வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

பதிவர்களே உஷாராக இருங்கள்

பல பதிவர்கள் பல புதிய புரொக்ராம்களைப் பற்றி உயர்வாக தங்கள் பதிவுகளில் எழுதுகிறார்கள். அவர்கள் நல்ல எண்ணத்துடன்தான் "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்றுதான் எழுதுகிறார்கள். சில சமயம் அந்த புரொகிராம் எழுதின கம்பெனியே பதிவர்களைத் தொடர்புகொண்டு எங்கள் புரொகிராம் பற்றி உங்கள் பதிவில் எழுதினால் உங்களுக்கு அந்த புரொகிராமை இலவசமாகத் தருகிறோம் என்றும் ஆசை காட்டுவதுண்டு. என்னுடைய அனுபவத்தில் நான் தெரிந்துகொண்டதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

அந்தப் புரொகிராம் உங்களுக்கு மிகமிக அவசியம் என்றால் ஒழிய அதை தரவிறக்கவேண்டாம்.

அடுத்ததாக அந்த வேலையைச் செய்யும் புரொகிராம் ஏற்கனவே உங்களிடம் இருந்தால் (உதாரணத்திற்கு, ம்யூசிக் பிளேயர்கள்) புது புரொகிராமுக்கு போகவேண்டாம்.

மிக அவசியம் என்று தோன்றும் புரொகிராம்களை நாலு நண்பர்களிடம் விசாரித்துவிட்டு தரவிறக்கவும்.

அல்லது கம்ப்யூட்டரை கண்டெம்ன் பண்ணுவதாயிருந்தால் என்ன வேண்டுமானாலும் தரவிறக்குங்கள் நண்பர்களே.

46 கருத்துகள்:

  1. நல்ல கருத்து.

    பதிவுலகம் தன் உண்மை நோக்கத்தை விட்டு விலகி, விளம்பர நோக்கில் போகாமல் இருக்க இது ஒரு சரியான முயற்சி.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஐயா! என்ன விவரம்ன்னு முழுசா சொன்னாதானே தெரியும்?

    முழு விவரத்தையும் அடுத்த பதிவில அல்லது பின்னூட்டத்தில எழுதுங்க!

    பதிலளிநீக்கு
  3. என்னது நானு யாரா? சொன்னது:

    //ஐயா! என்ன விவரம்ன்னு முழுசா சொன்னாதானே தெரியும்?//

    அந்தப்புரொகிராம்ல பல, கம்ப்யூட்டரைப் படுக்க வைத்துவிடுகின்றன. மேலும் அவை பதிவர்கள் சொல்லுவது போன்ற வசதிகளைத் தருவது இல்லை.

    பதிலளிநீக்கு
  4. சிங்கக்குட்டி, வரவிற்கும் கர்ஜனைக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. அன்பின் அய்யா

    நல்ல கருத்து - பகிர்வினிற்கு நன்றி

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. சரிதான், ஆனா , என்ன விஷயம், என்ன ஆயிற்று என்று விளக்கமாக ஒரு பதிவே போடலாமே!
    பிறருக்கும் உதவியாய் இருக்குமே சார்!

    பதிலளிநீக்கு
  7. நீங்க டாக்டருன்னுறதுகூட தெரியாம கலாய்ச்சிட்டிருந்திருக்கேனே ஐயா! சாரி...! இனிமே கவனிச்சுத்தான் பேசணும்; எனக்கு ஊசின்னாலே பயம்...! :-))

    பதிலளிநீக்கு
  8. பயனுள்ள பதிவு. நிறைய பேருக்கு எதையெடுத்தாலும் தரவிறக்கம் செய்யும் வியாதி உள்ளது :)

    வெங்கட்.

    பதிலளிநீக்கு
  9. எந்த புரோகிராம் உங்களை காலை வாரிவிட்டதுன்னு சொல்லாம .இப்பிடி சொல்றது சரியா...

    குறிப்பிட்டு சொன்னா அடுத்தவங்களும் உஷாரா இருப்பாங்கல்ல...

    பதிலளிநீக்கு
  10. unmaithan.. nan vnc player and windows media playerthan use panrathu vera ethuvum use panrathu illa

    பதிலளிநீக்கு
  11. Jey, சீனா,Cable Shankar,வெங்கட்நாகராஜ் அனைவருக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  12. ஜெய்லானி, கக்கு-மாணிக்கம்,

    ரொம்ப டீடெய்லா சொன்னா அந்த பதிவர்கள் வருத்தமடைய நேரிடும்.

    என்னுடைய கருத்து என்னவென்றால் எந்த புது புரொகிராமை பதிவிரக்கம் செய்யும் முன்பாகவும் நன்கு யோசித்து செயல்படவும்.

    பதிலளிநீக்கு
  13. சேட்டைக்காரன் சொன்னது:

    //நீங்க டாக்டருன்னுறதுகூட தெரியாம கலாய்ச்சிட்டிருந்திருக்கேனே ஐயா! சாரி...! இனிமே கவனிச்சுத்தான் பேசணும்; எனக்கு ஊசின்னாலே பயம்...! :-)) //

    ஐயையோ, சேட்டை, நானு ஊசி போடற டாக்டர் இல்லீங்கோ. எனக்குமே ஊசின்னா பயம்தான்.

    நீங்க வழக்கம்போல கலாய்க்கலாம், தப்பே இல்ல.

    பதிலளிநீக்கு
  14. உங்க தகவலுக்கு நன்றிங்கோ. நானும் நம்மூர்தானுங்கோ.

    பதிலளிநீக்கு
  15. நானும், இப்ப‌த்தான், த‌மிழில் எழுத‌, ப‌திவ‌ர் சொன்ன‌ 'அழ‌கி.காம்'
    டௌன்லோடு செய்துட்டு அப்புற‌மா கேன்ச‌ல் ப‌ண்ணிட்டு வ‌ர்றேன்.
    நன்றி, Dr.P.K. சாமி,த‌ங்க‌ளின் அக்க‌றையான‌ ப‌திவுக்கு.

    பதிலளிநீக்கு
  16. அன்பின் அய்யா நல்ல கருத்து. பகிர்வினிற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  17. இதில் எனக்கும் ஒரு தனிப்பட்ட அனுபவம் உண்டு ஐயா. சூடுபட்ட பிறகு அந்த வம்புக்கே போறது இல்ல.

    பதிலளிநீக்கு
  18. அய்யா,வணக்கம்,எச்சரிக்கைக்கு நன்றி,இன்னும் விளக்கமாக போட்டிருக்கலாம்.என்ன செய்வது,தமிழன் ஓசில கிடச்சா பினாயிலைக்கூட குடிக்கிறான்

    பதிலளிநீக்கு
  19. Madhipirukuriya ayya avargale neengal entha thuraiyil munaivar pattam petru ulleergal enbathai therinthu kolla aavalaga irukiren.

    Mikka Nandri

    பதிலளிநீக்கு
  20. நன்றி..உங்கள் பிளாக்கில் ஒரு சமுதாக் கண்ணோட்டம் உள்ளது. அனைவருக்கும் பயன்படும் வகையில் எழுதுகிறீர்கள்..

    அன்புடன் ஆர்.ஆர்.ஆர்.

    பதிலளிநீக்கு
  21. LK மற்றும் கோவை2தில்லி,
    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வாசன் சொன்னது:

    //நானும், இப்ப‌த்தான், த‌மிழில் எழுத‌, ப‌திவ‌ர் சொன்ன‌ 'அழ‌கி.காம்'
    டௌன்லோடு செய்துட்டு அப்புற‌மா கேன்ச‌ல் ப‌ண்ணிட்டு வ‌ர்றேன்.
    நன்றி, Dr.P.K. சாமி,த‌ங்க‌ளின் அக்க‌றையான‌ ப‌திவுக்கு.//

    நானும் பலதடவை சூடு பட்டு, பொறுக்கமுடியாமல் போனபிறகுதான் இந்தப் பதிவைப் போட்டேன். சிலர் வருந்தக்கூடும். அதற்கு என்ன செய்யமுடியும்?

    பதிலளிநீக்கு
  23. ஜோதிஜி சொன்னது:

    //இதில் எனக்கும் ஒரு தனிப்பட்ட அனுபவம் உண்டு ஐயா. சூடுபட்ட பிறகு அந்த வம்புக்கே போறது இல்ல.//

    பரவாயில்லைங்க, நீங்க மொதல்லயே முளிச்சுக்கிட்டீங்க. எனக்கு கொஞ்ச நாள் ஆகிட்டது.

    பதிலளிநீக்கு
  24. Prabhadamu said:

    //அன்பின் அய்யா நல்ல கருத்து. பகிர்வினிற்கு நன்றி//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  25. சி.பி.செந்தில்குமார் சொன்னது:

    //அய்யா,வணக்கம்,எச்சரிக்கைக்கு நன்றி,இன்னும் விளக்கமாக போட்டிருக்கலாம்.என்ன செய்வது,தமிழன் ஓசில கிடச்சா பினாயிலைக்கூட குடிக்கிறான்//

    ரொம்ப விளக்கமாக, உதாரணங்களுடன் போட்டால் சம்பந்தப்பட்ட பதிவர்களின் மனது புண்படும். அது என் நோக்கமல்ல.அவர்களும் வேண்டுமென்று இவ்வறு செய்வதில்லை என்று நம்புகிறேன். அவர்களுக்கு நல்லது என்று தோன்றுபவற்றை பதிவிடுகிறார்கள்

    அதை தொடரும் மற்றவர்கள், அதிலுள்ள சிக்கல்களைத் தெரிந்து கொள்ளட்டும் என்கிற எண்ணத்தில்தான் இந்த பதிவை எழுதினேன். யாரையும் சங்கடத்திற்கு உள்ளாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.

    பதிலளிநீக்கு
  26. Vadamalli அவர்களுக்கு,

    நான் விவசாயப்படிப்பில் B.Sc. (1956), M.Sc.(1961) பட்டங்கள் பெற்ற பிறகு விவசாய மண்ணியல் துறையில் மண்ணுக்கும் நீருக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் (1976) வாங்கினேன்.

    ஏறக்குறைய 38 வருடங்கள் விவசாயக்கல்லூரியிலும் அதைச்சார்ந்த ஆராய்ச்சி நிலையங்களிலும் பணி புரிந்து 1994 ல் ஓய்வு பெற்றேன்.

    பதிலளிநீக்கு
  27. உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க, ஆர்.ஆர்.ஆர்.

    பதிலளிநீக்கு
  28. சரியாசொன்னிங்க... நல்லதுங்கய்யா... அப்படியே ஆகட்டும்.

    பதிலளிநீக்கு
  29. அன்பான, எச்சரிக்கையூட்டும்
    பதிவிற்கு மிக்க நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  30. சி.கருணாகரசு, ஜெரி ஈசானந்தன், Nizamudeen, மூவருக்கும் நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  31. vadamalli அவர்களுக்கு,
    என்ன உங்கள் பிளாக்கில் ஒரு பதிவும் போடவில்லையா? ஏன்?

    பதிலளிநீக்கு
  32. @vasan///நானும், இப்ப‌த்தான், த‌மிழில் எழுத‌, ப‌திவ‌ர் சொன்ன‌ 'அழ‌கி.காம்'
    டௌன்லோடு செய்துட்டு அப்புற‌மா கேன்ச‌ல் ப‌ண்ணிட்டு வ‌ர்றேன்.///

    http://www.azhagi.com/ இந்த தளத்தை நான் தான் ஐயா பரிந்துரைத்தேன். இது ஒரு நல்ல மென்பொருள். தமிழில் எளிதாக தட்டச்சு செய்ய இது மிகவும் பயனுள்ள மென்பொருள். இலவசமாக கொடுக்கிறார்கள். நான் 5 வருடங்களாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றேன். இப்போதும் கூட இந்த மென்பொருள் உபயோகித்தே எழுதிகொண்டிருக்கின்றேன்.

    இந்த மென்பொருள் சரியானது தான். எந்த பிரச்சனை இதில் இல்லை என உங்களின் வாசகர்களுக்கு சொல்ல கடமைபட்டிருக்கின்றேன்.

    நான் உறுதி அளிக்கின்றேன். இதை கொண்டு, எளிய முறையில் Transliteration முறையில் தமிழில் தட்டச்சு செய்யலாம்.

    நன்றி! எனது ஈமெயில் விலாசம் wings7k@gmail.com

    பதிலளிநீக்கு
  33. While I respect your feelings, their refusal to drink water or juice is totally understandable. The duration we spend in India itself is very short (a couple of weeks). Being sick during that trip is something we can avoid.

    I have settled in the US for quite sometime now. I do take precautions when I am in India. At times, I end up breaking the 'better safe than sorry' policy just not to offend friends and relatives.
    Most of the times, when I break the policy, I end up paying dearly for it.
    Please don't get offended that someone does not trust your precaution. They are just trying to stay healthy during their busy trip to India AND have fun.

    பதிலளிநீக்கு
  34. நல்ல பகிர்வு.
    எனக்கும் ஆசை வரும், விபரம் புரியாததால் விட்டுவிடுகிறேன்.
    உங்களுடைய எச்சரிக்கைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  35. அமைதி அப்பா சொன்னது:

    //நல்ல பகிர்வு.
    எனக்கும் ஆசை வரும், விபரம் புரியாததால் விட்டுவிடுகிறேன்.
    உங்களுடைய எச்சரிக்கைக்கு நன்றி.//

    ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று நம் ஆன்மீகவாதிகள் சொல்வது இந்த விஷயத்தில் மிகமிக உண்மை. ஆசைக்கு அடி பணியாமலிருக்கப் பழகுவோம்.

    பதிலளிநீக்கு
  36. youthful-vikatan மூலம் தங்கள் வலைப்பூவிற்கு வந்துள்ளேன். சென்ற வாரம் மதிய உணவு இடைவேளையில் அலுவலக கணினி மூலம் இந்த பதிவிற்கு பின்னூட்டமிட்டேன். அலுவலக நேரத்தில் சொந்த பயன்பாட்டிற்கு இணையத்தை பயன்படுத்துவது குறித்து உங்கள் பின்னூட்டத்தை படித்தது நினைவிற்கு வந்தது. முதல் வேலையாக வெளியேறிவிட்டு, நிறுவப் பட்டிருந்த தமிழில் எழுதும் மென்பொருளை நீக்கி விட்டேன். இனி அந்த தவறை செய்ய மாட்டேன். இது நண்பரின் கணியில் இருந்து நள்ளிரவில் தட்டச்சியது, அலுவகத்தில் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  37. அன்புள்ள ந.ர.செ.ராஜ்குமார் அவர்களுக்கு,
    தங்கள் கருத்துக்கு நன்றி.
    என்னுடைய எழுத்துக்கள் உங்களை இவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்றால் எழுத்துக்களின் சக்தி நிஜமாகவே பலமானதுதான். உங்கள் முடிவு கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நமது பணி நமக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்கிறது. அந்தப்பணியை நமக்குக் கொடுத்த முதலாளியோ அல்லது அரசாங்கமோ. யாராக இருந்தாலும் அவர்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டியது நமது கடமை என்பது என் கருத்து. அதை நீங்களும் ஏற்றுக்கொண்டது பற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
    அன்புள்ள,
    ப.கந்தசாமி.

    பதிலளிநீக்கு
  38. http://youthful.vikatan.com/youth/Nyouth/kiragamstory130210.asp


    ஜயா இந்த விகடன் வெப் தளத்தில் உங்கள் தளம் பார்த்ததில் மிக்க மகிழ்சி. வாழ்த்துகள் ஜயா.

    பதிலளிநீக்கு
  39. prabhadamu saod:

    //ஜயா இந்த விகடன் வெப் தளத்தில் உங்கள் தளம் பார்த்ததில் மிக்க மகிழ்சி. வாழ்த்துகள் ஜயா. //

    சுட்டிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  40. //அல்லது கம்ப்யூட்டரை கண்டெம்ன் பண்ணுவதாயிருந்தால் என்ன வேண்டுமானாலும் தரவிறக்குங்கள் நண்பர்களே.//

    உங்க நேர்மை எனக்கு ரொப பிடிச்சிருக்கு ஐயா!

    மிக நல்ல பதிவு. எச்சரிக்கைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு