சனி, 7 நவம்பர், 2015

மேலும் சில சொந்தக் கருத்துகள்

என்னுடைய கம்பயூட்டரில் இணைய இணைப்பு இல்லாதபோது என் கைபேசியில் இருக்கும் இணைய இணைப்பை பயன் படுத்திப் பார்த்தேன். அதில் உள்ள தட்டச்சுப் பலகை மிகவும் சிறியதாகையால் என்னால் அதில் தட்டச்சு செய்ய முடியவில்லை. இரண்டாவது தமிழ் எழுத்துக்களை அதில் தரவிறக்கி வைக்காததால் ஆங்கிலத்தில்தான் தட்டச்சு செய்ய முடிந்தது.

என்னுடைய இணையம் செயல்படவில்லை என்று ஆங்கிலத்தில் ஒரு வரி மட்டும் தட்டச்சு செய்து வெளியிட்டேன்.

All bloggers to kindly note. My internet is not working for the last two days.  Hence my silence.

அதற்கு வந்த ஒரு பின்னூட்டத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

அருமை அய்யா.. பாருங்க பதிவர்களே எங்க நைனா எவ்வளவு அருமையா...!

திருக்குறள ஒரே வரியில் அதுவும் வேற்று மொழியில சொல்லியிருக்காரு..

ஆனா அதுக்கு விளக்கம்தான் எனக்கு தெரியல காரணம்.. எனக்கு கன்னடம் படிக்க தெரியாது...

இதை நகைச்சுவை என்று எடுத்துக்கொள்ளவா அல்லது ஒரு பித்தனின் பிதற்றல் என்று எடுத்துக்கொள்ளவா என்று புரியாமல் குழம்புகிறேன்.

இந்த பின்னூட்டம் எனக்கு மனவருத்தம் தந்தது.

ஆனால் புலம்புவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

21 கருத்துகள்:

  1. நகைச்சு வை என்று எடுத்துக் கொண்டு விடுங்கள்!

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் ஸார். குறைந்த பட்சம் வயதுக்காவது மதிப்பு தரலாம்.நகைச்சுவை என்று நினைத்து எழுதுபவர்கள் ஒரு ஸ்மைலியாவது போடுவார்கள். அது விளையாட்டுக்குத்தான் என்பதைச் சொல்லும்.இங்கு அதுவும் இல்லை என்றால் என்ன எடுத்துக் கொள்ள?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பே சிவம் அவர்களின் வருத்தம் புரிகிறது. உரிமையுடன் நகைச்சுவையாய் எழுதி இருக்கிறார் என்று தெரிகிறது. நடந்தவை கடக்க, நடப்பவை நல்லதாகட்டும்!

      :)))

      நீக்கு
    2. நன்றி ஸ்ரீராம். இதை விட்டு விடுவோம்.

      நீக்கு
  3. ஆள் ஆளுக்கு அன்பே சிவம் ஏன் அப்படி எழுதினார் என்று யூகம் செய்வதை விட, அவரே (அன்பே சிவம்) இங்கு வந்து விளக்கம் சொல்லி விட்டால் நன்றாக இருக்கும். ஏனெனில் அவரே அன்பே தமிழ், அன்பே சிவம் பெயர்க் குழப்பத்தில் வருத்தப் பட்டவர்; அவருக்கு தனது பின்னூட்டத்தால், இன்னொரு வலைப்பதிவருக்கு ஏற்பட்ட வருத்தம் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா நான் மிகவும் மதிக்கும் ஒருவரை நான் ஏன் காயப்படுத்த முயற்சிக்கப் போகிறேன். அவரை நான் என் தந்தையாகவே மனதளவில் சுவீகரித்துக்கொண்டு பல மாதங்கள் ஆயிற்று.. அதன் காரணமாகவே அவரைப்பற்றி நான் விளித்து எழுதும் ஒரு வார்த்தைகூட... அவர்மேல் நான்கொண்ட அன்பாலும், அவர் தனது பதிவுகளில் சிரிக்க வைப்பதையும் பலரிடம் சொல்லி சந்தோஷித்திருக்கிறேன். அவர் தனது இணைய இணைப்பு செயல்படவில்லை. எனச் சொல்லி ஒரு பதிவிட்டதைக்கண்டு.., இதைக்கூட ஒரு பதிவாக்கி விட்டாரே என்ற சந்தோஷத்தைத்தான் நான் பின்னூட்டமாக தெரிவித்திருந்தேன். ஆனால் ஏதோ அவரை காயப்படுத்த நான் முயல்வதாக ஒரு தோற்றம் உருவாகி விட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட மன வருத்தங்களுக்காக வருந்துகிறேன்.. எல்லாம் நன்மைக்கே..

      நீக்கு
    2. அன்பே சிவமே வந்து தன்னிலை விளக்கம் அளித்து விட்டார் ,அய்யா அவர்கள் ,நடந்ததை கெட்ட கனவாய் நினைத்து மறப்பதே நல்லது ! இன்னும் ஏன் மௌனம் அய்யா :)

      நீக்கு
    3. புரிந்து கொண்டேன். மன்னிப்பும் மறப்பும் தேவையில்லை. வரும் காலம் நன்றாக அமையட்டும்.

      நீக்கு
  4. இந்த குணத்தால் தான் தமிழனின் பெருமை உலகுக்கு தெரியாமல் மறைகின்றது...விட்டுவிடுங்கள் அப்பா

    பதிலளிநீக்கு
  5. இதையெல்லாம் பொருட்படுத்தவேண்டாம். தொடர்ந்து தங்களது பதிவுகளை எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. இதற்கெல்லாம் வருத்தப்படாதீர்கள். ‘பழுத்த மரம் தான் கல்லடி படும்’ என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல. நீங்கள் உங்கள் பாணியிலேயே பதிவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. நகைசுவயாகவே எடுத்துகொள்ளுங்கள் தாத்தா... பொருட்படுத்தவேண்டாம்

    பதிலளிநீக்கு
  8. மனதுக்கு பிடிக்காத குப்பையான விடயங்களை ஒதுக்கி தள்ளுதலே நலம் பயக்கும். பொருட்படுத்தாமல் உங்கள் வழியில் சிந்தனையை செலுத்துங்கள் ஐயா..!

    எனது வலைப்பூவில் ஒரு பயன்மிக்க பதிவு: உங்கள் கோப்புகளை இலவசமாக சேமித்திட பயன்படும் இணையதளங்கள் !

    பதிலளிநீக்கு
  9. உங்களுடைய மொபைலிருந்து கம்ப்யூட்டருக்கு இன்டர்நெட் கனெக்சன் கொடுக்கலாம்.

    இப்பதிவு உதவுமென்று நினைக்கின்றேன்.

    மொபைல் to கம்ப்யூட்டர் இன்டர்நெட் கனெக்சன் கொடுப்பது எப்படி?

    பதிலளிநீக்கு
  10. அன்பே சிவம் அவர்களின் பதிவை படித்துவிட்டு வருகிறேன்! அங்கு புரியவில்லை! இங்கு வந்தபின் தான் ஓரளவு புரிகிறது! விளையாட்டு வினையாகிவிட்டது! இங்கு அவரின் பதிவு http://sivasakth.blogspot.in/2015/11/blog-post_7.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >> சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களுக்கு வணக்கம். நானும், நீங்கள் சுட்டிய, அவரது (அன்பே சிவம்) பதிவினைப் படித்தேன். அங்கு அவரது பதிவினில் நான் இட்ட எனது கருத்துரை இது.

      /// உங்களது பதிவு மற்றும் சுட்டிக் காட்டிய சிறுகதை மூலம் ‘அன்பே சிவம்’ என்பதனை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். மேலும் அய்யா முனைவர் பழனி.கந்தசாமி அவர்களது பதிவிலும் தங்களது சூழலை நன்கு விளக்கி “எல்லாம் நன்மைக்கே” என்ற அமைதியோடு உங்கள் உண்மை உள்ளத்தை திறந்து காட்டி விட்டீர்கள். இனி இருவருக்குள்ளும் கருத்து பிணக்குகள் வராது என்று நினைக்கிறேன். எல்லாம் நன்மைக்கே! ///

      நீக்கு
  11. முனைவர் ஐயாவுக்கு வணக்கம் அவர் நகைச்சுவையாக எழுத நினைத்தது ஏதோ தவறுபோல் ஆகி விட்டது என்பது எனது கருத்து அவர் அப்படிப்பட்டவர் அல்ல என்பது 100க்கு100 உண்மை நல்ல மனிதர் அவர் மறந்து விட்டு பழையபடி பதிவுககளை தொடருங்கள்
    தமிழ் மணம் ஆறு மனமே ஆறு

    பதிலளிநீக்கு
  12. நகைச்சுவையாக எழுதினேன் என்று அவரே விளக்கம் கொடுத்ததால் விட்டுவிடலாம் அய்யா. அவருக்கு நகைச்சுவை எழுத வரவில்லை என்பதை அவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றுதா்ன் தோன்றுகிறது. அதற்காகத் தாங்கள் வருந்த் வேண்டியதில்லை.

    பதிலளிநீக்கு