வெள்ளி, 20 மே, 2016

திமுக வின் தோல்விக்கு காரணம் என்ன?

                               Image result for tasmac tamilnadu

சட்ட மன்ற தேர்தல் ஆரம்பிக்கும்போதே முக என்ன சொன்னார் என்பது நினைவு இருக்கிறதா?

நான் முதல் அமைச்சர் பதவி ஏற்றவுடன் போடும் முதல் ஆணை மது விலக்கு ஆணைதான் என்றார்.

அதைச் செய்வாறோ இல்லையோ, செய்து விட்டால் என்ன பண்ணுவது என்ற கவலை தமிழ்க் குடிமகன்கள் மனதில் தோன்றி அரித்துக்கொண்டே இருந்தது.

இந்த ஆளை விடக்கூடாது என்று அவர்கள் மனதில் தோன்றிய எண்ணமே திமுக வின் தோல்விக்கு வழி வகுத்தது.

வாழ்க டாஸ்மாக்.

13 கருத்துகள்:

 1. குடிகாரர்கள் தமிழ்நாட்டின் தலைஎழுத்தை நிர்ணயிக்கும் அளவுக்கு ,தமிழகம் தரம் தாழ்ந்து விட்டது என்பது உண்மைதான் !

  பதிலளிநீக்கு
 2. இதுவும் ஒரு முக்கியமான காரணம்தான் ஐயா

  பதிலளிநீக்கு
 3. அம்மாவுந்தான் படிப்படியாக என்று சொன்னார்!!

  பதிலளிநீக்கு
 4. உண்மைதான் அய்யா. வாக்கு எண்ணும் நாளான நேற்று நான் ஊரில் இல்லை. தஞ்சை மாவட்டத்தில் தனித்தீவாக இருந்த ஒரு குக்கிராமத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்று இருந்தேன். அங்கே இருந்த ’டாஸ்மாக்’ பிரியர்கள் வாக்கு எண்ணிக்கை நிலவரம் தெரிய ஆரம்பித்ததும் சொன்ன வாசகம் ‘இன்னும் ஐந்து ஆண்டுக்கு, டாஸ்மாக். கவலையில்லை’ என்பதுதான்.

  பதிலளிநீக்கு
 5. போட்டுத் தாக்குபவர்கள் திமுகவை போட்டுத் தாக்கிவிட்டார்கள் போல! ஹாஹாஹா!

  பதிலளிநீக்கு
 6. திமுக எங்கே தோற்றது தோற்கடிக்கப் பட்டது ஓட்டுகள் சிதறல் அதிமுகவின் வெற்றி யாயிற்று

  பதிலளிநீக்கு
 7. அவர்கள் மௌனப்புரட்சி செய்து விட்டார்களோ ?

  பதிலளிநீக்கு
 8. இப்படி வேறு ஒரு பார்வை இருக்கிறதா!

  பதிலளிநீக்கு
 9. காரணம் சரிதான் என்றே எனது கருத்தும்

  பதிலளிநீக்கு
 10. நீங்கள் சொன்ன இர்ஹி கருத்தை ஏன் முகநூலிலும் பதிவிட்டேன் தாத்தா http://ethilumpudhumai.blogspot.in/

  பதிலளிநீக்கு
 11. இந்தக்கூற்றும் சரிதான் ஐயா
  தமிழ் மணம் 6

  பதிலளிநீக்கு
 12. ம்ம்ம்ம்..... போதை தொடரப் போகிறதா... பார்க்கலாம்....

  பதிலளிநீக்கு