வெள்ளி, 23 நவம்பர், 2012

பதிவுகளின் வகைகள்.

பதிவுகள் பல விதம். சில பதிவுகள் எல்லோரும் படித்துப் பயன் பெறட்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படுகின்றன. அவை படிப்பதற்கு எளிதாக, நல்ல நடையில், நல்ல எழுத்துக்ளுடன், நல்ல இடைவெளியுடன் எழுதப்படுகின்றன.


ஆனால் அநேக பதிவுகள் அவரவர்களுக்காக மட்டுமே பதிவிடப்படுகின்றன. இந்தப் பதிவுகளை மற்றவர்கள் வாசிக்கவேண்டும் என்று அந்த்ப பதிவர்கள் நினைப்பதில்லை. அந்தப் பதிவுகள் பெரும்பாலும் கருப்பு பின்புலத்தில் வெள்ளை எழுத்துகளுடன் இருக்கும். டிசைனும் டார்க் கலரில் இருக்கும்.


நாம் எழுதப் படிக்க ஆரம்பித்த காலத்தில் கருப்பு சிலேட்டில் வெள்ளை பலப்பத்தினால் எழுதினோம். ஆனால் வளர்ந்த பிறகு வெள்ளைக் காகிதத்தில் கருப்பு மசியினால் எழுத ஆரம்பித்தோம். இதுதான் இயற்கையான வளர்ச்சி.

சில பதிவுகளில் கொசகொசவென்று படங்களும் இன்ன பிறவும் இருக்கும். பதிவு எங்கேயென்று தேடவேண்டும்.


நீங்கள் எப்படி?

புதிய பதிவர்களுக்கு சில நல்ல யோசனைகள் கோடங்கியின் இந்த பதிவில் இருக்கின்றன.

20 கருத்துகள்:

  1. //நீங்கள் எப்படி?//

    ஹிஹி.... நீங்கள்தான் சொல்லவேண்டும்!

    உங்கள் பதிவுகள் படிக்க எப்பவுமே சுருக்கமாக, கருத்துகளில் செறிவாக, மனதுக்கு நெருக்கமாக இருக்கும். யாருமே ரொம்ப நீளமாக எழுதினால் படிக்க அலுப்பு ஏற்படும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னால நீளமான பதிவு எழுத முடியாதுங்க. ஆபீஸ் வேலை பார்க்கும்போதும் மற்றவர்கள் ஒரு பக்கத்தில் எழுதுவதை நான் ஒரு பாராவில் முடித்து விடுவேன். ஒரு மணி நேர வகுப்பை 45 நிமிடத்தில் முடித்து விடுவேன். இது நல்ல குணமா அல்லவா என்று நான் யோசித்ததில்லை.

      நீக்கு
  2. ஒருதரம் நம்ம பக்கமும் வந்து பார்த்துப் போயிட்டு மறக்காம எப்படி இருக்கிறது என்றும் சொல்லிட்டுப் போயிடுங்க ஐயா

    பதிலளிநீக்கு
  3. நல்லது... இவைகளை அவரவர் உணர வேண்டியது... நீங்கள் சொல்லி நானும் சிலவற்றை மாற்றி உள்ளேன்...

    உண்மையை சொல்லப் போனால் அவற்றை மாற்ற வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும்... ஆனால் எப்படி என்று தெரியாமல் இருக்கலாம்... இதைப்பற்றி விரிவாக இன்னொரு தளத்தில் எழுதலாம் என்று உள்ளேன்...

    நன்றி ஐயா...
    tm4

    பதிலளிநீக்கு
  4. மனிதர்கள் மட்டுமல்ல, நம்முடைய வலைப்பூவும் எளிமையாக இருக்கவேண்டும் என்று உணர்த்தியமைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  5. என்னுடைய வலை எப்படி உள்ளது? குறிப்பிட்டால் நலம்!

    பதிலளிநீக்கு
  6. ஹா ஹா ஹா !!! ஐயா,

    இந்த பதிவு எனக்காகவே எழுதப்பட்டது என்று நினைக்கிறேன். அதனால் நான் அதற்கான காரணங்களை இங்கே சொல்ல கடமைப்பட்டிருக்கேன்.

    நான் கருமை நிறத்திற்கு மாற்றி ஐந்து ஆறு நாட்கள்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். காரணம் வலைப்பதிவை யாரும் படிக்கக்கூடாது என்பதற்காக இல்லை, நமது வலைப்பதிவு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்ற எண்ணத்திலும், நிறைய டம்லேட் இருக்கிறது, அதையும் ஒருநாள் பயன்படுத்திதான் பார்ப்போமே என்ற எண்ணத்தில்தான்.

    உண்மையைச் சொல்லப்போனால் நான் புதிய பதிவர், எனக்கு என்னுடைய வலைப்பதிவு எப்படி இருக்கவேண்டும் என்று தெரியாது, நான் பதிவு ஆரம்பித்து மூன்று மாதமே ஆகிறது.

    இப்போது புரிந்துகொண்டேன், இன்று காலையில் ஒரு மடல் வந்திருந்தது நண்பர் இக்பால் செல்வன் அவர்கள் சொல்லிருந்தார், அதன்பிறகு மாற்றிவிட்டேன்.


    எனக்கு அறிவுரைகள் சொன்ன எல்லோருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. எல்லாம் புதுமை ! எதற்க்காக எழுதுகிறோமோ அங்கு சேரவில்லை என்றால் எழுதி என்ன பயன்? புகைப்படங்கள் வைக்கும் தளவடிவமைப்பை தவறாக பயன்படுத்துகிறார்கள் .

    பதிலளிநீக்கு
  8. ஆலோசனைகள் அருமை! நான் கொஞ்சம் திருத்தி கொண்டிருக்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  9. அதெல்லாம் அவஅவங்க விருப்பம்........இதை எல்லாம் கேட்க கூடாது............

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  10. வலைப்பதிவர்களின் தன்மதிப்பீட்டுக்கான குறிப்புகள் மிக நன்று..

    பதிலளிநீக்கு
  11. பதிவர்கள் அனைவரும், யோசிக்க வேண்டிய விஷயங்கள்...

    பதிலளிநீக்கு