச்சி தேசியக்கல்லுரியில் B.COM பட்டப்படிப்பு
    முடித்தேன் . ( HINDI AGITATION ​-SET ! ) இது போல விழா எதுவும் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரியவில்லை ..எனக்கு வருத்தம் தான் ..தங்களுடைய 60-ம் ஆண்டு நிறைவு விழா பற்றி மிக்க மகிழ்ச்சி ..

    மாலி

    பதிலளிநீக்கு
  15. நட்புக்கள் படைசூழ விழா எடுப்பது என்றால் தலைக்கனம் வரும் தான்)))விழாப்பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு