திங்கள், 23 செப்டம்பர், 2013

மைதா மாவும் மனிதர்களும்.


இந்தப்புரோட்டாவைப் பாருங்கள். உடனே சாப்பிடவேண்டும் என்று தோன்றவில்லையா? இதைப்போய் சிலர் வெறுக்கிறார்களே என்று நினைக்கும்போது வேடிக்கையாக இருக்கிறது.

மைதா தயாரிக்கப்படும் விதம் பற்றி விக்கிபீடியா சொல்வது.

Maida is a finely milled and refined and bleached (using chemical bleach) wheat flour, closely resembling cake flour, and used extensively in making Indian fast food, Indian bakery products such as pastries and bread,[1] varieties of sweets and sometimes in making traditional Indian breads such as paratha and naan.[2] It is made from the endosperm (the starchy white part) of the grain, while the fibrous bran is removed in the mill.
Originally yellowish, maida is popular in a white color, bleached with benzoyl peroxide. The use of benzoyl peroxide in food is banned in China[3] and in theEuropean Union[3] (including the UK[4]).
Maida contains alloxan[citation needed], the source of which may be direct use as softener or the by-product of the bleaching agent chlorine dioxide. Maida is often softened using alloxan[citation needed] which is known to destroy beta cells in the pancreas of rodents and other species, causing diabetes mellitus. The agent, chlorine dioxide, used to bleach flour is reported to produce diabetes-causing contaminant alloxan when reacting with the proteins contained in flour. Studies show that alloxan, the chemical that makes white flour look "clean" and "beautiful," destroys the beta cells of the pancreas[citation needed] in rodents. Some studies have shown that alloxan is not toxic to the human beta-cell, even in very high doses, probably because of differing glucose uptake mechanisms in humans and rodents.[5][6]

ஒரு கதை சொல்கிறேன். கேளுங்கள்.

ஒரு ஊரில் மூன்று நண்பர்கள் இருந்தார்கள். ஒருவர் சங்கீத வித்வான். இன்னொருவர் தத்துவ ஞானி. மூன்றாமவர் வைத்தியர்.

இந்த மூவரும் ஒரு சமயம் க்ஷேத்தராடனம் சென்றார்கள். ஒரு ஊரில் சென்று ஒரு சத்திரத்தில் தங்கினார்கள். அந்தக் காலத்தில் ஓட்டல்கள் இல்லை. அவரவர்களே சமைத்து சாப்பிட்டுக் கொள்ளவேண்டும். இதற்காக அவர்கள் சத்திரத்து மணியகாரனிடம் சமையல் சாமான்களை வாங்கி சமைக்க ஆரம்பித்தார்கள்.

பக்கத்திலேயே அரிசி கிடைத்தது. சங்கீத வித்வானை சாப்பாடு வடிக்கச் சொல்லி விட்டு மற்ற இருவரும் காய்கறிகளும் நெய்யும் வாங்கச் சென்றார்கள். தத்துவ ஞானி நெய் வாங்கச் சென்றார். மருத்துவர் காய்கறிகள் வாங்கச் சென்றார்.

தத்துவ ஞானி நெய் வாங்கினார் கடைக்காரன் அந்த நெய்யை ஒரு தொன்னையில் ஊற்றிக் கொடுத்தான். வாங்கிக்கொண்டு வரும் வழியில் தத்துவ ஞானி சிந்தித்தார். இப்போது நம் கையில் இரண்டு வஸ்துக்கள் இருக்கின்றன. எது எதற்கு ஆதாரம்? இதைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று சிந்தித்தார்.

இப்போது தொன்னையில் நெய் இருக்கிறது. ஆகவே தொன்னை நெய்க்கு ஆதாரம். ஏன் நெய் தொன்னைக்கு ஆதாரமாய் இருக்கக் கூடாது? கண்டு பிடித்து விடுவோம் என்று தொன்னையை தலைகீழாகப் பிடித்தார். நெய் முழுவதும் தரையில் சிந்தி விட்டது. ஆஹா, தொன்னைதான் நெய்க்கு ஆதாரம். இந்த தத்துவத்தைக் கண்டு பிடித்த சந்தோஷத்துடன் சத்திரத்திற்குத் திரும்பினார்.

காய்கறிகள் வாங்கப் போன மருத்துவர், காய்களைப் பார்த்தார். கத்தரிக்காய் -
பித்தம், வாழைக்காய் - வாயு, வெங்காயம் - சூடு. கருணைக்கிழங்கு - மந்தம், இப்படி ஒவ்வொரு காய்க்கும் ஒவ்வொரு குறை சொல்லிக்கொண்டு ஒரு காயையும் வாங்காமல் சத்திரத்திற்கு வந்து சேர்ந்தார்.

சாதம் வடிப்பதற்காக விட்டுப் போன பாகவதரோ, அடுப்பு பற்ற வைத்து பானையை வைத்து அதில் அரிசியைப் போட்டார். தேவையான தண்ணீரை ஊற்றி அடுப்பை நன்றாக எரிய விட்டார். உலை சூடாகி தளதளவென்று கொதுக்க ஆரம்பித்தது. அந்த சத்தம் நல்ல தாள சத்தமாய் இருந்தது. அந்த தாளத்திற்கேற்ப பாகவதர் பாட ஆரம்பித்தார். கச்சேரி நன்றாகப் போய்க்கொண்டு இருந்தது. அப்போது சாதம் நன்கு வெந்து விட்டபடியால் கொதி அடங்கி விட்டது. தாளச் சத்தம் நின்று போய்விட்டபடியால் பாகவதரால் தொடர்ந்து பாட முடியவில்லை.

அவருக்கு கோபம் வந்து விட்டது. சோற்றுப் பானையை ஒரு உதை விட்டார். பானை கீழே விழுந்து உடைந்து போய் சோறு எல்லாம் வீணாகிப்போய் விட்டது. பிறகு என்ன செய்வது? மூவரும் அன்று பட்டினி கிடந்தனர்.

இந்தக் கதையை எதற்காகச் சொன்னேன் என்றால், இப்படி ஒவ்வொரு பொருளிலும் குறை கண்டு பிடித்துக் கொண்டு இருந்தால் அப்புறம் ஒன்றையும் சாப்பிட முடியாது என்பதை வலியுறுத்தத்தான்.

மைதா மாவில் செய்யப் படும் புரோட்டா உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று இப்போது சொல்லுகிறார்கள். புரோட்டா, இன்றோ நேற்றோ கண்டுபிடிக்கப்பட்ட பதார்த்தம் அல்ல. ஏறக்குறைய ஐம்பது வருடங்களாக புழக்கத்தில் இருந்து வரும் ஒரு உணவுப் பண்டம். நமக்கு முந்தி இரண்டு தலைமுறையினர் இந்த புரோட்டாவை சாப்பிட்டு ஜீரணம் பண்ணி வாழ்ந்து செத்துப் போனார்கள். அவர்கள் எல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. அப்போதும் டாக்டர்கள் இருந்தார்கள்.

சரி, புரோட்டாவை விட்டு விடுவோம். புரோட்டா தவிர மைதா மாவில் வேறு என்னென்ன தின்பண்டங்கள் செய்கிறார்கள் என்று பார்ப்போமா. அனைத்து பிஸ்கோத்துகள், கேக்குகள், முதலான அனைத்து பேக்கரி ஐட்டங்களுக்கும் மூலப் பொருள் மைதாவே. மைதா மாவில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் கணக்கிலடங்கா. அனைத்து ஓட்டல்களிலும் தயாரிக்கப்படும் பூரி, சப்பாத்திகளில் பாதிக்கு மேல் மைதா கலக்கப்படுகிறது. "நான்", "ருமானி" ரொட்டி இவைகளுக்கு மூலப்பொருள் மைதா மட்டுமே.

மைதா மாவிற்கு எதிராக சொல்லப்படும் முக்கியமான குற்றச்சாட்டு, வளர்ந்த நாடுகளில் இதை புறக்கணித்து விட்டார்களாம். அதனால் நாமும் இதை புறக்கணிக்க வேண்டுமாம். வளர்ந்த நாடுகளின் தரக் கட்டுப்பாட்டு முறைகளை நாமும் கடைப் பிடிக்கவேண்டுமென்றால் இந்தியாவில் சாப்பிடுவதற்கு லாயக்கான உணவு வகைகள் எதுவுமே மிஞ்சாது.

மைதா மாவு கோதுமை மாவை வெளுப்பாக்கி செய்யப்படும் ஒரு மாவு. இந்த வெளுப்பாக்குதலுக்கு "பென்சாயில் பெர்ஆக்சைடு" என்னும் போருளை உபயோகிக்கிறார்கள். அதானால் அந்த ரசாயனம் விஷம் என்று சொல்கிறார்கள். ரிபைஃன்டு ஆயில், சர்க்கரை, இரண்டும் இவ்வாறு ரசாயனங்கள் மூலம்தான் வெளுப்பாக்கப்படுகின்றன. இந்த இரண்டும்தான் சமையலறையின் உயிர்நாடி. இவைகளை என்ன செய்யப்போகிறோம்?

நம் கசாப்புக்கடைகளைப் பார்த்தால் வெள்ளைக்காரன் ஆயுசுக்கும் மட்டனை விட்டு விடுவான். நம் ஓட்டல் கிச்சனைப் பார்த்தால் என்றால் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அவன் ஊருக்கே ஓடி விடுவான். கல்யாண வீட்டில் உணவு தயாரிப்பதைப் பார்த்தால் நமக்கே வாந்தி வந்து விடும்.

கைக்குத்தலரிசிதான் உடலுக்கு நல்லது. எத்தனை பேர் இதைச் சாப்பிடுகிறோம்? டபிள் பாலிஷ் செய்த அரிசிதான் மார்க்கெட்டில் விற்பனையாகிறது. அந்த அரிசி சாப்பாடுதான் மல்லிகைப்பூ மாதிரி பார்வைக்கு நன்றாக இருக்கிறது. அதைத்தானே சாப்பினுகிறோம்.

இத்தனை சீர்கேடுகள் இருந்தும் இந்தியன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்றால் அவனுக்கு இந்த உணவு கிடைப்பதே பெரும் அதிர்ஷ்டமாக இருக்கிறது. தரக் கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற்ற உணவைத்தான் சாப்பிடுவேன் என்று இருந்தால் இந்திய ஜனத்தொகை ஒரே வருடத்தில் சுதந்திரம் வாங்கியபோது இருந்த அளவிற்கு வந்து விடும்.

சரி ஐயா, அப்படி மைதாவில் என்ன விஷத்தை கலக்கிறார்கள் என்று பார்த்தால், மாவை வெள்ளையாக்குவதற்கு பென்சாயில் பெர்ஆக்சைடு என்ற பொருளைப் பயன்படுத்துகிறார்கள். இது செற்கையாகத் தயார் செய்யப்பட்டாலும் அடிப்படையில் இது ஒரு அங்ககப் பொருளே. எல்லா அங்ககப் பொருட்களும் குறுகிய காலத்திலேயே வேதியல் மாற்றம் அடைந்து மறைந்து விடும். மைதா மாவு கடைக்கு விற்பனைக்கு வரும்போது இந்த வேதியல் பொருளின் அளவு, மனிதனுக்குத் தீங்கு விளைவிக்காத அளவிற்குத்தான் இருக்கும். இந்த விஷயத்தை அரசாங்கம் கட்டாயம் கவனித்துக்கொண்டிருக்கும்.

ஏன் இப்போது இந்த மைதா மாவு பிரச்சினை தலை தூக்கியிருக்கிறது என்றால், கேரளாவில்தான் முதலில் இந்தப் பிரச்சினை துவங்கியிருக்கிறது. கேரளாவைப் பொருத்த வரையில் தினம் ஒரு போராட்டம் நடத்தாவிட்டால் அவர்களுக்கு தூக்கம் வராது. மைதா மாவை ஒழிப்போம் என்று காலையில் ஊர்வலம் போய்விட்டு மத்தியானம் டீக்கடைக்குப் போய் ரெண்டு புரோட்டாவும் சாயாவும் சாப்பிட்டு விட்டுத்தான் வீட்டிற்குப் போவார்கள். ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்குவதில் வல்லவர்கள் அவர்கள்.

இந்த மாதிரி சமாச்சாரங்கள் இப்போது ஒரு பேஃஷனாகப் போய்விட்டது. மேனகா காந்தி என்று ஒரு அம்மாள் நாய்களுக்காக கோர்ட்டுக்குப் போய் தெரு நாய்களை கொல்லக்கூடாது என்று தீர்ப்பு வாங்கியிருக்கிறாள். நாய்க்கடி பட்டு ஆஸ்பத்திரிக்குப் போவது சாதாரண ஜனங்கள்தான்.

அந்தக் காலத்தில் பால்தான் சரிவிகித உணவு, எல்லோரும் பால் குடியுங்கள் என்று எல்லா டாக்டர்களும் பரிந்துரைத்தார்கள். இப்போது பால் குடிக்கக்கூடாது என்று சொல்கிறார்களாம். நான் இன்றும் படுக்கப்போகும்போது ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டுத்தான் படுக்கிறேன்.

ஆகவே உணவுக் கலப்படத்தைப் பற்றிய சிந்தனையாளர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன். தயவு செய்து இந்தக் கருமாந்திரம் பிடித்த ஊரில் குடியிருக்காதீர்கள். அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டிற்குப் போய்விடுங்கள். நாங்கள் நிம்மதியாக புரோட்டா, சால்னா சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்து கொள்கிறோம். புரோட்டா இந்தியன் உள்ளளவும் இருக்கும். புரோட்டா வாழ்க.

34 கருத்துகள்:

  1. // இந்த மாதிரி சமாச்சாரங்கள் இப்போது ஒரு பேஃஷனாகப் போய்விட்டது.//
    அய்யா! சீரியசாகவும் சிரிப்பாகவும் சொன்னீர்கள். அந்த சிந்தனையாளர்களை புரோட்டா மாஸ்டர்களிடம் விட்டு பிசைய வைத்தால் எல்லாம் சரியாகப் போய்விடும்.

    பதிலளிநீக்கு
  2. //தரக் கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற்ற உணவைத்தான் சாப்பிடுவேன் //

    இந்த மன உறுதி அனைத்து இந்தியர்களுக்கும் வரணும் என்று இறைவனை வேண்டுகின்றேன்.

    பதிலளிநீக்கு
  3. Sir, one thing you have to accept. When I was a kid, I used to eat sweets only during special occasions or when some guest arrives. I can say may be once in a month. Also I had to walk at least 6 km per day to school. Some times I used to drink water directly from the river. Is it possible today? Now in most of the schools, there is no play ground. Every day, the kids have access to sugary tidbits. I am not supporting the ban of “maida” , I am just saying people life style has been changed. It is up to the individuals to keep an eye on their food intake.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் மிகவும் மாறியுள்ளன. அது நல்லதற்கா அல்லது கெட்டதற்கா என்று காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

      நீக்கு
  4. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பார்கள்.
    ஒவ்வொன்றிலும் குறை கண்டுபிடித்துக் கொண்டே
    சென்றால் நாம் சாப்பிட ஒன்றும் மிஞ்சாது

    பதிலளிநீக்கு
  5. //மைதா மாவை ஒழிப்போம் என்று காலையில் ஊர்வலம் போய்விட்டு மத்தியானம் டீக்கடைக்குப் போய் ரெண்டு புரோட்டாவும் சாயாவும் சாப்பிட்டு விட்டுத்தான் வீட்டிற்குப் போவார்கள். ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்குவதில் வல்லவர்கள் அவர்கள்.//

    ‘ஊருக்கு சொல்லுமாம் பல்லி, கழனியில் விழுமாம் துள்ளி!’ என்பது அவர்களுக்கு சரியாக பொருந்தும்.

    கருத்துக்கள் சில இடங்களில் நகைச்சுவையாக சொல்லப்பட்டிருந்தாலும் ‘சிந்தனையாளர்களுக்கு’ கடைசியில் கொடுத்துள்ளது நெற்றி அடி!

    பதிலளிநீக்கு
  6. எனக்கு ஏனோ "அண்ணாமலை" படத்தில் ஜனகராஜ் "பீடா ஜர்தா" பேச்சு நினைவுக்கு வருது.

    இன்னிக்கு உங்களுக்கு பரோட்டா சாப்பிடணும்னு ஆசை, அதற்கு ஒரு குற்ற உணர்வு இல்லாமல் இருக்க இவ்வளவு கோவப்பட்டிருக்க வேண்டாம். :-)

    மற்றபடி நானும் உங்கள் கட்சி தான், மாத்திரை இருக்க அறிவுரை எதற்கு :-)

    பதிலளிநீக்கு
  7. Really happy to read good points about maida and parotta.
    As a person from madurai I like this article.
    Because madurai people can't live a single day without parotta.
    Thanks. .

    பதிலளிநீக்கு
  8. //Some studies have shown that alloxan is not toxic to the human beta-cell, even in very high doses, probably because of differing glucose uptake mechanisms in humans and rodents //

    எலிகளுக்கு செய்யப்படும் பரிசோதனைகள் வழியாக அறியப்படும் உண்மைகள் அனைத்தும் மனிதனுக்கு ஒத்து வராது. மேலே சொன்ன கருத்து - க்ளுகோஸ் கிரகிக்கபடும் முறை வேறாக இருப்பதால் - பரோட்டா மனிதர்களுக்கு அந்த அளவு கெடுதல் செய்யாது என்பதற்கு ஒரு சான்று.
    அதே மைதாவினால் செய்யப்படும் பிட்சா பர்கர் போன்றவற்றிக்கும் பொருந்துமே. ஏன் பரோட்டா மட்டும் என்ன பாவம் செய்தது

    ஒரு கதை ஞாபகம் வருகிறது.
    தவளை ஒன்றை பிடித்து ஆராய்ச்சி சாலையில் பலகை ஒன்றில் வைத்து குதி என்றவுடன் குதித்ததாம். ஒரு காலை வெட்டி விட்டு குது என்றவுடனும் குதித்ததாம். இரண்டாவது காலை வெட்டிய் விட்டு குதி என்றவுடன் இதேதடா வம்பாக போயிற்று தப்பித்து விடலாம் என்று மீண்டும் குதித்ததாம் அந்த தவளை. விடிவானா மனிதன் மூன்றாவது காலையும் வெட்டிவிட்டு குதி என்றதும், தப்பித்தோம் பிழைத்தோம் என்று இருந்த ஒரு காலை வைத்துகொண்டு கஷ்டப்பட்டு குதித்ததாம். விட்டானா நமது அறிவாளி. நான்காவது காலையும் வெடீவிட்டு குதி என்றதும் பாவம் என்ன செய்யும் அதனால் குதிக்க முடியாமல் தவித்து போய் அமைதியாக இருந்ததாம். நமது அறிவாளி "தவளைக்கு நான்கு கால்களையும் வெட்டி விட்டால் காத்து கேட்காது. இது அறிவியல் ஆராய்ச்சியால் நிருபிக்கப்பட்டுள்ளது" என்று எழுதினானாம்.
    எலிகளுக்கு தொந்திரவுதான். ஆனால் கடைசி வாக்கியத்தில் க்ளுகோஸ் கிரகிக்கபடும் விதம் மாறுபடுவதால் மனிதனுக்கு இது ஒத்து வராது என்று கூறியிருப்பதை ஏன் விட்டுவிட்டார்கள்

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  9. இருப்பவர்கள் விதவிதமாக சாப்பிடுவார்கள். இல்லாதவர்கள் கிடைப்பதைதானே சாப்பிடுவார்கள். ரேசன் அரிசிகூட. பெருச்சாளி,தின்டு,எலி திண்டு,கடைசியில்தானே பாவப்பட்ட மனிதன் தின்னுகிறான். வீட்டுக்கு வீடு வாசப்படி ஒரே மாதரியா இருக்கு!!

    பதிலளிநீக்கு
  10. Super Sir.

    //ஆகவே உணவுக் கலப்படத்தைப் பற்றிய சிந்தனையாளர்களுக்கு............//
    Well said.

    பதிலளிநீக்கு
  11. புரோட்டாவுக்கு ஆதரவாகக் குரல் கேட்டதும் கண்கள் பனித்தன. இதயம் நெகிழ்ந்தது.

    பதிலளிநீக்கு
  12. இரண்டு முட்டை கலந்து, தாளித்த தக்காளி, வெங்காயம் சேர்த்துத் தாள லயத்தோடு தம்ளரில் கொத்திச் [கொத்துவதால் கொத்து புரோட்டா என்றும் பெயர் உண்டு] செய்யும் முட்டை புரோட்டாவும், வீச்சு புரோட்டாவும் சாப்பிட்டுப் பழகிவிட்டால் அப்புறம் விட முடியாது..

    இது ஏழை, நடுத்தர மக்களின் உணவு. நாலு புரோட்டா அடிச்சிட்டா ஒரு நாள் முழுக்கப் பசிக்காதுங்க.

    பதிலளிநீக்கு
  13. ஐயா...........!!

    ம்ம்ம்ம்ம்................!! நீங்க சொன்ன பெரிய கதைக்கு ஒரு சிறு உதாரணம்: சாலை விபத்து எப்போது எங்கே வேண்டுமானாலும் நடக்கலாம், அதற்குப் பயந்துகொண்டு வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது முட்டாள் தனம் என்றால், சாலையில் நடக்கும்போது நம்மை நோக்கி தாறுமாறாக ஒரு வண்டி வருகிறது என்று தெரிந்தும் தப்பித்து ஓடி நம்மைப் பாது காத்துக் கொள்ள முயலாமல் இருப்பது முட்டாள் தனம் தான். நீங்க வெளியூர் பிரயாணம் செய்யும் போது அங்கங்கே குழாய் இருந்தால் அதிலிருந்து தண்ணீர் எடுத்து குடிக்கிறீர்களா, இல்லை பாட்டில் தண்ணீர் வாங்குகிறீர்களா? நம்ம அப்பன் பாட்டன் எல்லோரும் [ஏன் நீங்களே கூட] எந்தத் தண்ணீரை குடித்தாலும் ஒன்றும் ஆகாது என்று குடித்து ஆரோக்கியமாக வாழ்ந்தவர்கள்தானே? அதையே பின்பற்றலாமே?! ஏன் இந்த மாற்றம்? எத்தனையோ பேர் பாட்டில் தண்ணீர் வாங்காமல் குழாய் தண்ணீரை குடிக்கிறார்கள், நமக்கு மட்டும் என்ன என்று நீங்கள் யோசித்ததுண்டா?

    நம்ம அப்பன் செய்தார், ஊரில் எத்தனையோ பேர் செய்கிறான் என்பது இங்கே கணக்கல்ல, ஒரு தகவல், ஒரு குறிப்பிட்ட பொருள் கெடுதி என்று, அதை பற்றி அறிந்தவுடன் நமது நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று பதிவிடுகிறோம். அது எந்த அளவுக்கு ஒரு தனி நபரைப் பாதிக்கும், எந்த அளவுக்கு வாழ்க்கையில் அதை பின்பற்றலாம் என்பது அவரவர் சொந்த முடிவுக்கு விடப்படுகிறது. யாரும் யாரையும் இங்கே கட்டாயப் படுத்தவில்லை. உதாரணத்துக்கு, வெள்ளைச் சர்க்கரை மாதிரி ஒரு எதிரி என்ற தகவல் எனக்கு கிடைத்தது, தினமும் நிறைய சர்க்கரை, சர்க்கரையில் செய்யப்பட்ட இனிப்புகள் என எக்கச் சக்கமாக சாப்பிட்டு வந்த நான் அதை அந்த நாள் முதல் அடியோடு நிறுத்திவிட்டேன். அதே மாதிரி பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, மைதா போன்றவற்றில் Fiber, வைட்டமின்கள் பல நீக்கப் படுகின்றன. இது நல்லதல்ல. வெளிநாடுகளில் கிடைப்பவை நல்ல மைதா, ஆனால் இங்கே கிடப்பது தலைச்சாயம் போட்டு பிளீச் செய்யப்பட்ட மைதா. தற்போது குழைதைகளில் obesity, சர்க்கரை, அதீத கொழுப்பு போன்ற பிரச்சினைகள் தென்படுகின்றன. வயதானவர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை, எங்கு பார்த்தாலும் சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம், இருதயத்தில் அடைப்பு என புழுத்துப் போய்க் கிடக்கிறது. முந்தைய தலைமுறையில் இந்த அளவுக்கு மோசம் இல்லை, தற்போது என்ன தான் நடக்கிறது? இதற்க்கான காரணிகள் பல உள்ளது, அதில் ஒன்று தான் மைதா போன்ற பாலிஷ் செய்யப்பட்ட தானியங்கள்.

    மைதா என்பது கடந்து ஐம்பது வருடங்களாக உள்ளது என்றால், அதற்க்கு முன்னர் ஆயிரக் கணக்கான வருடங்கள் அது இல்லாமல் தானே வாழ்ந்து வந்தனர்? அவர்கள் ஆரோக்யமாக வாழவில்லையா? ஒருத்தருக்கு மைதாவால் ஒன்னும் ஆகவில்லை என்பதால் யாருக்கும் ஒன்னும் ஆகாது என்று அர்த்தமல்ல, இந்த தகவலை கொடுப்பதாலேயே ஒருத்தரை நாம் வற்ப்புருத்துகிறோம் என்றும் அர்த்தமல்ல, இறுதி முடிவு அவரவர் கையில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

      The proof of the pudding is in the eating.

      பெரும்பான்மையான மக்கள் பல காலமாக ஒரு பழக்கம் வைத்திருந்தால் அதில் கெடுதல் இருக்காது என்பது எல்லோராலும் ஏற்கப்பட்ட உண்மை. மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால் அது எத்துணை மக்களால் ஏற்கப்பட்டுள்ளது என்பதை வைத்துத்தான் அதன் உண்மையை ஏற்றுக்கொள்ள முடியும்.

      நீக்கு
  14. உங்களின் வாதங்கள் ஏற்புடையதாக உள்ளன! உணவுகளில் ஆராய்ச்சி செய்யப் போனால் நீங்கள் சொன்ன கதை மாதிரிதான் ஆகிவிடும் நடைமுறைக்கு ஒவ்வாது! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  15. நன்றாக சொன்னீர்கள் சார் , நானும் மைதாவை ஆதரித்து எனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறேன். டிவியிலும் பேசியிருக்கிறேன். இயற்கைமுறை சிகித்சை என்ற பெயரில் எல்லாவற்றையும் எதிர்க்கிறது கேரளாவில் இப்போது ஒரு பேஃஷனாக மாறியிருக்கிறது என்பது உண்மை தான். மைதா எக்காரணத்தை க்கொண்டும் நமது உணவு வகைகளில் தவிர்க்க இயலாத ஒன்று என்பது தான் உண்மை.

    பதிலளிநீக்கு
  16. மைதா மாவு கோதுமை மாவை வெளுப்பாக்கி செய்யப்படும் ஒரு மாவு. இந்த வெளுப்பாக்குதலுக்கு "பென்சாயில் பெர்ஆக்சைடு" என்னும் போருளை உபயோகிக்கிறார்கள். அதானால் அந்த ரசாயனம் விஷம் என்று சொல்கிறார்கள். ரிபைஃன்டு ஆயில், சர்க்கரை, இரண்டும் இவ்வாறு ரசாயனங்கள் மூலம்தான் வெளுப்பாக்கப்படுகின்றன. இந்த இரண்டும்தான் சமையலறையின் உயிர்நாடி. இவைகளை என்ன செய்யப்போகிறோம்?
    <><>
    இயற்கை மூலப்பொருளிலிருந்து , மைதா போன்ற பொருட்களைத் தயாரிக்கும்போது எதற்காக இந்த வேதியல் ரசாயனப் பொருட்களை சேர்க்கவேண்டும் .
    நம் முன்னோர்கள் நெல் / அரிசி போன்ற உணவுப்பொருட்களை குத்தி , மாவுப்பொருட்களை தயாரித்து உண்டார்கள் , அது போல நாமும் செய்யவேண்டியது தானே . பொதுமக்களுக்கு தயாரித்து கொடுக்கும்போது எதற்காக இந்த கருமாம்பிடித்த நச்சு வேதியல் பொருட்களியும் சேர்த்து விற்கவேண்டும்.
    கே.எம். அபுபக்கர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் நியாயமான கேள்வி. எனக்கு முழுமையான பதிலை சொல்லத் தெரியவில்லை. ஆனாலும் ஒரு குறிப்பு தருகிறேன்.

      கரும்பிலிருந்து வெல்லம் தயாரித்து உபயோகித்தோம். ஆனால் வெல்லம் கருப்பாக இருந்தது. உடலுக்கு நல்லதுதான். ஆனால் கண்ணுக்குப் பிடிக்கவில்லை. வெளுப்பாக்க பல கண்றாவிப் பொருட்களை சேர்த்தோம். அப்போதும் போதவில்லை. சீனியைக் கண்டுபிடித்தோம். அந்த வெளுப்பில் எல்லோரும் மயங்கிப்போனோம்.

      இப்படித்தான் ஒவ்வொன்றும் மாற ஆரம்பித்தன. இயற்கை வழி வாழ்வதை விட்டு விட்டு செயற்கையாக வாழ ஆரம்பித்தோம். இனி பழைய வழிக்குப் போக முடியாது.

      நீக்கு
    2. //பொதுமக்களுக்கு தயாரித்து கொடுக்கும்போது எதற்காக இந்த கருமாம்பிடித்த நச்சு வேதியல் பொருட்களியும் சேர்த்து விற்கவேண்டும். //

      அபுபக்கர்,
      மைதாவாவது வேண்டுமென்றால் வாங்கிகொள்ளலாம் பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடலாம். ஆனால் சென்னையில் எல்லோர் வீட்டிற்கும் அரசு கொடுக்கிற தண்ணீரில் chlorine கலந்து தான் கொடுக்கப்படுகிறது. தண்ணீரை உபயோகிக்காமல் இருக்க முடியுமா?

      நீக்கு
  17. எது நல்லது ,எது கேட்டது என்பதை நம் உடலே நமக்கு உணர்த்தி விடும் !பிடிப்பதை உண்டு ,போய் சேருவோம்!

    பதிலளிநீக்கு
  18. //சாலையில் நடக்கும்போது நம்மை நோக்கி தாறுமாறாக ஒரு வண்டி வருகிறது என்று தெரிந்தும் தப்பித்து ஓடி நம்மைப் பாது காத்துக் கொள்ள முயலாமல் இருப்பது முட்டாள் தனம் தான்.//

    தாஸ்,
    தாறுமாறாக வருகிற வண்டியையும் பரோட்டாவையும் ஒப்பிட்டிருக்க தேவையில்லை. அப்படியே, உங்கள் வழியிலேயே பதில் சொல்ல வேண்டுமென்றால், எதிரே தாறுமாறாக வருகிற வண்டி எங்கள் மீது மோதும்போது, அது எங்களுக்கு இன்பத்தை தருகிறது. அதனால் தான் naangal விலகி செல்லாமல் மோத விடுகிறோம். என்ன ஒரு வித்தியாசம், விலகி செல்கிற நீங்கள் 80 வருஷம் வாழ்வீர்கள். நாங்கள் 70 வருஷம் வாழ்வோம். வெளியூர் பிரயாணம் செய்யும் பொது, குழாயில் வருகிற தண்ணீர் பாட்டில் தண்ணீரை விட taste ஆக இருந்தால் நாங்கள் குழாய் தண்ணீரை தான் குடிப்போம்.
    சாப்பிடுகிறதின் மூலம் வரும் கலோரியை எரிக்க (excercise or walking) தெரிந்தால் எதை வேண்டுமென்றாலும் சாப்பிடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ Alien A

      \\அது எங்களுக்கு இன்பத்தை தருகிறது. அதனால் தான் naangal விலகி செல்லாமல் மோத விடுகிறோம். \\ இது தான் பாயிண்ட். உங்களுக்கு வீக்னஸ், அதை விட முடியவில்லை. நான் முன்னர் சொன்ன மாதிரி மைதாவின் தீமைகள் என்பது ஒரு தகவல், அதை ஏற்கவேண்டுமா வாழ்வில் பின்பற்ற வேண்டுமா என்பதை பற்றிய முடிவை எடுப்பது தனிப் பட்ட நபரின் சுதந்திரம்.

      \\என்ன ஒரு வித்தியாசம், விலகி செல்கிற நீங்கள் 80 வருஷம் வாழ்வீர்கள். நாங்கள் 70 வருஷம் வாழ்வோம். \\ உயிர் மேல ஆசையில்லை என்று நீர் சொல்வதை நான் நம்பத் .தயாராக இல்லை. புகையிலையால் கேன்சர் வருவதை திரும்புமிடமேல்லாம் பார்த்தும் அதை விட முடியாதவர்கள் எண்ணற்றோர், அது போல உம்மால் மைதா என்ற வீக்னசில் இருந்து வெளியே வரமுடியவில்லை, அது தான் காரணம்.


      \\வெளியூர் பிரயாணம் செய்யும் பொது, குழாயில் வருகிற தண்ணீர் பாட்டில் தண்ணீரை விட taste ஆக இருந்தால் நாங்கள் குழாய் தண்ணீரை தான் குடிப்போம்.\\ Bisleri பாட்டிலை கையேடு தூக்கிக் கொண்டு அலையும் பார்ட்டிகள் இந்த மாதிரி உதார் விடுவது சகஜம் தான். நீர் டேஸ்ட் இல்லை என்னும் தண்ணீரைத்தான் 95% க்கும் மேலான மக்கள் குடிக்கிறார்கள், நீர் என்ன வானத்தில் இருந்தா குதித்தீர்? உமக்கு எது தேவையோ அதை சப்பை கட்டு கட்டி ஒரு வறட்டு வாதம்.......... குஷ்டமப்பா......சீ ........... கஷ்டமப்பா...........


      \\சாப்பிடுகிறதின் மூலம் வரும் கலோரியை எரிக்க (excercise or walking) தெரிந்தால் எதை வேண்டுமென்றாலும் சாப்பிடலாம்.\\ கண்டிப்பா முடியும் தான், ஆனால் உம்மோட நிலை என்ன? எப்படி ஒரு நாளைக்கு 16 மணி நேரம் கம்பியூட்டர் முன்னாடி உட்கார்ந்துகிட்டு இருந்தா கரைக்கலாமா?

      நீக்கு
  19. சில மாதங்களுக்கு முன் எழுந்த பிரச்னையை அலசி ஆராய்ந்து எழுதி உள்ளீர்கள் . அதில் தான் சில குறிப்புகள் மனித செல்களுக்கு தீங்கு செய்யாது என்று உள்ளதே .கதை N.S.கிருஷ்ணன் நடித்த திரைப்பட காட்சி தான் நினைவுக்கு வருகிறது !

    பதிலளிநீக்கு
  20. பற்பல கருத்துக்கள்.ஆரோக்கிய விவாதம்.

    பதிலளிநீக்கு
  21. Thiru. ALIEN A , வணக்கம்.
    சென்னையில் மட்டுமல்ல , எல்லா இடங்களிலும்”பொது விநியோகத்திட்டத்தில்,
    குடிதண்ணீரில் “ குளோரின் “ கலக்கப்படுவதன் காரணம் அது ஒரு கிருமி நாசினி-குறிப்பிட்ட அளவு சேர்ந்தால் ,கண்ணுக்குத்தெரியாத கிருமிகளை அழிக்கும் என்பதால்தான், மற்றபடி நிறம் , அழகு, சுவை என்பதற்காக இல்லை.
    <> கே.எம்.அபுபக்கர்

    பதிலளிநீக்கு
  22. திரு.பழனி.கந்தசாமி அய்யா, வணக்கம்.
    தங்கள் பதிவும் , அதன் மீதான வாசகர்களின் கருத்துக்களும்
    பயனுள்ளவைகளாக உள்ளன. நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
    <> கே.எம். அபுபக்கர்

    பதிலளிநீக்கு
  23. அப்பா ! ஒரு பெரிய ஆராய்ச்சி அழகாகப் பண்ணி முடிவில் பரோட்டாவுக்கு "ஜே "சொன்னது நன்றாகவே உள்ளது.

    பதிலளிநீக்கு
  24. இந்த பதிவை அப்படியே கொண்டு போய் எங்கள் ரோட்டு முனையில் இருக்கும் பரோட்டா கடையில் கொடுத்து டிஸ்ப்ளே செய்ய சொன்னேன். கடை முதலாளிக்கு ரொம்ப சந்தோசம்.
    ஆனால் எங்கள் சந்தோசம் ரெண்டு நாட்கள்தான் நீடித்தது. காரணம் மூன்றாவது நாளிலிருந்து பரோட்டா ஒரு ரூபாய் அதிகமாக்கி விட்டார். ஹி ஹி எனக்கு மட்டும் அதே விலையில்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு