திங்கள், 28 ஜனவரி, 2013

பல் குத்தும் கலை


ஸ்ரீராம்.22 ஜனவரி, 2013 7:49 PM என்னுடைய "காது குடைவது எப்படி" என்ற பதிவில் போட்ட பின்னூட்டம்.
மூக்கு சிந்துவது, பல் குடைவது பதிவுகள், காதில் வண்டு, பூச்சி புகுந்தால் எப்படி எடுப்பது போன்ற பதிவுகள் கியூவில் நிற்கின்றன என்பதைக் கவலையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
கவலையை விடுங்கள். இதோ உங்கள் அபிமான பதிவுகள் ஒவ்வொன்றாக வருகின்றன.
நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்.
காரணம் - அவர் அவ்வப்போது கொடுக்கும் பதிவிற்கான டிப்ஸ்கள். இப்ப பாருங்க, மூணு பதிவிற்கான தலைப்புகளை ஒண்ணாக் கொடுத்திருக்கார். ஒண்ணாக் கொடுத்திருந்தாலும் நான் தனித்தனி பதிவாகத்தான் போடப்போகிறேன். பதிவுக்கணக்கு தேத்தணுமில்ல.

அவருக்கு ஒரு பணிவான வேண்டுகோள்-அவ்வப்போது இவ்வாறு டிப்ஸ்கள் கொடுத்து என்னை ஊக்கப் படுத்தவேண்டும்.

மொதல்ல இப்ப பல் குத்தறதப் பார்ப்போம். (பல் குடைவதும், குத்தறதும் ஒன்றுதான்)

பல் குத்தறது ஒரு பெரிய கலை. இதைப் பற்றி பெரிய பெரிய எழுத்தாளர்களெல்லாம் இன்டர்நெட்டில் எழுதியிருக்கறதை இப்பத்தான் பார்த்தேன். யுட்யூப் விடியோவெல்லாம் கூட இருக்குது.

மொதல்ல பல்லை எதுக்காகக் குத்தறது என்று பார்ப்போம். உணவு உண்ணும்போது பல் இடுக்குகளில் உணவுத் துண்டங்கள், குறிப்பாக அசைவ உணவு உண்ணும்போது, சிக்கிக்கொள்ளும். இந்த அனுபவம் அநேகமாக எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும். சாப்பிட்டு முடித்த பின், இந்த சிக்கலைத் தீர்க்கவிட்டால், அது கொடுக்கும் வேதனை தாங்க முடியாது. அதற்காகத்தான் அசைவ உணவு விடுதிகளில் பில் கொண்டு வரும்போதே இந்த பல் குச்சிகளையும் தருகிறார்கள்.

பல் குச்சி வந்து விட்டதே என்று நம் ஆட்கள் பலரும் அங்கேயே பல் குத்த ஆரம்பித்து விடுவார்கள். இது காட்டுமிராண்டித்தனம். வெளிநாடாக இருந்தால் உங்களை பார்வையாலேயே கொன்று விடுவார்கள். இந்தியாதான் விவஸ்தை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நாடாயிற்றே. எங்கேயும் எதை வேண்டுமானாலும் செய்ய உரிமை உண்டு. அதற்காகத்தானே சுதந்திரம் வாங்கினோம்!

நியாயமாக பல் குத்துவதற்கு சாப்பிட்ட இடத்தை விட்டு அப்பால் செல்ல வேண்டும். மற்றவர் பார்வையில் படாத மாதிரி இந்த வேலையைச் செய்யவேண்டும். பின்பு கைகளைக் கழுவிவிட்டு, மற்றவர்களுடன் சேர்ந்து கொள்ளவேண்டும். இதுதான் நாகரிகம்.

பல சமயங்களில் இந்த பல்குச்சி கிடைக்காது. அப்போது பக்கத்திலுள்ள செடிகளிலிருந்து பதமான ஒரு குச்சியை ஒடித்து உபயோகப் படுத்துவது காலம் காலமாக வந்த பழக்கம். சில முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள், இதற்காக ஓட்டலில் பல் குச்சி கொடுக்கும்போது ஒரு நாலைந்தை எடுத்து பர்சில் வைத்துக் கொள்வது உண்டு.

ஆபிசில் பல் குத்த வேண்டுமென்றால் குண்டூசி அவசரத்திற்கு கிடைக்கும். அதை உபயோகப் படுத்துவார்கள். இதில் உள்ள சௌகரியம் என்னவென்றால் இரண்டொரு நாளில் உங்கள் அபிமான பல் டாக்ரைப் பார்க்கவேண்டி வரும். ஏனென்றால் ஈறுகளில் குண்டூசி குத்தி செப்டிக் ஆகும்.

இன்னும் சிலருக்கு எந்த உபகரணமும் தேவையில்லை. பல்லிடுக்கில் சிக்கியிருப்பவைகளை ஒரு ஸ்பெஷல் டெக்னிக்கில் உறிஞ்சி எடுப்பார்கள். அப்போது ஒரு வித சப்தம் உண்டாக்குவார்கள். இதைக் காண, கேட்க முன் ஜன்மத்தில் புண்ணியம் செய்திருக்கவேண்டும். இதைப் போன்ற கண்றாவிக் காட்சிகள் உலகத்தில் வெகு சிலதே உண்டு.

அடுத்ததுதான் வெகு முக்கியம். இப்படி பல் குத்தி எடுத்ததை என்ன செய்வது? பொதுவாக சாப்பாட்டு டேபிளாக இருந்தாலும் சரி, பந்தியாக இருந்தாலும் சரி, வேறு எந்த இடமாக இருந்தாலும் சரி, அங்கே மனிதர்கள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அப்படியே துப்புவதுதான் நம் ஆட்கள் செய்யும் பழக்கம். இதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் இருப்பது உத்தமம்.

பல் குத்தின குச்சியை குப்பைக்கூடையில் போடுவதுதான் உத்தமம். எக்காரணம் கொண்டும் அதை மணிபர்சில் பத்திரப்படுத்தக் கூடாது. இந்த வேலைகள் முடிந்த பின் கைகளைக் கழுவுதல் அவசியம். சாப்பிட்ட பிறகு கூட கை கழுவாதவர்கள் இதைப் பொருட்படுத்த வேண்டாம்.

கூகுளில் பார்த்தது. ஆங்கிலத்தில் இருப்பதை தமிழ்படுத்த முடியவில்லை.

On tooth picking
"Should the left hand be used when handling the Tooth Pick?
Should one cover one's mouth, whilst Tooth Picking?
What should be done with the detritus?
A) Placed on napkin
B) Spat into the fan to share around
C) Saved for when hungry later
D) If saved, what is the time limit?

ஆகவே பல் குத்துவது எப்படி என்று தெரிந்து கொண்டீர்கள் அல்லவா? இப்படியே செய்து வரவும். சீக்கிரமே மக்கள் உங்களைக் கண்டதும் ஓட ஆரம்பிப்பார்கள்.

12 கருத்துகள்:

  1. ஆஹா... தன்யனானேன்! ஒவ்வொன்றாகப் பதிவிடுங்கள். முடிந்தால் ஒரு வாரத்துக்குப் பிறகு மொத்தமாகப் படித்துக் கொள்கிறேன். ஹிஹி.. நான் பதிவுலகத்துக்கு ஒரு வாரம் லீவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்காகத்தான் இந்தப் பதிவுகளைப் போடுகிறேன். அப்புறம் என்ன "முடிந்தால்"?

      நீக்கு
  2. பதில்கள்
    1. அதெப்படீங்க, பாதிக்கிணறு தாண்டீட்டு நிறுத்த முடியுமா? முழுக்கிணறும் தாண்டினாத்தான் உயிரோட இருக்கமுடியும். இந்த சீரீஸ்ல இன்னும் ரெண்டு பாக்கி இருக்கே!

      நீக்கு
  3. பதிவிட்டமைக்கு நன்றி அத்துடன்
    தூய தமிழ் நாட்காட்டி வாங்க
    அணுகும் முகவரி :
    சின்னப்ப தமிழர்
    தமிழம்மா பதிப்பகம் ,
    59, முதல் தெரு விநாயகபுரம்,
    அரும்பாக்கம் , சென்னை- 600106 .
    அலைபேசி - 99411 41894.

    பதிலளிநீக்கு
  4. நல்லவேளை நான் சாக பட்சிணி ( சைவ உணவு உண்பவர்) ஆதலால் பல் குத்தும் இந்த தொல்லை வர எனக்கில்லை. இருப்பினும் அருமையான விளக்கத்தை இரசித்துப் படித்தேன்.
    நீங்கள் குறிப்பிட்டிருந்த பகுதிக்கான தமிழாக்கத்தை என்னால் முடிந்தளவு மொழிபெயர்த்திருக்கிறேன். (தவறானால் மன்னிக்கவும்.)
    அது இதோ.
    பல் குத்தும்போது பல் குச்சியை இடது கையை உபயோகப்படுத்தவேண்டுமா?
    பல் குத்தும்போது வாய்யை மூடிக்கொள்ளவேண்டுமா?
    சிதைந்த பொருளை (Detritus- any disintegrated material)
    1) துடைப்புக்குட்டையில் வைக்கவேண்டுமா?
    2) எல்லோரம் பகிர்ந்துகொள்ள சுழல் விசிறியில் துப்பவேண்டுமா?
    3) பின் பசியாற்றிக்கொள்ள சேமித்து வைக்கவேண்டுமா?
    4) அப்படியானால் எவ்வளவு காலம் சேமிக்கவேண்டும்?

    பதிலளிநீக்கு
  5. நல்லவேளை எனக்கு பல்குத்தும் பழக்கம் இல்லை! எல்லா விஷயங்களையும் நகைச்சுவையோடு தரும் உங்கள் பதிவுகளை படிக்காமல் இருப்பதில்லை. தொடர்ந்து எழுதவும்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான விளக்கம்! நகைச்சுவையுடன் இருந்தாலும் அவசியமான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  7. பல் குத்துவது அவ்வளவு சாதாரணமா போச்சா? நீதிபதி --- : நீ ஏன் ராமசாமிய கொலை பண்ணினே???? பக்கிரி;---- அதுவா,நான் பல் இடுக்குல மாட்டிகிட்ட பாக்குத்தூளை எடுக்க கஸ்டப்பட்டுக்கிட்டு இருந்தப்ப,,,என்னை பாத்து சவுக்கியமான்னு,கேட்டான் ஐயா........

    பதிலளிநீக்கு