திங்கள், 8 ஆகஸ்ட், 2016

ஆசை இருக்கு காதல் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு ஆடு மேய்க்க

இந்தப் பதிவிற்கும் சுவாதி-ராம்குமார் நிகழ்விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்து கொள்கிறேன்.

பொதுவாக பலரும் தங்கள் வாழ்க்கையை இன்ன மாதிரி அமைத்துக் கொள்ளவேண்டும் என்று ஒரு கனவு வைத்திருப்பார்கள். பெரிய வேலை, பெரிய வீடு, அழகான மனைவி, பெரிய கார் என்று இப்படி ஆசை வைத்திருப்பார்கள். இப்படி ஆசை வைப்பதில் தவறில்லை. ஆனால் அவைகளை அடைய தேவையான உழைப்பைத் தருவதற்கு அவர்கள் முன் வருவதில்லை.

முதலில் படிப்பு. படிக்கும்போது படிப்பில் கவனம் வைத்து நல்ல மார்க்குகள் வாங்கி மேல் படிப்புகள் படித்து தன்னை ஒரு நல்ல உத்தியோகத்திற்கு தயார் செய்து கொள்ளவேண்டும். அப்படி படிக்கும் காலத்தில் ஆணாகட்டும், பெண்ணாகட்டும், காதலில் ஈடுபட்டால் அவர்கள் வாழ்க்கை சின்னாபின்னமாகி விடும் என்பதை உணர்வதில்லை.

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ என்னென்ன தேவை என்று கூடப் பிரியாத வயதில் காதலில் ஈடுபடுகிறவர்கள் புத்தியில்லாதவர்கள். அப்படி ஈடுபடும் பலரும் சராசரிக் குடும்பத்தில் அல்லது ஏழ்மைக் குடும்பத்தில் இருந்து வருகிறார்கள். இப்படி நடைபெறும் காதல் கல்யாணங்கள் நூற்றுக்கு தொண்ணூறு சதம் தோற்றுப் போகின்றன.

வீட்டில் ஆடு மேய்ப்பவனுக்கு காதல் என்ன வேண்டிக்கிடக்கிறது. இப்படிக் காதல் செய்பவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் பல பேர். காதல் புனிதமானதாம். ஆஹா, புனிதம் என்று சொல்லிக்கொண்டு இருந்தால் வயிறு நிறைந்து விடுமா?

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நல்ல படிப்பு, நல்ல வேலை என்று ஏற்பாடு செய்து அவர்களை முன்னேற்றுவதை விடுத்து, அவர்கள் தலைவர்கள் சொல்லிக்கொடுக்கும் பாடம் என்னவென்றால் நீ மேல் ஜாதியில் ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து கொள், சீக்கிரம் முன்னேறலாம் என்று சொல்லிக்  கொடுக்கிறார்கள்.

இந்த மேல் ஜாதிப் பையன்கள் ஒருவரும் இப்படி தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. பெண்கள் மட்டும் ஏன் இப்படி புத்தி கெட்டுப்போய் அலைகிறார்கள் என்பது புரியவில்லை? ஜாதிகள் மறைவது என்பது இந்தியாவில் சாத்தியமில்லை.

உண்மை கசக்கும். பொய்தான் இனிக்கும். எனக்குப் பொய் பேசத் தெரியவில்லை என்பது ஒரு குறையே.  ஜாதி சமரசம் பேசுபவர்கள் இந்தப் பதிவைப் படிக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அப்படிப் படித்து விட்டு என்மீது ஆங்காரம் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.

18 கருத்துகள்:

  1. நல்ல அனுபவமுள்ள கருத்து. ஆனால் இன்றைக்கு உங்களுக்குப் பின்னூட்டம் வாயிலாக பஜனை உறுதி. யதார்த்தவாதி பொதுஜன விரோதி

    பதிலளிநீக்கு
  2. திரைப்படங்கள் காட்டும் வழி இது. கெடுப்பதில் முக்கிய பங்கு அதற்கு.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. பழ. கருப்பையாவின் சிறப்பைப் பற்றித் தெரிந்தால் உங்கள் பின்னூட்டத்தை முழுமையாக ரசிக்க முடியும். கொஞ்சம் சொல்லுங்கள்.

      நீக்கு
  4. காதல் அனுபவம் இல்லாதவரின் வேதாந்தம்

    பதிலளிநீக்கு
  5. உண்மை கசக்கும். பொய்தான் இனிக்கும் உண்மையான வார்த்தை ஐயா தாங்கள் நடைமுறைக்கு வந்து இருக்கின்றீர்கள் இதை நான் வழிமொழிகிறேன்.
    த.ம.3

    பதிலளிநீக்கு
  6. நிதர்சனம்...
    அரசியல் தலைவர்கள் வீட்டிலும்
    கலப்புத் திருமணங்கள் நடைபெற்று இருக்கின்றன
    அப்படிச் செய்து கொள்ளப்பட்டவர்கள் யாரும்
    ஏழைகள் இல்லை என்பதுவும் நிதர்சனம்

    பதிலளிநீக்கு
  7. killergee யின் "இதுதான் காதலா?" என்ற பதிவுக்கு பதிலா இந்த பதிவு?? அவர் நம் வாழ்க்கையில் ஒரு தடவையாவது காதலித்து இருப்போம். உண்மையான காதலொரு தடவையே வரும. அப்போது அது காதல் என்று புரியாது. என்று எழுதியிருக்கிறார். ஆனால் நீங்களோ infatuation ஐ love என்று எடுத்துக்கொண்டு ஆதலினால் காதல் செய்யாதீர் என்று பதிவு எழுதுகிறீர்கள்.

    என்னவோ இந்த வயசில் நீங்கள் உங்கள் மனைவியை காதலிக்கவில்லை என்று கூற முடியாது. நீங்கள் காதலிக்கிறீர்கள்.ஆனால் அது உங்களுக்கு காதல் என்று புலப்படவில்லை. இது கர்ப்பூரம் அணைக்காமலேயே சத்தியம் என்று சொல்லலாம்.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தெளிவாக இருக்கிறேன். காதல் என்பது வேறு. குடித்தனம் என்பது வேறு. எதையும் வேறு கோணத்தில் பார்க்கும் உங்கள் பார்வை புரிகிறது.

      நீக்கு
  8. காதல் என்று ஒன்று இல்லை. இல்லவே இல்லை; எல்லாமே காமம் தான்.
    காமம் leads to கல்யாணம். காமம் leads to காதல்.
    காதலிப்பவர்கள் இரண்டு hurdle தாண்ட வேண்டும்; காதல் அப்புறம் காமம்.
    பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்பவர்கள் நோகாம நோம்பி கும்பிடுபவர்கள். நேரா தாலியைக் கட்டினாமா....

    காமம் அல்லது எதிர் பாலினம் ஈர்ப்பு இல்லை என்றால் கல்யாணமே இல்லை; நீங்களும் இல்லை; நானும் இல்லை. இந்த உலகமே இல்லை. காமம் இல்லமால் காதல் இல்லாத பெண்ணை கல்யாணம் செய்தே அன்றே...முதல் இரவு எப்படி? என்ன காரணம் காமம் nothing but காமம். காமம் ஆணுக்கு மட்டுமல்ல--பேக்காக இருக்கும் மணப்பெண்ணுக்கும் தான்!

    இது தான் உண்மை...மிருகங்கள் காதலிக்குதா என்ன?
    மனிதன் தான் animal kingdom-ல் top. அதான் legal விஷயங்களுக்கு கல்யாணம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது சரியாத் தோணலையே 'நம்பள்கி'. நீங்களே சொல்லியிருக்கிறீர்கள், இரண்டு தடைகளைத் தாண்டவேண்டும் என்று. அது சரிதான். தடைகளைத் தாண்டியபின்பும் 'காதல்' இருக்குமா இருக்காதா? காதலித்துக் கல்யாணம் செய்துகொண்ட பல ஜோடிகளை (நிறைய) நான் பார்த்துள்ளேன். அதில் பெரும்பாலானவர்கள், ஏண்டா இந்தப் பெண்ணிடம் என்ன இருக்குன்னு உருகி உருகிக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டார்கள் என்று நினைத்திருக்கிறேன். பெரும்பாலான ஜோடிகள் சுத்தமாக made for each other இல்லை (அழகை, நிறத்தைப் பொறுத்தவரையில்). அப்படின்னா, நீங்க சொல்றது சரியில்லைதானே?

      நீக்கு
    2. அதாவது, காதலிப்பவர்கள் (1)ஒரு துணையை தேடி அலைய வேண்டும்; (2)பிறகு கல்யாணம். இரண்டு hurdles--அப்புறம் தான் (அப்பாடா) காமம்!

      பெற்றோர்கள் நாயா பேயா அலைந்து அலைந்து திருமணம் செய்து வைப்பார்கள். இங்கு hurdle 1--பெற்றோர்களுக்கு தான்.
      இங்கு தாலி கட்டின உடன்---நேராக காதல் சுத்தமாக இல்லாமல் காமம் தான். இவர்கள் செய்ய வேண்டியது அந்த ஒன்னு தான்!---அதாவது, பெற்றோர்கள் காசில் மஞ்ச குளித்து...இரவு நோகாம நோம்பி கும்பிட வேண்டியது தான்!

      சுருங்க சொன்னால்...இரண்டுக்கும் அடிப்படை காமம் மட்டுமே!
      இதுக்கு மேலே புளி போட்டு விளக்கக் முடியாது!

      நீக்கு
  9. ஒரு கல்லூரியில் கணிதப்பாடம் கற்றுத்தரும் ஒரு பேராசிரியை ,உயர்ஜாதி பெண்மணி தன்னுடைய மகள் இவ்வாறு கீழ் ஜாதி
    பையனுக்கு மனதை பறிகொடுத்து கல்யாணமும் நடந்து விட்டது ..ஜாதி என்பது எவ்வளவு மனிதப்பண்புகளை கீழ்மைப் படுத்திவிடுகிறது என்பதை என்னால் ஜீரணித்துக் கொள்ளமுடியாத விஷயம் என்னவென்றால் ..அந்தப் பேராசிரிய ப் பெண்மணி தினமும் கடவுளிடம் வேண்டிக்கொள்வது என்னவென்றால் ' அந்தப்பையன் இறந்து , என் பெண் என்னிடம் திரும்பி வரவேண்டும் ' என்று ! ஒரு பேராசிரியை மன நிலைஇப்படியிருக்கும்போது , அவர் எந்த விதமான
    பண்புகளை தன் மாணவ-மாணவிகளுக்கு கற்று தரப்போகிறார் ..?

    மாலி

    பதிலளிநீக்கு
  10. ... மேலும் ,சமீ பத்தில் நடந்த ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் கூட , தனது பெண் ஜாதி விட்டு ஜாதி யில் காதல் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை வெளியிட்டபோது , அந்தப் பெண்ணி ன் தாய் ,அந்தப்பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதைவிட தற்கொலை
    செய்து விடு என்றுஅறிவுறுத்தினார் !

    பதிலளிநீக்கு
  11. மேலும் ,சமீ பத்தில் நடந்த ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் கூட , தனது பெண் ஜாதி விட்டு ஜாதி யில் காதல் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை வெளியிட்டபோது , அந்தப் பெண்ணி ன் தாய் ,அந்தப்பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதைவிட தற்கொலை
    செய்து கொண்டு விடு என்றுஅறிவுறுத்தினார் !

    மாலி

    பதிலளிநீக்கு
  12. JI EVEN THE DIRECT RECRUIT TOP RANKED OFFICER IN GOVT PREFER TO MARRY A FORWARD
    A FORWARD CASTE LADY>>>> THAN GETTING MARRIED TO HIS OWN CASTE GIRLS OR HIS RELATIVE LADY......

    பதிலளிநீக்கு