புதன், 21 நவம்பர், 2012

வயதுக்கு (60+) வந்தவர்களுக்கும் வராதவர்களுக்கும்


1. எனக்கு "வயதாகிவிட்டது" என்று எப்போதும் சொல்லாதீர்கள். மூன்று வகைகளில் வயதைக் கணக்கிடலாம். முதல் வழி உங்கள் பிறந்த தேதியை வைத்து. இரண்டாவது வழி உங்கள் உடல் ஆரோக்கியத்தை வைத்து. மூன்றாவது வழி உங்கள் வயது எவ்வளவு என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பது. உங்கள் பிறந்த தேதியை மாற்ற முடியாது. ஆனால் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் நன்கு பராமரிக்க முடியும். உங்கள் மனதை இளமையாக வைத்திருப்பதும் உங்கள் கையில்தான் இருக்கிறது. வாழ்க்கையை நேர்மறையாக எதிர்கொள்ளுங்கள். எதிர்காலத்தைப்பற்றிய நல்ல கனவுகளுடன் வாழுங்கள்.

2. நல்ல ஆரோக்கியமே மனிதனின் சொத்து. நீங்கள் உங்கள் மனைவி மக்களை உண்மையாக விரும்புவீர்களானால் உங்கள் உடல் நலத்தை முக்கிமாகப் பேணவேண்டும். அவர்களுக்கு நீங்கள் ஒருபோதும் பாரமாகி விடக்கூடாது. வருடத்திற்கு ஒரு முறை ஹெல்த் செக்அப் செய்து கொள்ளுங்கள். ஹெல்த் இன்சூரன்ஸ் செய்து கொள்ளுங்கள்.

3. பணம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய, குடும்ப அங்கத்தினர்களின் மரியாதையைப் பெற, உடல் ஆரோக்கியத்தைப் பேண, இத்தியாதி காரியங்களுக்குப் பணம் தேவை. உங்கள் குழந்தைகளானாலும் சரி, உங்கள் சக்திக்கு மீறி செலவு செய்யாதீர்கள். வயதான காலத்தில் அவர்கள் உங்களைக் காப்பாற்றினால் சந்தோஷப்படுங்கள். இல்லாவிட்டால் உங்கள் காலில் நிற்க பணம் தேவை.

4. அமைதியான வாழ்வு வாழுங்கள். நல்ல பொழுது போக்குகளும் நல்ல தூக்கமும் வாழ்க்கைக்கு அவசியம். ஆன்மீக விஷயங்களில் நாட்டமும், நல்ல சங்கீதமும் அமைதிக்கு வழி.

5. நேரம் விலை மதிப்பு மிக்கது. அதுவும் வயதான பின்பு மிகமிக மதிப்பு வாய்ந்தது. ஒவ்வொரு நாளும் நீங்கள் புதிதாகப் பிறக்கிறீர்கள். அந்த நாளை கவலைகளில் வீணாக்காமல் இன்பமாக கழியுங்கள்.

6. மாறுதல் ஒன்றே மாறாதது. காலம், மனிதர்கள், வாழ்க்கை முறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. அதைக்குறித்து வருத்தப்படாமல் நீங்களும் அந்த மாறுதலை ஏற்றுக்கொள்ளுங்கள்.

7. கொஞ்சம் சுயநலத்துடன் வாழுங்கள். உங்களுக்கு என்று சில விருப்பங்கள் இருக்கலாம். இது நாள் வரை மற்றவர்களுக்காக உழைத்ததில் அந்த விருப்பங்களை தள்ளிப்போட்டிருப்பீர்கள். இப்போது அவைகளை அனுபவியுங்கள். அது சுயநலம் போல் தோன்றினாலும் அந்த சுய நலம் உங்களுக்குத் தேவை.

8. மன்னிப்போம்-மறப்போம். மற்றவர்களின் குறைகளை பெரிது பண்ணாதீர்கள். உங்களுடைய நலனுக்காக, உங்களுடைய இரத்த அழுத்தம் அதிகமாகாமலிருக்க மற்றவர்களின் குற்றங்களை மன்னித்து மறந்து விடுங்கள்.

9. ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். வாழ்க்கையை அதன் போக்கிலேயே அனுபவியுங்கள். மற்றவர்களை மாற்ற முயற்சிக்காதீர்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் பாணியில் வாழ சுதந்திரம் உண்டு.

10. மரண பயத்தை வெல்லுங்கள். இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதி மாற்ற முடியாதது. அதை உணர்ந்து மரண பயத்தை வெல்லுங்கள்.   நீங்கள் இறந்து விட்டால் உங்கள் மனைவி மக்கள் எப்படி வாழ்வார்கள் என்ற கவலை வேண்டாம். யாரும் இறந்தவர்களுடன் இறப்பதில்லை. வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.


38 கருத்துகள்:

 1. அனைத்தும் அருமையான கருத்துக்கள்...

  நன்றி...
  tm2

  சிரியுங்கள்... (துன்பம் அதிகம் வரும் போது)
  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
  பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை...
  காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை...
  மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை...
  சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை...

  படம் : அன்னை

  பதிலளிநீக்கு
 2. //கொஞ்சம் சுயநலத்துடன் வாழுங்கள்.//
  சரியாய் சொன்னீர்கள்.

  பதிலளிநீக்கு
 3. தங்கள் அருமையான பதிவுகளை தமிழன் ( www.tamiln.org ) திரட்டியிலும் இணையுங்கள்.

  பதிலளிநீக்கு
 4. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்!

  #யாரோ சொன்னாங்க சாரே!
  :)

  பதிலளிநீக்கு
 5. உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.....

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com/

  பதிலளிநீக்கு
 6. அய்யா! நீங்கள் கூறிய வாழ்வியல் சிந்தனைகள் பத்தினையும் திரும்பத் திரும்ப படித்தேன். எப்போதும் உதவும் என்பதற்காக இந்த பதிவை தனியே எடுத்து வைத்துக் கொண்டேன். நன்றி!

  பதிலளிநீக்கு
 7. டாப் டக்கர் பதிவு!! தினமும் களத்தில் இறங்குனா சிக்சரும் ஃபோருமா அடிக்கிறீங்களே சார்!! எல்லோருக்கும் வயசு எருது உங்களுக்கு மட்டும் குறைஞ்சுகிட்டே போகுதே சார்!!

  பதிலளிநீக்கு
 8. ஐயா,எவ்வளவு ஆழமான ஒரு விளக்கம் .ஒரு புத்துணர்ச்சி.ஒவ்வொரு வாக்கியமும் காலம் முழுவதும் பயன் தர கூடிய சொற்கள்.ஐயா ஒன்னு மட்டும் புரியலை சொந்த காலில் நிற்க படம் பார்க்கனுமா?தேவையா?
  3-வது குறிப்பில் முடிவில் என்ன அர்த்தம்?ஒரு வேலை தவறாக மாறியுள்ளதா என்று சரி பார்க்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி, ஆரிஃப். எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் எழுத்துப்பிழைகள் வந்து விடுகின்றன. பணம் என்பது படம் ஆகிவிட்டது. (P = ண O= ட) P , O இரண்டும் பக்கம் பக்கமாக இருப்பதால் தமிழில் தட்டச்சும்போது மாறி விட்டது.

   நீக்கு
 9. ஐயா உங்கள் ப்ளாக்கை படிக்க இந்த ஒரு காரணம் போதும்.வாழ்க்கை தத்துவத்தை அள்ளி வழங்குகிறீர்கள். நடை முறைக்கு ஒத்துவருவதையே கூறுவதால் தான் நான் உங்கள் ரசிகன்.

  பதிலளிநீக்கு
 10. \ஐயா ஒன்னு மட்டும் புரியலை சொந்த காலில் நிற்க படம் பார்க்கனுமா?\\ அது படம் இல்லை, பணம். ஹா...........ஹா...........ஹா...........

  இதுபோல எழுத்துபிழை எனக்கு எக்கச்சக்கமாய் ஆகிறது, திருத்திகிட்டே இருப்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி, ஜெயதேவ் தாஸ். பதிவை நன்கு படிக்கிறீர்கள் என்பதற்கு இதுவே சாட்சி. எழுத்துப் பிழைகள் எப்படியோ வந்து விடுகின்றன. மன்னிக்கவும்.

   நீக்கு
  2. அய்யய்யோ சார் இந்த மாதிரி பொடிபசங்களுக்காக நீங்க அந்த வார்த்தையைப் பயன்படுத்தலாமா................ அந்த இடத்தில் அதுதான் அர்த்தம் என்று படிக்கும் போதே புரிந்து கொண்டேன். நிலவில் உள்ள கருமையான patches எந்த விதத்திலும் அதன் பொலிவை குறைத்து விடாது, தொடர்ந்து கலக்குங்கள். நன்றி. [see here itself two mistakes :((]

   நீக்கு
  3. "ஈசனே ஆனாலும் குற்றம் குற்றமே" என்று வாதிட்ட நக்கீரர் பரம்பரையில் வந்தவர்களல்லவா நாம்? குற்றத்தை யார் வேண்டுமானாலும் சுட்டிக் காட்டலாம். அது குற்றமல்ல.

   நீக்கு
 11. 11) இந்த ப்ளாக்கை தினமும் படியுங்கள்! :))))

  படிக்க வேண்டிய, மனதில் பதித்துக் கொள்ள வேண்டிய குறிப்புகள்.

  பதிலளிநீக்கு
 12. நல்ல பயனுள்ள தகவல்கள் ! முயற்சிக்கிறேன் !

  பதிலளிநீக்கு
 13. வாழ்க்கைத் தத்துவங்கள் பலருக்குப் பாடம் தரட்டும்.
  நல்ல பதிவு ஐயா.
  மிக்க நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 14. அருமையான கருத்துக்களுடன் கூடிய பதிவு.
  இப்பொழுதே படித்து மனத்தில் தேக்கி வைத்துவிட்டேன்.
  பிற்காலத்தில் உதவும்...

  மிக்க நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 15. இவை அனைத்தையும் தாங்கள், தங்கள் வாழ்க்கையில் கடைப் பிடிப்பவர் என்பதை அன்று நேரில் கண்டு உரையாடிய போதே கண்டு கொண்டேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 16. அருமையான வரிகள் . அருமையான கருத்துக்கள் .நன்றி

  பதிலளிநீக்கு
 17. வருடத்திற்கு எவ்வளவு பிரிமியம் ஆகும் health insurance செய்ய with no preexisting conditions ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இதுவரை ஹெல்த் இன்சூரன்ஸ் செய்ததில்லை. வசதி இல்லை. வசதி வந்த போது வயசு இல்லை.

   40 வயதிலிருந்து இன்சூரன்ஸ் செய்வது நல்லது. அந்த வயதில் வருடத்திற்கு சுமார் பத்தாயிரம் ரூபாய் ஆகும். தொடர்ந்து செய்து வந்தால் ஏறக்குறைய அதே லெவலில் இருக்கும். 60 வயதில் இன்சூரன்ஸ் செய்ய 25000 ரூபாய் ஆகும். 70 வயதிற்கு மேல் இன்சூரன்ஸ் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அந்த வயதில் நீங்கள் இருக்கக் கூடாது.

   நீக்கு
  2. எனக்குத் தெரிஞ்சவரைக்கும் நேற்று வரை அப்படித்தான் இருந்தது. இன்னைக்கு நிலவரம் எப்படீன்னு பாத்து சொல்றேன்.

   நீக்கு
  3. ராத்திரியோட ராத்திரியா பாலிசியை மாத்தீட்டாங்க, நம்பள்கி, கூகுள்காரன் ரேட் குடுத்திருக்கான்.

   https://plus.google.com/u/0/photos/116816576613496856516/albums/5814563421971844097

   நீக்கு
 18. இன்று(ம்)புதிதாய்ப் பிறந்தேன்!!!!!

  பாருங்க எழுத்துப்பிழைன்னு எங்களை எருதுன்னுட்டார் நம்ம தாஸ்:-)

  //எல்லோருக்கும் வயசு எருது உங்களுக்கு மட்டும் குறைஞ்சுகிட்டே போகுதே சார்!!//

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்பத்தான் பார்த்தேன் அம்மா. எருது என்றாலும் ஆண்களுக்கு அது ஒரு புகழ்ச்சிதானே! ஏறு போல் நடை என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? இந்த புகழுரைக்காக அவருக்கு ஒரு தனிப்பட்ட நன்றி சொல்லவேண்டும்.

   நீக்கு
 19. ஜோக்கா இல்லை சீரியஸ்ஸா?
  பிரிமியம் அதிகம் வாங்கிக் கொள்ளட்டும்; ஆனால் செய்யமாட்ட்ர்கள் என்று சொல்வது...

  நிசமா இது ஜோக்கா இல்லை சீரியஸ்ஸா?
  [[70 வயதிற்கு மேல் இன்சூரன்ஸ் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அந்த வயதில் நீங்கள் இருக்கக் கூடாது.]]

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பண்ணறாங்க, காசு அதிகம். இந்த லிங்கைப் பார்க்கவும்.
   https://plus.google.com/u/0/photos/116816576613496856516/albums/5814563421971844097

   நீக்கு
 20. திரு பழனி கந்தசாமி அவர்களின் அருமையான, பயனுள்ள பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 21. இதை படிச்சபின்னாடிதான் புத்தி வரும் போல இருக்குதுங்கண்ணா..

  பதிலளிநீக்கு
 22. இன்று மீண்டும் இப்பதிவை படிக்க நேர்ந்தது. இதுபோன்ற உங்களது வாழ்வியல் சிந்தனை பதிவுகளை தொகுத்து ஒரு புத்தகமாக வரும்
  வலைப்பதிவர் திருவிழாவில் புதுக்கோட்டையில் வெளியிட்டால் என்ன? (அதிகம் அச்சடித்து கையை சுட்டுக் கொள்ள வேண்டியதில்லை. சிக்கன முறைகளை கரந்தை ஜெயக்குமாரிடம் கேட்டால் சொல்லுவார்)

  பதிலளிநீக்கு