வியாழன், 27 அக்டோபர், 2011

முட்டாள் ஆவது எப்படி.

Anonymous said...
ஒவ்வொரு ஆன்மிக வாதியும் உலகில் இருக்கும் ஒவ்வொரு முட்டாளாக பார்த்து ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் சொல்வதில்லை. அது அவர்களது வேலையும் இல்லை. தான் எதையும் அறியாத வரை மற்ற அறிந்தவர்களை முட்டாளாக நினைப்பதுதான் முட்டாள்களின் தன்மை. எந்த அறிவு வேண்டுமோ அதை தேடு அது கண்டிப்பாக கிடைக்கும். தேடாமல் இருந்தால் அது தானாக கிடைக்காது யாரும் உன்னிடம் வந்து சொல்ல மாட்டார்கள்.

                           

ரொம்ப ரொம்ப சுலபமான வேலை இதுதாங்க. கொஞ்சம் மொக்கையில்லாமல் ஒரு பதிவு போட்டுட்டீங்கன்னா போதும். பத்து பேரு உங்களுக்கு முட்டாள் பட்டம் தந்துடுவாங்க. அது ஏன்னு யோசிச்சுப் பார்த்ததில எனக்கு என்ன தோணுச்சுங்கிறத இந்தப் பதிவில எழுதியிருக்கேனுங்க.

எல்லோருக்கும் தனக்குத் தெரிஞ்சது அடுத்தவனுக்குத் தெரியலேன்னா அவனுக்கு முட்டாள்னு பட்டம் கொடுத்துடுவாங்க. அவனுக்குத் தெரிஞ்சிருக்கிறது உண்மைதானா என்பதைப் பற்றி அவன் கவலைப் படுவதில்லை. எனக்குத் தெரிஞ்சது அவனுக்குத் தெரியவில்லை, அவ்வளவுதான், ஆகவே அவன் முட்டாப்பயதான். இதுதான் அவனுடைய லாஜிக்.

இதுவாச்சும் பரவாயில்லீங்க. அவன் என்னென்னமோ நம்பிக்கைகள் வச்சிருப்பான். நீங்க அந்த நம்பிக்கைகளுக்கு எதிரா ஏதாவது சொன்னாப் போதும். உங்களுக்கு முட்டாள்னு பேர் வச்சுடுவான். நம்பிக்கைகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறானவை. நீங்கள் நம்புவதை நான் அப்படியே நம்ப வேண்டுமென்ற அவசியம் உண்டா?

குறிப்பாக மத நம்பிக்கைகள். இதைப்பற்றி யாரும் ஒண்ணும் சொல்லக்கூடாது. சொன்னா, உடனே நீ ஒரு முட்டாள், உனக்கு இந்த உண்மைகள் புரியாது, நீ ஒரு நாத்திகன், அதனால்தான் இப்படி எழுதுகிறாய், இப்படியெல்லாம் சொல்லுவார்கள்.

நான் ஒரு கேள்வி கேட்கிறேன். கடவுளைப் பார்த்தவன் எவனும் கிடையாது. ஆனால் ஒருவன் கடவுள் உண்டு என்கிறான். அப்படி அவன் நம்புகிறான். இன்னொருவன் கடவுள் இல்லை என்கிறான். ஏனெனில் அவன் கடவுளைப் பார்த்ததில்லை, கடவுளைப் பார்த்தவர்களையும் பார்த்ததில்லை. அது அவன் நம்பிக்கை அல்லது அவன் எண்ணம் அல்லது அவன் கருத்து.

ஒருவனுடைய கருத்துகளை ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றால் நேராக விவாதம் செய்யலாம். ஆனால் ஒருவனின் முதுகிற்குப் பின்னால் அவதூறு செய்வது கோழைத்தனம்.

20 கருத்துகள்:

  1. வாங்க, பிரபு. ஒரு அதி மேதாவி ஒளிஞ்சுகிட்டு கல்லைத் தூக்கி எறிஞ்சுட்டு ஓடறான். அவனுக்காகப் போட்ட பதிவு இது.

    பதிலளிநீக்கு
  2. கடவுளை நம்பாதவன் கடைசி காலத்தில் நம்பத் தொடங்குவான்
    கடவுளை நம்புபவன் இடையில் நம்பிக்கை இழந்து போனாலும்
    இறுதியில் அவனும் இறைவனை வந்த சேர்வான். தீபாவளி சிறப்பாக கடந்ததா sir ?

    பதிலளிநீக்கு
  3. ஒருவனுடைய கருத்துகளை ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றால் நேராக விவாதம் செய்யலாம். ஆனால் ஒருவனின் முதுகிற்குப் பின்னால் அவதூறு செய்வது கோழைத்தனம்.

    அருமையான வரிகள். அருமையான பதிவு.
    புறம் பேசுபவர்களை நாம் கணக்கில் எடுக்க வேண்டியதில்லை.
    முகத்தை காட்டுபவர்களுக்கு பதில் சொன்னால் போதும்.
    நன்றி. வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  4. ////ஒருவனுடைய கருத்துகளை ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றால் நேராக விவாதம் செய்யலாம். ஆனால் ஒருவனின் முதுகிற்குப் பின்னால் அவதூறு செய்வது கோழைத்தனம்.//////

    அழகாக சொல்லியிருக்கீங்க ஜயா....அழகு.....

    பதிலளிநீக்கு
  5. \\\முதுகிற்குப் பின்னால் அவதூறு செய்வது கோழைத்தனம்.\\\ சரியான கருத்து !

    பதிலளிநீக்கு
  6. //ஒருவனுடைய கருத்துகளை ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றால் நேராக விவாதம் செய்யலாம். ஆனால் ஒருவனின் முதுகிற்குப் பின்னால் அவதூறு செய்வது கோழைத்தனம்.//

    உண்மையான வரிகள்...
    நேருக்கு நேர் விவாதித்தால் விளக்கம் கிட்டுமே.

    பதிலளிநீக்கு
  7. என்னடா ஒரு மார்க்கமா எழுதியிருக்கீங்க என்று மேலே வந்து பார்த்தால் ? அப்புறம் தான் விவகாரமே புரிகின்றது.

    பதிலளிநீக்கு
  8. நான் ஒரு லாஜிக் சொல்லட்டுமா.? இது கடவுள் நம்பிக்கை குறித்தது.கடவுள் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். நம்புவது நல்லது. நம்பாமல் போனால் கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்காது.
    கடவுள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்.இல்லாததை இருப்பதாக நம்புவதால் பாததகமில்லை. இல்லாததை இல்லை என்று கொள்வதாலும் பாதகம் இல்லை. ஒரு முடிவுக்குவர இது உதவுமா.?

    பதிலளிநீக்கு
  9. கடவுளைப் பற்றிய சர்ச்சை ஓயப்போவதில்லை.. அப்படி ஒருவர் இருந்தால் அவருக்கு யாரும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியமும் இல்லை.. அவர் அவர் வேலையைப் பார்க்கும்போது நாம் நம் வேலையைப் பார்ப்பதுதான் முறை.. இதுதான் என் கருத்து ஸார்.

    பதிலளிநீக்கு
  10. //ஒருவனுடைய கருத்துகளை ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றால் நேராக விவாதம் செய்யலாம். ஆனால் ஒருவனின் முதுகிற்குப் பின்னால் அவதூறு செய்வது கோழைத்தனம். //

    மிக சரியான வார்த்தைகள் . ஆனால் ஆரோக்கியமான விவாதங்களை அனைவரும் செய்ய முன்வரவில்லை . நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  11. //JOTHIG ஜோதிஜி said...
    என்னடா ஒரு மார்க்கமா எழுதியிருக்கீங்க என்று மேலே வந்து பார்த்தால் ? அப்புறம் தான் விவகாரமே புரிகின்றது.//

    நான் எந்த மாதிரி கமென்ட் யார் போட்டாலும் அதைப் பற்றி தவறாக எண்ணுவதில்லை. ஆனால் சில கமென்ட்டுகளுக்கு பதிவில் இல்லாமல் தனியாக பதில் கொடுக்க விரும்புகிறேன். பதிவு ஒரு பொறுப்பான இடம். அதை அசிங்கப்படுத்த நான் விரும்புவதில்லை.

    "அனானி" கமென்ட்டுகளில் அதற்கு இடமில்லாததால் வருத்தம் வருகிறது.

    பதிலளிநீக்கு
  12. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட நம்பிக்கைகள், கருத்துக்கள் இருக்கும். எல்லா கமெண்ட்டுகளுக்கும் பதில் தரவேண்டிய அவசியமில்லை...

    பதிலளிநீக்கு
  13. ஒருவனுடைய கருத்துகளை ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றால் நேராக விவாதம் செய்யலாம். ஆனால் ஒருவனின் முதுகிற்குப் பின்னால் அவதூறு செய்வது கோழைத்தனம்.

    சரியான வாதம்,,,

    பதிலளிநீக்கு
  14. எங்கோ பாதிக்க பட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். விட்டுத்தள்ளுங்க சார் இதெல்லாம் புதுசா?

    இதே மாதிரி சில தினங்களுக்கு முன் நான் போட்ட பதிவு. நேரமிருந்தால் படியுங்கள்

    http://balapakkangal.blogspot.com/2011/10/blog-post_22.html

    பதிலளிநீக்கு
  15. //பாலா said...
    எங்கோ பாதிக்க பட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். விட்டுத்தள்ளுங்க சார் இதெல்லாம் புதுசா?

    இதே மாதிரி சில தினங்களுக்கு முன் நான் போட்ட பதிவு. நேரமிருந்தால் படியுங்கள்//

    மாற்றுக் கருத்துகளுக்கு நான் பயப்படுவதில்லை. ஆனால் பிரசுரிக்க முடியாத, லாயக்கில்லாத கருத்துக்களை அனானி பெயரில் பொட்டுவிட்டு ஓடுவது படு கோழைத்தனம் என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் அவைகளுக்கு தனிப்படையாகக் கூட நமது கருத்துக்களை கூறும் உரிமையை இழக்கிறோம் அல்லவா. அதைத்தான் என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

    நாம் முற்றும் துறந்த முனிவர்கள் இல்லையே?

    பதிலளிநீக்கு
  16. //தான் எதையும் அறியாத வரை மற்ற அறிந்தவர்களை முட்டாளாக நினைப்பதுதான் முட்டாள்களின் தன்மை. //
    சரியா சொன்னீங்க போங்க......
    மன அலைகள் கொஞ்சம் பலமாக வீசியிருக்கிறது...

    பதிலளிநீக்கு
  17. நல்ல கருத்துகள் ஐயா. அனானிகளை அனுமதிக்காதீர்கள் என்பது எனது கருத்து. அவர்களது கருத்தில் நல்லவை இருப்பினும்.

    பதிலளிநீக்கு
  18. //V.Radhakrishnan said...
    நல்ல கருத்துகள் ஐயா. அனானிகளை அனுமதிக்காதீர்கள் என்பது எனது கருத்து. அவர்களது கருத்தில் நல்லவை இருப்பினும்.//

    உங்கள் கருத்துதான் என்னுடையதும். யார் என்ன சொன்னாலும் நமக்கு பதில் சொல்ல ஒரு வாய்ப்பு வேண்டும். எல்லா பதில்களையும் பதிவிலேயே சொல்ல முடியாதல்லவா?

    பதிலளிநீக்கு