வியாழன், 16 ஏப்ரல், 2015

என் அந்தப்புரத்து ராணிகள்.

                                          Image result for அரண்மனைகள்
என்னுடய அரண்மனை அந்தப்புரத்தில் ராணிகள் கூட்டம் பெருகிப் போச்சு. இட நெருக்கடி ஆகிவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு ராணியை அடுத்த நாட்டு இளவரசனுக்கு தானம் கொடுத்தேன். இப்போ ஐந்தே ஐந்து ராணிகளுடன் ராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டிருக்கிறேன்.

அவர்கள் யார் யார், அவர்களால் எப்படி என் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.

முதலில் இந்த நாட்டு பட்டத்து ராணி.


சிம்மாசனத்தில் எப்படி அமர்ந்து கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்கிறார்கள் பார்த்தீர்களா?  இவர்கள் ஆலோசனைப்படி நான் நடந்து கொண்டிருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படி இப்படி என்று கொஞ்சம் டிராக் மாறினாலும் வினை வந்து விடும். நான் மூளையுள்ள ராஜாவல்லவா? வம்பு வழக்கிற்கெல்லாம் போக மாட்டேன்.

அடுத்த இளைய ராணி.


இந்த ராணி அரன்மணைக்கு வந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. அரண்மனையின் இட நெருக்கடியைப் பாருங்கள். ரிவர்சில் கொண்டு வந்து சுவற்றோடு ஒட்டி நிறுத்தினாலும் ஒண்ணே முக்கால் அடி இடம்தான் மீதம் இருக்கும். இதைத்தான் அரண்மனைக்கு வருகிறவர்கள் உபயோகிக்க வேண்டும். ரதத்தைக்கொண்டு வந்து நிறுத்தின பிறகு, ரதத்தை விட்டு இறங்க நான் ஒரு சர்க்கஸ் செய்யவேண்டும். 

டிரைவர் சைடு கதவைத் திறக்க முடியாது. ஏனென்றால் அது சுவற்றை ஒட்டி இருக்கிறது. அதனால் ரதத்தை நிறுத்திய பிறகு, கியர் பாக்சைத் தாண்டி இடது புறம் வந்து பாசன்ஜர் சைடு கதவைத் திறந்து அதன் வழியாகத்தான் வெளியில் வரவேண்டும். ஏன் இந்தக் கஷ்டம், ரதத்தை நேராகக் கொண்டு வந்து நிறுத்தி விட்டால் சௌகரியமாக டிரைவர் சைடு கதவைத் திறந்து வெளியில் வரலாமே என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.

நல்ல ரத ஓட்டிகளுக்குத் தெரியும். ரிவர்சில் வரும்போதுதான் சுவற்றை ஒட்டினாற்போல் நிறுத்த முடியும். பார்வேர்டில் வந்தால் சுவற்றோடு ஒட்டி நிறுத்த முடியாது. இட நெருக்கடியால் சுவற்றோடு ஒட்டி நிறுத்தினால்தான் மீதி இருக்கும் இடத்தில் நடக்க முடியும்.

பழைய ரதமே நன்றாகத்தானே இருந்தது. இப்போது இவ்வளவு செலவு செய்து புது ரதம் வாங்கவேண்டிய அவசியம் என்ன என்று பட்டத்து ராணி முணுமுணுத்தார்கள். அடியே ராணி, ராஜா இப்படி ஏதாவது செய்து கொண்டிருந்தால்தான் ராஜா இன்னும் நல்ல செல்வாக்குடன் இருக்கிறார் என்று குடிபடைகள் நம்புவார்கள். இல்லாவிட்டால் ராஜா ஓய்ந்து விட்டார் என்று பேசுவார்கள், அதனால் இது மாதிரி ஏதாவது ஸ்டன்ட் அவ்வப்போது செய்வது அவசியம் என்று சொல்லி வைத்திருக்கிறேன்.

அடுத்து மூன்று ராணிகள்.

1. கம்ப்யூட்டர்.


2. கேலக்சி டேஃப்.


3. ஸ்மார்ட் போன்.இந்த மூன்று ராணிகளும் ஒரே ஜாதியானதால் இவர்களுக்குள் அடிக்கடி போட்டி வந்து விடுகின்றது. நீ பெரியவளா நான் பெரியவளா என்ற ஈகோ பிரச்சினையைத் தீர்க்கவேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் கம்ப்யூட்டரிலிருந்துதான் மற்ற இருவரும் "வை-பை" சிக்னல்கள் பெற வேண்டும். சமீபத்தில் நடந்த லடாய் பற்றி அறிந்திருப்பீர்கள். 

இப்போதைக்கு இந்த ராணிகளை ஒரே மாதிரி சிந்திக்க வைப்பதில்தான் என் நேரம் முழுவதும் செலவாகிறது. எப்படியும் இவர்களை வழிக்கு கொண்டு வந்து விடுவேன் என்பதில் சந்தேகம் இல்லை.

அரண்மனையில் இட நெருக்கடி காரணமாக இனி மேல் புதிய ராணிகளை சேர்ப்பதில்லை என்ற முடிவிற்கு வந்திருக்கிறேன்.

55 கருத்துகள்:

 1. கேலக்சி டேபும், ஸ்மார்ட் ஃபோனும் கவர்கின்றன.

  பதிலளிநீக்கு
 2. உங்கள் பட்டத்து ராணி சமையல் செய்வதை(தயிர் சாதம் பண்ணுவது இட்லி சாம்பார்) பார்த்து காப்பி பேஸ்ட் பதிவு போடுகிறீர்களா என்ன?

  பதிலளிநீக்கு
 3. //அரண்மனையில் இட நெருக்கடி காரணமாக இனி மேல் புதிய ராணிகளை சேர்ப்பதில்லை என்ற முடிவிற்கு வந்திருக்கிறேன்.//

  நாளை முதல் குடிக்க மாட்டேன், பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது!

  பதிலளிநீக்கு
 4. ஐயா
  அப்போ கிண்டிலைக் கொடுத்துவிட்டீர்களா? ஐயோ! அது ஒன்று தான் அறிவு (knowledge) மட்டுமே கொடுக்கும் ராணியாக இருந்ததாலா?

  பின்னே எனக்கு எப்போதும் சந்தேகம் வரும் என்று தெரியும் அல்லவா? டேபில் 27` காட்டுது. போனில் 32` காட்டுது, அதவும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் (கவுண்டன் பாளையம்). இரண்டு பேரும் சண்டையா?

  அடுத்த சந்தேகம். நீங்க இருப்பது R S புரம் என்று எனது ஊகம். கவுண்டன் பாளையம் வீடு மாறிட்டீர்களா?
  wifi மோடம் அல்லது router இல்லையா?

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 5. //அவர்கள் யார் யார், அவர்களால் எப்படி என் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.//

  ஆனாலும் இது ரொம்ப ரொம்ப அநியாயம். அவர்களால் எப்படி என் வாழ்க்கை ரம்யமாக (அ) ஆனந்தமாக (அ) சுவாரஸ்யமாக ஆக்கப்படுகிறது என்று எழுதினால் நியாயம் உண்டு. அதை விடுத்து பாதிக்கப்படுகிறது என்று எழுதினால் நான் உங்கள் பார்யாளிடம் இதைக்காட்டி நீங்கள் நிஜமாகவே பாதிக்கப்படும்படி செய்து விடுவேன் ஜாக்கிரதை

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
 6. கிண்டிலும் கேலக்சி டேப் பும் ஏறக்குறைய ஒரே வேலையைத்தான் செய்கின்றன. அப்புறம் எதற்கு இரண்டு. இரண்டையும் மேய்ப்பது கஷ்டம்.
  கிண்டிலை பேராண்டிக்குக் கொடுத்துவிட்டேன்.

  27 - 32 நான் கவனிக்கவில்லை. சண்டை இரண்டு பேருக்குள் மட்டும் இல்லை. மூணு பேர்களுக்கிடையில். கம்ப்யூட்டருக்குள் வைரஸ் புகுந்து விட்டது. ஆபரேட்டிங்க் சிஸ்டத்தை ரீபூட் செய்ய முழுசா இரண்டு நாள் ஆச்சு. கொஞ்சம் கொஞ்சமாத்தான் சமாதானம் செய்யவேண்டும்.

  நான் 1935 ல் பிறந்ததிலிருந்து 30 வருடம் ஆர். எஸ்.புரத்தில் குடியிருந்தேன். 1965 ம் வருடம் அந்த வீட்டை விற்று விட்டு சாய்பாபா காலனியில் இடம் வாங்கி வீடு கட்டினோம்.என் அப்பா அப்போது இருந்தார். அன்றிலிருந்து இன்று வரை அங்கேயேதான் குடியிருக்கிறேன். Nearest internet weather Station கவுண்டம்பாளையத்தில்தான் இருக்கிறது போலும். என் வீட்டிலிருந்து கவண்டம்பாளையம் ஒரு கி.மீ. தூரம் .அதனால் காலநிலை அறிக்கை கவுண்டம்பாளையம் என்று காட்டும்.

  கம்ப்யூட்டருக்கு வை-பி யோடு கூடிய மோடம்தான் உபயோகிக்கிறேன். டேப், ஸ்மார்ட் போன் இரண்டிற்கும் இதிலிருந்துதான் வை-பி சிக்னல்கள் போகின்றன. போனில் தனியாக இன்டர்நெட் டேட்டா கனெக்ஷனும் வாங்கியிருக்கிறேன். எல்லாக் கண்றாவிகளையும் வாங்கி வைத்திருக்கிறேன். அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஆயிரத்தெட்டு அருவாளாம் என்கிற கதைதான். எப்படியோ தகிடுதித்தம் செய்து காலம் ஓட்டுகிறேன். உங்களையும் அறுக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த வயதில் இவ்வளவு உற்சாகமாக புது டெக்னாலாஜி சாதனங்களை இளவயது பசங்களை விட இலகுவாக சாமார்த்தியமாக உபயோகிக்கிறீர்கள். உங்கள் இடுப்பில் ஆயிரத்தெட்டு அறிவாளென்ன ஒரு லட்சம் அரிவாள் கூட இருக்கலாம். எங்கள் ஏகோபித்த முடிவு இதுதான்.

   திருச்சி தாரு

   நீக்கு
  2. ஐயா
   இல்லை. நீங்கள் அடுத்து மடிக்கணினி என்ற ராணியை கொண்டு வருவீர்கள். இது நிச்சயம்.

   --
   Jayakumar

   நீக்கு
 7. // சிம்மாசனத்தில் எப்படி அமர்ந்து கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்கிறார்கள் பார்த்தீர்களா?//.


  சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு அழுவதற்கான (அதாவது வெங்காயம் உரித்துக்கொண்டு) முஸ்தீபுகள் அல்லவா செய்து கொண்டிருக்கிறார்கள். ஜம்மென்று உட்கார்ந்து கொண்டு நீங்கள் வெங்காயம் உரித்துக்கொண்டிருந்தால் அல்லவா "ராஜ்ய பரிபாலனம்" என்று அர்த்தம்.

  திருச்சி அஞ்சு

  பதிலளிநீக்கு
 8. // சிம்மாசனத்தில் எப்படி அமர்ந்து கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்கிறார்கள் பார்த்தீர்களா?//.


  சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு அழுவதற்கான (அதாவது வெங்காயம் உரித்துக்கொண்டு) முஸ்தீபுகள் அல்லவா செய்து கொண்டிருக்கிறார்கள். ஜம்மென்று உட்கார்ந்து கொண்டு நீங்கள் வெங்காயம் உரித்துக்கொண்டிருந்தால் அல்லவா "ராஜ்ய பரிபாலனம்" என்று அர்த்தம்.

  திருச்சி அஞ்சு

  பதிலளிநீக்கு
 9. // சிம்மாசனத்தில் எப்படி அமர்ந்து கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்கிறார்கள் பார்த்தீர்களா?//.


  உண்மையிலயே பட்டத்து ராணிதான். வீட்டில் இருக்கும்போது அதுவும் சமையல் செய்துகொண்டிருக்கும் போது இவ்வளவு பெரிய ஜரிகை வைத்த புடவை அணிந்து கொண்டிருக்கிறார்களே. இது புகைப்படத்திற்காக கட்டிக்கொண்ட புடவையா இல்லை வீட்டில் இருக்கும்போது நிறைந்த சுமங்கலியாக கட்டிக்கொண்டிருக்கும் புடவையா? எப்படியென்றாலும் ராஜவுக்கேத்த பட்டத்து ராணிதான்.

  திருச்சி தாரு

  பதிலளிநீக்கு
 10. //இவர்கள் ஆலோசனைப்படி நான் நடந்து கொண்டிருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படி இப்படி என்று கொஞ்சம் டிராக் மாறினாலும் வினை வந்து விடும். நான் மூளையுள்ள ராஜாவல்லவா? வம்பு வழக்கிற்கெல்லாம் போக மாட்டேன்.//

  ரொம்பவுமே clear ஆக இருக்கிறீர்கள். இந்த clarity வந்துவிட்டால் அதற்கு பின்னர் பிரச்சனையே இல்லை. ஆனால் இந்த மனோபாவம் வருவதற்கு நிறைய நாட்களாகும்தான். அப்புறமென்ன சுகராஜபோகம்தான். அனுபவியுங்கள்

  துளசி மைந்தன்

  பதிலளிநீக்கு
 11. //இவர்கள் ஆலோசனைப்படி நான் நடந்து கொண்டிருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படி இப்படி என்று கொஞ்சம் டிராக் மாறினாலும் வினை வந்து விடும். நான் மூளையுள்ள ராஜாவல்லவா? வம்பு வழக்கிற்கெல்லாம் போக மாட்டேன்.//

  சுத்தம்தான். ரொம்ப நாகரிகமாக கொத்தடிமை என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்.

  குருப்ரியா

  பதிலளிநீக்கு
 12. //இவர்கள் ஆலோசனைப்படி நான் நடந்து கொண்டிருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படி இப்படி என்று கொஞ்சம் டிராக் மாறினாலும் வினை வந்து விடும். நான் மூளையுள்ள ராஜாவல்லவா? வம்பு வழக்கிற்கெல்லாம் போக மாட்டேன்.//

  சொல்வதை செய்வதற்கு மூளையே தேவை இல்லையே. யோசனை செய்தால்தானே கொஞ்சம் அப்படி இப்படி டிராக் மாற தோன்றும். வம்பு வழக்கெல்லாம் வரும். இல்லையா

  காயத்ரி மணாளன்

  பதிலளிநீக்கு
 13. //இவர்கள் ஆலோசனைப்படி நான் நடந்து கொண்டிருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படி இப்படி என்று கொஞ்சம் டிராக் மாறினாலும் வினை வந்து விடும். நான் மூளையுள்ள ராஜாவல்லவா? வம்பு வழக்கிற்கெல்லாம் போக மாட்டேன்.//

  மூளையுள்ள ராஜாதான். அதனால்தான் அப்படி இப்படி என்று டிராக் மாறாமல் மனைவி சொல்லே மந்திரம் என்று இருக்கிறீர்கள். ஆனால் அப்படி இருந்து விட்டால் சந்தோசம் ஒரு பக்கம் நமக்கு தேவையானதை நாம் சொல்லாமலேயே நமது பார்யாள் செய்துவிடுவார்கள் (நாம் சிறிது கோடு காட்டினால் போதும்) என்பது இன்னொரு பக்கம். இந்த சின்ன ரகசியம் பலருக்கு தெரியாததால்தான் ஏகப்பட்ட தொந்திரவே.

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
 14. //அரண்மனையின் இட நெருக்கடியைப் பாருங்கள்//

  மேலேயுள்ள அரண்மனையின் படத்தைப்பார்த்து அசந்து விட்டேன், பிறகுதான் தெரிந்தது அது கூகிள் படம் என்று. நம்மை மாதிரி அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கெல்லாம் இப்படிப்பட்ட இட நெருக்கடிகள் சாஸ்வதமாயிட்றே. சமாளியுங்கள் காருக்கு scratch ஏதும் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
 15. //ரதத்தை நிறுத்திய பிறகு, கியர் பாக்சைத் தாண்டி இடது புறம் வந்து பாசன்ஜர் சைடு கதவைத் திறந்து அதன் வழியாகத்தான் வெளியில் வரவேண்டும்.//

  உங்கள் வயதை கருத்தில் கொண்டு பார்த்து வாருங்கள். கியர் பாக்சைத் தாண்டி வரும்போது பார்த்து நிதானமாக காலை தூக்கி வையுங்கள். சுலுக்கிகிலுக்கி கொள்ளப்போகிறது. தினசரி சர்க்கஸ்தான் போலிருக்கிறது.

  திருச்சி அஞ்சு

  பதிலளிநீக்கு
 16. //அடியே ராணி, ராஜா இப்படி ஏதாவது செய்து கொண்டிருந்தால்தான் ராஜா இன்னும் நல்ல செல்வாக்குடன் இருக்கிறார் என்று குடிபடைகள் நம்புவார்கள். //

  வாழ்க்கையை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். நாம் இருப்பதை மற்றவர்களுக்கு காட்டிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையென்றால் மறந்தே விடுவார்கள். ஆனால் நாம் நமக்காக வாழ்ந்தால் போதாதா? ஆனால் அப்படி வாழ ரொம்பவுமே மனப்பக்குவம் வேண்டும்.

  திருச்சி தாரு

  பதிலளிநீக்கு
 17. //இப்போதைக்கு இந்த ராணிகளை ஒரே மாதிரி சிந்திக்க வைப்பதில்தான் என் நேரம் முழுவதும் செலவாகிறது//

  பட்டத்து ராணிதான் பாவம். இவர்களுக்கேநேரம் முழுவதும் செலவாகி விட்டால் அவர்களுக்கு ஏது நேரம்? ராஜாவின் சந்தோசத்துக்காக விட்டுக்கொடுத்து விட்டார்கள் போலிருக்கிறது.

  காயத்ரி மணாளன்

  பதிலளிநீக்கு
 18. //இப்போதைக்கு இந்த ராணிகளை ஒரே மாதிரி சிந்திக்க வைப்பதில்தான் என் நேரம் முழுவதும் செலவாகிறது//

  சரிதான். பட்டத்து ராணியோ இளைய ராணியோ கூட இருக்கும்போது அவர்கள்தானே முழு நேரமும் எடுத்துகொள்கிறார்கள். இந்த மூன்று பேரும் அப்போது அனாதைகள்தானே. அதனால்தான் நீங்கள் இவர்களுடன் இருக்கும்போது உங்கள் உயிரை எடுத்து விடுகிறார்கள்.

  துளசி மைந்தன்

  பதிலளிநீக்கு
 19. //அரண்மனையில் இட நெருக்கடி காரணமாக இனி மேல் புதிய ராணிகளை சேர்ப்பதில்லை என்ற முடிவிற்கு வந்திருக்கிறேன்.//

  முடிவில் உறுதியாக இருக்க முடியாதென்று நினைக்கிறேன்.

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
 20. //அரண்மனையில் இட நெருக்கடி காரணமாக இனி மேல் புதிய ராணிகளை சேர்ப்பதில்லை என்ற முடிவிற்கு வந்திருக்கிறேன்.//

  ஆனானப்பட்ட விஸ்வாமித்திரரே ரம்பா, மேனகை, திலோத்தமை போன்ற இந்திரசபை நடன ராணிகளை பார்த்து ஆடிபோய் விட்டாராம். நாம கவுண்டர் எம்மாத்திரம். புது ராணியை பார்க்கும் வரைதான் இந்த வைராக்கியமெல்லாம்.

  துளசி மைந்தன்

  பதிலளிநீக்கு
 21. //அரண்மனையில் இட நெருக்கடி காரணமாக இனி மேல் புதிய ராணிகளை சேர்ப்பதில்லை என்ற முடிவிற்கு வந்திருக்கிறேன்.//

  பட்டத்து ராணியின் ஆணை என்று உண்மையை சொல்லிவிட்டு போங்களேன். ஏதோ நீங்களே முடிவெடுத்த மாதிரி சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். எங்களுக்கென்ன புரியாத என்ன?

  காயத்ரி மணாளன்

  பதிலளிநீக்கு
 22. //அரண்மனையில் இட நெருக்கடி காரணமாக இனி மேல் புதிய ராணிகளை சேர்ப்பதில்லை என்ற முடிவிற்கு வந்திருக்கிறேன்.//

  நல்ல முடிவுதான். இட நெருக்கடி மட்டும் காரணமில்லை. உங்கள் நேர ஒதுக்கீடும் கடினம் என்பதால்தான் இந்த முடிவு என்று நினைக்கிறேன்.

  திருச்சி அஞ்சு

  பதிலளிநீக்கு
 23. //இப்போ ஐந்தே ஐந்து ராணிகளுடன் ராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டிருக்கிறேன்.//

  அப்போது பஞ்ச பாண்டவர்களுடன் வாசம் செய்தால் திரௌபதி
  இப்போது நீங்கள் பஞ்ச பாண்டவிகளுடன் வாசம் செய்வதால் இன்று முதல் திரௌபதன் என்று அறியப்படுவீர்கள்.
  என்ன கவுண்டரே புதிய பெயர் நன்றாக இருக்கிறதா?

  காயத்ரி மணாளன்

  பதிலளிநீக்கு
 24. வீடு பொன் விழா (50 வருடம் நிறைவு) கொண்டாடுங்கள். அப்படியே உங்கள் 80 வயது நிறைவையும் கொண்டாடுங்கள். கல்யாணம் ஆகி 50 வருடத்திற்கும் மேல் ஆனால் என்ன. அதையும் இந்தக் கொண்டாட்டங்களோடு சேர்த்து செய்யுங்கள். jamaai

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டாடிவிடவேண்டியதுதான்.

   நீக்கு


 25. //அரண்மனையில் இட நெருக்கடி காரணமாக இனி மேல் புதிய ராணிகளை சேர்ப்பதில்லை என்ற முடிவிற்கு வந்திருக்கிறேன்.//

  அரண்மனையை விரிவுபடுத்தி புதிய ராணிகளை சேர்க்கலாமே!

  பதிலளிநீக்கு
 26. சுவாரஸ்யமாக சொல்லி அசத்துகிறீர்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 27. //எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு ராணியை அடுத்த நாட்டு இளவரசனுக்கு தானம் கொடுத்தேன். //

  ஆஹா, அந்த அதிர்ஷ்டமுள்ள ராணியும், அவரை அடைந்த இளவரசனும் யார் என தெரிந்துகொள்ளாவிட்டால் என் மண்டையே வெடித்திடும் போல உள்ளதே !

  பதிலளிநீக்கு
 28. //முதலில் இந்த நாட்டு பட்டத்து ராணி.//

  //நான் மூளையுள்ள ராஜாவல்லவா? வம்பு வழக்கிற்கெல்லாம் போக மாட்டேன்.//

  தெரிகிறது .... புரிகிறது. கண் எரிச்சலுடன் அவர்கள் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து, தங்களுக்காகவே வெங்காய சாம்பாரோ, வெங்காய தூள் பக்கோடாவோ செய்துதர மட்டுமே சிம்மாசனத்தில் கையில் கத்தியுடன் அமர்ந்துள்ளார்கள்.

  வெங்காயத்தை தண்ணியில் போட்டு அதன் பின் உரித்து நறுக்கினால், வெங்காயத் தோலிகளும் இங்குமங்கும் பறக்காது. கண்களும் அதிகமாக எரியாது. தாங்கள் உதவி செய்யக்கூடாதோ !

  நானாக இருந்தால் என் ராணி கையில் கத்தியை எடுக்கவே விட மாட்டேன். நானே அழகாக உரித்தி நறுக்கியும் தந்துவிடுவேனாக்கும். :)

  பதிலளிநீக்கு
 29. அடுத்த இளைய ராணி, பார்க்க மிகவும் நல்லாவே பளபளப்பாகவே இருக்கிறார்.

  இப்போதெல்லாம் கார் வாங்குவது மிகவும் சுலபம். அதை பார்க் செய்ய இடம் கிடைப்பதோ, கிடைத்த இடத்தின் நெருக்கடியில் கொண்டுபோய் அதை பார்க் செய்வதோ, மிகவும் நம் பொறுமையை சோதிக்கும் செயலாகத்தான் உள்ளது என்பதே உண்மைதான். அதனாலேயே நான் எனக்கென்று இன்னும் சொந்தமாகக் கார் வாங்கவில்லை. என் மகன்கள் இருவர் கார் வைத்துக்கொண்டுள்ளார்கள். அதைப்பார்த்து மகிழ்வதோடு சரி. நமக்கு ‘கேட்டதும் கொடுக்கும் கண்ணன்’ போல கூப்பிட்டதும் ஓடிவர நிறைய ஆட்டோக்கார்களும், Call Taxi Walaக்களும் வீட்டுக்கு அருகேயே உள்ளனர். அடிக்கடி இவ்விதமான ராணிகளின் மேல் ஏறித்தான் சவாரி செய்துகொண்டிருக்கிறேன். அது ஒரு தனி டேஸ்ட் அல்லவா ! :)

  பதிலளிநீக்கு
 30. அடுத்து மூன்று ராணிகளில் எல்லோருமே என்னிடமும் இப்போது உள்ளனர்.

  அவர்கள் எல்லோரையும் அவ்வப்போது அரிப்புக்குத்தகுந்தவாறு பயன் படுத்திக்கொள்வது உண்டு.

  இருப்பினும் அவற்றில் முதலாவதாக மோதமுழங்க நல்லா பெரிசாகக் காட்டியுள்ளீர்களே .... [COMPUTER DESK TOP] அவள் தான் எனக்கு என் முரட்டுக்கைகளுக்கும், விரல்களுக்கும், உணர்வுகளுக்கும், உற்சாகத்திற்கும் நன்கு ஈடுகொடுத்து வருபவள்.

  படங்களுடன் கூடிய அழகான இயல்பான உணர்வு பூர்வமான பதிவுக்கு நன்றிகள் ஐயா. - VGK

  பதிலளிநீக்கு
 31. There is a woman behind every successful man என்று சொல்வார்கள். எங்கள் கவுடருக்கு பின்னே இருக்கும் அந்த பட்டத்து ராணியை இப்போதுதான் பார்க்கிறோம். இதற்கு கூட புகைப்படத்துக்கு போஸ் கொடுக்காமல் வெங்காயத்தை உரித்துக்கொண்டிருக்கிரார்கள். சீக்கிரம் தனது வீட்டுக்காரருக்கு டிபன் செய்து கொடுத்து பதிவுக்கு பின்னூட்டமிட்டவர்களுக்கு பத்தி பின்னூட்டமிட அனுப்பி வைக்க வேண்டும் என்ற அந்த "கருமமே கண்ணாயினார்" அம்மணிதான், கவுண்டரே, உங்கள் வெற்றிக்கு காரணம். அவர்களுக்கு எங்கள் சார்பில் ஒரு பெரிய நன்றி சொல்லுங்கள்.

  சேலம் காயத்ரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா சொல்லலை என்றாலும் உங்களுக்கு ஒரு சின்ன ரகசியம் சொல்கிறேன். பட்டத்து ராணி போட்டோ 2012 இல் எடுத்தது. அப்போ சின்ன வெங்காயம் சல்லிசாக கிடைத்தது.

   --
   Jayakumar

   நீக்கு
 32. தேவைக்கு அதிகம் ( ராணிகளானாலும்) கூடாது என்பது என் கொள்கைஅது சரி தேவை ஆளுக்கு ஆள் மாறுமே/

  பதிலளிநீக்கு
 33. என்ஜாய் ஐயா என்ஜாய்
  தமிழ் மணம் 6தல் தருகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த வயசில முடிஞ்ச அளவுக்கு என்ஜாய் பண்ணறேன். அவ்வளவுதான்.

   நீக்கு
 34. பதில்கள்
  1. மொதல்ல தமிழ்ல எழுதப் பழகுங்க, அப்புறமா பதிவுகள்ல கருத்து தெரிவிக்கலாம். மங்குனி ஆட்டம் ஆடவேண்டாம்.

   நீக்கு
 35. அந்தப்புரத்து ராணிகளை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. அறிமுகப்படுத்தாமல் போயிருந்தால் நாங்கள் வேறுமாதிரி (நல்ல மாதிரிதான்) நினைத்திருப்போம்.

  பதிலளிநீக்கு
 36. அவங்கவங்க ஒரு ராணியோடவே சமாளிக்க முடியாம கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கப்ப நீங்க ஐந்து ராணிகளை சரியாய்ச் சமாளிப்பதற்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 37. ஐயா! நீங்கள் செம மஜா தான் ஐயா! அந்தப்புரத்து ராணிகளில் அந்த சிறியவை இரண்டும் ஈர்க்கின்றன. அவர்கல் இருவரும் தான் போட்டியோ. வேறு வேறு டிகிரி காட்டுகின்றனர்?!!

  பதிலளிநீக்கு
 38. ஐந்து ராணிகளுடன் ராஜ்ய பரிபாலனம்.....

  எஞ்சாய்!

  பதிலளிநீக்கு