வியாழன், 12 செப்டம்பர், 2013

கலி முற்றுகிறது.

Delhi records 1,121 rape cases in eight months, (till August, 2013)highest in 13 years
(Read more at: http://ibnlive.in.com/news/delhi-records-1121-rape-cases-in-8-months-highest-in-13-years/421286-3-244.html?utm_source=ref_article)

கடந்த 2012ம் வருடம் நடந்த கற்பழிப்பு நிகழ்வில் இந்தியா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தது மக்களுக்கு நினைவிருக்கும். டில்லியில் மிகவும் உக்கிரமான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சமூகத்தில் பெரும் புரட்சி நடக்கப்போகிறது என்று என்னைப்போன்ற கிழடுகள் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தோம்.

இன்று அந்த டிசம்பர் கொடுமைக்கு நீதி மன்றம் தீர்ப்பு வழங்கப்போகிறது. அந்த தினத்தில் வெளியான செய்தியைப் பாருங்கள்.

இன்றைய இணையத்தில் வெளியான செய்தியின் தலைப்பைத்தான் இப்பதிவின் ஆரம்பத்தில் கொடுத்துள்ளேன். அத்தகைய புரட்சிகரமான ஆர்ப்பாட்டங்கள் நடந்த டில்லியில்தான் இத்தகைய தொடர் கொடுமைகள் நிறைவேறிக்கொண்டு இருக்கின்றன.

கலி முற்றுகிறது என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை.

16 கருத்துகள்:

  1. கலி முற்றுகிறது. குதிரைவீரன் (கல்கி) எப்போது வருவான் என்றுதான் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  2. எங்கே போயிற்று நாம் அடிக்கடி சொற்பிரயோகம் செய்யும் ‘இந்தியப் பண்பாடு’?

    பதிலளிநீக்கு
  3. இப்படி ரேப் பண்ணுபவர்களுக்கு அவங்க அம்மா பாலூட்டி வளர்த்தார்களா அல்லது வயகரா கொடுத்து வளர்த்தார்களா?

    பதிலளிநீக்கு
  4. பாரதமக்கள் பண்பாடு கொண்ட மக்கள் அதனால்தான் 1,121 rape இல்லைன்னா இன்னும் அதிகமாக இருந்திருக்குமோ எப்படி எல்லாம் எனக்கு சந்தேகம் வருகிறது பாருங்க

    பதிலளிநீக்கு
  5. முன்னெப்போதும் இப்படி இல்லாது இப்போது ஏன் இப்படி? என்ற கேள்வியும் நிற்கிறதே!

    பதிலளிநீக்கு
  6. தனி மனித ஒழுக்கம் தவிர இந்திய பண்பாட்டை காப்பாத்த வேற யாராலும் ஆகாது!

    பதிலளிநீக்கு
  7. சார் நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கீங்க என்பதைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. கற்பழிப்பு என்பது என்னவோ போன வருடம் மட்டுமே நடந்தது என்பது போன்ற பிரம்மை நமக்கு வந்துள்ளது, காரணம் டெல்லி பேருந்தில் பெண் கற்பழிக்கப் பட்ட செய்திக்கு கொடுக்கப் பட்ட முக்கியத்துவமே. இத்தனை வருடங்களாக இந்த குற்றம் நடக்கவே இல்லையா, இல்லை மற்ற மாநிலங்களில் எல்லாம் நல்ல பிள்ளைகளாகவே இருக்கிறார்களா? இந்த அவலம் எல்லா இடத்திலும், எல்லா காலத்திலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது, ஆனால் நமக்குத் தெரியவில்லை, வெளிவரவில்லை. தற்போது கொடுத்துள்ள எண்ணிக்கை வெறும் " Tip of the Iceberg" மட்டுமே. வெளியில் தெரிவது 1% க்கும் கீழ், தெரியாமல் எத்தனை லட்சமோ, யார் கண்டது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் இப்படி? எல்லோரும் இதே வேலையாகத்தான் அலைகிறார்களா?

      நீக்கு
    2. A common denominator in a number of such instances is consumption of alcohol. We sarcastically comment on it.No one seems to believe that the liquor menace can be eradicated. When control over the mind is lost, how crimes can be averted?

      நீக்கு
    3. உங்கள் கருத்துடன் ஒன்று படுகிறேன்.
      குற்றம் இந்த வருடம்தான் ஆரம்பித்துள்ளதாகவும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள் என்றும் நாம் ஒரு மாயையில் விழுந்துவிடாமல் நடந்த ,நடக்கும் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நம் ஆதரவை தருவதுதான். நம்நாட்டு சகோதரிகளுக்கு நாம் செய்யும் கடமையாக இருக்கும்.

      நீக்கு
  8. வக்கிர மனம் கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது போலும். மனித உரிமை என்ற பெயரில் தாமதப்படுத்தப்படும் தண்டனைகள் குற்றவாளிகளுக்குத் துணிச்சலை வளர்க்கின்றன.

    பதிலளிநீக்கு
  9. கலி முத்திவிட்டது என்பதைவிட அரசு செத்துவிட்டது என்று சொல்லலாம்...

    பதிலளிநீக்கு
  10. வக்கிரத்தின் உச்ச கட்டம் அது.. சமுதாய சீர்கேடுகளில் கற்பழிப்பும் ஒன்று...காலங்காலமாய் நடந்துகொண்டிருந்தாலும்.. ஊடகங்களின் உதவியால் இவைகள் வெளிச்சத்துக்கு வருவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது.

    தனிநபர் ஒழுக்கத்தை மேன்படுத்தினால் ஒழிய இதுபோன்ற குற்றங்களை தடுத்து நிறுத்த முடியாது என்பது எனது கருத்து...

    பதிலளிநீக்கு
  11. இதற்கான மூல காரணத்தை ஆராய்ந்து வேரறுக்காமல் இது நிற்கபோவதில்லை. எனக்கு தெரிந்து சில காரணங்கள். சற்று கடுமையான வார்த்தைகளை உபயோகித்திருந்தால் பொறுத்து கொள்ள வேண்டும்.
    1) 50 வருடங்களுக்கு முன்பு எங்கோ ஒரு இடத்தில் காதல் இருக்கும். இன்றோ பார்க்குமிடெமெல்லாம் காதலர்கள். காரணம் சினிமாக்களில், தொலைகாட்சி தொடர்களில், ரியாலிட்டி ஷோக்களில் காதலை விட்டால் வேறு எதுவுமில்லை.
    அன்று இலை மறைவு காய் மறைவாக இருந்தது இன்று எல்லாமே வெளிப்படை. எனக்கு ஒரு கேர்ள் பிரெண்டோ அல்லது பாய் பிரெண்டோ இல்லை என்று சொன்னால் அவர்களை வேற்று கிரகத்து மனிதர்களை போல பார்கிறார்கள். இத்தகைய சமூக அழுத்தங்கள் ஒரு முக்கிய காரணம். பஞ்சையும் நெருப்பையும் பக்கம் பக்கம் வைத்து விட்டு எறிந்த பிறகு நெஞ்சை அடித்துக்கொண்டு அழுது என்ன பிரயோசனம்.
    2) அந்த காலத்தில் நல்லொழுக்கப்பாடம் என்று ஒரு வகுப்பு உண்டு. நல்ல கதைகள் உதாரணங்கள் என்று மாணவ, மாணவிகளை நாள் வழியில் சிந்திக்க வைக்க ஒரு வாரத்துக்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்கப்பட்டது. இன்று பெரும்பாலான பள்ளிகளில் அத்தகைய வகுப்புகள் ஒழிக்கப்பட்டுவிட்டன. பெயரளவில் அந்த பாடத்தை வைத்திருக்கும் பள்ளிகளிலும் அந்த வகுப்பில் மற்ற பாடங்களே நடத்தபடுகின்றன. தேர்வு மட்டும் நடத்தி மதிப்பெண்களை கொடுத்து விடுகிறார்கள்.
    3) அடுத்து தண்டனை அளிக்கப்படும் விதம். சட்டங்கள் செய்யப்பட்ட போது இளஞ்சிறார்களை தண்டித்து விடக்கூடாது திருந்த ஒரு சந்தர்பம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டன. சிறுவர்கள் இத்தகைய நினைத்தும் பார்க்க முடியாத செயல்களில் ஈடுபடுவார்கள் என்று தெரிந்திருந்தால் அன்றைய சட்ட மேதைகள் எந்தெந்த குற்றங்களுக்கு இளஞ்சிறார் என்று கருதப்படவேண்டும் என்று வரையறுத்திருப்பார்கள். சிறுவன் செய்ய கூடாத மாபாதக செயலை செய்தவனுக்கு அதிக பட்ச தண்டனை அல்லவா கொடுக்க வேண்டும். அதை விடுத்து இத்தகைய தண்டனை கொடுத்தால் மற்றவர்களுக்கு அது ஒரு தைரியத்தை அல்லவா கொடுத்து விடும்.
    4) அடுத்து சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து வாதிக்கும் வக்கீல்கள் சற்றே மனசாட்சியோடு கேஸ்களை எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் இன்றிருக்கும் மிக பெரிய வக்கீல்கள் எப்படி என்று நான் சொல்லவே வேண்டியதில்லை. எந்த குற்றம் செய்தாலும் பணத்தை வாரி இறைத்தால் வெளியே வந்து விடலாம் என்ற நிலை மாற வேண்டும்.
    5) சட்டத்தை வார்த்தை ரீதியாக பார்க்காமல் ஏன் அந்த சட்டம் இயற்றப்பட்டது, அதன் நோக்கம் என்ன என்று புரிந்து தீர்ப்பு அளித்தால் நன்றாக இருக்கும். இது சற்றே கடினமான விசயம்தான்.
    6) முன்பு சொன்னது போல சினிமாக்களுக்கு ஒரு நல்ல சென்சார் வேண்டும். "முன்பு கையில் காசு இல்லாமலிருந்ததால் சரியான துணி உடுத்த முடியவில்லை. இப்போதோ கை நிறைய காசிருந்தும் சரியான துணி உடுத்த முடியவில்லை. ஏனென்றால் துணி எவ்வளவு குறைவாக உடுத்துகிறோமோ அந்த அளவுக்கு அதிக காசு" என்று சினிமா நடிகைகளை பற்றி ஒரு பழைய காலத்து ஜோக் ஒன்று உண்டு. இதை மாற்றினாலே போடும். இத்தகைய விடலை பயல்களுக்கு சினிமாவில் எல்லாவற்றையும் காட்டிவிட்டு பேசாமல் இருடா என்றால் அவன் பாவம் என்ன பண்ணுவான். அவனுக்கு யோசனை செய்யும் அளவு புத்தியிருந்தால் இத்தகைய செயல்களில் ஈடுபட மாட்டானே. அவனை தூண்டி விடும் இத்தகைய நிகழ்வுகளை தடுத்தாலே போதும்.
    7) அடுத்தது இன்டர்நெட் விபரீதங்கள். அதை பற்றி சொல்லாமலிருப்பதே நலம்.
    8) எல்லாவற்றுக்கும் மேலாக சுய கட்டுப்பாடு(ஸெல்ப் கண்ட்ரோல்) இருந்தாலே போதும். அதை வளர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதை உடனடியாக செய்ய வேண்டும்.
    9) மூயை மழுங்கடிக்கும் லாகிரி வஸ்துக்கள் - மது பானம். அரசே இதை செய்யும் போது எங்கு சென்று முட்டிகொள்வது.

    மேற்கண்ட, இன்னும் பல ஒழுக்க நெறிகளை வளர்க்கும், செயல்களை செய்ய வேண்டிய காலம் வந்தாகி விட்டது.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேலம் குரு அவர்களே நீங்கள் நன்றாக சொன்னீர்கள். இதை ஒரு சமுதாய அவலமாக எடுத்துகொண்டு செயல் பட வேண்டும். தனது வயதுக்கு ஒவ்வாத செயலை செய்த அந்த "இளம் சிறுவனுக்கு" மற்ற 4 பேருக்கு கொடுத்த தண்டனையை விட கொடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

      சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - நான்கு பேருக்கும் மரண தண்டனை - மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. ஏதாவதொரு human rights organisation உள்ளே புகுந்து இதை தடை செய்து விடக்கூடாது. தண்டனை உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும்.
      முன்பே சொன்னது மாதிரி இந்த women rights சங்கங்கள் அனைத்தும் அடுத்த படியாக இத்தகைய நிகழ்வுகள் நடக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை செய்ய வேண்டும். முதலில் அரைகுறை ஆடையுடன் சினிமாக்களில் பெண்கள் வருவதை கண்டிக்க வேண்டும். அவர்கள் பாதி உடையுடன் ஆடிவிட்டு காசு வாங்கிகொண்டு போய்விடுகிறார்கள். இத்தகைய சினிமாக்களுக்கு கூட்டமும் வருவதால் தயாரிப்பாளருக்கும் காசு, சினிமா தியேட்டர்காரனுக்கும் காசு. பார்த்துவிட்டு போகிறவர்களுக்கு ஒரு 2 மணி நேர அற்ப சந்தோசம். அதை பார்த்து விட்டு இத்தகைய கேவலமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபூர்வமாக இப்படி தண்டனையும் கிடைத்து விடுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட அந்த பெண்களுக்கு ஒருவித பரிகாரமும் செய்யவே முடியாதே. எனவே இதை ஒரு நல்ல ஆரம்பமாக எடுத்துகொண்டு women rights சங்கங்கள் ஒரு நாடு தழுவிய போராட்டத்தை ஆரம்பித்து நடத்தினால் நன்றாக இருக்கும்.
      செய்வார்களா? இல்லை போராட்டம் நடத்துவதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று இருந்து விடுவார்களா?

      திருச்சி அஞ்சு

      நீக்கு