திங்கள், 13 ஏப்ரல், 2015

தயிர் சாதம் செய்வது எப்படி?

                             
                                          Image result for curd rice

தயிர் சாதத்திற்கு தயிர் வேண்டும் என்று பல இல்லத்தரசிகள் நினைத்துக்கொண்டிருப்பார்கள். அது மிக மிகத் தவறான கருத்தாகும். நான் இங்கு தயிரில்லாமல் தயிர் சாதம் செய்யும் ரகசியத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நல்ல நைஸ் பச்சரிசி அல்லது புழுங்கரிசி, அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப எடுத்துக் கொள்ளுங்கள். பச்சரிசி சீக்கிரம் வெந்து விடும். புழுங்கரிசி பழைய அரிசியாக இருந்தால் அதிகம் தண்ணீரும் நேரமும் வேண்டும். புதிய அரிசியாக இருந்தால் தண்ணீர் குறைவாகவும் சீக்கிரமாகவும் வெந்து விடும்.

அரை லிட்டர் அரிசியை எடுத்து ஊறவைத்து களைந்து குக்கரில் போதுமான அளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும். சாதாரணமாக சாப்பாடு செய்யும் அளவிற்கு மேல் ஒரு அரை டம்ளர் தண்ணீர் அதிகமாகச் சேர்க்கவும். சாதம் நன்றாகக் குழையவேண்டும். அதற்காக ஓரிரண்டு விசில் அதிகமாக விடவும். பிறகு குக்கரை இறக்கி ஆற விடவும்.

ஓரளவு ஆறினதும் குக்கர் வெய்ட்டை எடுத்து விட்டு மூடியைத் திறக்கவும்.
சாதத்தை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டவும். இப்போது ஒரு பருப்பு மத்தினால் சாதத்தை நன்கு மசிக்கவும். கொஞ்சம் வெண்ணையையும் போட்டுக்கொள்ளலாம். சாதம் எவ்வளவு குழைவாக ஆகிறதோ அந்த அளவிற்கு மசிக்கவும்.

கடைசியாக மசிக்கு முன் தேவையான பொடி உப்பைச் சேர்த்து மசிக்கவும். இப்போது சாதம் கை பொறுக்கும் அளவில் சூடாக இருக்கவேண்டும். இப்போது நன்கு காய்ச்சி ஓரளவிற்கு ஆறின ஒரு லிட்டர் பாலை இந்த மசித்த சாதத்தில் ஊற்றி நன்கு கலக்கவும். இப்போது சாதம் நன்கு இளகி இருக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் இன்னும் கொஞ்சம் பாலை ஊற்றவும்.

ஆச்சா, இப்போது ஒரு ஸ்பூன் தயிரை இதனுள் ஊற்றி கலக்கவும். அப்படியே ஒரு தட்டினால் மூடி வைக்கவும். ஒரு மூன்று மணி நேரம் கழித்து பாத்தாரத்தைத் திறந்து வைக்கவும். ஒரு சிறு வாணலியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணை எடுத்துக்கொண்டு அடுப்பில் வைக்கவும். எண்ணை காய்ந்த பிறகு ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் வெள்ளை உளுத்தம்பருப்பு போட்டு பொரிய விடவும். சூடவே இரண்டு பச்சை மிளகாய் பொடியாக அரிந்து வாணலியில் போட்டு வதக்கவும். கூட சிறிது பெருங்காயம் சேர்த்து, எல்லாவற்றையும் சாதத்திற்குள் கொட்டவும். நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், துருவிய கேரட், விதையில்லா திராக்ஷைப் பழம், மாதுளை முத்துகள் ஆகியவைகளையும் சாதத்தினுள் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவும்.

இப்போது ஐந்து நட்சத்திர ஓட்டல் தரத்தில் தயிர் சாதம் ரெடி. நல்ல ஊறுகாயுடன் சேர்த்து சாப்பிட்டால் என்னைப் போன்ற பெரிய ஆட்களாக இருந்தால் இரண்டு பேர் சாப்பிடதாராளமாகப்  போதும். சாதாரண ஆட்களாக இருந்தால் ஆறு பேர் சாப்பிடலாம்.

பருப்பு மத்து என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்காக-

                                         Image result for மத்து

35 கருத்துகள்:

 1. மிகவும் அருமையான ருசியான பதிவு. கோடை காலத்தில் தயிர் சீக்கரமாகப் புளிப்பாகி விடுவதால் இதுபோலச் செய்தால் நல்ல டேஸ்ட் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பகிர்வுக்கு நன்றிகள்.

  >>>>>

  பதிலளிநீக்கு
 2. //என்னைப் போன்ற பெரிய ஆட்களாக இருந்தால் இரண்டு பேர் சாப்பிடதாராளமாகப் போதும். //

  என் ஒருவனுக்கு மட்டும் என்றால், ஒரு வேளைக்கு, திருப்தியாக வயிறு ரொம்ப இருக்கும். வேறு ஏதும் ஐட்டம்ஸ் கூடுதலாக தேவையே படாது. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கூட ஆவக்காய் ஊறுகாய் வைத்துக்கொண்டால் சும்மா ஜில்லென்று இறங்கிகொண்டேயிருக்கும் சார். இல்லையென்றால் கோங்குரா சட்னியும் சரியா இருக்கும். அப்புறம் உங்கள் வீட்டுக்காரம்மாவுக்கு வடித்துகொட்டிக்கொண்டேயிருக்க வேண்டிய வேலைதான்.

   சேலம் குரு

   நீக்கு
 3. //இங்கு தயிரில்லாமல் தயிர் சாதம் செய்யும் ரகசியத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன்.//

  என்று சொல்லிவிட்டு 'இப்போது ஒரு ஸ்பூன் தயிரை இதனுள் ஊற்றி கலக்கவும்.' என்று சொல்கிறீர்களே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு ஸ்பூனை எல்லாம் கணக்கில் சேர்க்கலாமா?

   நீக்கு
  2. கணக்கு என்றால் கணக்கு இல்லையா? ஒரு ஸ்பூன் என்றாலும் அது ஒரு ஸ்பூன்தானே. சாதம் எல்லாம் வைத்து விட்டு, கடைசியில் ஒரு ஸ்பூன் தயிருக்காக பக்கத்து வீட்டு கதவை தட்ட வேண்டியதாயிற்று. என் வீட்டுக்காரர் என்னை கிண்டல் செய்கிறார். "இதென்ன தயிரில்லாத தயிர் சாதம் என்று சொல்லிவிட்டு அப்புறம் தயிர் சேர்த்து விட்டாய் சினிமாவில் வருகிற மாதிரி - வரும் ஆனா வராது - போல தயிர் இல்லை ஆனா தயிர் உண்டு என்பது போல இருக்கிறது." என்கிறார். சாப்பிட்டால் சாப்பிடுங்கள் இல்லையென்றால் போங்கள் என்று சொல்லிவிட்டேன்

   சேலம் காயத்ரி

   நீக்கு
 4. பருப்பு மத்து இல்லா விட்டால் பாவ் பாஜி மசிப்பானால் மசிக்கலாம். தயிர் சாதம் ஆயிற்று. அடுத்து என்ன சாம்பார் சாதம் செய் முறையா?
  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 5. அடிக்கும் வெயிலுக்கு 3 மணி நேரம் தேவையில்லை என்று நினைக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 6. //"நான் இங்கு தயிரில்லாமல் தயிர் சாதம் செய்யும் ரகசியத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன்."//
  //இப்போது ஒரு ஸ்பூன் தயிரை இதனுள் ஊற்றி கலக்கவும்.//
  இது முரன்பாடு.
  "நான் இங்கு பெருமாள் கோயில் தயிர் சாதம் செய்யும் ரகசியத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன்."

  என்று இருக்க வேண்டும்.
  --
  Jayakumar

  பதிலளிநீக்கு

 7. ஐயா, ஏதோ சமையல் குறிப்பு தரும் வலைப்பக்கம் வந்துவிட்டோமோ என்று சந்தேகம் வந்து விட்டது. அப்புறம் பார்த்தால், வழக்கமான சமாசாரம்தான். ஆனாலும், குறிப்பு இருக்கிறது, பாருங்கள், பிரமாதம்! தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. ஐயா இந்த வெயிலுக்கு ஏற்ற சாதம். எங்கள் வீட்டில் இதே இதே முறைதான் தயிர்சாதம் என்று செய்வதாக இருந்தால்.....சூப்பர் குறிப்பு ஐயா!

  பதிலளிநீக்கு
 9. //தயிர் சாதத்திற்கு தயிர் வேண்டும் என்று பல இல்லத்தரசிகள் நினைத்துக்கொண்டிருப்பார்கள்//

  மிக மிக சரி. மைசூர் போண்டாவில் பின்னே என்ன மைசூரா இருக்கிறது? ஆமை வடை என்ன ஆமையை மாவில் தோய்த்தா எண்ணெயில் போடுகிறோம். அது போல தயிர் சாதம் செய்ய தயிர் வேண்டாம் வேண்டவே வேண்டாம்.

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
 10. //இப்போது ஒரு பருப்பு மத்தினால் சாதத்தை நன்கு மசிக்கவும்//

  பருப்பு மத்து இல்லையென்றால் மிக்சியில் லேசாக ஒரு ஓட்டலாமா? சரியாக வருமா?

  திருச்சி அஞ்சு

  பதிலளிநீக்கு
 11. //இப்போது ஒரு பருப்பு மத்தினால் சாதத்தை நன்கு மசிக்கவும்//

  பருப்பு மத்து நன்றாக இருக்கிறதே.மரத்தினால் செய்ததுதானே. இதனால் மனைவி சொன்ன பேச்சை கேட்காத கணவனை நன்றாக மொத்தலாம் போலிருக்கிறதே. பூரிக்கட்டை எல்லாம் இப்போது out of fashion ஆகிவிட்டது. பருப்பு மத்து கொஞ்ச நாளைக்கு - இன்னொன்று வரும்வரை - மொத்துவதற்கு உபயோகிக்கலாம்

  திருச்சி தாரு

  பதிலளிநீக்கு
 12. //என்னைப் போன்ற பெரிய ஆட்களாக இருந்தால் இரண்டு பேர் சாப்பிடதாராளமாகப் போதும். சாதாரண ஆட்களாக இருந்தால் ஆறு பேர் சாப்பிடலாம்//

  ஆந்திராக்காரர்களாக இருந்து கூடவே ஆவக்காய் ஊறுகாயும் இருந்துவிட்டால் இது பாதி வயிறு கூட காணாது.
  சாதம் இரண்டாவது முறை வைக்கவேண்டியதுதான்

  துளசி மைந்தன்

  பதிலளிநீக்கு
 13. //என்னைப் போன்ற பெரிய ஆட்களாக இருந்தால் இரண்டு பேர் சாப்பிடதாராளமாகப் போதும். சாதாரண ஆட்களாக இருந்தால் ஆறு பேர் சாப்பிடலாம்//

  ஆந்திராக்காரர்களாக இருந்து கூடவே ஆவக்காய் ஊறுகாயும் இருந்துவிட்டால் இது பாதி வயிறு கூட காணாது.
  சாதம் இரண்டாவது முறை வைக்கவேண்டியதுதான்

  துளசி மைந்தன்

  பதிலளிநீக்கு
 14. //என்னைப் போன்ற பெரிய ஆட்களாக இருந்தால் இரண்டு பேர் சாப்பிடதாராளமாகப் போதும்.//

  உங்களைப்பார்த்தால் அப்படி ஒன்றும் சாப்பாட்டு ராமனாக தோன்றவில்லையே. பின்னே எப்படி அரை லிட்டர் சாதம்?
  சாமி உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்.

  காயத்ரி மணாளன்

  பதிலளிநீக்கு
 15. அய்யா அவர்களுக்கும் மற்றும் அனைத்து பின்னூட்ட நண்பர்களுக்கும் எனது இதயம் கனிந்த மன்மத வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
 16. கொடுத்து வைத்தவர் உங்கள் பார்யாள். இவ்வளவு நன்றாக சமையல் குறிப்பு எழுதுபவர் கண்டிப்பாக சுவையாக சமைக்கவும் செய்வார் அல்லவா? ஏதோ தினமும் இல்லையென்றாலும் அவ்வப்போது உங்கள் வீட்டில் நீங்கள் சமையல் அறையில் ஆதிக்கம் செலுத்தலாம். உங்கள் இல்லாள் ஹாலில் அமர்ந்து கொண்டு TV பார்க்கலாம் அல்லது உங்களுக்கு instructions கொடுக்கலாம். எங்கள் வீட்டுக்காரர் நீ சமைத்ததை நான் சாப்பிடுகிறேன் அல்லவா. அஸ்து போதாதா என்று சொல்கிற ரகம்.

  சேலம் காயத்ரி

  பதிலளிநீக்கு
 17. //நான் இங்கு தயிரில்லாமல் தயிர் சாதம் செய்யும் ரகசியத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன்.//

  இதே போல "வேலைக்கு போகாமல் பணம் சம்பாதிக்கும் ரகசியம்" என்று ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும்.

  துளசி மைந்தன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேலைக்குப் போகாமல் பணம் சம்பாதிப்பது ரொம்ப சுலபம். இப்போ நான் இல்லையா?

   நான் அந்தக் காலத்து கவர்ன்மென்ட் உத்தியோகஸ்தன். அதனால் இப்போ காலை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாலும் பென்ஷன் வருகிறது. இப்போ ரூல்சை மாற்றிவிட்டார்கள்.

   நீக்கு
 18. ////நான் இங்கு தயிரில்லாமல் தயிர் சாதம் செய்யும் ரகசியத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன்.//

  நிஜமாகவே நான் இது என்ன மோடி மஸ்தான் வித்தை என்றுதான் நினைத்து படிக்க துவங்கினேன். ஆனால் படித்தவுடன்தான் தெரிந்தது இந்த தந்திரம் என்னவென்று. தயிரின் தந்தையான பாலை ஊற்றி விடுகிறீர்களே. அப்புறம் ஒரு ஸ்பூன் தயிரையும் கலந்து விட்டீர்கள்.
  ஆனாலும் சொன்ன விதம் நன்றாக ரசிக்கும்படி இருந்தது.

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
 19. ////நான் இங்கு தயிரில்லாமல் தயிர் சாதம் செய்யும் ரகசியத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன்.//

  நிஜமாகவே நான் இது என்ன மோடி மஸ்தான் வித்தை என்றுதான் நினைத்து படிக்க துவங்கினேன். ஆனால் படித்தவுடன்தான் தெரிந்தது இந்த தந்திரம் என்னவென்று. தயிரின் தந்தையான பாலை ஊற்றி விடுகிறீர்களே. அப்புறம் ஒரு ஸ்பூன் தயிரையும் கலந்து விட்டீர்கள்.
  ஆனாலும் சொன்ன விதம் நன்றாக ரசிக்கும்படி இருந்தது.

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
 20. முதலில் வடு மாங்கா ஊறணும். அதுக்கப்புறம்தானே தயிர் சாதம் ரெடி பண்ணனும். பாட்டு கேட்டதில்லையா நீங்கள்? போனது போகட்டும். அடுத்த பதிவாக வடு மாங்கா எப்படி போடுவது என்று ஒரு பதிவு போட்டு விடுங்கள்.

  காயத்ரி மணாளன்

  பதிலளிநீக்கு
 21. //நல்ல நைஸ் பச்சரிசி அல்லது புழுங்கரிசி, அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப எடுத்துக் கொள்ளுங்கள். பச்சரிசி சீக்கிரம் வெந்து விடும். புழுங்கரிசி பழைய அரிசியாக இருந்தால் அதிகம் தண்ணீரும் நேரமும் வேண்டும். புதிய அரிசியாக இருந்தால் தண்ணீர் குறைவாகவும் சீக்கிரமாகவும் வெந்து விடும்.//


  பச்சரிசியோ புழுங்கலரிசியோ அவரவர்கள் பழக்கத்திர்கேற்ப எடுத்துக்கொள்ளவேண்டும். புழுங்கலரிசியே தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்கள் திடீரென்று பச்சரிசிக்கு தாவினால் வயிறு அவ்வளவுதான். ஜீரணம் ஆகாது. பிராமின்ஸ் பொதுவாக பச்சரிசிதான் எடுத்துக்கொள்வார்கள். மற்றவர்கள் எந்த அரிசி வேண்டுமானாலும் உபயோகிப்பார்கள். எனவே எந்த அரிசி உபயோகித்துக்கொண்டிருக்கிறோமோ அதையே இந்த தயிரில்லாமல் செய்யும் தயிர் சாதத்திற்கு உபயோகப்படுத்தினால் நன்றாக இருக்கும். மற்றபடி இந்த தயிர் சாதம் ஐந்து நட்சத்திர ஓட்டல் சுவையேதான்.

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
 22. அவித்த வேர்கடலையும் கொஞ்சம் சேர்த்துவிட்டால் போதும். அரிசியை தண்ணீரில் வேக வைப்பதற்கு பதிலாக பாலிலேயே முதலில் வேகவைத்து இதே முறையில் தான் சென்னை அடையார் கேட் ஹோட்டலில் செய்கிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவிற்காக சென்ற போது சாப்பிடும் பொழுது சுவையில் மயங்கி, பரிமாறிய ஸ்டூவரிடமே கேட்டு கேட்டு தெரிந்து கொண்ட மெனு இது.

  பதிலளிநீக்கு
 23. அன்பு நண்பரே!
  வணக்கம்!
  மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
  இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

  சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக!

  நித்திரையில் கண்ட கனவு
  சித்திரையில் பலிக்க வேண்டும்!
  முத்திரைபெறும் முழு ஆற்றல்
  முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


  மன்மத ஆண்டு மனதில்
  மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
  மங்கலத் திருநாள் வாழ்வில்!
  மாண்பினை சூட வேண்டும்!

  தொல்லை தரும் இன்னல்கள்
  தொலைதூரம் செல்ல வேண்டும்
  நிலையான செல்வம் யாவும்
  கலையாக செழித்தல் வேண்டும்!

  பொங்குக தமிழ் ஓசை
  தங்குக தரணி எங்கும்!
  சீர்மிகு சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக! வருகவே!

  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் புத்தாண்டு வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, புதிவை வேலு. நானும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

   நீக்கு
 24. //நான் இங்கு தயிரில்லாமல் தயிர் சாதம் செய்யும் ரகசியத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன்.//

  நீங்க சாதமும் எடுத்துக்கொண்டது போல தெரியலையே!

  பதிலளிநீக்கு
 25. வெங்கட் நாகராஜ் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"தயிர் சாதம் செய்வது எப்படி?":

  நல்ல குறிப்பு! பல உணவகங்களில் இம்முறை தான் பயன்படுத்துகிறார்கள்.....

  பதிலளிநீக்கு
 26. நான் என் மனைவியிடம் தயிர் சாதம் செய்வது எப்படித்தெரியுமா என்று கேட்டேன் BELIEVE ME அவள் இதே செய்முறையைக் கூறினாள்.

  பதிலளிநீக்கு