புதன், 22 ஜூன், 2016
ஒரு பரோபகாரியின் கதை
ஒரு ஊரில் இரு நண்பர்கள். ஆரம்பப் பள்ளியிலிருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். இருவருக்ம்கு பட்டப்படிப்பு முடிந்தவுடன் சென்னையில் வேலை கிடைத்தது. சில வருடங்கள் கழித்து இருவருக்கும் மணமானது. இரு குடும்பமும் அன்னியோன்னியமாக இருந்தன.
இந்நிலையில் ஒருவன் வீடு வாங்க ஆசைப்பட்டான். அந்த ஏரியாவில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு இருவாகிக்கொண்டு இருந்தது. அதில் இவன் ஒரு அபார்ட்மென்ட் பதிவு செய்தான். கையிலுருந்த சேமிப்பு பணத்தையெல்லாம் கொடுத்து விட்டு பிறகு பேங்க் லோன் அப்ளை பண்ணினான்.
பேங்க்கில் ஒருவர் கேரண்டி போடவேண்டும் என்றார்கள்.
நமது கதாநாயகன் தன் நண்பனைக் கேட்டான். அவன் அதற்கென்ன, கையெழுத்துதானே, போட்டால் போயிற்று என்று பேங்கிற்குப் போய் கையெழுத்து போட்டான்.
அபார்ச்மென்ட் கட்டிடம் வளர்ந்தது. மொத்தம் பதிமூன்று மாடிகள். ஒரு நாள் பெரிய புயல் காற்று, இடியுடன் மழை வந்தது. அந்தக் கட்டிடம் இடிந்து தரை மட்டமானது. அபார்ட்மென்ட் புக் பண்ணினவன் இதைக்கேட்டதும் மாரடைப்பில் இறந்து விட்டான்.
இப்போது அந்த பேங்க் கடனுக்கு யார் பொறுப்பு?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சாட்சி கையெழுத்து போட்டவர்தான் பொறுப்பு... அதுபோக ஏதாவது அவர் இன்சுரன்ஸ் வகையறாக்கள் வைத்திருந்தால் இவர் தப்பிப்பார் ... மவுளிவாக்கத்தை வைத்து எழுதவில்லை தானே ?
பதிலளிநீக்குஅதேதான்.
நீக்குபில்டர்ஸ் இன்சூரன்ஸ் செய்திருப்பார் ,வீட்டை ஹான்ட் ஓவர் செய்யும் வரை அவர்தான் பொறுப்பு !
பதிலளிநீக்குஇந்த மாதிரி பில்டிங்குகள் கட்டும்போது இன்சூரன்ஸ் எடுப்பார்கள் என்று தோன்றவில்லை. வீட்டை ஹேண்ட் ஓவர் செய்யவிட்டால் அவரை என்ன செய்து விட முடியும்? ரொம்பவும் கை மீறினால் இன்சால்வென்சி கொடுத்து விட்டுப் போகிறார்.
நீக்குகையெழுத்துப் போட்டவர்தான்
பதிலளிநீக்குபாவம்
துயரமான சம்பவம்தான். பாங்குகள் பெரும்பாலும் கடன் தொகையை ஒரே சமயத்தில் பட்டுவாடா செய்யாது. கட்டிடம் எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது என்று பார்த்து அதன்படி தவணை முறையில் கடனை பட்டுவாடா செய்வார்கள். சில பாங்குகள் முழுக்கடனையும் கொடுத்து இருக்கலாம். பெரும்பாலான பாங்க்களில் credit insurance உள்ளது (premium to be paid by the borrower). அது எடுத்திருந்தால் முழுக்கடனையும் இன்சூரன்ஸ் கம்பனியே கட்டிவிடும் (கடனாளி இறந்து விட்டதால்). கட்டடம் கட்டுபவரும் இன்சூரன்ஸ் எடுத்திருப்பார். அவரால் வீடு வாங்கியவர்கட்கு முழு பணத்தையும் திருப்பி தர முடியாவிட்டாலும் ஏதேனும் ஒரு தொகையை தர வாய்ப்பு இருக்கிறது. சட்டப்படி பார்த்தால் இறந்த கடனாளியின் சொத்தும், அது தீர்ந்தபின் ஜாமின்தாரரும்தான் பொறுப்பு.பாங்க்குகள் நோட்டீஸ் அனுப்பும் போதும் வழக்கு போடும்போதும் இருவரையும் சேர்த்துதான் போடுவார்கள். பெரும்பாலும் I think courts would take a lenient view. By the way is this a real case
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் செய்திகளின் அடிப்படையில் உங்களது புனைவுகள். நல்ல மார்க்கம்தான்.
பதிலளிநீக்கு// இப்போது அந்த பேங்க் கடனுக்கு யார் பொறுப்பு? //
வங்கிக் கடனைப் பொறுத்த வரையில், வீடு கட்டி முடித்தவுடன்தான் இன்சூரன்ஸ் தவணைத் தொகையே தொடங்கும்; அதிலும் பல இன்சூரன்ஸ் ஏஜென்சிகள் வீட்டுக் கடன் வாங்கியவரின் உயிருக்கு மட்டுமே பாலிஸிகள் கொடுத்து இருக்கும்; இயற்கை அழிவு அல்லது கட்டிடம் சேதம் போன்றவற்றிற்கு எடுத்து இருக்க மாட்டார்கள். (அபார்ட்மெண்ட்களுக்கு தனி விதிகள் (குரூப் இன்சூரன்ஸ்) இருப்பதாகக் கேள்வி.)
கட்டி முடிக்காத கட்டிடத்தின், கடன் தொகையைப் பொறுத்த வரையில், கடன் வாங்கியவர் பணம் கட்டா விட்டாலும், இறந்து விட்டாலும், சட்டப்படி ஜாமீன்தாரர்தான் பொறுப்பு. வங்கிகள் ஜாமீன்தாரரையே நெருக்கும். கட்டி முடித்த கட்டிடங்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து இருந்தால் ஜாமீன்தாரருக்கு நஷ்டம் ஏதும் இல்லை. எனவே ஜாமீன் கையெழுத்து போடும் விஷயத்தில் முன் ஜாக்கிரதை அவசியம்.
எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வு தரும் பதிவு. மவுலிவாக்கம் சம்பந்தப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
மவுலிவாக்கம் சமாச்சாரம் நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு பெரிய அடி. எப்படி மீள்வார்கள் என்று தெரியவில்லை. இரண்டாவது கட்டிடத்தையும் இடிக்க கோர்ட்டு உத்திரவிட்டுள்ளது. இதில் யாராவது ஜாமீன் கையெழுத்து போட்டிருந்தால் அவர்கள் கதி அதோகதிதான்.
நீக்குபாவம்.
பதிலளிநீக்குஇதிலிருந்து தெரிவது , யாருக்கும் ஜாமீன் கை எழுத்துப் போடக் கூடாது.. சரியா ...நீதி.....?
பதிலளிநீக்குபாய்ன்டப் புடிச்சிட்டீங்க !
நீக்குசரியாக சொல்லியிருக்கிறீர்கள்!
நீக்குகையெழுத்து போட்டவர் நிலை கஷ்டம்தான்!
பதிலளிநீக்குதங்கள் பதிவைப் பார்த்தவுடன் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருப்பர்.
பதிலளிநீக்குவிக்ரமாதித்தன் கதைகள் போன்று ஒரு தொடர் ஆரம்பித்திருக்கிறீர்கள். வேதாளம் ஒவ்வொரு கதையாக விக்ரமாதித்தனிடம் கூறி கடைசியில் ஒரு கேள்வியை வைத்து "இந்தக் கேள்விற்கு விடை தெரிந்தும் கூறாவிட்டால் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும் என்று பயமுறுத்தும். அதே போன்று நீங்களும் இந்தக் கதையின் நீதி என்ன என்று கேட்க ஆரம்பித்து விட்டீர்கள். தலை சுக்கு நூறாகும் என்று சொல்லாதது தான் பாக்கி.
பதிலளிநீக்குஎன் தலை வெடிக்காமலிருக்க நான் சொல்லும் நீதி "மண்ணின் தன்மையை ஆராயாமல் வீடு கட்டிய ஒப்பந்த தாரர் தான் குற்றவாளி". என் தலை தப்பிக்கட்டும்.
--
Jayakumar
நல்லதொரு கதை. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது....
பதிலளிநீக்குநல்ல விழிப்புணர்வு கதை....நீதி யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடக் கூடாது..
பதிலளிநீக்கு