திங்கள், 11 ஜூலை, 2016

இனி வீட்டிற்கு சமையல் அறை தேவையில்லை.

             
                        Image result for சமையல் அறை

இது என்னய்யா அநியாயமாக இருக்கு, வீட்டிற்கு சமையல் அறை இல்லாமல் எங்கே சமைப்பார்கள், எப்படிச் சாப்பிடுவார்கள் என்று நீங்கள் கேட்டால் உங்களுக்கு 60 வயதிற்கு மேல் ஆகிவிட்டது என்று அர்த்தம். உங்கள் வீட்டில் கல்யாண வயதில் ஒரு பையன் இருக்கிறான் என்றால் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. இந்தப் பதிவு உங்களுக்காகத்தான்.

முன்பெல்லாம், அதாவது 30 - 40 வருடத்திற்கு முன் ஒரு பையனுக்கு பெண் பார்க்கப் போனால் பையனுடைய அம்மா கேட்கும் முதல் கேள்வி "பொண்ணுக்கு சமையல் செய்யத்தெரியுமா" என்பதாகத்தான் இருக்கும். இன்று பெண் பார்க்கப்போகும்போது இந்தக் கேள்வியைக் கேட்டால் "என்ன, காட்டுமிராண்டி ஜன்மங்களாய் இருக்கிறார்கள்" என்ற கேள்விக்கு புரோக்கர் பதில் சொல்ல வேண்டி வரும்.

இப்படி இரண்டு மூன்று பார்ட்டி வந்து போனபின் புரோக்கருக்கு ஒரு புது அறிவுரை கொடுக்கப்படும். "இந்த மாதிரியெல்லாம் கேள்வி கேக்கற பார்ட்டிகளை இனிமேல் இங்கே கூட்டி வராதே" என்று சொல்லி விடுவார்கள். பொண்ணு என்ன படிச்சிருக்கா, என்ன வேலை பாக்கறா இந்த மாதிரி கேள்விகள்தான் அனுமதிக்கப்பட்டவை.

பெண்ணும் பையனும் ஒருவருக்கொருவர் பிடித்திருந்தால், தனியாகப் பேசுவார்கள். அப்புறம் இருவரும் ஓகே சொன்னால் மேற்கொண்டு விவரங்கள் பேசுவார்கள். இந்த மாதிரி பேசும்போதே பெண்ணின் அம்மா பெருமையாகச் சொல்லிக்கொள்வாள். என் பொண்ணை சமையலறைப் பக்கமே நான் விட்டதில்லை, என்பாள். பையனுடைய அம்மா, சீர் வரிசையாக பெண்ணுக்கு என்ன என்ன செய்வார்க்ள என்ற கணக்கிலேயே மூழ்கி இருப்பாள். பெண்ணின் அம்மா சொன்ன வார்த்தையைக் கேட்டிருக்க மாட்டாள்.

கல்யாணம் தடபுடலாக நடந்து முடிந்தது. பெண்ணிற்கு 200 பவுன் நகை. மாப்பிள்ளைக்கு ஒரு 80 லட்சத்தில் பிஎம்டபிள்யூ கார். பையனோட அம்மாவிற்கு 20000 ரூபாயில் பட்டுப்புடவை. வெள்ளிப் பாத்திரங்கள், இத்தியாதி.  அம்மாவிற்கு வாயெல்லாம் பல். சம்பந்தியம்மா செய்திருக்கும் சீர் வரிசைகளை தன்னோட சொந்தக்காரர்களிடம் சொல்லிச் சொல்லி பெருமைப் பட்டுக்கொண்டாள்.

கல்யாணம் முடிந்தது. தம்பதிகள் பதினைந்து நாள் யூரோப்பிற்கு ஹனி மூன் போய் வந்தார்கள். ஊருக்குத் திரும்பின பின் இருவரும் பிஎம்டபிள்யூ காரில் வேலைக்குப் போய்வந்தார்கள். மாமியார்க்காரி வழக்கம்போல் சமையல் செய்து வந்தாள். இருவரும் திவ்யமாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். பத்து நாள் ஆயிற்று, பதினைந்து நாள் ஆயிற்று. மருமகள் சமையல் கட்டுக்கு வருவாள் வருவாள் என்று மாமியார்க்காரி எதிர் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவள் அந்தப் பக்கம் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.

இதற்கிடையில் சம்பந்தி அம்மாள் வந்தாள். அவளிடம் என்ன உங்க பொண்ணு சமையல் கட்டுப் பக்கமே வரமாட்டேங்கறா அப்படீன்னு சொன்னாள். அதுதான் நான் நீங்க பொண்ணு பார்க்க வரப்போவே சொன்னேனே, என் பொண்ணு சமையல் அறைப் பக்கமே வரமாட்டேன்னு, நீங்க அதைக் கேக்கலியா என்றாள். மாமியார்க்காரிக்கு தூக்கி வாரிப்போட்டுது. அதெல்லாம் எங்க வீட்டிற்கு சரிப்படாது, நீங்க ஒங்க பொண்ணைக் கூட்டிக்கிட்டுப் போய் ஒரு மாசத்தில சமையல் சொல்லிக்கொடுத்து அனுப்புங்கோ என்றாள்.

அந்த அம்மாவும் அப்படியே பெண்ணையும் மாப்பிளையையும் கூட்டிக்கொண்டு போனாள். அடுத்த வாரம் இரண்டு பேரும் தனிக்குடித்தனம் போய் விட்டதாகத் தகவல் வந்தது. சரி, இரண்டு பேரும் எப்படி சாப்பிடுகிறார்கள் என்று மாமியார்க்காரி விசாரித்தாள். விசாரித்ததில் தெரிந்தது.

பையனுக்கு காப்பி போடத்தெரியும். காலையில் எழுந்த தும் காப்பி போட்டு அவனும் அவன் பெண்டாட்டியும் குடிக்கிறார்கள். காலையில் அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு மாமி இட்லி சுட்டுக் கொடுக்கிறாளாம். அங்கு ஆளுக்கு நாலு இட்லி வாங்கி சாப்பிட்டு விட்டு இருவரும் ஆபீஸ் போய்விடுவார்களாம்.

மதியம் ஆபீஸ் கேன்டீனில் சாப்பாடு. இரவு வீட்டிற்கு வந்ததும் ஏதாவது ஓட்டலுக்குப் போய் அங்கு இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து படுத்துக்  கொள்வார்களாம். ஞாயிற்றுக் கிழமை லீவு அன்று இருவரும் பொண்ணோட அம்மா வீட்டிற்குப் போய் விடுவார்களாம்.

இப்படி வாழ்க்கைதான் இனிமேல் நடக்கப் போகிறது. அப்புறம் வீட்டில் எதற்கு சமையல் அறை வைக்கவேண்டும்? தேவையில்லையே. செலவும் மிச்சம்.

30 கருத்துகள்:

  1. நிறைய வீடுகளில் இது தான் நிலை. இவர்களை வைத்து நிறைய குடும்பங்கள் பிழைக்கின்றன. அதுவும் ஒரு விதத்தில் நல்லது தானே....

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. நான் கூட வெளியில் சாப்பிடுவதில்லை .எங்கே போனாலும் டப்பாவில் போட்டு எடுத்துச் செல்வோம் டீ உட்பட .ஆனால் எல்லாரிடமும் இதை எதிர் பார்ப்பது சரியல்ல .

    பதிலளிநீக்கு
  4. Great! இதான் சென்னையிலும் நடக்குது உண்மை! அங்கேயும் அப்படியா? இதுக்கு இங்கே பரவாயில்லை!!
    என் மனைவி சமைத்துக்கொண்டும் வேலைக்கும் போய்க்கொண்டும் தான் இருக்கிறார்கள். பிழைகளை திருத்தியும் பதிவுக்கு தேவையானதை மட்டுமே எழுதியுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  5. வார இறுதி நாட்களில் ஹோட்டல்கள் எப்போதும் கூட்டமாகவே இருக்கிறது. ஏன், எல்லா நாட்களிலும்தான்..

    பதிலளிநீக்கு
  6. பல இடங்களில் இப்படித்தான் நடக்கிறது! சில இடங்களில் பையன் சமைத்து போடுவதாகவும் கேள்விப்படுகிறேன்!

    பதிலளிநீக்கு
  7. இது நகைச்சுவையாயினும் இனி வரும் காலங்களில் அனைவர் வீட்டிலும் இப்படித்தான் ஐயா.
    த.ம.

    பதிலளிநீக்கு
  8. //இப்படி வாழ்க்கைதான் இனிமேல் நடக்கப் போகிறது// ஐயா! இது தமிழகத்தில் தொடங்கிப் பலகாலமாகிவிட்டது. குறிப்பாக கணித்துறை வேலைவாய்பின் பின்பு இது தான் நடப்பதாக ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் குடும்பமாகவே கூறிக் குதூகலித்தார்கள். ஆனால் அதில் பலர் வீடுகளில் லட்சக்கணக்கில் செலவு செய்து சமையல் உபகரணங்கள் வாங்கிய சமயலறையும் உடையோர் என்பதே! மிக வியப்புக்குரியது.

    பதிலளிநீக்கு
  9. வீட்டிற்கு சமையல் அறை நிசசயம் தேவை. ஒரு காட்சி அறையாக, பெரசுகளாகிய நாம் சமையல் செய்து சாப்பிட மற்றும் வேலைக்காரிக்கு கழுவ இரண்டு பாத்திரமாவது கொடுக்க என வேண்டியதே. சமையல் அறை இல்லாவிட்டால் வீடாகாது.அது லாட்ஜ் ஆகிவிடும்.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  10. Community Kitchen is the new trend. each gated community may have 50-60 houses. they are hiring cooks for veg and non veg kitchen. good concept. 24 x 7 - cooks available. except room / door service. end of the month sharing the expenses also good for our economy.

    பதிலளிநீக்கு
  11. இவர்களின் இந்தச் செயலால் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் உணவு வியாபாரமே நடக்கிறது

    பதிலளிநீக்கு
  12. உண்மை இது தான் என்றாலும் கசக்கத் தான் செய்கிறது. இருவருமாகப் பகிர்ந்து கொண்டு வேலைகளைச் செய்யலாம். ஆனாலும் இந்தக் காலத்துத் தாய்மார்கள் பெண்களைச் சமையலறையில் விடுவதில்லை என்பதும் உண்மையே! அதுவே ஒரு பெருமையாகவும் இருக்கிறது. :(

    பதிலளிநீக்கு
  13. எனக்குத் தெரிந்த ஒரு கணவன், மனைவி. மனைவி வேலைக்குச் செல்லவில்லை. வீட்டில் தான் இருக்கிறார். ஆனாலும் சமைப்பது இல்லை. மெஸ்ஸில் இருந்தே நான்கு வேளையும் சாப்பாடு வருகிறது. யாரானும் அவங்க வீட்டுக்கு விருந்தினராகப் போனால் வெளியே ஹோட்டலுக்குக் கூட்டிச் சென்று விடுவார்களாம். இது சென்னையில் ஒரு வீட்டில் கிட்டத்தட்டப் பத்து வருஷமாக நடக்கிறது,

    பதிலளிநீக்கு
  14. US இல் சமையல் ரூம் என்று ஒன்று இல்லவே இல்லை...Fridge, Wardrobe,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்தீங்களா, நாமும் US ரேன்ஜ்க்கு முன்னேறிட்டோம்.

      நீக்கு
    2. யு.எஸ்ஸில் சமையலறை உண்டு. நாங்க சமைக்கிறோம், சமைச்சிருக்கோம். இனியும் சமைப்போம். படத்தோடு என்னோட பதிவிலே போடறேன், பாருங்க! தினம் தினம் சமைச்சிருக்கேன். அங்கே எங்க பொண்ணும், மாட்டுப்பெண்ணும் தினம் தினம் சமைக்கிறாங்க! :) நான் மெஸ்ஸில் வாங்கிச் சாப்பிடுவதாய்ச் சொன்னது சென்னை நந்தனத்தில் இருக்கும் ஓர் உறவினர் வீட்டில்!

      நீக்கு
  15. காசுள்ளவங்களுக்கு இது ஒத்து வரும் ,இல்லாதவங்க ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசில்லாதவங்களுக்காகத்தான் அம்மா உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

      நீக்கு
    2. அம்மா உணவகம் எல்லோர் பசியையும் தீர்த்திடுமா ?இல்லை ,அகிலம் எங்கும் அது இருக்கா :)

      நீக்கு
  16. நாங்கள், பார்த்த US வீடுகளில், சமையல் ரூம் என்று தனியாக இல்லை. எல்லாவற்றையும் ப்ரிட்ஜ், வார்ட்ரோப்ஸ்,மைக்ரோவேவ் அவன், பெரிய அடுப்பு,பெரிய டேபிள் அதனுள் கட்லரீஸ் அண்டு காக்கரீஸ் என்று அவியல் பண்ணி அதற்கு கிச்சன் ஸ்டூடியோ என்று நாமகரணமும் சூட்டியுள்ளார்கள், கீதா சாம்பசிவம் மேடம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமையல் அறை இல்லா வீடு இல்லை. ஏன்? ஸ்டுடியோ அபார்ட்மெண்டில் கூட சமையல் அறை உண்டு. அவ்வளவு ஏன் முக்கால்வாசி பெரிய ஹோட்டல்களிலே kitchenette ஹோட்டல் ரூம்கள் உண்டு.

      அம்மா அப்பா வந்தால் அவர்களுடன் ஊருக்கு செல்லும் போது kitchenette ஹோட்டல் ரூம்கள் தான். தேவை என்பவர்கள் ரூமிலே சமைத்தும் கொள்ளலாம். சோறு வேணுமே! சைவ சாப்பாடும் வேணுமே!

      நீக்கு
    2. அதுவும் நாலு பர்ணர்கள் உள்ள பெரிய காஸ் ஸ்டவ். இரண்டு பெரிய பர்ணர்கள். இரண்டு சிறிய புர்ணர்கள். ஒரே சமயத்தில், சாதம், போரியல் சாம்பார் செய்யலாம்! காலியாக உள்ள ஒரு பர்ணரில் முடிந்தால் ஏறி உக்காந்தும் கொள்ளலாம்!

      நீக்கு
    3. நம்பள்கி, நாலாவது பர்னரில் ரசம் வைக்கலாமே! ரசம் இல்லைனா சாப்பாடு ரசம் இல்லை! :) நாங்களும் யு.எஸ்ஸில் வெளி ஊர் போனால் ரைஸ் குக்கர் எடுத்துச் சென்று விடுவோம். புளிக்காய்ச்சல், தேப்லா, பூரி, சப்பாத்தி போன்றவையும் ஊறுகாயும் இருக்கும். சாப்பிட்டுக் கொள்வோம். தயிர் எல்லா ஊர்களிலும் கிடைக்கும். :)

      நீக்கு
    4. Geetha Sambasivam:
      சும்மா தமாஷுக்காக அப்படி எழுதினேன்!
      நாலாவது பர்னரில் ஒன்று முட்டை வேக வைப்போம். ஆளுக்கு இரண்டு முட்டை தினமும் அவசியம் (மஞ்சள் கரு ஒன்று தான்; மற்றொரு மஞ்சள் கருவை ஒதுக்கி விடுவோம். மனைவி மட்டும் ஒரு முட்டை தான்.

      உண்மையில், இரண்டு பொரியல் அல்லது ஒரு பொரியல் ஒரு கீரை. சாம்பார் சாதம் கூட இப்ப சுத்தமாக சாப்பிடுவது இல்லை. பருப்பு சாதம். குறைந்தது 1 to 1.5 பவுண்ட் (lbs) பொரியல். நீர் மோர் இல்லை கொழுப்பில்லாத தயிர் (0% fat). முக்கிய உணவு காய்கறிகள், கீரை, பருப்பு நெய்யுடன் தான் (very little for taste and for fat), தயிர். சாம்பார் மனைவி செய்து வைத்து விடுவார்கள். எவனும் சாப்பிட மாட்டான்!

      இரவு white சோறு நஹி! எல்லா விதமான டிபன் வகைகள் வடக்கத்தி டிபன் வகைகள் உள்பட...முட்டை பிரியாணி இப்படி. one item only at night. தினமும் ஒரு variety! புது புது டிபன் வகைகள் சமையல்கள் செய்வதும் அதை என் மீது பரிசோதித்து பார்ப்பதும் என் மனைவியின் hobby! I am really fortunate!

      நீக்கு
    5. ஐயையோ, நான் என் பதிவ மாத்திக்கிறேன். வீட்டுக்கு சமையலறை அவசியம், அவசியம், அவசியம்.

      நீக்கு
    6. ஏன், வீட்டுக்காரம்மா " ரொம்ப நல்லதாய் போச்சு. இனிமேல் சமையலறை இல்லை. அதனால் நான் சமைக்க மாட்டேன். நீங்க அன்னபூர்ணாவில் சாப்பிட்டுவிட்டு எனக்கும் அப்படியே ஒரு பார்சல் வாங்கி வாருங்கள்" என்று சொல்லி விட்டார்களா?
      --
      Jayakumar

      நீக்கு