புதன், 11 செப்டம்பர், 2013

சினிமா தயாரிப்பு மோகம்.


சினிமா உலகத்தில் பணம் கொள்ளை கொள்ளையா கொட்டி வச்சிருக்குது. வேண்டியதெல்லாம் நல்ல சாக்குகள்தான். உள்ளே போனால் சாக்கு நிறைய பணத்தைக் கட்டி கொண்டுவரலாம்.

இந்த எண்ணம் பலருடைய மனங்களில் வேரூன்றி இருக்கிறது. அந்தக் காலத்தில் கோயமுத்தூரில் ஒரு நல்ல டெய்லர். மிக நன்றாகத் தைப்பார். பணம் கொழித்தது. யாருடைய தூண்டுதலினாலோ சென்னைக்கு சினிமா எடுக்கப்போனார். கைக் காசு முழுவதும் போய் கடனாளியாகத் திரும்பி வந்தார். அந்த சோகத்திலேயே உயிரையும் விட்டார்.

பல சினிமா நடிகர்கள் தாங்கள் நடித்து சம்பாதித்த பணத்தை சினிமா எடுக்கிறேன் என்று ஆரம்பித்து ஓட்டாண்டியாய் மாறி, சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் உயிர் விட்ட கதைகள் மக்களுக்குத் தெரியும்.

இதையெல்லாம் பார்த்த பிறகும் நாகர்கோவிலில் இருந்து நாகராஜன் என்று ஒருவர் கோழி கூவுது என்ற படத்தை கடன் வாங்கி எடுத்து விட்டு படம் சரியான வசூல் கொடுக்காததால் தற்கொலை செய்யலாமா என்று யோசனை செய்து கொண்டிருக்கிறாராம்.

எனக்கு என்ன சந்தேகம் என்றால் சினிமா எடுக்கப்போவதற்கு முன்பு செய்யாத யோசனை இப்பொது எதற்கு என்பதுதான்.

14 கருத்துகள்:

  1. என்னை தொடர்பு கொள்ள சொல்லுங்கள் அவரிடம் எப்படி சாகலாம் என்று பல ஐடியா தருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா ,போன வாரம் செத்து பொழச்சது நீங்கதானே ?இது பழனி .கந்தசாமி ஐயாவுக்கும் தெரியும் என நினைக்கிறேன் !

      நீக்கு
    2. @ Bagawanjee KA

      டைமிங்கா பாத்து அடிச்சிருக்கீங்க.............. சூப்பர்............

      நீக்கு
  2. சினிமா தயாரிப்பு என்பது ஒரு சூதாட்டமே... இதில் ஒரு சிலர் மட்டுமே சம்பாதிக்கிறார்கள், மற்றவர்கள் காசைத் தொலைக்கிறார்கள்...

    பதிலளிநீக்கு
  3. சினிமா படம் எடுப்பது என்பது ஒரு போதை. அதில் சிக்கிக்கொண்டால் வெளி வருவது கடினம் என்பார்கள். பலபேர் கையில் பணம் இல்லாமலேயே படம் எடுக்க வந்துவிட்டு நாகர்கோவில்காரர் போல திண்டாடுவோர் அநேகம். இதை பற்றி பல ஆண்டுகளுக்கு முன் படித்த ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது. கோடம்பாக்கம் அருகே வசித்த ஒருவர் அவரது நண்பரிடம் சொன்னாராம். ‘ஒரு ஐந்து ரூபாய் இருந்தால் கொடேன்.’ என்று. அதற்கு அவர் நண்பர் ‘எதற்கு?’ எனக் கேட்டதற்கு ‘ஒரு சினிமாப்படம் எடுக்க இருக்கிறேன். பூஜை போட தேங்காய் வாங்கவேண்டும். அதற்குத்தான்.’ என்றாராம்!

    பதிலளிநீக்கு
  4. அதுதான் சொல்வார்கள் Cinema has got inexplicable ,irresistible charm,

    பதிலளிநீக்கு
  5. எல்லா தொழில்களிலும் லாபமும் இருக்கிறது நஷ்டமும் இருக்கிறது. ஒரு தொழிலை ஒருவர் செய்து வெற்றி காண்கிறார். அதே தொழிலே இன்னொருவர் செய்து தோல்வியும் அடைகிறார். அது எப்படி? இது சினிமாவுக்கும் பொருந்தும். சொல்லப் போனால் சினிமா நஷ்டப்படுத்தும் தொழில் இல்லை. இங்கு திட்டமிடுதல் தொடங்கி பல ஐடியாக்கள் தேவைப்படுகின்றன. அவை ஏதும் தெரியாமல் இங்கு வரும் புதியவர்கள் தோல்வியடைகிறார்கள் அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  6. ஐயா! நலமா! தங்கள் ஆலோசனையும் கேள்வியும் சரியானதே!

    பதிலளிநீக்கு
  7. கோழி கூவுது பழைய படம் இல்லையோ? புதுசா வேற ஒண்ணு எடுத்திருக்காங்களா?

    பதிலளிநீக்கு
  8. அதானே.. சினிமா எடுக்கிறதுக்கு முந்தியே இப்படி யோசிச்சிருந்தால் பரவால்ல... பணத்தையும் தொலைச்சுட்டு... உயிரையும் தொலைக்கணுமா என்ன..???

    நம்மளோட சக்திக்கு மீறின எந்த செயல்லயும் இப்படிதான்.. ஒன்னு வெற்றி.. இல்லே தோல்வி....

    சக்திக்குமீறி முயற்சி செய்யும்போது வெற்றிபெற்றால் சாதனை.. இல்லேன்ன வேதனைதான்.. ஹா...ஹா...!!!

    பதிலளிநீக்கு

  9. நெத்தியடி கேள்வி அய்யா... ஆமா நீங்க சொல்றது பழைய கோழி கூவுது இல்லன்னு நெனைக்கிறேன்... அது சக்கைப் போடு போட்டது...

    ஒருவேளை அதே பெயரில் தற்போது எடுக்கிறார்கள் என நினைக்கிறேன்... தற்போது படம் பிக்கப் ஆவதற்கு இது போன்ற பில்டப்புகளும் சிலர் கொடுக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  10. இப்படியெல்லாம் யோசிச்சு யோசிச்சு பாத்துகிட்டே இருந்திருந்தா ஒரு படம் கூட தமிழில் வந்திருக்காது, ஏன் மற்ற மொழிகளில் கூட வந்திருக்காது............ ஒரு வேலை "நிரந்தரமான கண்டக்டர் வேலை, சம்பளத்தை விட்டுட்டு எந்த நிச்சயமுமில்லாத சினிமா எதற்கு?" என்று நினைத்திருந்தால் ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் கூட வந்திருக்க மாட்டார்கள். டைட்டானிக் போன்ற படத்தை எடுத்தவர்களுக்கு போட்ட பணம் வரும் என்று எந்த கியாரண்டீயும் இல்லாவிட்டாலும் அவர்கள் துணிந்து இறங்கி எடுத்தார்கள். பயந்து.பயந்து ....கிடப்பவர்களை விட துணித்து செயலில் இறங்கிய இவர்களுக்கு எனது சல்யூட்...................

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிஸ்க் எடுத்து செயல்களில் இறங்குபவர்கள் பாராட்டத் தக்கவர்கள்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ரிஸ்க் எடுத்துவிட்டுப் பிறகு புலம்பக்கூடாது அல்லவா?

      நீக்கு