திங்கள், 25 ஜூலை, 2016

ஒரு தம்பதியருக்கு குழந்தைகள் அவசியமா?

                           
                                 Image result for couple
மனித இனம் தோன்றிய காலம் முதல் சமீப காலம் வரை குழந்தைகள் பெறுவது என்பது ஒரு குடும்பஸ்தனின் முக்கிய கடமையாக இருந்தது. இதை வம்ச விருத்தி என்று அழைத்தார்கள். கல்யாணமாகிய தம்பதியினரின் பெற்றோர்களை பார்ப்பவர்கள் விசாரிப்பது மருமகளுக்கு (மகளுக்கு) ஏதாவது விசேஷமா? என்பதாகத்தான் இருக்கும்.

குழந்தை இல்லாவிடில் அதை ஒரு துர்ப்பாக்கியமாகக் கருதினார்கள். அதற்குக் காரணம் நமது பாரம்பரியத்தில் பெற்றோரைப் பேணுதல் என்பதை ஒரு முக்கிய கடமையாகக் கருதினார்கள். அது ஒரு காலம்.

நிகழ் காலத்திற்கு வருவோம். இப்போது உயிருடன் இருக்கும் 60 வயதைத் தாண்டினவர்கள் எத்தனை பேரை அவர்களின் வாரிசுகள் பராமரிக்கின்றன? ஒரு ஐந்து சதவிகிதம் கூட இருக்காது என நினைக்கிறேன். காரணம் இக்காலத்தில் பொருள் ஈட்ட ஒவ்வொருவனும் பல ஜாலங்கள் புரிய வேண்டி இருக்கிறது.

தான் பிறந்த ஊரில் பிழைக்க வழி கிடைப்பதில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கானடா என்று திரை கடலோடி திரவியம் சேர்க்கிறான். இந்த ஓட்டத்தில் அவன் பெற்றோரை எங்கே நினைப்பது? நினைத்தாலல்லவா பாரமரிப்பதற்கு?

ஆக மொத்தம் வயதான பிறகு மகன் அல்லது மகள் நம்மைக் காப்பாற்றுவாள் என்ற நடைமுறை ஒழிந்து விட்டது. தன் கையே தனக்குதவி என்ற முறையில் தன்னிடம் ஏதாவது பணம் சேர்த்து வைத்திருந்தால் ஒழிய, வயதானவர்கள் மானமாக வாழ வழி இல்லை.

நிலைமை இப்படியிருக்க, குழந்தைகளைப் பெறுவானேன்? அப்புறம் அவர்கள் நம்மைக் காப்பாற்றவில்லையே என்று புலம்புவானேன்? என்னுடைய யோசனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை இனிமேல் தம்பதிகள் விட்டு விடவேண்டும். அன்பு செலுத்த ஏதாவது உயிர் வேண்டுமென்றால் நாய், பூனை இப்படி ஏதாவது ஒரு பிராணியை எடுத்து வளர்த்தால் போதும். இனிமேலாவது ஜனங்கள் புத்தியாய்ப் பிழைத்தால் சரி.

16 கருத்துகள்:

 1. அனுபவத்துக்குப் பிறகு வரும் இந்த வரிகளை புதிதாய் வாழ்க்கையை ஆரம்பிப்பவர்கள் மனதில் ஏற்றிக் கொள்ள மாட்டார்கள். நாம் நம் மகனை சரியாய் வளர்த்து விடுவோம் என்றே நம்புவார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்துக் கொண்டே இருங்கள், இது எல்லாம் அடுத்த நூற்றாண்டில் நிகழும்.

   நீக்கு
 2. நீங்கள் சொல்வது விரைவில் நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

  பதிலளிநீக்கு
 3. ஐயா

  படித்த ஒரு தத்துவம். பிறப்பதும் இறப்பதும் தனியாய். பின் ஏன் தனியாய் வாழக்கூடாது. இந்த ஞானம் உங்களுக்கு எந்த போதி மரத்தின் கீழ் எப்படி கிடைத்தது.

  பிறப்பதும் இறப்பதும் தனியாய்.ஆனால் பிறப்பதற்கு இருவரும் இறந்தபின் போவதற்கு நால்வரும் தேவைப்படுகிறதே. இவர்கள் எங்கிருந்து வருவார்கள்.
  ஐயா வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.உங்கள் அப்பா அம்மா கல்யாணம் செய்ததால் தான் நீங்கள் பிறந்தீர்கள். நீங்கள் கல்யாணம் செய்ததால் தான் குடும்பம் சொத்து என சுகமாக வாழ்கிறீர்கள். நீங்கள் உங்கள் பதிவுகளில் எழுதுவதற்கும் மாறாக நடந்து கொள்கிறீர்கள்.

  கொஞ்சம் கோபித்துக் கொள்ளாதீர்கள்.உங்களுக்கு தற்போது குழந்தைகள் பெற்றுக் கொள்ள முடியாததால் மற்றவர்களிடம் குழந்தை பெற்றுக்கொள்ளாதே என்று சொல்வது சரியில்லை.அல்லது கல்யாணம் செய்து குழந்தைகள் பெற்றதால் தான் நான் இவ்வாறு எழுதுகிறேன் என்றால் "கூறாமல் சன்யாசம் கொண்டிருப்பீர்கள்".

  ​வயதில் பெரிய பதிவராகிய உங்களை இப்படி கலாய்ப்பது சரியில்லை. ஆகவே மன்னிக்கக் கோருகிறேன். மன்னிக்கவும்.​

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த நூற்றாண்டில் நடக்கப் போவதை ஒரு யூகமாக எழுதியிருக்கிறேன். H.G.Wells கதைகள் படித்திருக்கிறீர்களா? அவைகளை எழுதிய காரத்தில் அவை பயுத்தக் காரத்தனமாக கலுதப்பட்டன. ஆனால் நூறு வருடங்கள் கழித்து அவை நடைமுறைக்கு வந்து விட்டன.

   அடுத்த தலைமுறையில் மக்கள் கல்யாணமே செய்து கொள்ளப்போவதில்லை. கல்யாணம் நடந்தால்தானே குழந்தை பெறுவதற்கு.

   இதையெல்லாம் கொஞ்சம் தீர்க்க தரிசனத்துடன் பார்க்க வேண்டும். பழைய தத்துவங்கள் அல்லது பழைய கண்ணோட்டத்துடன் பார்த்தால் இவை அபத்தமாகத்தான் தெரியும். உலகம் போகிற போக்கை வைத்து எதிர்காலத்தில் இப்படி நடக்கலாம் என்கிற யூகங்கள்தான் இவை. தனிப்பட்ட வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு.

   வெளிநாடுகளில் ஆணும் ஆணும் கல்யாணம் செய்துகொண்டு வாழ்வது உங்களுக்குத் தெரியும். அவர்கள் குழந்தை வேண்டுமென்றால் என்ன செய்வார்கள். "குளோனிங்க்" மூலம் பிள்ளை பெற்றுக்கொள்வார்கள்.

   விஞ்ஞான வளர்ச்சியினால் உலகத்தில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கும்.

   நீக்கு
 4. முனைவர் ஐயாவுக்கு....
  நடைமுறை உண்மையை சொன்னீர்கள் இருப்பினும்….
  தாங்கள் சொல்வது போல குழந்தை பெறுவதை நிறுத்த வேண்டிய அவசியமே வராது இன்றைய உணவுப் பொருள்களின் கலப்படத்தால் அடுத்தடுத்த சந்ததியினரால் குழந்தை பெறுவதே பெரிய விடயமாகி போய் விடும் எல்லா வகையான முடிவுகளும் கடைசியில் ஆண்மைக்குறைவில் வந்தே சங்கமிக்கின்றது ஆக நீங்கள் சொன்னது நடக்கும்.
  த.ம. 1

  பதிலளிநீக்கு
 5. பார்த்துக்கொண்டே இருக்க முடியாது. அடுத்த நூற்றாண்டில் நாம் இருக்கமாட்டோமே

  பதிலளிநீக்கு
 6. ம்ம்ம்... ஏற்கனவே இப்படியும் சில தம்பதிகள் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்.....

  பதிலளிநீக்கு
 7. கந்தசாமி சார் சொன்னது இப்போதைக்கு (குறைந்தபட்சம் 200 ஆண்டுகளுக்காவது) நடக்காது. தமிழ்னாட்டின் வளர்ச்சி இப்படித்தான் இருக்கும்.
  1. காதல் திருமணம், நகர்ப்புறத்துக்கு நகருவது (இப்போ சென்னை. இது மாறி, மாவட்டத் தலை நகரங்களும் இன்னும் 100 வருடங்களுக்குள் மாறும்)
  2. யாரும் யாரையும் மணந்துகொள்வார்கள். அது ஒரு பெரிய விஷயமாக இருக்காது (200-250 வருடங்களுக்குள்) இப்போது நடப்பது எல்லாம் exception.
  3. யாரும் யாரையும் விட்டு விலகலாம். மற்றவர்களுடன் வாழ்க்கை தொடங்கலாம். (அமெரிக்கா போன்று) - 300 வருடங்களுக்குப் பிறகு
  4. குழந்தைகளைப் பற்றிய பொறுப்பு - 18 வயது வரைதான். அதற்குப் பின்பு, அவர்களே அவர்கள் வாழ்க்கையைத் தீர்மானித்து வாழவேண்டும். வெறும் மரியாதைக்காக அவ்வப்போது வந்து பார்த்தால் அதுவே பெரிது. இது அதற்குப் பிறகுதான். அப்போது உறவு என்பதைவிட பணம் என்பதே பிரதானமாக இருக்கும்.

  சந்தேகம் இருந்தால் அந்த அந்த மைல் ஸ்டோன் வரும் காலங்களில் விவாதிப்போம்.

  பதிலளிநீக்கு
 8. ஐயா

  செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

  இசை, இசையுடன், பாடல் என்பவை மேற்கத்திய இசையானாலும் கர்நாடக சங்கீதமானாலும் செவிக்கு உணவாகும்.

  எப்படி உணவு வகைகள் பல உள்ளனவோ அவ்வாறு இசையும் மாறுபடும்.

  மேற்கத்திய இசை மேற்கத்திய டின்னர் போன்றது. அதில் எந்தப் பதார்த்தத்தை எப்போது எந்த அளவில் எப்படி பரிமாறவேண்டும் என்றெல்லாம் அவர்கள் நியமங்கள் உண்டாகி விட்டு அதை எல்லோரும் அறியும்படி நோட்ஸ் ஆக பரிமாறும் இசைக் கலைஞர்களுக்கு கொடுத்து விடுகிறார்கள். கண்டக்டர் அந்த விருந்தை மேலும் சுவைப் படுத்த நீ இதை இப்போது இப்படி இந்த அளவில் கொடு என்று முறைப்படுத்துகிறார். அவர் இல்லாவிட்டால் சில சமயம் கலைஞர்கள் அவர்களுக்கு தோன்றிய விதத்தில் பிச்சைக்காரனுக்கு போடுவது போன்று ஒவ்வொன்றாக கொட்டிவிடுவார்கள்.

  கர்நாடக சங்கீதத்திலும் அவ்வாறே. இங்கே கண்டக்டர் இல்லை என்றாலும் முக்கிய பாடகர் வழி நடத்தி செல்வார். அதனால் தான் தனி ஆவர்த்தனம் போன்றவை நடக்கின்றன.

  கச்சேரி அல்லது சிம்பொனி என்பவை கல்யாண விருந்துகள் போல. விருந்தில் பல ஐட்டம்கள் உள்ளது போன்று பல வாத்தியங்களின் இசை.

  மிகக்குறைந்த வாத்தியங்களைக் கொண்டு கொடுக்கப்படும் இசை மற்றும் இசையுடன் கூடிய பாடல் நமது காலை உணவு போன்றது. இட்லி வடை சட்னி சாம்பார் என்று திருப்திப் பட்டுக்கொள்வோம்.

  சாக்கில குத்து::

  நீங்கள் தான் பெரிய சாப்பாட்டு பிரியர் ஆயிற்றே (பதர் பேணி, பேப்பர் ஸ்வீட் பூத ரெகுலு, சுட்ட கத்திரிக்காய் சட்னி, வெஞ்சாய பஜ்ஜி, உருளை கிழங்கு போண்டா). அதனால் தான் சாப்பாட்டு உதாரணம் சொன்னேன்.

  ஜெயக்குமார்

  பதிலளிநீக்கு
 9. Excuse me. The comment for the Orchestra post has been posted here. Please delete that and this also.

  பதிலளிநீக்கு
 10. //என்னுடைய யோசனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை இனிமேல் தம்பதிகள் விட்டு விடவேண்டும். //

  ஐயா! இந்த யோசனையை எல்லோரும் ஏற்றுக்கொண்டால் வருங்காலத்தில் மனித இனமே அழிந்துவிடுமே. அப்படி மனித இனத்தையே அழிய விடலாமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடக்கவே நடக்காது. குழந்தை பெறாமல் பேரின்பம் அனுபவித்தாலும், (சிற்றின்பம்--இட்லி சாப்பிடுவது), பெண்கள் கல்யாணம் ஆகி ஒரு வருடத்தில் குழந்தைக்காக ஏங்குவார்கள். இங்குள்ள் பெண்கள் ஆம் வெள்ளைக் காரிகள் கூட, கல்யாணம் செய்தால் அடுத்தது குழந்தை இருந்தால் தான்--வாழ்கை முழுமையடையும் என்கிரார்கள்.

   நீக்கு
  2. [[[நெல்லை: யாரும் யாரையும் விட்டு விலகலாம். மற்றவர்களுடன் வாழ்க்கை தொடங்கலாம். (அமெரிக்கா போன்று) - 300 வருடங்களுக்குப் பிறகு]]]

   இப்பவும் செய்யலாம். பெண்கள் முட்டாள் தனமாக அம்மிக் குழவியை போட்டு கணவனைக் கொள்கிறார்கள். ரத்து செய்ய ஏன் வலிக்குது? ஊர் ஏதாவது சொல்லுமாம்! முட்டாள்கள்!

   நீக்கு
  3. அம்மிக்குழவி ரொம்ப பாபுலர் ஆகிட்டு வர்ரது. இது பற்றி ஒரு பதிவு சீக்கிரமே வருகிறது. காத்திருங்கள்.

   நீக்கு
 11. தனியாக இருப்பது தான் நல்லது-- ஒரே ஊராக இருந்தாலும்! நாங்கள் இருவரும் அதைதான் விரும்புகிறோம். இங்கு ஒய்வு பெற்றவர்களுக்கு independence வேணும்; எங்களால் முடியவில்லை என்றாலும் அரசு எங்களுக்கு ஏதாவது செய்யும். இங்கு wheel chair-ல் இருந்து கொண்டே பஸ் ரயில் விமானம் கடை கண்ணி எல்லாம் செல்லலாம்.

  எங்கள் பிளான்: ஆறு மாதம் வட இந்தயாவில் உள்ள ஹிமாச்சல பிரதேசத்தில் வசிக்கலாம் என்கிறார்கள் என் மனைவி; எனக்கு பாலக்காடு மாதிரி தமிழ்நாடு பார்டரில் உள்ள கேரளாவில் வசிக்க ஆசை! ஐயோ தமிழ்நாடு வேண்டாம்பா! கேரளாவில் உதைத்தாலும் ஓகே! அல்லது பாண்டி! சென்னை நரகம்,ஆம் நான் பிறந்து வளர்ந்த சென்னை, இன்றும் நேசிக்கும் சென்னை, எப்போதே வாழ்வதற்கு உரிய தகுதியை இழந்து விட்டது. ஒரே ஊழல். சென்னையில் உள்ள வார்டு கவுன்சிலருக்கும் கூட பயப்படனும். நாம வீடு கட்டினா அவனுக்கு எதுக்கு பணம் தரனும்!

  கேரளா பெஸ்ட்! இல்லை பாண்டி! ஆத்து மாமி ஆசைப்பட்டால் ஹிமாசலப் பிரதேசம் கூட ஓகே! சுத்தமாக முடியவில்லை என்றால் once for all அமெரிக்கா தான்; அதற்கு இந்தியா தகுதியில்லை!

  பதிலளிநீக்கு