வியாழன், 5 செப்டம்பர், 2013

விவசாய ஆராய்ச்சியும் மனிதர்களின் புரிதலும்.


பிடி கத்தரிக்காய் பற்றிய விக்கிப்பீடியாவின் கட்டுரை.

The Bt brinjal is a suite of transgenic brinjals (also known as an eggplant or aubergine) created by inserting a crystal protein gene (Cry1Ac) from the soil bacterium Bacillus thuringiensis into the genome of various brinjal cultivars. The insertion of the gene, along with other genetic elements such as promotersterminators and an antibiotic resistance marker gene into the brinjal plant is accomplished usingAgrobacterium-mediated genetic transformation. The Bt brinjal has been developed to give resistance against lepidopteron insects, in particular the Brinjal Fruit and Shoot Borer (Leucinodes orbonalis)(FSB).Mahyco, an Indian seed company based in JalnaMaharashtra, has developed the Bt brinjal. The genetically modified brinjal event is termed Event EE 1 and Mahyco have also applied for approval of two brinjal hybrids. The Event EE 1 was introgressed by plant breeding into various local varieties by University of Agricultural Sciences, Dharwad and Tamil Nadu Agricultural University, Coimbatore. Some of the cultivars of brinjal include: Malpur local, Manjari gota, Kudachi local, Udupi local, 112 GO, and Pabkavi local.[1] It was approved for commercialization in India in 2009, but - after an apparent public outcry and rounds of debates in which representatives from Mahyco, the scientific community, and NGO's spoke on the topic - the Indian Environment Minister, Jairam Ramesh, facilitated a moratorium on its release until further, unspecified, tests were conducted.

இந்தப் பதிவில் கூறப்படும் கருத்துகள் என்னுடைய சொந்தக் கருத்துகள். அவை கசப்பாக இருக்கலாம். உங்களுக்குப் பிடிக்காமலும் இருக்கலாம். இந்தப் பதிவைப் படித்த பின் உங்கள் கருத்துகளை பின்னூட்டமிடலாம்.

பெரும்பாலான மனிதர்கள் ஆட்டு மந்தை சுபாவம் கொண்டவர்கள். அதாவது அவர்கள் தலைவர்கள் அல்லது வழிகாட்டுபவர்கள் என்று யாரை நினைக்கிறார்களோ, அவர்கள் என்ன சொன்னாலும் அதை சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.

கூடங்குளம் அணு நிலையம் ஆபத்தானது என்று சொன்னால் அதை ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொண்டு போராட்டம் நடத்துவார்கள். இந்தப் போராட்டம் நியாயமானது என்று பல சான்றுகள் கொடுப்பார்கள். இத்தகைய போராட்டங்கள் யாரால், எதற்காக தூண்டி விடப்படுகின்றன என்பது சிதம்பர ரகசியம்.

உலகில் எந்த ஒரு முன்னேற்றம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதில் குறை காண்பதற்கென்றே பலர் இருக்கிறார்கள். பிடி கத்தரி என்று ஒன்று சந்தைக்கு வந்திருக்கிறது. விவசாய ஆராய்ச்சி அல்லது பயிர்களின் மூலக்கூறுகள் பற்றி ஒன்றும் அறியாத பாமரனும் கூட இதைப்பற்றி கருத்து கூற முற்படுகிறான். அவனுக்கு சிலபல கட்டுரைகள் கைகொடுக்கின்றன.

பயிர்களை ஒட்டு சேர்த்து புதிய ரகம் கண்டுபிடிப்பது என்பது காலம்காலமாக விவசாய ஆராய்ச்சியில் கடைப்பிடிக்கப்படும் ஒரு உத்தி. இது தவிர ரசாயனங்கள் அல்லது வேறு உயிரினங்கிலிருந்து எடுக்கப்பட்ட வேதியல் பொருட்களையும் பயிரினுள் செலுத்தி புதிய ரகப்பயிர்களை உண்டாக்குவார்கள். இவைகளில் சில நல்ல மகசூலும் நோய் எதிர்ப்புச் சக்தியும் கொண்டிருக்கும். அத்தகைய ரகப் பயிர்களை விவசாயிகளுக்குப் பரிந்துரைப்பார்கள்.

இத்தகைய ரகங்கள்தான் இந்தியாவில் பசுமைப் புரட்சி ஏற்பட வழி வகுத்தது. அப்படி புதிய ஆராய்ச்சி மூலம் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ரகம்தான் பிடி கத்தரி. பிடி என்பதின் விளக்கம் (BT = biologically transformed). இது ஒரு ஆராய்ச்சி  நிறுவனத்தால் கத்தரியின் காய்ப்புழு தாக்காத ரகம் வேண்டும் என்பதற்காக கண்டு பிடிக்கப்பட்ட ரகம். இதை ஒரு அயல் நாட்டுக் கம்பெனி மார்க்கெட் செய்கிறது.

இத்தகைய புதிய ஒட்டு ரகங்களின் விதைகளை எல்லா விவசாயியாலும் தயார் செய்து கொள்ள முடியாது. ஒவ்வொரு தடவையும் அந்தக் கம்பெனிதான் விதைகளைக் கொடுக்கவேண்டும்.

இந்த கத்தரி ரகத்தை பல விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் பரிசோதித்து இதைப் பயிரிடலாம் என்று பரிந்துரைத்திருக்கிறார்கள். சில அரசியல் காரணங்களுக்காக இந்த அயல் நாட்டுக் கம்பெனியின் மேல் ஏதோ காரணத்தினால் ஏற்பட்ட விரோதத்தினால், இந்த கத்தரி ரகத்தின் பேரில் பல குற்றச்சாட்டுகள், நீதி மன்றத்தில் வழக்குகள், விவசாயிகளின் போராட்டங்கள் என்று பலவகையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்த கத்தரிக்காய் ஏதோ விஷ ஜந்து, இதை சாப்பிட்டால் நேராக பரலோகம் போய்விடுவார்கள்  என்கிற மாதிரியான ஒரு மாயையை இந்த போராட்டத்திற்குக் காரணமானவர்கள்  உருவாக்கியுள்ளார்கள். இதைப்பற்றி நன்கு கருத்து கூறக்கூடிய விஞ்ஞானிகள் மௌனமாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் இந்த அரசியல் சக்திகளுக்கு எதிராகப் போராடுபவர்கள் அல்ல. அது அவர்கள் வேலையும் அல்ல.

அப்படி அந்த விஞ்ஞானிகள் மௌனம் சாதிப்பதாலேயே இந்த போராட்டம் நியாயமானது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இதைப்போன்ற அபத்தமானது ஒன்றும் இல்லை.

23 கருத்துகள்:

  1. விதை கத்திரிக்காய் என்று ஒதுக்கி வைத்து அடுத்த போகத்திற்கு உபயோகப்படுத்த முடியாது, அதனால் ஒவ்வொரு முறையும் அவர்களிடமே போகவேண்டும் என்பது ஒரு மைனஸ் பாயிண்ட். மற்றொன்று இது போன்ற முறைகளினால் வேறு எந்த பாதிப்பும் இல்லை என்று எந்த அளவிற்கு தெளிவாக தெரியும் என்று புரியவில்லை. விதர்பாவில் பயிரிட்ட பூச்சி அரிக்காது என்று நம்பப்பட்ட பருத்தி விதைகளை பயிரிட்ட பொது அவை முளைக்கவே இல்லை என அறிகிறேன். (அது தான் முளைக்கவே இல்லையே.. அது தான் பூச்சி அரிக்காத ராகம் என்று சொல்லக்கூடாது!)
    மற்றபடி நீங்கள் சொல்வது சரி. சரியான காரணம் இல்லாத எதிர்ப்பிற்கு பின்னால் யாரோ எப்போதும் இருக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
  2. I thought BT stands for soil bacterium Bacillus thuringiensis.

    பதிலளிநீக்கு
  3. இதுபோல Hybrid விதைகள் 1966 இல் வந்தபோதும் சில இடங்களில் எதிர்ப்புகள் வந்தன.காரணம்.அதிலும் ஒவ்வொரு தடவையும் விதையை விதைச்சான்று பெற்ற நிறுவனத்திடம் வாங்கவேண்டுமென்பதால். ஆரம்பத்தில் தேசிய விதைக் கழகம் Hybrid விதைகள் தானே உற்பத்தி செய்து விதைச் சான்று கொடுத்து விற்பனை செய்தது. பின்பு விவசாயிகளின் நிலங்களில் தங்களுடைய மேற்பார்வையில் உற்பத்தி செய்து சான்றிதழ் கொடுத்தது. இப்போது அந்த பணியை மாநில அரசின் நிறுவனங்களே எடுத்துக்கொண்டன. அதோடு சில தனியார் நிறுவனங்களும் இந்த பணியை செய்துவருகின்றன. இப்போது எந்த எதிர்ப்பும் இல்லை.
    அதுபோல் ஆரம்பத்தில் எதிர்ப்புகள் இருந்தாலும், BT இரக பயிர்களை எல்லோரும் ஏற்றுக்கொள்வர். இது காலத்தின் கட்டாயம்!

    பதிலளிநீக்கு
  4. இரயிலைப் பார்த்து முதலில் பயந்து ஓடியவன்தான் மனிதன் ,போக போக சரியாப்போகும் அய்யா ![இன்னைக்கி பயப்படாமல் ரயில் முன் பாய்பவர்களும்இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்]
    பதிவர் திருவிழாவில் தங்களை சந்திக்க முடிந்தது ,மகிழ்ச்சி அய்யா !

    பதிலளிநீக்கு
  5. இத்தகைய புதிய ஒட்டு ரகங்களின் விதைகளை எல்லா விவசாயியாலும் தயார் செய்து கொள்ள முடியாது. ஒவ்வொரு தடவையும் அந்தக் கம்பெனிதான் விதைகளைக் கொடுக்கவேண்டும்.


    விவசாயியை விட கம்பெனி செழிக்கும் ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. விவசாயியும் செழிப்பான் ஏனெனில் இவை அதிக மகசூல் கொடுக்கும்.

      நீக்கு
    3. Mr.Arun, Radiation is present everywhere. Many people get cancer because of this. Nuclear energy is unavoidable just as we cannot survive without transport vehicles. Everyday, in every country we hear about traffic accidents. Are we going to abolish transport vehicles?

      You are not aware of the Biogas Development activities promoted by Agri. Dept. But it is not enough to solve our energy needs.

      My living 400 km. away from Kudangulam has no relevance to this post and your saying this is a very poor argument. It amounts to name calling. One resorts to such techniques when he does not have a good point for discussion. Such tactics are adopted only by ladies at Public water taps.

      நீக்கு
    4. So, you think you know better than this guy M.V.Ramana who is a nuclear physicist in USA.

      http://www.dianuke.org/examining-nuclear-energy-in-india-a-conversation-with-m-v-ramana/

      நீக்கு
    5. Sure, I know as much as he knows about nuclear physics. Since he is in USA, he is not a superhuman.

      நீக்கு
    6. He is not super human. But he talks practically whats needed for India. You do not even want to read what he says. But you are ready to say nuclear energy is the only way to go! What a pity!

      நீக்கு
    7. எனக்கு விஞ்ஞான அரசியலில் ஆர்வம் இல்லை.

      நீக்கு
  6. இப்போது நாம் உபயோகிக்கும் காய்கறி வகைகளில் ஏற்கெனவே இது போன்ற மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் இருக்கின்றனவா? பெங்களூர்த் தக்காளி என்று அறியப்படுவது இந்த வகைதானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Nope, Bt brinjal is the first vegetable in India, that has been commercialised. The Bt genese are from Bacillus thuringiensis bacteria and it is Genetically modified. In India Genetically modified brinjal is only being tested not sold yet. Bt Cotton is in existence.

      நீக்கு
  7. I am working in QC Dept in an Reputed MNC construction Company in Gulf. The Quality of construction in India is much lower than developed nations and with so much corruption.
    I hope you are aware of radiation leak in Japan. Japan is a well developed nation with own nuclear technology. Even Japan cannot control the radiation leaks then think abt India.
    Since you are staying 400 kms away from kudankulam you don't think about its radiation effects.
    Instead of nuclear think abt wind, solar, and other conventional sources.
    As an agri officer please answer.. Why Agri department not developing Bio gas... Agri University should have developed Biogas technology but instead you are supporting Nuclear,

    பதிலளிநீக்கு
  8. I am working in QC Dept in an Reputed MNC construction Company in Gulf. The Quality of construction in India is much lower than developed nations and with so much corruption.
    I hope you are aware of radiation leak in Japan. Japan is a well developed nation with own nuclear technology. Even Japan cannot control the radiation leaks then think abt India.
    Since you are staying 400 kms away from kudankulam you don't think about its radiation effects.
    Instead of nuclear think abt wind, solar, and other conventional sources.
    As an agri officer please answer.. Why Agri department not developing Bio gas... Agri University should have developed Biogas technology but instead you are supporting Nuclear,

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ஐயா...

    தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்...
    தாங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்..
    அதற்கான சுட்டி இதோ....

    http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_6.html

    நன்றி.

    நட்புடன்

    மனசு சே.குமார்

    பதிலளிநீக்கு
  10. every body knows using cell phone may affect one health,still used by every one.technology may used for human development.bt is another technology development.farmers using bt cotton seeds got good income because of less expenese in buying pesticide.i have lot of bt farmers details.one may cross check and realise the truth.

    பதிலளிநீக்கு
  11. Please remember that no final word has yet been said on this issue. Final outcome is the one that matters.

    பதிலளிநீக்கு