திங்கள், 29 நவம்பர், 2010

விதியை யாரால் வெல்ல முடியும் ?


வேளாண்மை பற்றி பலரும் இந்த தளத்தில் பின்னூட்டம் இட்டு வருகிறார்கள். நான் ஒரு விவசாயப் பட்டதாரியாக இருந்து கொண்டு ஏன் விவசாயத்தைப் பற்றி எழுதக்கூடாது என்று ஏறக்குறைய குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் தலையில் என்னுடைய விவசாயக் கருத்துக்களைப் படிக்கவேண்டும் என்கிற விதி இருந்தால் அதை மாற்ற யாரால் முடியும்? ஆகவே விவசாயத்தைப் பற்றியும் எழுதுவது என்கிற முடிவுக்கு வந்துள்ளேன்.

முதலில் என்னுடைய இன்னொரு தளத்தில் எழுதிய சில பதிவுகளை மீள் பதிவாகப் போடுகிறேன். பிறகு விவசாய சம்பந்தமான கேள்வி-பதில் பகுதி ஒன்று ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். அதற்கு கேள்விகளைப் பின்னூட்டமாகவோ அல்லது என்னுடைய மின் முகவரிக்கு மின்னஞ்சலாகவோ அனுப்பலாம். அவ்வப்போது பதில் எழுதுகிறேன்.

முதல் பதிவு - ஒரு புனைவு:

சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு. கோயமுத்தூருக்குப் பக்கத்தில் ஒரு விவசாயி. அவனுக்கு ஒரு பத்து ஏக்கர் பூமி இருக்கிறது. அங்கு ஒரு கிணறு. மழை, மாரி ஒழுங்காகப் பெய்வதால் கிணற்றில் தண்ணீல் எப்போதும் வற்றாமல் இருக்கும். அந்தக்கிணற்றிலிருந்து வரும் நீரில் ஒரு ஐந்து ஏக்கரில் தோட்டக்கால் விவசாயம். மீதி ஐந்து ஏக்கரில் மானாவாரி விவசாயம். ஒரு மனைவி, இரண்டு குழந்தைகள், ஒரு பெண், ஒரு ஆண். விவசாயத்தில் உதவ ஒரு பண்ணையாள். தோட்டத்திலேயே ஒரு குடிசை போட்டு அவனையும் அவன் குடும்பத்தையும் குடி வைத்திருக்கிறான். இவன் ஊருக்குள் இருக்கும் பழங்கால வில்லை வீட்டில் குடியிருக்கிறான்.

விவசாயிக்கும் அவன் மனைவிக்கும் படிப்பு கிடையாது. குழந்தைகள் ஐந்தாவது வகுப்பு வரைக்கும் உள்ளூர் ஆசிரியரிடம் அவருடைய வீட்டில் படித்தார்கள். அதற்கு மேல் படிப்பதானால் டவுனுக்குப் போகவேண்டும். அதனால் படிப்பைத் தொடரவில்லை. பையன் அப்பாவுக்கு உதவியாக பண்ணை வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான். பெண் அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறாள்.

தோட்டத்தில் முக்கிய பயிர் சோளம், ராகி, காய்கறிகள், கொஞ்சம் பணப்பயிர்கள். வாய்க்கால் ஓரங்களில் சுமார் ஐம்பது தென்னை மரங்கள் இருக்கின்றன. அந்த விவசாயிக்கு தினசரி வாழ்க்கைத் தேவைகளுக்கு வேண்டிய அனைத்தும் தோட்டத்திலேயே விளைகின்றன. விளக்கு எரிக்க கெரசின் ஆயில், உப்பு, சில சமையல் எண்ணைகள், தீப்பெட்டி இது போன்று சில பொருள்களை மட்டும் வெளியில் இருந்து வாங்கவேண்டும். அவைகளையும் வியாபாரிகள் ஊருக்குள் கொண்டு வந்து பண்டமாற்று முறையில் கொடுத்து விட்டுப் போவார்கள். பணத்திற்கு ஏறக்குறையத் தேவையே இல்லை. பண்டிகை சமயத்தில் துணிமணிகளும் கூட பண்டமாற்று முறையிலேயே கிடைக்கும். சிலர் மட்டும் டவுனுக்குப் போவார்கள்.

கூலி கொடுப்பது தானியங்கள் மூலமாகத்தான். வண்ணான், நாவிதன், கொல்லன், கொசவன், பண்டாரம், பஞ்சாங்க அய்யர் அனைவருக்கும் வருடத்திற்கு ஒரு முறை அறுவடை சமயத்தில் தானியங்கள்தான் கொடுக்கப்படும்.

எல்லாத் தேவைகளுக்கும் போக தானியங்கள் மீதி இருக்கும் என்று தெரிந்தால் அவைகளை மட்டும் பண்ணைக்கே வரும் வியாபாரிகளிடம் விற்றுவிட்டு பணம் வாங்கி பெட்டியில் வைத்துக்கொள்வார். இந்தப்பணம் ஒரு கணிசமான அளவு சேர்ந்ததும் ஏதாவது முதலீடு செய்வார்.

பண்ணையில் இரண்டு ஜோடி எருதுகள், இரண்டு பால் மாடுகள், நாலு ஆடு, நாலு கோழி இவைகள் இருக்கும். தோட்டத்தில் விளையும் பயிர்களிலிருந்து வரும் கழிவுகள் இந்தக் கால்நடைகளுக்கு போடுவார்கள். இவைகளிலிருந்து வரும் சாணி முதலானவற்றை கவனமாக சேகரித்து ஒரு எருக்குழியில் சேர்த்து வைப்பார்கள். புதிய பயிர் பயிரிடுமுன் இந்த எருவைப் பயன்படுத்துவார்கள்.

இப்படிப்பட்ட பண்ணை வாழ்க்கைதான் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை. எல்லோரும் ஆரோக்யமாக இருந்தார்கள். இந்தப் பண்ணைகளை ஏறக்குறைய பூலோக சொர்க்கத்திற்கு இணையாகச் சொல்லலாம். அப்படிப்பட்ட பண்ணை இப்போது இருந்தால் எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க இன்று ஆட்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பண்ணைகள் எங்கே போயின? இந்த மாதிரி பண்ணைகளை இன்று உருவாக்க முடியுமா? இயற்கை விஞ்ஞானிகளே, யோசியுங்கள். யோசித்து உங்கள் பதிலைக் கூறுங்கள்.

20 கருத்துகள்:

  1. பல இயற்கை விஷயங்கள் இன்று அழிந்து போய்விட்டன! நவீன நாகரிகங்கள் அவை தந்த பலனை தருவதில்லை! மாறாக கெடுதல்களையே அதிகமாக தருகின்றன!

    பதிலளிநீக்கு
  2. //விதியை யாரால் வெல்ல முடியும் ?//

    விதியை மதியால் வெல்ல முடியும் என்று உங்களை போன்ற பெரியவர்கள் சொல்ல கேள்விப்பட்டதுண்டு.

    பதிலளிநீக்கு
  3. //இந்தப் பண்ணைகளை ஏறக்குறைய பூலோக சொர்க்கத்திற்கு இணையாகச் சொல்லலாம். அப்படிப்பட்ட பண்ணை இப்போது இருந்தால் எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க இன்று ஆட்கள் இருக்கிறார்கள்//


    அதையும் வாங்கி பிளாட் போட்டு விற்று விடுவார்கள் ஐய்யா...

    பதிலளிநீக்கு
  4. நாங்க எல்லாம் சந்திரனில் விவசாயம் செய்து செவ்வாய்க்கு ஏற்றுமதி செய்யும் வடிவேலு பரம்பரை...

    (சந்திரனில் தண்ணிர் மற்றும் காற்று இல்லையென்று கூறுகிறீர்களா?
    இங்க மட்டும்.....)

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப மகிழ்ச்சி சார். உங்களைப் போன்றவர்கர்கள் விவசாயம் பற்றி எழுதுவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  6. இப்படியே இருந்திருக்கக் கூடாதா. அவ்வ்வ்.இப்படி படிச்சாவது ஆத்திக்க வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  7. காலம். மாற்றங்கள் வரும் போகும். மீண்டும் வரும், போகும்.

    பதிலளிநீக்கு
  8. few years back in dinamani newspaper there was a supplement,"dinamanikathir" on every sunday.a writer wrote "vakkapatta boomi" , there was a brief write up regarding village life and culture . does any one have a copy?

    பதிலளிநீக்கு
  9. நல்லது விவசாயத்தைப் பத்தி எழுத கிளம்பிட்டீங்க! Good! நாட்டுக்கு நல்லது நடந்தா சரிதான்! எழுதுங்க! எழுதுங்க! உங்களுக்கு பலக்கோடி புண்ணியம் உண்டு!

    பதிலளிநீக்கு
  10. இயற்க்கைக்கு திரும்பவும் செல்ல பலரும் விரும்பும் நிலையில் , இது போன்ற பதிவுகள் அவசியமானவை

    பதிலளிநீக்கு
  11. நீங்க முழுமையா எல்லாவற்றையும் கொட்டித்தீருங்க. கடைசியா கச்சேரிய வச்சுக்குகிறேன்.

    காரணம் இஸ்ரேல் தொழில் நுட்பம் குறித்து நிறைய தெரிந்து கொண்டுக்கும் காரணத்தால் (?)

    பதிலளிநீக்கு
  12. ஹூம்.. இருக்கும்போது அருமை தெரியவில்லை.. கண்கெட்ட பிறகு..

    நான் கேட்டுக் கொண்டதுபோல சிறு வீட்டுத் தோட்டம் அமைப்பது எப்படி, காய்கறிக் கழிவுகள் கொண்டு உரம்/ பூச்சிமருந்து தயாரிப்பது போன்ற முறைகள் சொல்லித் தாருங்களேன்..

    பதிலளிநீக்கு
  13. ஜோதிஜி said...
    //நீங்க முழுமையா எல்லாவற்றையும் கொட்டித்தீருங்க. கடைசியா கச்சேரிய வச்சுக்குகிறேன்.
    காரணம் இஸ்ரேல் தொழில் நுட்பம் குறித்து நிறைய தெரிந்து கொண்டுக்கும் காரணத்தால் (?)//

    என்னுடைய பதிவுகளின் வேகம் உங்களுக்குத் தெரிந்ததே. நான் எப்போது கோட்டித்தீர்ப்பேன் என்பது தெரியவில்லை. அவ்வப்போது கேள்விகள் எழுப்புங்கள். என் பதிலுக்கு விளக்கம் எழுதுங்கள். அந்த முறையில் வாசகர்களுக்கு அதிக செய்திகள் போய்ச்சேரும்.

    பதிலளிநீக்கு
  14. ஹுஸைனம்மா said...

    //ஹூம்.. இருக்கும்போது அருமை தெரியவில்லை.. கண்கெட்ட பிறகு..

    நான் கேட்டுக் கொண்டதுபோல சிறு வீட்டுத் தோட்டம் அமைப்பது எப்படி, காய்கறிக் கழிவுகள் கொண்டு உரம்/ பூச்சிமருந்து தயாரிப்பது போன்ற முறைகள் சொல்லித் தாருங்களேன்..//

    என்னால் முடிந்த வரை முயலுகிறேன்.

    பதிலளிநீக்கு
  15. இப்படியெல்லாம் வீடு தோட்டம் இருந்தா சொர்க்கம் தான். ஆனா இப்ப எங்க இருக்கு. எல்லாத்தையும் தான் ப்ளாட் போட்டு வித்துடறாங்களே அய்யா. உங்க தொடர் மூலம் அந்த ஆசைய நிறைவேத்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  16. பொதுவான தலைப்புகளில் யார் வேண்டுமானாலும் எழுதலாம், ஆனால் துறை சார்ந்த பதிவுகளுக்கு அதில் கொஞ்சம் கூடதல் தகவல் தெரிந்தவர் எழதவிட்டால் பிறர் எப்படி கற்பது? உழவுக்கு வந்தனை செய்வோம்.

    பதிலளிநீக்கு
  17. நான் சின்னதா இருக்கறப்போ எங்க தோட்டமும் ஏறக்குறைய இப்படித்தான் இருந்தது!! கனவு மாதிரி இருக்குது.

    பதிலளிநீக்கு
  18. Thomas Ruban said...

    //நாங்க எல்லாம் சந்திரனில் விவசாயம் செய்து செவ்வாய்க்கு ஏற்றுமதி செய்யும் வடிவேலு பரம்பரை...

    சந்திரனில் தண்ணீர் மற்றும் காற்று இல்லையென்று கூறுகிறீர்களா?
    இங்க மட்டும்.....)//

    நல்ல நகைச்சுவை தாமஸ் ரூபன். ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால் எதிர்காலத்தைப்பற்றிய ஒரு இனம் தெரியாத பயம் மனதைக்கவ்வுகிறது?

    பதிலளிநீக்கு
  19. கோவை2தில்லி said...

    //இப்படியெல்லாம் வீடு தோட்டம் இருந்தா சொர்க்கம் தான். ஆனா இப்ப எங்க இருக்கு.//

    சொர்க்கம் எங்கே போயிற்று என்று வரும் பதிவுகளில் பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  20. DrPKandaswamyPhD said...

    "கோவை2தில்லி said...

    //இப்படியெல்லாம் வீடு தோட்டம் இருந்தா சொர்க்கம் தான். ஆனா இப்ப எங்க இருக்கு.//

    சொர்க்கம் எங்கே போயிற்று என்று வரும் பதிவுகளில் பார்க்கவும்."

    அதோடு மீண்டும் உருவாக்க என்ன செய்யலாம் என்றும் சொன்னால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு