சனி, 6 நவம்பர், 2010

கொங்கு வெள்ளாளக்கவுண்டர்களின் கல்யாண முறைகள்.


அன்புள்ள வாசகப்பெருமக்களுக்கு,

கொங்கு வெள்ளாளக்கவுண்டர்களின் கல்யாண முறைகளைப் பற்றி என்னுடைய இன்னொரு பிளாக்கில் (மசக்கவுண்டன் கிறுக்கல்கள்) எழுதி வருவது நிறையப் பேருக்குத் தெரியும். என்னை ஜாதி வெறி பிடித்தவனென்று தூற்றினாலும் பரவாயில்லை என்றுதான் இந்தப்பதிவை எழுதுகிறேன். காரணம், கவுண்டர்களின் கல்யாணங்களில் தாலி கட்டி முடித்தபிறகு "குடிமகன்" அதாவது நாவிதர், மங்கல வாழ்த்து பாட்டு சொல்வது முக்கியமானது.

பலர் கல்யாணத்தின் போது அவசரத்தின் காரணமாக இந்த மங்கல வாழ்த்தை முழுமையாகக் கேட்டிருக்க மாட்டார்கள். இந்தப் பாட்டு கம்பர் எழுதிக்கொடுத்ததாக நம்பப்படுகிறது. கவுண்டர்களின் கல்யாண முறைகளைப்பற்றிய முழு விவரங்களும் இந்தப்பாட்டில் இருக்கிறது.

எல்லோரும் இந்தப்பாட்டை முழுமையாக கேட்டு பயன் பெறும் வகையில், பாட்டின் வசனத்தையும் பாட்டாகப் பாடினதையும் கீழே கொடுத்திருக்கும் பதிவில் போட்டிருக்கிறேன்.
யாவரும் கேட்டு இன்புற்று, தங்கள் கருத்துகளை மறக்காமல் பின்னூட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மங்கல வாழ்த்து பாடல் – வசனமும் பாடலும்

http://masakavunden.blogspot.com/2010/11/blog-post_05.html

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

9 கருத்துகள்:

  1. ஜாதி வெறி என்று சொல்லுபவர்கள் மனதிற்குள் வைத்திருக்கும் கீழ்த்தரமான எண்ணங்களை நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். இது போன்ற விசயங்களை அவஸ்யம் பதிவுகளில் எழுதத்தான் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. இதில் ஜாதிவெறி எங்கு வருகிறது...அவரவர் வாழ்க்கை கலாச்சாரப் பதிவுதானே இது...தொடருங்கள் சார்...

    எழுதிங்கள் சீர் பதிவு எப்போது...

    பதிலளிநீக்கு
  3. ஒரு குறிப்பிட்ட ஜாதிய பற்றி விபரங்கள் சொன்னாலோ, சில பழக்க வழக முறைகளை கூறினாலோ கூட அவர்களை "ஜாதி வெறியர்கள்" என முத்திரை குத்துகிறவர்கள் எல்லாம் என்ன யோகித்தையில் பிழைகிரார்கள் என்று எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டும். உண்மையில் ஜாதி தீயை வளர்த்து பிரிவினையை தூண்டிவிட்டு ஒரு ஜாதிகாரர்களுக்கு மட்டும் கோவணம் கட்டும் இவர்களே ஜாதி வெறியர்கள். சாதிவைத்து சேறு தின்பவர்கள். இந்த உண்மை நிலையை இன்னும் விபரமாக எழுதி இவர்களை கிழிக்க வேண்டும். அதற்காகவாவது தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. இதை எழுதுவதால் நீங்கள் சாதி வெறியர் என்று யாரும் கருதமாட்டார்கள், அப்படி கருதினால் அவர்கள் வந்து கவுண்டர் வீட்டு கல்யாண முறையை எழுத வேண்டியது தான்.

    இதைப்போன்ற நிகழ்வுகளை பதிவுகளில் எழுதவேண்டும் அப்போது தான் இதைப்பற்றி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளமுடியும். இது ஆவணமாக பின்னால் பயன்படும்.

    பதிலளிநீக்கு
  5. இதுக்கெல்லாம் யாரும் ஜாதி வெறி பிடிச்சவங்க அப்படின்னு சொல்லிடமட்டங்க ., நீங்க ஒண்ணும் அப்படி எழுதல .. எல்லோருக்கும் தெரிய வேண்டிய விசயங்கள் தானே ..!!

    பதிலளிநீக்கு
  6. இதுல ஜாதி வெறி எங்கே வருது?
    கவலைப் படாமல் எழுதுங்க சார்..
    படிக்க தாசனாய் காத்துக் கொண்டு இருக்கிறோம்....

    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.
    http://keerthananjali.blogspot.com/

    பதிலளிநீக்கு
  7. கால கல் வெட்டு.. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நம் முன்னோர்கள் வாழ்வியலை பதிவு செய்வோம். நான் இன்ன சாதி என்று சொல்ல ஒரு துணிவு வேண்டும்..

    பதிலளிநீக்கு
  8. ஜாதி-ஜா-தீ
    ஜா தீண்டாமை என்றால்...
    போ தீண்டாமையே என்று கூட பொருள்படலாம்...

    பதிலளிநீக்கு