ஞாயிறு, 8 மே, 2016

வருகின்ற தேர்தலில் ஓட்டுப்போடுவது எப்படி?

                         
                                 Image result for tamilnadu election 2016 comedy

தமிழக சட்டசபைத் தேர்தல் வந்து கொண்டே இருக்கிறது. இன்னும் 10 நாளில் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகி விடும். இந்த தேர்தலில் எல்லோரும் ஓட்டுப்போடவேண்டும் என்று விடாது பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன.

தமிழகத்தின் எதிர்காலம் உங்கள் கையில் இருக்கிறது. ஆகவே உங்கள் ஓட்டை வேட்பாளர்களில் நல்லவருக்குப் போடுங்கள் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். இது ஒரு உண்மையான புத்திமதி.

எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் என்னவென்றால் வேட்பாளர்களில் நல்லவரை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதுதான். அனைத்து வேட்பாளர்களும் ஏதாவதொரு கட்சியின் சார்பில்தான் நிற்கிறார்கள். ஆகவே அந்தக்கட்சிகளின் தன்மை, அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் மக்களுக்கு அவர்கள் செய்த நன்மைகள் இவைகளை வைத்துத்தானே அந்தக் கட்சியின் தன்மை பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும். அப்படித் தெரிந்துதானே ஓட்டுப்போட முடியும்.

கட்சிகள் ஆட்சி செய்தபோது அவர்கள் மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்திருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். பல இலவசப் பொருள்கள் கொடுத்திருக்கிறார்கள். இப்போதும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இன்னும் இலவசங்கள் கொடுப்போம் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

இந்த இலவசங்களை எப்படிக் கொடுக்க முடியும் என்பது எனக்கு வேண்டாத சிந்தனை. ஒன்று மட்டும் நிச்சயம். யார் வந்தாலும் இலவசங்கள் தொடரும். ஆகவே யார் ஆட்சிக்கு வந்தால் என்ன? எனக்கு இலவசங்கள் வருமல்லவா?

இந்த சிந்தனையில் ஏதாவது தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் மக்களே. ஆகவே நான் ஓட்டுப்போட்டாலும் போடாவிட்டாலும் ஏதோ ஒரு கட்சி ஜெயித்து ஆட்சிக்கு வரும். அவர்கள் இலவசங்களை வாரி வழங்கப் போகிறார்கள். இதில் ஏதாவது லாஜிக் தவறு இருக்கிறதா?

தேன் எடுப்பவன் புறங்கையில் வழியும் தேனை, நக்கத்தான் செய்வான். அதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆகவே நான் ஓட்டுப்போட அவசியம் இருப்பதாக க்கருதவில்லை. நீயெல்லாம் ஒரு படித்தவனா, உன் ஜனநாயக உரிமையை இப்படிக் கேவலமாகப் பேசுகிறாயே, உனக்கு வெட்கம் மானம் இல்லையா என்று எல்லோரும் கேட்பீர்கள் என்று தெரியும்.

என் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொன்னால் நான் கட்டாயம் ஓட்டுப்போடுகிறேன். போட்டியில் இருக்கும் கட்சிகளில் யோக்கியமான கட்சி எது? இதற்கு யாராவது ஒருவராவது பதில் சொன்னால் போதும்.

இப்படிச் சிந்திப்பதால்தான் அனைத்துக் கட்சிகளும் படித்தவர்களை வெறுக்கின்றன.

                                   Image result for tamilnadu election 2016 comedy

28 கருத்துகள்:

 1. ஐயா

  பாமரர்கள்தான் வேட்பாளர் யார் என்று பார்க்காமல் கட்சிக்கு வோட்டு போடுவார்கள். கொஞ்சம் உங்களைப் போல் புத்தி உள்ளவர்கள் கட்சி பேதம் இன்றி சிறந்த வேட்பாளருக்குப் போடுவார்கள். ஆகவே கட்சி பார்க்காமல் தகுந்த வேட்பாளருக்கு வோட்டுப் போடுங்கள்.
  கிடைக்கும் இலவசங்கள் வேண்டாம் என்று கூறி விடுங்கள். வோட்டு நோட்டா(வாக) இருந்தாலும் சரி.
  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நோட்டா ஓட்டு போடுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. அதனால் எந்தப் பயனும் இல்லை.

   தகுந்த வேட்பாளர்கள் என்று யாராவது உண்டா?

   நீக்கு
  2. இப்படி சொல்ர நீங்க தான் காலை ஓட்டுப் போட்டு விட்டு விரற்கறையை போட்டோ எடுத்து மதியம் நான் ஓட்டுப் போட்டேன் என்று பதிவு இடுவீர்கள்.

   நீக்கு
 2. நன்றாகவே சொன்னீர்கள் நாலு வார்த்தை. பெரும்பாலும் படித்தவர்கள் நிலைப்பாடு என்பது இப்படித்தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. சார்... கட்சியைப் பார்க்காதீர்கள். உங்கள் தொகுதியில் நிற்பவர்களில் யார் மக்களுக்காக ஏதாவது செய்வார் என்று பாருங்கள். ஒன்றுக்கு மேல் இருந்தால், அவர்களில் யார் பணம் சேர்க்கமாட்டார்கள், ஊழல் செய்வது குறைவு என்று பாருங்கள். ஜெயிக்கராரோ இல்லையோ போய் ஓட்டுப்போட்டுவிட்டு வந்துவிடுங்கள். யார் வெற்றிபெற்றாலும், உங்கள் மனசாட்சிக்குப் பங்கம் வராமல் ஓட்டுப்போட்ட திருப்தி கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எல்லோரும் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைப் பிரகாரம்தான் நடப்பார்கள். இன்றுள்ள கட்சிகள் அனைத்தும் தங்கள் கல்லாவை எப்படி நிரப்புவது என்ற கொள்கையில்தான் இருக்கிறார்கள். இதில் மாற்றம் ஏற்படும் என்று நான் நம்பவில்லை. மொத்தத்தில் தேர்தல் என்பதே ஒரு அரசியல் நாடகமே!

   நீக்கு
 4. இப்படிச் சொன்னாலும், தேர்தல் அரசியல், 5 ரூபாய் முதல் போட்டு 500 ரூபாய் வரவு வைக்கும் தொழிலாகிவிட்டது. யாருக்கேனும் போய் ஓட்டுப்போட்டுவிட்டுவந்தால், யார் கேட்டாலும் அவருக்குத்தான் ஓட்டுப்போட்டேன் என்று சொல்லிவிடலாம். ஜெயித்த வேட்பாளருக்குக் கைகொடுத்துவிடலாம்.

  பதிலளிநீக்கு
 5. ஐயா உங்களது வோட்டை வீணாக்காமல் தொகுதியில் நிற்கும் சுயேட்சை வேட்பாளருக்கு போடுங்கள் அவர் வெற்றி பெற மாட்டார் என்பது உங்களுக்கும் தெரியும் அவருக்கே போடுங்கள் இலவசங்கள் வந்தால் வாங்கி கொள்ளுங்கள் காரணம் அதில் உங்களது பணம் மட்டுமல்ல அந்த கடனும் உங்கள் தலையில் விழத்தான் போகின்றது
  த.ம. 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி ஓட்டுப்போடுவதால் யாருக்கு என்ன பயன்?

   நீக்கு
  2. நிச்சயமாக பலன் உண்டு அது உங்களது வோட்டை மற்றவன் உபயோகப்படுத்துவதை தடுப்பது மட்டுமே...

   குறிப்பு - மக்கள் அனைவருமே தேர்தலைப் புறக்கணித்து மாற்றம் காணவேண்டும் இராணுவ ஆட்சி வரட்டுமே அதையும் பார்ப்போமே..

   நீக்கு
  3. யோசிக்கவேண்டிய பாய்ன்ட்தான்.

   நீக்கு
 6. வேட்பாளர்களில் நல்லவரை எப்படிக் கண்டுபிடிப்பது? கஷ்ட்டம்தான்.

  அவசியமான பதிவும் பகிர்வும்.

  கோ

  பதிலளிநீக்கு
 7. எல்லாவற்றையும் மிகவும் நன்றாகவே யோசித்து, மிகவும் நியாயமாகவேதான் எழுதியுள்ளீர்கள் என்றே எனக்கு நினைக்கத்தோன்றுகிறது.

  இதுவரை எந்தவொரு இலவசப்பொருட்களையும் நான் வாங்கவே இல்லை என்றாலும்கூட, என்னால் தங்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லவே முடியவில்லை.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 8. /தேன் எடுப்பவன் புறங்கையில் வழியும் தேனை, நக்கத்தான் செய்வான். அதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை/
  புறம்கையை மட்டுமா? அன்றி .....
  நீங்கள் மயங்குவது எரியும் கொள்ளியில் நல்ல கொள்ளியை எப்படி கண்டு பிடிப்பது என்பதே. உங்கள் நகரில் வளர்ச்சிப் பணிகள் நடந்திருக்கும். அவற்றில் உண்மையில் செலவான தொகையும் அரசு கணக்கு எழுதிய தொகையும் அனுமானித்து "தக்கவாறு" கண்டறியலாம்.
  தவிர நாளை நாம் தொகுதியில் காணும் குறை ஒன்றை நிவர்த்தி செய்ய வேண்டுமென்றால் எந்த வேட்பாளர் நாம் சொல்வதை செவி மடுப்பார் என்றும் தெரிவு செய்யலாம்.
  எப்படியாகிலும் யாருக்கேனும் வாக்களிப்பது என்பது "சும்மா" கிடப்பதைக் கட்டிலும் மேலானது .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போன தேர்தலில் ஜெயித்த சட்ட மன்ற உறுப்பினரை நான் இது வரையில் எங்கள் தொகுதியில் கண்டதில்லை. என் குறைகளை நான் வழக்கமாக எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் புளிய மரத்திடம்தான் சொல்வேன். அதுவும் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்கும்.

   நீக்கு
 9. கஷ்டமான கேள்வி. இந்தக் கேள்விதான் எங்களையும் படுத்துகிறது.

  பதிலளிநீக்கு
 10. உண்மைதான்! பெரிய கட்சிகள் அனைத்தும் ஏதேனும் ஒரு குறைபாட்டை கொண்டுள்ளன. புதியவர்கள் சுயேச்சைகளை ஆதரிக்கலாம் என்றால் அவர்கள் யாரென்றே தெரியவில்லை. எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி என்று எண்ணும் அளவிற்கே தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. நோட்டாவிற்கு போடுவதும் வீணானது. எனவே உங்கள் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். நல்லவர்கள் தேர்தலில் நிற்பதில்லை! நின்றாலும் முன்னிருத்தப்படுவது இல்லை.இது இரண்டு பங்காளிகளுக்கு இடையே ஆன தேர்தலாகத்தான் பல்லாண்டுகளாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 11. தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால் தேர்ந்தெடுத்தவன் முட்டாள்."

  - தோழர் ‪#‎பெரியார்‬
  தமிழச்சி - வாசகர் வட்டம்'s photo.
  தமிழச்சி - வாசகர் வட்டம்

  பதிலளிநீக்கு
 12. என்னதான் எழுதினாலும் வாக்களிப்பவர் நிலைப்பாடு சங்கடமானதுதான்

  பதிலளிநீக்கு
 13. போட்டியாளர்களில்
  சுமார் கெட்டவரையே தேர்ந்தெடுக்கும்
  வாய்ப்புத்தான் ஜனநாயகத்தில் நமக்கு இருக்கிறது
  அதைப் பயன்படுத்தலாமே

  கொலைகாரனுக்கு திருடன் தேவலாம்
  இல்லையா ?

  இப்படிச் சராசரியை மீறி சிந்திப்பவர்கள்
  எல்லாம் ஒதுங்கினால்
  கொலைகாரனே வெல்ல வாய்ப்பு இருக்கிறது

  அதற்காகவேனும் ஓட்டளிக்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்கிற மாதிரி வித்தியாசங்கள் இல்லை. தராசில் வைத்தால் எல்லோரும் சமமாகவே இருப்பார்கள்.

   நீக்கு
 14. குறைதளவு கெடுதல் செய்தவருக்கு வாக்களித்து அவரை நல்லவராக்க முயலலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா. என் அறுபது வருட ஓட்டுப்போட்ட அனுபவத்தில் சொல்கிறேன். தனிப்பட்ட சட்டசபை உறுப்பினருக்கு தனி அந்தஸ்து கிடையாது. கட்சியின் தலைமை என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்யவேண்டும். கட்சியின் தலைமைக்கு ஒரே குறிக்கோள். கட்சியை பலப்படுத்தவேண்டும். அதற்கு தலைமை பலமாக இருக்கவேண்டும். குடிமக்கள் என்ன ஆனாலும் அவர்களுக்கு கவலை இல்லை. நாய்களுக்கு எலும்புத்துண்டு போடுகிற மாதிரி சில இலவசங்களைக் காட்டினால் போதும். ஒருவரும் எதிர்த்துப்பேச மாட்டார்கள்.

   இந்த அரசியல் உங்களுக்குப் புரியவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. (பலம் என்பதற்கு "பணம்" என்றும் ஒரு அர்த்தம் உண்டு)

   நீக்கு
 15. தாங்கள் இளமையில் வளர்ந்த சூழலில், இன்று ஒரு சிறுவன் வளர்ந்தால், அவன் முதுமை அடையும் பொழுது தாங்கள் இன்றைக்கு சமுதாயத்தில் இருக்கும் அளவுக்கு வர வாய்ப்பு உள்ளதா? இல்லை என்று நினைக்கிறேன். இதற்குக் காரணம் நான் தப்பித்துக் கொண்டேன் என்று நினைப்பதுதான். நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்று முயற்சி செய்துதான் ஆகவேண்டும்.
  இல்லையேல் கொலை நடக்கிறது, கொள்ளை நடக்கிறது. எனக்கு என்னைக்கோ என்று புலம்பியபடிதான் இருக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு

 16. ஐயா! நீங்கள் வாக்களிக்க விரும்பவில்லை என்கிறபோது நான் சொல்வது ஒன்றுதான்.உங்கள் தொகுதியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களிலே எந்த வித குற்ற பின்னணி இல்லாமலும் படித்தவராகவும் இருந்தால் அவர் சுயேச்சையாக இருந்தாலும் வாக்களியுங்களேன். அவர் வெற்றிபெற வாய்ப்பு இல்லையென்றாலும் விரும்பியவருக்கு வாக்களித்தோமே என்ற மகிழ்ச்சியும், நாம் போடாத வாக்கை வேறொருவர் போடும் வாய்ப்பை தடுத்தோமே என்ற எண்ணமும் ஏற்படுமே.

  பதிலளிநீக்கு