திங்கள், 6 ஜூன், 2016

நேத்து ராத்திரி யம்ம்மா தூக்கம் போச்சுதே யம்ம்மா

                         

நான் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் தாத்தா காலத்தில் பக்கத்து கிராமத்தில் இருந்து கோயமுத்தூருக்கு குடியேறினவர்கள். அப்போது கோயமுத்தூரில் புதிதாக லேஅவுட் போட்ட ஆர்எஆஃபுரம் பகுதியில் ஒரு இடம் வாங்கி கிராமத்து பாணியில் ஒரு ஓட்டு வீடு கட்டி குடியிருந்தார்கள். நான் அந்த வீட்டில்தான் பிறந்தேன்.

நான் ஏழாவது படிக்கும்போதுதான் வீட்டிற்கு மின்சார கனெக்ஷ்ன் வந்தது. மின்சாரம் லைட்டுகளுக்கு மட்டும்தான். மின் விசிறிகளெல்லாம் பெரிய பணக்காரர்கள் வீட்டில்தான் இருக்கும். அப்போதெல்லாம் கோவையில் மே மாதம் மட்டும்தான் பகலில் கொஞ்சம் புழுக்கமாக இருக்கும். ஒரு மூங்கில் விசிறியை வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டினோம். இரவு வேளைகளில் புழுக்கமாக இருந்ததாக நினைவு இல்லை.

                               Image result for ஓலை விசிறி

நான் படித்து முடித்து வேலைக்குப் போய் பாட்டியுடன் தனிக்குடித்தனம் வைத்தபோதுதான் ஒரு மேஜை விசிறி வாங்கினேன். பிறகு கல்யாணம் ஆகி குடும்பம் பெரிதான பிறகுதான் சீலிங்க் பேஃன் வாங்கினேன். அதாவது என்னுடைய 35 வது வயதில்.

பிறகுதான் வசதிகள் பெருகின. மாடர்ன் டாய்லெட், கட்டில், பஞ்சு மெத்தைகள், இத்தியாதி. இவைகளுக்குப் பழகிய பிறகு எங்காவது உறவினர்கள் வீட்டிற்குப் போனால் இந்த வசதிகள் இல்லாவிட்டால் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். பழக்கம் மனிதனை எப்படி மாற்றுகிறது பாருங்கள்.

என்னுடைய 75 வது வயதில் வீட்டை மாற்றிக் கட்டின பிறகுதான் ஏசி மெஷின் மாட்டினேன். இப்படியாக படிப்படியாக வளர்ந்து இப்போது வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் எல்லா வேலைகளும் முடங்கிப்போய்விடுகின்றன.

அப்படித்தான் நேற்று இரவு மின்சாரம் போய்விட்டது. விடியும் வரை வரவில்லை. அவ்வளவுதான். நேற்று ராத்திரி யம்மா என்று பாடவேண்டியதாய்ப் போயிற்று,
  
                 

19 கருத்துகள்:

 1. மின்மிகை மாநிலம்
  தமிழகமாம்!

  கால மாற்றம்
  மனிதனை எளிதாக
  மாற்றக்கூடியதென
  உணர்த்தியிருக்கிறீர்கள்
  ஐயா!

  பதிலளிநீக்கு
 2. காலம் மாறினாலும் வசதி வாய்ப்புக்கள் மாறினாலும் ஐயாவிற்கு சிலுக்கு மேல ஒரு கண்ணு இருந்திருக்கிறது ! என்பது தெள்ளத் தெளிவாகி இருக்கிறது. கோபிக்காதீர்கள் சும்மா விளையாட்டுக்ககதான் சொல்கிறேன் .

  பதிலளிநீக்கு
 3. You have come this far. And you could have purchased inverter a heavy duty.... I think your next blog will be about the inverter.you are going to purchase. Advance greetings ........

  பதிலளிநீக்கு
 4. உங்களுக்கெல்லாம் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாமே . ஒரு இன்வெர்டர் வாங்கி விடுங்கள் எல்லாம் சரியாய்விடும் . வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வழக்கமாக நான் 500 யூனிட்டுக்குள்தான் மின்சாரம் உபயோகிப்பேன். பில 1300 ரூபாய்க்குள் வரும். இந்த மாதம் வெயில் கடுமையாக இருந்ததால் ஏசி உபயாகப்படுத்த வேண்டியதாய் போய்விட்டது. அப்படியும் 580 யூனிட்தான் ஆகியிருந்தது. அதற்கு பில் 2600 ரூபாய் வந்துள்ளது. 80 யூனிட் அதிகமாக உபயோகித்ததற்கு 1300 ரூபாய். ஒரு யூனிட் 16 ரூபாய் ஆகிறது.இது என்ன கணக்கோ? இந்த கரன்ட்காரன் கணக்கு எனக்கு ஒரு எளவும் புரியவில்லை. புரிந்து கொள்ள ஆர்வமும் இல்லை. இதில் எங்கே 100 யூனிட் இலவசம் ஒளிந்து கொண்டிருக்கிறது என்று என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. எப்படியோ நடக்கட்டும் என்று விட்டு விட்டேன்.

   நீக்கு
 5. திருமதி அபயா அருணா அவர்கள் சொல்லியிருப்பதுபோல் ஒரு மின்னோட்ட மாற்றி வாங்கி பொருத்தியிருந்தால் ;நேத்து ராத்திரி யம்மா’ எனப் பாடியிருக்கவேண்டாம். அதனாலென்ன! எங்களுக்குத்தான் சகலகலாவல்லவன் திரைப்படப் பாடலை கேட்க வழி செய்துவிட்டீர்களே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்கிறேன். 1300 வாட்ஸ் இன்வெர்டர் வாங்கி ஐந்து வருடங்களாகி விட்டது. இந்தப் பதிவர்களின் மனோபாவத்தை வெளிக்கொணறவே இந்தப் பதிவு போட்டேன். தலைப்பு கவர்ச்சியாக இருந்தால்தான் அதிக பதிவர்கள் படிக்க வருகிறார்கள் என்பது என் நீண்ட நாள் எண்ணம். அதைச் சோதிக்கவே இந்தத் தலைப்பு. இன்னும் இரண்டு நாள் கழித்து என் சோதனையின் முடிவை ஒரு பதிவாகப் போடுகிறேன்.

   நீக்கு
  2. பதிவுலக வாசகர்களின் நாடித்துடிப்பை சரியாகவே கணித்திருக்கிறீர்கள் ஐயா !

   நீக்கு
  3. தலைப்பை கவர்ச்சியாக போட்டதால் நான் வந்து பார்த்து ஏமாந்து போனேன் ஏதோ சிலுக்கு சமச்சாரம் கொஞ்சம் ஜிலு ஜிலு என்று இருக்குமென்று வந்தால் ஒரே இன்வெட்டர் சமச்சாரமாக இருக்குதே.. சிலுக்குவின் ரசிகன் என்ற முறையில் உங்களுக்கு ஒரு கண்டணத்தை பதிவு செய்துவிட்டு போகிறேன், இனிமே சிலுக்குவ பதிவிற்குள் கொண்டு வந்தா மேட்டர் சிலு சிலுவென்று இருக்கணமுங்க

   நீக்கு
  4. பார்த்தீங்களா, தலைப்பை அப்படி வச்சதனாலதானே நீங்க எல்லாம் உள்ள வர்ரீங்க !

   நீக்கு
  5. உங்கள் பதிவுகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பேன் ஆனால் நேரம் அதிகம் கிடைப்பத்தில்லை என்பதால் கருத்துக்கள் இடாமல் சென்றுவிடுவேன். நீங்கள் கவிதைகள் எழுதாத வரை பேரம் கிடைக்கும் போதெல்லாம் நிச்சயம் வருவேன்

   நீக்கு
  6. உரைநடையில் உள்ளதை பத்தி பிரித்து போட்டால் அதை கவிதை என்று சொல்லிக் கொள்கிறார்கள். எனக்கு அது வேண்டாம்.

   நீக்கு
 6. விசிறியும், பழைய ஓட்டுவீடும் அருமை ஐயா.
  த.ம.3

  பதிலளிநீக்கு
 7. நேற்று எங்கள் ஊரிலும் கரண்ட் போய்விட்டது! என்ன ஒற்றுமை! எங்களுக்கும் நேற்று சிவராத்திரிதான். இன்வெர்ட்டர் பழுதாகிவிட்டதால் ஒரு மணி நேரத்துக்கு மேல் தாக்கு பிடிக்க வில்லை!

  பதிலளிநீக்கு
 8. வசதிகள் பழகி விட்டால் அது கிடைக்காத போது எவ்வளவு கஷ்டம்....

  பதிலளிநீக்கு
 9. பாட்டைப் பார்த்ததும் வித்தியாசமான பொருண்மையிலான பதிவு என்று நினைத்தேன். படிக்கும்போதுதான் தெரிந்தது என்னவென்று.

  பதிலளிநீக்கு
 10. நீங்கள் தலைப்பு வைப்பதில் நிஜமாகவே கில்லாடி சார் அது போல பதிவும் அப்படித்தான்..ஆனால் தலைப்பு...அதனால் எளிதாக யூகிக்க முடிந்தது. வசதிகள் பெருகிவிட்டால் கஷ்டம்தான்...கிடைக்காத போது. சரி இன்வெர்ட்டர் ஆர்டர் கொடுத்தாச்சுனு சொல்லுங்க

  பதிலளிநீக்கு