ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

மர்மம் அவிழ்ந்தது.

என்னுடைய "ஒரு நேர் மறைப் பதிவு"
http://swamysmusings.blogspot.com/2016/08/blog-post_14.html
என்னும் பதிவில் போட்டிருந்த ஓவியத்தைப் பலரும் குறிப்பிட்டிருந்தார்கள்.அந்த ஓவியம் யாரால் வரையப்பட்டது என்ற மர்மம் இன்று அவிழ்ந்தது. நன்றி: திரு பாபு அவர்கள்.

அந்த ஓவியம் பிரபல பதிவர் திருமதி மனோ சாமிநாதன் அவர்களால் வரையப்பட்டது என்று இன்று  அன்பர் திரு. பாபு அவர்கள் மூலம் தெரியவந்தது.

அந்தப் பதிவின் சுட்டி:

http://muthusidharal.blogspot.com/2010/04/blog-post.html

பதிவின் பெயர்: முத்துச்சிதறல்

அந்த ஓவியத்தின் உரிமையாளர் திருமதி மனோசாமிநாதன் அவர்களின் அனுமதி இல்லாமல் அந்த படத்தை என் பதிவில் உபயோகப்படுத்தியமைக்கு அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இது தெரியாமல் நேர்ந்த தவறு. ஆனாலும் ஒரு விதத்தில் அவர்களின் ஓவியத்திற்கு கிடைக்கப்பட்ட ஒரு பாராட்டு எனக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

10 கருத்துகள்:

 1. ஏற்கெனவே பார்த்திருக்கிறேன் என்றாலும் மறுபடியும் குறிப்பிடப்படும்வரை இந்தத் தகவல் மனதில் ஏறவில்லை என்பது குறித்து வெட்கப்பட்டுக் கொள்கிறேன்!

  பதிலளிநீக்கு
 2. இந்த ஓவியம் மனோ அம்மா வரைந்ததுதான்...
  அவரின் தளத்தில் கூட பகிர்ந்திருந்தார்....
  பலர் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்...
  அவரின் ஓவியம் என்பதற்காக தனிப்பதிவும்... மன்னிப்பும்...
  கிரேட் ஐயா...
  நன்றி.

  பதிலளிநீக்கு
 3. ஓவியரை நாங்கள் அறிவோம். தங்கள் மூலமாக மறுபடியும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. திருமதி மனோசாமிநாதன் அவர்களுக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. ஓவியம் 'நல்லாத்தான் இருந்தது. இப்போதுதான் யார் வரைந்தது என்று கிரெடிட் கொடுத்துவிட்டீர்களே. மனோ மேடம் அருமையாக வரைந்திருக்கிறார். நான் குமுதத்தில் வந்த ஓவியம் என்று நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
 5. அசத்தலான ஓவியம் மனோ சுவாமிநாதனுக்குப் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 6. என் ஓவியத்தை [யாரென்று தெரியாமலேயே ] இங்கே வெளியிட்டிருப்பதற்கு அன்பு நன்றி! சில நாட்ககளாக உங்கள் வலைப்பக்கம் நான் வரவில்லை. அதனால்தான் எனக்கு இந்த விஷயம் தெரியவில்லை. சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இதை இன்று என் கவனத்திற்குக் கொண்டு வந்தார்கள். அவர்களுக்கும் என் நன்றி! இதில் 'மன்னிப்பு' என்ற பெரிய வார்த்தையெல்லாம் தயவு செய்து பெரியவரான தாங்கள் எழுத வேண்டாம். உண்மையில் இன்றைக்கு எனக்குக் கிடைத்த பாராட்டுக்களுக்கு நீங்கள் தான் காரணம். அதோடு மறந்த ஓவியர் கோபுலு அவர்களுடன் ஒப்பிட்டு மேலும் என்னை கெளரவப்படுத்தியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 7. அருமையான ஓவியம்! வலைப்பக்கங்களில் இந்த ஓவியத்தை கண்டு இருக்கிறேன்! நானும் இந்த ஓவியத்தை என்னுடைய படைப்புக்களுக்கு பயன்படுத்தியதாக நினைவு. இந்த பின்னூட்டம் மூலம் மனோ சாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்!

  பதிலளிநீக்கு