சனி, 6 பிப்ரவரி, 2016

சதாபிஷேகம்

5-2-2016 அன்று என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு பொன்னாள். அன்றுதான் என் சதாபிஷேக வைபவம் நடந்தேறியது. மிக நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே வந்திருந்தனர்.

போட்டோக்களை மட்டும் இப்போது பதிவிடுகிறேன். விழா நிகழ்வுகளைப் பற்றி சாவகாசமாக எழுதுகிறேன்.













37 கருத்துகள்:

  1. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்!

    பதிலளிநீக்கு
  2. எனது தந்தைக்கும் கடந்த வாரம்தான் சதாபிஷேகம் செய்தோம். அதனால் தங்களின் பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். தொடர்கிறேன்.
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, செந்தில்குமார், பதிவை சீக்கிரம் எழுதி விடுகிறேன்.

      நீக்கு
  3. முகநூலில் படங்களைப் பார்த்தேன். தங்களது வாழ்த்துக்களை நாங்கள் என்றும் வேண்டுகிறோம். தாங்கள் எல்லா நலனும் பெற்று நீடுழிவாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.ஐயா, பதிவில் 5-2-2015 என்று உள்ளது என்பதைத்தகவலுக்காகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. சதாபிஷேக வாழ்த்துக்கள். ஆண்டவன் அருளால் நீங்கள் இருவரும் நலமோடு பல்லாண்டு வாழ்வீர்களாக!

    பதிலளிநீக்கு
  5. ஐயா

    ஒரு படம் ஆயிரம் வார்த்தைக்கு சமம், சுருங்கச் சொல்லி விளங்க வைப்பவர் தாங்கள்.படங்கள் மூலம் நிகழ்ந்ததை அருமையாக காட்சிப்படுத்தி உள்ளீர்கள்.

    ஆமாம் அது என்ன பண மாலை. அது எந்த ஊர் வழக்கமோ?

    வாழ்த்துக்கள் பல.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, ஜெயக்குமார். என் மாப்பிள்ளையின் நண்பர் ஒருவர் பேங்கில் ஆபீசராக இருக்கிறார். அவர் அன்புடன் போட்ட மாலை. அன்பளிப்புக்காக தரும் பணத்தை மாலையாகக் கட்டிப் போட்டிருக்கிறார். அது மட்டுமல்ல, அவருடைய அன்பினால் எங்களையும் கட்டிப்போட்டு விட்டார்.

      நீக்கு
  6. வாழ்த்துகள் ஐயா! எங்களுக்கும் ஆசி வழங்குங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, சேட்டைக்காரன். பார்த்தவர்களுக்கும், வாழ்த்தியவர்களுக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

      நீக்கு
  7. வாழ்த்துகள் தர வேண்டுகிறேன் ஐயா தொடர்கிறேன் பதிவின் தகவல்களை.
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு

  8. ஐயா! சதாபிஷேக வைபவ புகைப்படங்கள் அருமை. தாங்களும் தங்கள் துணைவியாரும் பல்லாண்டு நலமுடனும் வளமுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாகுக! புகைப்படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி!
    தங்களின் ஆசிகளை நாடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி, நடனசபாபதி அவர்களே. இந்தப் பதிவைப் பார்த்தவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் சதாபிஷேகத்தைக் கொண்டாட வாழ்த்துகிறேன்.

      நீக்கு
  9. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்!

    பதிலளிநீக்கு
  10. ஆஹா, அருமையான படங்கள்.

    தம்பதியினருக்கு அடியேனின் நமஸ்காரங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி, வைகோ அவர்களே. தங்களுடைய சதாபிஷேக வைபவத்தைக் காண ஆவலுடன் இருக்கிறேன். ஆண்டவனும் உச்சிப்பிள்ளையாரும் அருள் புரிவார்களாக.

      நீக்கு
  11. வாழ்த்துகள் ஐயா. எங்களையும் ஆசீர்வதியுங்கள்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் உங்கள் துணைவியாருக்கும் அன்பு மகளுக்கும் என் மனமார்ந்த ஆசிகளும் வாழ்த்துகளும். நீங்கள் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் ஆகிய இரண்டு வைபவங்களையும் கொண்டாட இறைவன் அருள் புரியட்டும்.

      நீங்கள் மாமனாராகப் பொறுப்பேற்கும் காட்சியைக் காண ஆவலுடன் உள்ளேன்.

      நீக்கு
    2. வாழ்த்துக்கள் சார். உங்கள் வாழ்த்துக்களும் ஆசியும் உங்களைவிட இளையோர் எல்லோருக்கும் கிட்டட்டும்.

      நிறைய பதிவுகள் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தால், வயது தெரியாது. நிறைய சுற்றம் 'நண்பர்கள், நலம் விரும்பிகள் இருப்பது தெரியும். நல்ல ஆரோக்கியத்துடன் 10-12 வருடங்களில் நீங்களும் கலந்துகொள்ளும்படியான வைபவம் வருவதற்கும் சேர்த்தே வெங்கட் அவர்களை ஆசீர்வதியுங்கள்.

      நீக்கு
  12. ஃபேஸ்புக்கில் ஒரு படம்பார்த்தேன் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
  13. இந்தப் பொன்னான நிகழ்வுக்கு
    பாக்கியம் இருக்கவேண்டும்
    அப்படியே தரிசித்து ஆசி பெறவும்..

    பதிவர்கள் மிகச் சிலரைத் தவிர
    பெரும்பாலோர் ஆசி பெற
    வேண்டியவர்களாகவே இருக்கிறோம்

    பதிவில் ஆசிர்வதிக்கவும்
    மானசீகமாகப் பெற்று மகிழ்கிறோம்

    பதிலளிநீக்கு
  14. தங்களின் ஆசிர்வாதம் வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. வணங்குகிறேன்! உங்கள் ஆசீர்வாதம்! இந்த பதிவின் விரிவாக்கத்தினை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு