ஞாயிறு, 22 மே, 2016

கஜானா காலி என்று புலம்ப முடியாது.

                                  Image result for கன்டெய்னர்

வழக்கமாக தமிழ் நாட்டில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைப்பார்கள். அப்படி ஒரு கட்சி பதவிக்கு வந்தவுடன் வைக்கும் முதல் ஒப்பாரி, சென்ற அரசு கஜானாவைக் காலி செய்து விட்டுப் போய்விட்டார்கள் என்பதாகத்தான் இருக்கும்.

ஆனால் இந்த முறை அம்மா அவர்கள் அப்படி பிலாக்கணம் வைக்க முடியாமல் போய்விட்டது. ஏனென்றால் கஜானாவும் அவர்களுடையது. காலி செய்ததும் அவர்களே. அப்புறம் எப்படி பிலாக்கணம் வைக்க முடியும்?

இந்த மாதிரி பணத்தை பல கன்டெய்னர்களில் வைத்து இருந்தால் அவைகளை கரையான் அரித்து விடாதா? இந்தக் கவலையில் எனக்கு இரவு முழுவதும் தூக்கம் வருவதில்லை. அதில் ஒரு சில கோடிகளை அப்படியே என் வீட்டிற்குத் தள்ளி விடக்கூடாதா? நானும் அவைகளின் மேல் சில காலம் படுத்துத் தூங்குவேன் அல்லவா? அம்மன்தான் கண் திறக்கவேண்டும் !

இப்படி தனிப்பட்ட கஜானாக்கள் இருக்கும்போது ரிசர்வ் வங்கி வேறு தனியாக கஜானாக்களை வைத்துப் பராமரிக்க வேண்டுமா என்பது என் இன்னொரு சந்தேகம். கஜானாக்களை பராமரிக்கும் வேலையை ஏன் தனியார்களுக்குக் கொடுக்கக்கூடாது? ரிசர்வ் பேங்க் கவர்னர் இந்த யோசனையை உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ் நாட்டில் நன்கு அனுபவப்பட்ட கஜானா பராமரிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

8 கருத்துகள்:

 1. ஹாஹாஹா! உண்மைதான்! எனக்கு கூட இத்தனை கோடிகள் இவர்களிடம் சாதாரணமாய் புழங்குகின்றதே! நம்மால் ஓர் நூறு ரூபாய் சம்பாதிக்க எவ்வளவு சிரமப்படுகின்றோம்? என்று சில சமயம் தோன்றுவதுண்டு!

  பதிலளிநீக்கு
 2. ஐயா அந்த கஜானா பராமரிப்பாளர்கள் கோவைக்காரர்களா ?
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 3. இதைப்படியுங்கள்
  https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&ved=0ahUKEwjb0LnN8u3MAhWIbj4KHb3-CB8QFggdMAA&url=http%3A%2F%2Ffletcher.tufts.edu%2F~%2Fmedia%2FFletcher%2FMicrosites%2FCost%2520of%2520Cash%2FIBGC%2520WP14-07%2520Ramesha%2520Bapat%2520Roy.pdf&usg=AFQjCNFXcNESQ0YOj2l4VJOR6ALFVV8wPQ&sig2=nKfpGykdKaWrG4zDzITAkg

  உங்கள் கவலை மாறும். (குறையும் / கூடும்?)

  பதிலளிநீக்கு


 4. 'கஜானா பராமரிப்பாளர்கள் ' வேலைக்கும் RESERVATION தகுதிகள் கண்டிப்பாககடைபிடிக்கப்
  படவேண்டும் ...
  மாலி

  பதிலளிநீக்கு
 5. சார்.. கவலைப் படவேண்டாம். ஆன்லைனில் டாஸ்மாக் விற்பனை கொண்டுவந்தால் போச்சு. எனக்குள்ள கவலையெல்லாம், ஜெ அவர்கள், பள்ளி, கோவில்கள், முக்கிய இடங்களுக்கு அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூடவேண்டுமே என்பதுதான். இதைச் செய்தால் அவரின் இமேஜ் அதிகரிக்கும். குடிப்பவர்கள், கடையை எங்கே வைத்தாலும் சென்று குடித்துவிடுவார்கள். வருமானத்துக்குக் குந்தகம் இருக்காது.

  "நானும் அவைகளின் மேல் சில காலம் படுத்துத் தூங்குவேன் அல்லவா?" - இதைப் படிக்கும்போது இறந்தவர்களுக்கான சாங்கியங்கள் செய்யும் வாத்தியார் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஒருவர் (பிராமின்) இறந்தபின்பு, அவரின் படுக்கையைச் சரிபண்ணும்போது பார்த்தால், அதில் 3 லட்ச ரூபாயை அடுக்கிவைத்து அதன்மேல் படுக்கையைப் போட்டுக்கொண்டு படுத்திருந்திருக்கிறார். அந்தப் பணத்தை வைத்துத்தான் கடைசி காரியங்களெல்லாம் செய்தார்களாம். (அதற்குப் பணமில்லாமல் இருக்கக்கூடாது என்றுதான் அவர் பணத்தை அடுக்கி அதன்மீது படுத்துக்கொண்டிருந்திருக்கிறார்)

  பதிலளிநீக்கு

 6. இப்போதும் (2011 க்கு) முந்தைய அரசின் செயல்பாட்டினால்தான் கஜானா காலி என்று சொல்லப்போகிறார்கள். நாமும் அதை கேட்டுக்கொண்டுதான் இருக்கப் போகிறோம்.

  பதிலளிநீக்கு