சனி, 28 மார்ச், 2015

என் அந்தப்புரத்தில் இன்னும் ஒரு ராணி

என் அந்தப்புரத்தில் ஏற்கெனவே பல ராணிகள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். வயதாகி விட்டதால் அவர்களின் எண்ணிக்கை சட்டென்று நினைவிற்கு வருவதில்லை. லேட்டஸ்டாக இப்போது ஒரு ராணி வந்திருக்கிறார்கள்.

ஒல்லியான உருவம். நல்ல வெள்ளை நிறம். பார்க்க துடைத்து வைத்த குத்து விளக்கு போல் இருக்கிறாள். என் மனதிற்கு மிகவும் பிடித்துப் போனது.
                                Image result for Samsung Galaxy tab 4
அவள்தான் சாம்சங்க் கேலக்சி டேப் 4 எனப்படும் அழகி. என் நண்பர் சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து வாங்கி வந்து அன்பளிப்பாகக் கொடுத்தார். விலை கேட்டேன்.. சொல்ல மறுத்து விட்டார். அநேகமாக 20000 ரூபாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஏறக்குறைய கம்ப்யூட்டரில் இருக்கும் அனைத்து விஷயங்களும் இதில் இருக்கின்றன. சின்ன வயசுப் பையன்களுக்கு விளையாட, பொழுது போக்க நல்ல கருவி. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

31 கருத்துகள்:

  1. அதிர்ஷ்டகாரர்தான் நீங்கள்! ஏகப்பட்ட ராணிகள்! எத்தனை என்றுகூட நினைவில் இல்லை என்று சொல்லுகிறீர்கள்! ஜமாயுங்கள்!

    பதிலளிநீக்கு
  2. அந்தப்புர ராணியை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. டாப் நல்ல யூஸ்...
    கணிப்பொறிக்குப் பதிலாக பயன்படுத்துங்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  4. என் பிறந்த நாள் ஒன்றுக்கு என் மகன்கள் ஒரு karborn tablet பரிசளித்திருந்தனர். என் டெஸ்க் டாப்பைவிட வேகம் குறைவானதால் அதை நான் உபயோகிப்பதில்லை. என் பேரன் கேம்ஸ் விளையாடுவான். அதன் எல்லா உபயோகமும் அவனுக்கு அத்துப்படி.

    பதிலளிநீக்கு
  5. என்ன செய்யலாம் விளையாடுங்கள்
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  6. //சின்ன வயசுப் பையன்களுக்கு விளையாட, பொழுது போக்க நல்ல கருவி. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.//

    சின்ன வயசுப்
    பையனாக
    மாறிவிடுங்கள்
    என்று வேண்டி,
    விரும்பிக்
    கேட்டுக்
    கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. நண்பர் துளசிதரன் வீட்டிற்கு (குரங்கு) விருந்தாளிகள் வந்தது போல் ,உங்கள் அந்தப் புரத்திற்கு இந்த ராணி வந்து இருக்கிறீராரோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜிஜிஜிஜிஜி.....ஹஹஹஹஹ் இது நல்லாருக்கே அது துளசி வீட்டிற்கு அல்ல ஜி......கீதாவின் வீட்டிற்கு.....கீதா என்றிருக்குமே கீழே......ம்ம்ம் ...ஆனாலும் நீங்கள் சொல்லுவது ஒரு விதத்தில் சரிதான்.....இருவரும் ஒரேதளத்தில்/அகத்தில் தானே இருக்கின்றனர்......ஹஹஹஹ்

      நீக்கு
  8. என்னிடமும் என் மகன் மூலம் இதே ராணி தானாகவே வந்து வசமாக மாட்டிக்கொண்டிருக்கிறாள்.

    //என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.//

    பார்த்துப்பார்த்து ரஸித்து, கட்டியணைத்தபடி, பெருமூச்சு வாங்கிக்கொண்டு இருக்கலாம். வயதான காலத்தில் நீங்க வேறு என்னதான் செய்யமுடியும் ? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதப்பாருங்க கோபாலகிருஷ்ணன், பழனிக்குப் போய் சிட்டுக்குருவி லேகியம் வாங்கிட்டு வந்து சாப்பிட்டு உடம்பைத் தேத்தி என்ன பண்ணறேன் பாருங்க?

      நீக்கு
    2. ஐயா

      நீங்க பழனிக்குப் போன கதை தான் தெரியுமே. மூடிட்டு திறக்க முடியாமல் பட்ட அவஸ்தை.

      --
      Jayakumar

      நீக்கு
    3. //பழனி. கந்தசாமி ஞாயிறு, 29 மார்ச், 2015 ’அன்று’ 4:07:00 முற்பகல் IST
      இதப்பாருங்க கோபாலகிருஷ்ணன், பழனிக்குப் போய் சிட்டுக்குருவி லேகியம் வாங்கிட்டு வந்து சாப்பிட்டு உடம்பைத் தேத்தி என்ன பண்ணறேன் பாருங்க?//

      :) நீங்க செஞ்சாலும் செய்வீங்க ! :)

      அடுத்த பதிவாக இந்த ‘சிட்டுக்குருவி லேகியம்’ பற்றி பேரெழுச்சியுடன் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். :)

      நீக்கு
    4. ஜெயக்குமார், இப்படி சந்தடி சாக்குல குத்தப்படாது.

      நீக்கு
  9. அழகியின் வருகையோடு வாழ்வு இனிதாக வாழ்த்துகள் அய்யா!
    த ம 5

    பதிலளிநீக்கு
  10. வேலைகளுக்கு இடையில் கொஞ்சம் ரிலாக்ஸ் செஞ்சுக்க (கேம் விளையாட) நானும் ஒரு ஸாம்ஸங் கேலக்ஸி நோட்புக் வச்சுருக்கேன். ரெண்டரை வயசு அதுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னமோ, இந்த மாதிரி கேட்ஜட்களை எல்லாம் ஆசைக்கு வாங்கி வச்சுக்கிறோம். ஆனா அவைகளை நம்மால் முழுசா உபயோகப்படுத்த முடிவதில்லை என்பது என் கருத்து.

      நீக்கு
  11. ஐயா! இந்த ராணிகளில் நாட்டமே இல்லை.
    நீங்கள் அனுபவியுங்கள்.

    பதிலளிநீக்கு
  12. விளையாடுங்கள்... வலைப்பூவை மறந்து விடாதீர்கள்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  13. ஆகா
    புதிதாய் வந்த ராணியைக் கவனியுங்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
  14. ‘தீபம்’ என்ற திரைப்படத்தில் வரும் ‘’அந்தப்புரத்தில் ஒரு மகராணி
    அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்’’ என்ற பாடல் தங்கள் பதிவின் தலைப்பைப்பார்த்ததும் நினைவுக்கு வந்தது. அதை சிறிது மாற்றி மகராஜன் கரத்தில் புது மகராணி என பாடலாம் என எண்ணுகிறேன். என்ன செய்யலாம் என யோசிப்பதை விட்டுவிட்டு அதை உபயோகித்து அதைப்பற்றி ஒரு பதிவு இடுங்களேன். (பார்த்தீர்களா. நானும் ஒரு பதிவிற்கு உங்களுக்கு ‘விஷய தானம்’ தந்துவிட்டேன்!)

    பதிலளிநீக்கு
  15. ஐயா

    இது 6 வது அம்மணி. 1. தாலி கட்டிய அம்மா. 2. கணினி. 3. லூமியா. 4 கிண்டில். 5. ஆல்டோ. 6 காலக்சி டாப்.
    snapdeal.com விலை 15990/-

    3G வசதி உள்ளதால் 3G சிம் போட்டு internet போகலாம்.

    word excel powerpoint போன்ற சங்கதிகளை இதில் செய்யலாம். மேலும் camera வில் இருந்து போட்டோ மற்றும் வீடியோ இவைகளை இதில் போட்டு 7" சைசில் பார்க்கலாம். skype உபயோகித்து அமெரிக்காவில் உள்ள நண்பருடன் internet வழியாக பேசலாம். 3G சிம் வாங்கவில்லை எனில் WIFI உபயோகித்து உங்களுடைய BSNL Broadband வழி internet போகலாம்.ஒரு wifi modem அல்லது router இருக்கவேண்டும்.

    இன்னும் என்னன்னவோ செய்யலாம். அதையெல்லாம் உங்கள் கொள்ளுப் பேரனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

    முக்கியமான ஒன்று இதில் Whatsapp உபயோகிக்க முடியாது.
    உங்களுக்காக specification இணைத்துள்ளேன்.
    Samsung Galaxy Tab 4 7.0 - Full phone specifications
    http://www.gsmarena.com/samsung_galaxy_tab_4...

    Microsoft Tablet with no support for GSM voice communication, SMS, and MMS Nokia This is not a GSM device, it will not work on any GSM network worldwide. Sony NETWORK Technology No cellular connectivity LAUNCH Announced 2014, April Status Available. Released 2014, May

    Dimensions 186.9 x 107.9 x 9 mm (7.36 x 4.25 x 0.35 in)
    Samsung Galaxy
    Also known as Samsung SM-T230, Galaxy Tab4 7.0 Wi-Fi Tab 4 SM-T230 7.0"

    Size 7.0 inches (~70.5% screen-to-body ratio)
    P.S

    You can use this even in bath room for accessing internet via computer, or cook new dishes by seeing recipe in videos at the kitchen online or offline. Offline requires downloading to your tab.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான கணக்கு வைத்திருக்கிறீர்கள் ஜெயக்குமார். உங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கணும்போல.

      லூமியாவைக் கொடுத்திட்டு "சாம்சுங்க் வின் ஸ்மார்ட்" போன் வாங்கினதைப் பற்றி உங்களுக்குச் சொல்லையா?

      இப்போதைக்கு இந்த டேஃப்பில் புஸ்தகங்களும் விடியோக்களும் சேகரித்து வைத்திருக்கிறேன். வியூ கிளியர் ஆக இருக்கிறது.

      நீக்கு
    2. திரு. ஜெயக்குமார்,
      www.gsmarena.com/samsung_galaxy_tab_4_7_0-6251.php
      இந்த லிங்க்கில் நீங்கள் கூறிய விரங்கள் இருக்கின்றன.

      நீக்கு
  16. அடிக்கடி பயணம் செய்கிறவர்கள் புத்தகத்தின் பிடிஎப் வடிவத்தை இதில் பதிவு செய்துவைத்துக் கொள்ளலாம். நான் எனது மொபைலிலே 50 புத்தகங்களை சேமித்து வைத்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது படித்துக்கொள்வேன். டாப் என்றால் இன்னும் வசதியாக இருக்கும். முயன்று பாருங்கள் அய்யா!
    த ம 8

    பதிலளிநீக்கு
  17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  18. அட ஐயா! நீங்க செம யங்க் மேன்!!!! அப்ப நிறைய அழகிகளா?!!! போய் பார்க்கணுமே! ரொம்ப அழகோ?!!! இந்தப் புது அழகியையும் எஞ்சாய் செய்யுங்க யங்க் மேன்!!! ஜமாயுங்க!! ஐயா!!! விவரங்கள் சொல்லலாம்னு வந்தா நிறைய நல்ல விவரங்கள் வந்துள்ளன..எப்படி உபயோகிக்கலாம் என்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. நன்றி, துளசிதரன். இளமை மனதில் இருக்கிறது.என்று எத்தனை நாளைக்குத்தான் சொல்லிகிட்டே இருக்கிறது. செயலில் காட்டினால்தான் பெருமை.

      இது எப்படி இருக்கு?

      (முதலில் போட்ட பதிலில் எழுத்துப் பிழை வந்து விட்டது. அதனால் அதை நீக்கி விட்டு புதிதாகப் போட்டேன்.)

      நீக்கு