புதன், 1 பிப்ரவரி, 2012

கூகுளின் பிளாக்.மாற்றங்கள்.

தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்து பார்க்கக் கூடாது. கூகுள்காரனுக்கு நம் இந்திய அரசு சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தக் கட்டுப்பாட்டுகளுக்கு ஒத்துக் கொண்டால் இங்கே கடை விரிக்கலாம். இல்லையென்றால் கடையைக் கட்டு என்று இந்திய அரசு சொல்லி. ஒரு காலக்கெடுவும் நிர்ணயத்து விட்டது.

இந்த செய்தியெல்லாம் பிளாக் உபயோகிப்பவர்களுக்கு ஊடகங்கள் வாயிலாக ஏற்கனவே அறிந்த செய்திதான். இருந்தாலும் கூகுள்காரன் சொல்லாமல் கொள்ளாமல் இப்படிச் செய்துவிட்டானே என்கிற ஆதங்கம் பலருக்கு இருப்பதைப் பதிவுகள் வாயிலாக உணர முடிகிறது.

நம் பாட்டன் சம்பாதித்த சொத்து ஒன்றையும் கூகுள்காரன் பறித்துக் கொள்ளவில்லை. அவன் இடத்தை நமக்கு இலவசமாக உபயோகிக்க கொடுத்திருக்கிறான். அதற்கு அவன் என்ன நிபந்தனைகள், சட்டதிட்டங்கள் போட்டாலும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

இல்லையென்றால் வேறு இடத்திற்கு குடி பெயர வேண்டும். நான் வயதான காலத்தில் வேறு இடம் பார்ப்பதாக இல்லை. இருக்குமிடமே சொர்க்கம் என்று வாழப்போகிறேன்.

12 கருத்துகள்:

 1. தமிழ்மணம் திரட்டியைத் தவிர மற்ற எல்லாத்திரட்டிகளும் சரியாக பதிவை ஏற்றுக்கொள்கின்றன.
  தமிழ்மணத்தில் புதிய URL கொடுத்தால் ஏற்கனவே உங்கள் பதிவு சேர்க்கப்பட்டுள்ளது என்று பதில் வருகிறது. தமிழ்மணம் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர சில நாட்கள் ஆகலாம்.

  பதிலளிநீக்கு
 2. பொன்மலர் பிளாக்கில் கொடுத்துள்ள கீழ்க்கண்ட முறை பதிவை தமிழ்மணத்தில் சேர்த்துக்கொள்கிறது. ஆனால் ஓட்டுப்பட்டை பிளாக்கில் வேலை செய்வதில்லை.

  தமிழ்மணத்தில் புதிய பதிவை இணைக்கும் போது கீழ்க்கண்டவாறு உங்கள் வலைப்பூ எங்கள் பட்டியலில் இல்லை என்று வரும். இதிலும் சின்ன மாற்றம் செய்ய வேண்டும். இந்த பிழைச்செய்தி வந்திருக்கும் விண்டோவில் மேலே இருக்கும் இணைய முகவரிக்குச் செல்லவும். (URL Address) . தமிழ்மணத்தில் இணைக்கும் போது முகவரியானது இப்படி இருக்கும்.

  http://tamilmanam.net/blog_home_update.php?url=http://ponmalars.blogspot.in&posturl=http://ponmalars.blogspot.in/2012/01/railway-ticket-booking-websites.html
  இந்த இணைப்பில் நமது வலைப்பூவின் முகவரியில் இருக்கும் .in என்பதை .com என்று மாற்றி விட்டு Refresh அல்லது Enter தட்டவும். இப்போது உடனே தமிழ்மணம் சேர்த்து விடும். இந்த முறையில் உங்கள் பதிவுகளைச் சேர்க்கவே முடியும். ஆனால் ஓட்டுப்பட்டை வேலை செய்யாது. இதனைத் தற்காலிகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முகவரி மாற்ற பிரச்சினையால் திரட்டிகளில் இணைப்பது பிரச்சினைக்குரிய விசயமே.

  பதிலளிநீக்கு
 3. சாமிகளே,

  உங்க வலைப்ப்பதிவு பெயரில் எந்த மாற்றமும் இல்லையே அப்புறம் என்ன கவலை?


  //http://swamysmusings.blogspot.com/2012/02/this-is-test-post.html//

  பதிலளிநீக்கு
 4. நேரம் கிடைக்கும் நேரத்தில், பதிவு எழுதும் எனக்கே கொஞ்சம் வருத்தமாக உள்ளது ! இன்னும் என்னென்ன மாற்றங்கள் வரப் போகிறது என்று தெரியவில்லை. Blogger-இதுவும் கடந்து போகும் ! நன்றி sir!

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் ஐயா,

  உலகியல் யதார்த்தத்தினை சொல்லியிருக்கிறீங்க.

  கூகிளின் சட்ட திட்டங்களுக்கு நாம் கட்டுப்பட்டுத் தான் ஆக வேண்டும் என்பது உண்மை தான்.

  பதிலளிநீக்கு
 6. முகநூலிலி, ட்விட்டரிலும் நேற்றிலிருந்து இணைக்க கஸ்டமாக உள்ளது.இணைத்தாலும் இணைக்கப்பட்ட எண்ணிக்கை ப்ளாக்கில் தெரியவில்லை. என்ன செய்யலாம்?

  பதிலளிநீக்கு
 7. //தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்து பார்க்கக் கூடாது, ... நம் பாட்டன் சம்பாதித்த சொத்து ஒன்றையும் கூகுள்காரன் பறித்துக் கொள்ளவில்லை. அவன் இடத்தை நமக்கு இலவசமாக உபயோகிக்க கொடுத்திருக்கிறான். அதற்கு அவன் என்ன நிபந்தனைகள், சட்டதிட்டங்கள் போட்டாலும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.// கூகுள் காரன் தானமா குடுத்ததாவா நினைக்கறீங்க? bloggerஐ 2003ல் கூகுள் காரன் காசு கொடுத்து வாங்கி இருக்கான். அவன் சும்மா குடுக்கறான்னா அதுக்கு காரணம் இருக்குங்க. விளம்பரம் விளம்பரம் விளம்பரம் அதன் மூலம் வரும் வருவாய். கூகுள் முகநூலை (facebook)பாத்து பயப்படுதுன்னா அதுக்கு காரணம் விளம்பர வருவாய் குறைஞ்சிடுமேன்னு தான். கூகுள்+ ன்னு முகநூலுக்கு போட்டியா சமூக வலைதளத்தை கொண்டு வந்ததும் அதனால் தான்.
  திடீர்ன்னு மாற்றம் கொண்டுவருவது அயோக்கியத்தனம். இந்த மாதிரி மாற்றம் செய்யப்போறோமுன்னு குறைந்தது ஒரு மாசத்துக்கு முன்னாடியாவது அறிவித்து இருக்கனும்.

  கூகுள் இல்லைன்னா இன்னொரு நிறுவனத்தின் blogger சேவையை மக்கள் பயன்படுத்ததான் போறாங்க. நிறைய பேர் கூகுளுக்கு வந்ததுக்கு காரணம் blogger என்ற பெயரும், கூகுள் மேல் இருந்த நம்பிக்கையும் தான்.

  பதிலளிநீக்கு
 8. பதில்கள்
  1. //”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திFeb 2, 2012 08:15 AM
   கூகுள் இல்லாட்டி உயிரே போயிடும்..//

   நிறையப் பதிவர்களுக்கு அப்படித்தான் போலிருக்கு. அதிலயும் சிலர் கூகுள்காரன் அதெப்படி சொல்லாமல் கொள்ளாமல் இப்படிச்செய்யலாம் என்ற ஆதங்கம் வேறு.

   நீக்கு