வியாழன், 30 ஜூன், 2016
வேலையில்லாமல் கஷ்டப்படும் நபர்களுக்காக ஒரு கதை
முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு இருக்கும். நான் என் அலுவலகத்திற்குப் போகும் வழியில் ஒரு நாற்சந்தியில் ஒரு மூலையில் கொஞ்சம் இடம் விஸ்தாரமாய் இருந்தது. ஒரு நாள் அந்த இடத்தில் ஒரு சிறிய ஓலைப் பந்தல் 6 க்கு 6 அடி அளவில் போடப்பட்டு அதற்குள் ஒரு அடி உயரமுள்ள ஒரு வட்ட வடிவிலான கருங்கல் நட்டு வைக்கப்பட்டிருந்தது. ஆற்றுப் படுகைகளில் கிடைக்குமே அந்த மாதிரியான கல்.
அந்தக் கல்லுக்கு விபூதி பட்டை போட்டு சந்தனப்பொட்டு, குங்குமப் பொட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கல்லுக்கு முன் ஒரு உடைத்த தேங்காய், இரண்டு வாழைப் பழங்கள், ஒரு வாழைப்பழத்தில் இரண்டு ஊதுபத்திகள், தாம்பூலம் , ஒரு சிறிய பித்தளைச்சொம்பிற்கு வாயில் ஒரு மஞ்சள் துணியைக்கட்டி, நடுவில் கொஞ்சம் கிழித்து விட்டு, வைத்திருந்தது. இவைகளுக்கு முன்னால் ஒரு ஒல்லியான ஆசாமி காவி வேட்டி, துண்டுடன் உட்கார்ந்து ஏதோ புத்தகத்தைப் படித்தபடி இருந்தான்.
சரி ஏதோ பைத்தியக்காரன் போலிருக்குது என்று நான் முதலில் நினைத்தேன். ஆனால் போகப்போகத்தான் தெரிந்தது அவன் பைத்தியக்காரன் இல்லை, மற்றவர்களைப் பைத்தியம் பண்ண வந்தவன் என்று. கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கோயிலுக்கும் பக்தர்கள் சேர்ந்தார்கள். அந்த வழியில் போகும் மாட்டு வண்டிக்காரர்கள் அங்கு நின்று அந்த சாமியைக் கும்பிட்டு விட்டுப் போகத் தொடங்கினார்கள்.
இவ்வாறு பக்தர்கள் அதிகரிக்கவே அந்தப் பூசாரி பந்தலை விஸ்தரித்து சாமியை வலுப்படுத்தினான். ஒரு வருடம் சென்றது. முதல் விழாவை விமரிசையாகக் கொண்டாடினான். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டான். சாமியும் ஆசாமியும் நிரந்தரமாகி விட்டார்கள்.
அந்த ரோட்டில் பக்கத்து ஊரிலுள்ள செங்கல் காளவாய்களிலிருந்து செங்கல்களை ஏற்றிக்கொண்டு மாட்டு வண்டிகள் அந்த வழியாகப் போவது வழக்கம். இந்தப் பூசாரி அப்படிப் போகும் வண்டுகளிலிருந்து இரண்டிரண்டு செங்கல்கள் வாங்கிக் கொள்வான். இப்படியே செங்கல்களைச் சேகரித்தான். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சிமென்ட், மணல் ஆகியவைகளை வாங்கிக் கொடுத்தார்கள். சில மாதங்களில் ஒரு பத்துக்குப் பத்து கோவில் அங்கே உருவாகி விட்டது.
அந்த சாமி கேட்பவர்களுக்கு கேட்டதை எல்லாம் கொடுக்கும் சக்தி உள்ளது என்று புகழ் பரவ ஆரம்பித்தது. பலர் அந்தக் கோவிலின் நிரந்தர புரவலர்கள் ஆனார்கள். ஒவ்வொரு இந்துப் பண்டிகையையும் விமரிசையாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள். இப்படி அந்தக் கோவில் நிரந்தரமானதாக ஆகிவிட்டது. சமீபத்தில் அந்த வழியாகப் போனபோது கவனித்தேன். சாமிக்கு கருங்கல் தரை, வெள்ளிக் கவசம், உற்சவ வாகனங்கள் இத்தியாதிகளுடன் மிகவும் செல்வாக்காக விளங்கியது.
சாமிக்கே இப்படியென்றால் பூசாரியைப் பற்றிக் கேட்க வேண்டுமா? அவரும் பட்டில் காவி உடுத்துக்கொண்டு ரொம்பவும் சௌக்கியமாக இருந்தார்.
நம் இளைஞர்கள் பலர் படித்து விட்டு வேலை கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் இந்தக் கோவில் பூசாரியைப் பார்த்து கற்றுக்கொள்ளலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நல்ல ஐடியா தான்! :)
பதிலளிநீக்குஆகா
பதிலளிநீக்குஆனால் இது சரியான வழியாகத் தெரியவில்லையே ஐயா
உலகம் இப்படித்தானே போய்க்கொண்டிருக்குது?
நீக்குஎன் நண்பர் ஒருவர் இப்படியானதொரு கல்லைத்தான் போன வாரத்திலிருந்து தேடிக்கொண்டிருக்கிறார்
பதிலளிநீக்குஇப்படித்தான் மக்களின் நம்பிக்கையை காசாக்கிக்கொண்டு இருக்கிறார்கள் சிலர்.
பதிலளிநீக்குகுருட்டு அதிர்ஷ்டம் ரொம்ப நாளைக்கு உதவாது!
பதிலளிநீக்குஐயா! நான் தமிழகம் வந்த போது , இத்தொழில் சந்து பொந்தெங்கும் அமோகமாக இருப்பதைக் கண்ணுற்றேன். இப்போ இத் தொழில் உலகில் தமிழர் வாழும் இடங்களில் மெல்லச் சூடு பிடித்துள்ளது. கோவில் தொடங்குவதுடன், பிரபலங்கள் - நடிகர்கள், அரசியல்வாதிகள் போன்றோரையும் ஒரு தடவையாவது வந்து போக வைத்தால் , நம்பிக்கையாக மேலே வந்துவிடலாம்.
பதிலளிநீக்குபடத்தில் இருப்பது அந்தக் கோவிலா.?
பதிலளிநீக்குஐயா இதை நகைச்சுவையாக பார்க்காமல் கொஞ்சம் சிந்தித்தால் இது நடந்து வந்த உண்மைகளே...
பதிலளிநீக்குதமிழ் மணம் 3
மேல்மருவத்தூரும் இப்படித்தானே துவங்கியது. சாமி யாருக்கு வரம் கொடுத்ததோ இல்லையோ இந்த பூசாரி ஆசாமிக்கு நல்ல வரம் கொடுத்திருக்கிறது. ஆகவே சக்தி உள்ள சாமி தான். "தெய்வம் என்றால் அது தெய்வம்.வெறும் கால் என்றால் அது கல்" தான்.
பதிலளிநீக்கு--
Jayakumar
காஞ்சி மடமும் இப்படித்தான் ஆரம்பித்தது! அதன் உண்மையான பெயர் கும்பகோணம் மடம். ஒரு அறுபது எழுபது வருடம் முன்பு தான் கும்பகோணத்தில் இருந்து காஞ்சி இடமாற்றம் செய்தது...இதில் 90 விழுக்காட்டிற்கு மேல் தானம் செய்தவர்கள் பிராமாணர் அல்லதாவர். ஆனால், அதை manage செய்வது...நூறு சதவீதம் பிராம்னர்கள் தான்!
நீக்கு____________
கும்பகோணம் மடத்துக்குக் காஞ்சி காமகோடி பீடம் என்று பெயர் சூட்டியதும், கும்பகோண மடாதிபதி காஞ்சி பீடாதிபதியாகப் பட்டம் சூட்டியதும் ஒரு புரட்டு வேலைதான். தமிழ்நாட்டில் மோசடி செய்வதை 'கும்பகோண வேலை ' என்று கேலியாகச் சொல்வதுண்டு. இந்தப் பெயர் மாறாட்டத்தையும் கும்பகோண மடத்தின் 'கும்பகோண வேலை ' என்றுதான் சொல்ல வேண்டும்.
'சீனியர் ' சுவாமிகளின் இயற்பெயர் சுவாமிநாதன். இவர் 13.2.1907இல் மொட்டையடித்துக் கொண்டு, தண்டம், கமண்டலம், கஷாயம் தரித்துத் துறவியாகி சங்கர பீடத்துக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டாராம். இவருக்கு 9.5.1907இல் பட்டம் கட்டியதும் கும்பகோணத்தில்தான் என்பதை 'திவ்ய சரித்திரம் ' சொல்கிறது.
'காஞ்சி மடம் ' என்பது உண்மையில் கும்பகோண மடமே என்பதை 'மகாப் பெரியவர் ' எனப்படும் 'சீனியர் ' சுவாமிகள் தம் வாயாலேயே ஒப்புக் கொள்ளும்படியான ஒரு செய்தி 2004 திசம்பர் 3 தினமணி இணைப்பாகிய வெள்ளிமணியில் வந்துள்ளது.
ref: Thinnai
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20412091&format=html&edition_id=20041209
1. காஞ்சி மடத்தின் இன்றைய சொத்து மதிப்பு ரூ, 5,000 கோடி. 1990க்குப் பின் மடம் கல்வி வணிகத்தில் இறங்கியது. வேத பாடசாலைகள் மட்டுமல்ல, 38 சங்கரா பள்ளிக்கூடங்களும் மடத்தின் சார்பில் நடக்கின்றன. காஞ்சியிலிருக்கும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமி விஸ்வமகா வித்யாலயத்துக்கு அது தொடங்கி ஈராண்டுக்குள் (1993) நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதியைத் தந்தவர் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ்.
2. காஞ்சி மடம் பல மருத்துவமனைகளும் நடத்துகிறது. இவற்றில் ஒன்றாகிய 'சைல்டு டிரஸ்ட் ' மருத்துவமனையில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவது பற்றிக் கேட்டதற்கு ஜெயேந்திரர் சொன்னார், 'முதலீடு செய்த 9 கோடி ரூபாயை முதலில் எடுத்தாக வேண்டும். பிறகு தர்மம் செய்வது பற்றி யோசிக்கலாம். '
3. புதுவையில் ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளியின் தாளாளராயிருந்த வி. பாலசுப்பிரமணியம் கல்வி இயக்குநருக்கு 2004 ஜூனில் எழுதியதாவது: 'வணிக நோக்குடன் பள்ளி நடத்தப்படுகிறது. ஆனால் கிறித்தவர்களையும் முஸ்லீம்களையும் பள்ளியில் சேர்க்காமல் தவிர்க்கப்படுகிறது. சங்கராச்சாரியாரின் சகோதரர் திரு ராமகிருஷ்ணனின் பரிந்துரை பேரில் பொன்மலர் என்ற சஞ்சிகை ஒவ்வொரு மாணவர் மீதும் விற்பனை வளர்ச்சிக்காகவே திணிக்கப்படுகிறது. '
----
மேலும் படிக்க...
கும்பகோணம் மடம் என்கிற காஞ்சி மடம்
http://fakekanchimutt.blogspot.com/
கல் என்று திருத்திக் கொள்ளவும்.
பதிலளிநீக்குசுலப வியாபாரம்.
பதிலளிநீக்குமேலும் உண்மையை தெரிந்து கொள்ள...
பதிலளிநீக்கு1. The Illustrated Weekly of India, "The Weekly Cover Story" - K. P. Sunil, September 13, 1987.
2 a. The Truth about the Kumbhakonam Math, - Sri R. Krishnaswamy Aiyar and Sri K. R. Venkatraman, Sri Ramakrishna Press, Madurai, 1977.
b. Kanchi Kamakoti Math - a Myth - Sri Varanasi Raj Gopal Sarma, Ganga Tunga Prakashan, Varanasi, 1987. LC Call No.: BL1243.76.C62 K367 1987
http://www.advaita-vedanta.org/avhp/alt_hindu_msg.html
இவ்வாறாக பல இடங்களில் நடக்கின்றன. தங்களது கருத்தைப் பார்த்து, புரிந்து நடந்தால் சரி.
பதிலளிநீக்குஹஹாஹ்ஹ் ரொம்பவே ஈசியான பிசினஸ். இத்தனை எதுக்கு கல்லு கூட வேண்டாம் ஐயா...நீங்கள் கொஞ்சம் முடி வளர்த்துக் கொண்டு, பட்டையாக விபூதி குங்குமம் இட்டுக் கொண்டு ஒரு காவி வேஷ்டி, மேல் துண்டு அணிந்து ஒரு பார்க்கில் இல்லை கோயிலில் சென்று அமர்ந்து, கையில் ருத்ராஷ மாலை வைத்துக் கொண்டு அதை உருட்டிக் கொண்டு கண்ணை மூடினால் போதும், திறக்கும் போது நீங்கள் பிரமித்துப் போவீர்கள்... உங்கள் முன் பலர் நிற்பார்கள் உங்கள் வரம் வேண்டி.....
பதிலளிநீக்கு