வியாழன், 12 மே, 2016

இவன்தான் பச்சைத் தமிழன்

இன்று முகப்புத்தகத்தில் ஒரு செய்தி பார்த்தேன். அதை கீழே கொடுத்துள்ளேன்.

அன்பாளர்களே,
அமெரிக்காவின் புகழ்பெற்ற நாசா நிறுவனத்தின் விஞ்ஞானிகள் அண்டார்டிகாவில் நடத்திய ஒரு ஆய்வில் திருவள்ளுவர் தனது கைப்பட எழுதிய திருக்குறள் பக்கம் ஒன்று கிடைத்துள்ளதாம். பனியில் புதைந்திருந்த இதை கார்பன் டேட்டிங் செய்து பார்த்தபோது இதன் வயது மூன்றாயிரம் முதல் நான்காயிரம் என்று தெரியவந்ததில் அவர்கள் வாயடைத்துப் போயிருக்கிறார்கள். இது வெளியே வந்தால் தமிழ்தான் உலகின் தொன்மையான மொழி என்று நிரூபணமாகிவிடும் என்பதால் நாசா அதை அழித்துவிட முயற்சி செய்தது. அங்கே பணி புரியும் தமிழக விஞ்ஞானி ஒருவர் உயிரைப் பணயம் வைத்து அதைப் படம் எடுத்து நண்பர் ஒருவருக்கு வாட்ஸ் ஆப் அனுப்ப அது இங்கே வெளியாகியுள்ளது.
நண்பர்களே,
நாசா நிறுவனம் இந்த ஆதாரத்தை சர்வர்களில் இருந்து அழிக்கப் பார்க்கும் என்பதால் இதைக் கண்ட மறுவினாடியில் ஷேர் செய்து விடவும். இதன் மூலம் தமிழின் அரிய பொக்கிஷத்தை நாம் அழியாமல் பாதுகாக்க முடியும். நன்றி.


இதைப்போல் ஒரு முட்டாள்தனம் தமிழனால் 

மட்டும்தான் செய்யவும் நம்பவும் முடியும்.


15 கருத்துகள்:

 1. -- ஐயா

  வேறு வேலை இல்லாமல் இந்த அறிய கண்டுபிடிப்பை உடனே பதிவாக்கி எங்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றி. அதுவும் காமத்துப் பாலில் உள்ள குறட்களை.

  Jayakumar

  பதிலளிநீக்கு
 2. அப்ப இதுவும் டுபாக்கூரா? அட கஷ்ட காலமே!

  பதிலளிநீக்கு
 3. இதை அந்தத் திருவள்ளுவரே நம்ப மாட்டார்! ஓலைச்சுவடி அல்லவா அவர் உபயோகித்திருப்பார்!

  பதிலளிநீக்கு
 4. //பின்னூட்டம் போடவேண்டும் என்கிற கட்டாயம் ஏதும் இல்லை. பின்னூட்டம் போட்டு விட்டு பதிலுக்கு நான் உங்கள் பதிவில் பின்னூட்டம் போடவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். என்னால் முடிவதில்லை. இன்னும் கொஞ்ச நாட்கள்தான். பொறுத்துக்கொள்ளுங்கள்.//

  ஹா... ஹா... ஹா... சரிதான். ஆனால் அந்தக் கடைசி வரியை எடுத்து விடுங்கள்.

  பதிலளிநீக்கு
 5. கடைசி பத்தியில் நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.

  பதிலளிநீக்கு
 6. தமிழன் என்றில்லை, ஃபேஸ்புக் நண்பர்கள் பலருக்கும் இந்த ஆர்வக் கோளாறு உண்டு. அதிலும் இந்த தமிழ் ஆர்வலர்களுக்கு அதீத ஆர்வம் உண்டு. அதில் ஒரு தமிழன் உங்களிடம் அகப்பட்டுக் கொண்டான் போலிருக்கிறது. (அரசியலில் ‘பச்சைத் தமிழன்’ என்றால் பெருந்தலைவர் காமராஜர் அவர்களைக் குறிக்கும்)

  பதிலளிநீக்கு
 7. நம்புவது மாதிரி இல்லையே...
  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
 8. இந்த மாதிரி வரும் செய்திகளுக்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டாமே. இதைப் படிக்கும்போது ;கேழ்வரகில் நெய் வடிகிறந்தென்றால் கேட்பவருக்கு மதி எங்கே போச்சு என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது

  பதிலளிநீக்கு
 9. இதனாலேயே நான் யாருடைய ஃபேஸ்புக் பக்கமும் செல்வதே இல்லை. நமக்குத் தெரிந்தவர்களாக இருப்பின், அவர்களுக்குப் பிறந்தநாள் என்று கேள்விப்பட்டால், அங்குபோய் வாழ்த்திவிட்டு வருவதோடு சரி.

  பதிலளிநீக்கு
 10. அந்தக் காலத்தில் அரேபிய எண்ணுருக்கள் ஏது? இது ஒன்று போதும் . அது டோபாக்கூர் என்று அறிய

  பதிலளிநீக்கு
 11. என்ன குறள்கள் என்று படிக்கவே முடியவில்லை ஜெயக்குமார் காமத்துப்பால் என்கிறார்ஒரு சில எழுத்துக்களே தமிழ்போலத் தெரிகிறது

  பதிலளிநீக்கு
 12. தமிழ் ஆர்வம் மெய்சிலிர்க்க வைக்கிறது அய்யா... இதைதான் ஆர்வக்கோளாறு என்று சொல்கிறார்கள் ... சிலர் இதை நம்பவும் செய்து பகிர்ந்துள்ளனர்

  பதிலளிநீக்கு
 13. இது போன்ற தரங்கெட்ட பரப்புரைகளைத் தமிழன் செய்ய மாட்டான் , தமிழின பகையுணர்வு திராவிடன் ,இனத்தின் , பிராமணாள் தான் செய்திருப்பான். மறத்தமிழன் தன் தமிழுக்கு இத்தகு இழி பரப்பு செய்யான்.

  பதிலளிநீக்கு
 14. இது போன்ற தரங்கெட்ட பரப்புரைகளைத் தமிழன் செய்ய மாட்டான் , தமிழின பகையுணர்வு திராவிடன் ,இனத்தின் , பிராமணாள் தான் செய்திருப்பான். மறத்தமிழன் தன் தமிழுக்கு இத்தகு இழி பரப்பு செய்யான்.

  பதிலளிநீக்கு