செவ்வாய், 21 ஏப்ரல், 2015

என்ன கொடுமை இது?

இப்போது தமிழ்மணம் திரட்டியில் வெளியிடப்படும் பல பதிவுகளில் அவைகளைத் திறந்தவுடன் கீழ்க்கண்ட ஸ்கிரீன் வருகிறது.


இந்த ஸ்கிரீனில் கர்சரைக்கொண்டு என்ன செய்தாலும் இடிச்ச புளியாட்டம் அப்படியே நிற்கிறது. இந்தப் பதிவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனாலும் இது அநியாயத்திற்கு கொடுமை. இதைக்கேட்பார் யாருமில்லையா?

22 கருத்துகள்:

 1. இதுபற்றி அநேகம் பேர் எழுதியும் தமிழ்மணம் ஏனோ கண்டுகொள்ளவில்லை. இத்தகைய பதிவுகள் பக்கம் போகாமல் இருப்பதே இதற்கு தீர்வு.

  பதிலளிநீக்கு
 2. கொடுமையே தான். இவங்களும் அதற்காக குமுறுறாங்க.
  http://ramaniecuvellore.blogspot.com.au/2015/04/blog-post_62.html

  பதிலளிநீக்கு
 3. //ஆனாலும் இது அநியாயத்திற்கு கொடுமை.//

  இதுபோன்ற கொடுமைகளை சந்திக்காமல் மகிழ்ச்சியுடன் நான் இருக்கிறேன். ஏனெனில் நான் தமிழ்மணம் மற்றும் அது போன்ற எந்தத்திரட்டிகள் பக்கமும் செல்வதே இல்லை. :)

  பதிலளிநீக்கு
 4. இது பெரிய தலைவலியா இருக்கு. எதுவும் வியாபார உத்தியோ என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. தமிழ் மணத்தில் நாம் அறியாத பதிவர் யாருடையவாவதுபதிவைப் படிக்கலாம் என்று ஓரிரு முறை போனதுண்டு believe me ஸ்க்ரீன் முழுவதும் விளம்பரங்கள். பதிவை படிக்க முடியாதபடி என்ன செய்தாலும் போவதில்லை. புதியவர் பதிவுகள் படிக்கும் ஆர்வமே போய்விட்டது.

  பதிலளிநீக்கு
 6. ஐயா!
  கீழ்கண்ட சுட்டியில் சென்று பதிவு (Register) செய்துகொள்ளுங்கள்
  http://www.inoreader.com

  பிறகு அதிலிருக்கும் Search or Subscribe - ல் நீங்கள் பார்க்கவிருக்கும் பதிவர்களின் பக்கங்களை (உதா.http://swamysmusings.blogspot.com) என்று இடவும்.பிறகு அதிலிருக்கும் Subscriptions என்பதின் மேல் Mouse Right Cclik செய்யவும், அதில் Show Updated subscriptions என்பதை டிக் அடித்துக்கொள்ளவும். அவ்வளவுதான்.

  இனிமேல் நீங்கள் எந்த தேவை இல்லாத பதிவையும் படிக்கத்தேவையில்லை. அதே போல் அவர்கள் புதிதாக ஏதேனும் எழுதியிருந்தால் அதுவே நீங்கள் படிக்காதவை என்று காட்டும். இது ஒரு இலவச சேவை. உங்கள் ஸ்மார்ட்போனிலும் இந்த செயலியை இட்டுக்கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
 7. அட்ப்லோக் ADBLOCK. நிறுவிக்கொள்ளுங்கள் ஐய்யா . விளம்பரம் வராது.

  M. செய்யது
  துபாய்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ADBLOCK. நிறுவியிருக்கிறேன். இருந்தாலும் இந்த விளம்பரங்கள் வருகின்றன.

   நீக்கு
  2. Adblock அல்ல, Adblock Plus 2.6.9 ஐ நிறுவிக்கொள்ளுங்கள். விளம்பரங்களைத் தடைசெய்யும்.

   நீக்கு
  3. Firefox உலவியின் Tools- adblock plus சென்று disable options அருகே டிக் மார்க் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.Disable செய்ய 3 options உண்டு. இவற்றில் ஏதேனும் ஒன்று செலக்ட் ஆகியிருப்பின் மட்டுமே நீங்கள் சென்ற பதிவில் விளம்பரங்கள் தோன்றுகின்றன

   நீக்கு
 8. தமிழ் மணத்தில் இப்போது பணம் வீசுகிறதோ என்னவோ?

  பதிலளிநீக்கு
 9. பூனைக்கு எத்தனை முறைதான் மணியைக் கட்டுவது?

  பதிலளிநீக்கு
 10. விளம்பரம் முழுமையாக இருப்பதனால் படிக்க முடியவில்லை. கண்டிப்பாக தடை செய்ய வேண்டும்.

  பதிலளிநீக்கு
 11. தமிழ்மனத்தில் பார்க்காததால் இது பற்றித் தெரியவில்லை. வலைத்தளத்தில் சைடிலேயெ வந்துவிடுமே...அதுதான்....

  பதிலளிநீக்கு