திங்கள், 18 ஜூலை, 2016

கல்யாணம் செய்து கொள்வது அவசியமா?


                               Image result for south indian marriage photography

ஒரு மனிதன் எதற்காக கல்யாணம் செய்து கொள்ளவேண்டும்? பழங்காலத்தில் மனுதர்மத்தில் சொன்ன கிரகஸ்தாசிரமத்தைப் பேணவா? கிரகஸ்தன் என்பவன் சந்நியாசிகளுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் உணவு கொடுக்க வேண்டியது தர்மம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

இன்றுள்ள சந்நியாசிகள் ஆயிரக்கணக்கான கிரகஸ்தர்களுக்கு அன்றாடம்  அன்னதானம் செய்யுமளவிற்கு வசதி படைத்தவர்களாக இருக்கிறார்கள். ஆகவே இதற்காக கிரகாஸ்திரமம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் இல்லை.

அடுத்ததாக சந்தான விருத்திக்காக கிரகாஸ்திரமம் தேவை என்று சொல்லப்படுகிறது. சந்தானம் எதற்கு. ஏதோ கடைசி காலத்தில் பெற்றோர்களைக் காப்பாற்றுவார்கள் என்பதற்காக சொல்லப்பட்டது. இன்றுள்ள சந்தானங்கள் முக்கால்வாசிப்பேர் அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா என்று தங்கள் பிழைப்பைப் பார்க்கப் போய்விடுகிறார்கள். அவர்கள் எங்கே வயதான காலத்தில் பெற்றோர்களைப் பராமரிக்கப் போகிறார்கள்? இதுவும் ஒரு காரணமில்லை.

வாழ்கிற காலத்தில் ஒரு துணை வேண்டும் என்று பலரும் சொல்கிறார்கள். அது ஒரு அவசியம்தான். ஆனால் அதற்காக கல்யாணம் என்ற கால் விலங்கு அவசியம்தானா? காலம் மாறிக்கொண்டு வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று வளர்ந்து வரும் கலாச்சாரத்தில் ஒரு ஆணும் பெண்ணும் திருமணமில்லாமலேயே ஒன்றாக வாழலாம் என்ற கலாச்சாரம் வளர்ந்து வருகின்றது.

இந்தக் கலாச்சாரம்தான் சிறந்தது. மனதிற்குப் பிடித்தால் சேர்ந்து வாழலாம். பிடிக்கவில்லையா, எந்தச் சிக்கலும் இல்லாமல் பிரிந்து விடலாம். ஆகவே இனி வரும்காலத்தில் கல்யாணம் என்பது ஒரு அவசியமில்லாத சடங்காக மாறப்போகிறது. இந்த மாற்றத்திற்கு அனைவரும் தயாராகிக்கொள்ளுங்கள்.

11 கருத்துகள்:

  1. ஐயா

    மூணு (30,60,80 வயசுகளில்) கல்யாணம் பண்ணிட்டு 5 பெண்டாட்டியும் வச்சுக்கிட்டு இப்படி எழுதுவது நியாயமா? தமிழ்மணம் ஒண்ணாம் ரேங்குக்காக இப்படி "சமயலறை தேவையா? ஜோதிடம் பார்ப்பது எதற்க்காக? கல்யாணம் செய்து கொள்வது எதற்க்காக?" என்றெல்லாம் ஆரம்பித்து விட்டீர்களா? நல்ல வேளை "பெண்டாட்டி தேவையா?" என்று தலைப்பு வைக்கவில்லை.

    நல்ல காரியமாக உங்கள் வீட்டுக்காரம்மா கணினி பக்கம் வருவதில்லை. பார்த்து இருந்தால் நீங்கள் காலம் முழுதும் பட்டினி கிடக்க வேண்டியது தான். வெங்காய பஜ்ஜியும் சுட்ட கத்திரிக்காய் துவையலும் சாப்பிடமுடியாது. இப்போ புரிச்சுதா கல்யாணம் செய்வது எதற்கு என்று. வெங்காய பஜ்ஜி சாப்பிடுவதற்கு.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "தமிழ்மணம் ஒண்ணாம் ரேங்குக்காக"

      என்னங்க, என்னை இப்படி தப்பாப் புரிஞ்சிகிட்டீங்களே, நான் உலகத்த சீர்திருத்த எவ்வளவு கஷ்டப்படுகிறேன், பாத்தீங்களா?

      ஆமாங்க, அந்த தமிழ்மணம் ஒண்ணாம் ரேங்க் எப்பவாச்சும் எனக்கு கிடைக்குங்களா?

      நீக்கு
  2. அது என்ன, நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான் என்றே சொல்லாத தோன்றுகிறது!

    :))

    பதிலளிநீக்கு
  3. ///வரும்காலத்தில் கல்யாணம் என்பது ஒரு அவசியமில்லாத சடங்காக மாறப்போகிறது///


    அடக்கடவுளே...இந்த விஷயம் முன்னமே தெரிஞ்சிருந்தா கல்யாணம் பண்ணியிருக்க மாட்டேனே....????

    பதிலளிநீக்கு
  4. வெளிநாடுகளில் இது பரவலாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது ஐயா
    த.ம. 4

    பதிலளிநீக்கு
  5. //ஆகவே இனி வரும்காலத்தில் கல்யாணம் என்பது ஒரு அவசியமில்லாத சடங்காக மாறப்போகிறது. இந்த மாற்றத்திற்கு அனைவரும் தயாராகிக்கொள்ளுங்கள்.//

    ஒரு சில பேர் வேண்டுமானால் இந்த மாற்றத்திற்கு தங்களை உட்படுத்திக்கொள்ளலாம். ஆனால் பெரும்பான்மையோர் திருமண பந்த்த்தையே விரும்புவார்கள் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்பெண் உறவுகளின் எல்லைகள் மிகவும் விரிவானவை. நாம் அதன் ஒரு விளிம்பில் இருக்கிறோம். அடுத்த எல்லை எப்படி இருக்கும் என்பதன் ஒரு கற்பனையே இந்தப் பதிவு. ஆங்கிலத்தில் Extrapolation என்று ஒரு தத்துவம் இருப்பது உங்களுக்குத் தெரியும். நிகழ்வுகள் இப்படியே போய்கொண்டிருந்தால் அது எதுவரை போகும் என்று கணிப்பதே அதன் செயல்பாடு. அந்த வகையில் இன்று உலகம் போகிற போக்கை வைத்து எதிர் காலத்தில் என்ன நிகழலாம் என்று யூகிக்க முயன்றிருக்கிறேன்.

      நீக்கு
  6. இதை ஒரு முப்பது வருஷம் முன்னால சொல்லிக் கூடாதா, நீங்க?

    பதிலளிநீக்கு
  7. ’திருமணம் என்பது ஒரு கோட்டையைப் போன்றது. உள்ளே இருப்பவர்கள் வெளியே வர நினைக்கிறார்கள்; வெளியே இருப்பவர்கள் உள்ளே போக நினைக்கிறார்கள்” - யாரோ. - சுமார் 40 வருடங்களுக்கு முன்பு படித்த பொன்மொழி இது.

    பதிலளிநீக்கு
  8. திருமணம் என்பது ஒரு கோட்டையைப் போன்றது. உள்ளே இருப்பவர்கள் வெளியே வர நினைக்கிறார்கள்; வெளியே இருப்பவர்கள் உள்ளே போக நினைக்கிறார்கள்” - யாரோ. - சுமார் 40 வருடங்களுக்கு முன்பு படித்த பொன்மொழி இது.

    இதுவும் நல்லாருக்கு...
    அனுபவிப்பது எல்லாம் அனுபவித்து விட்டு அது தேவையில்லை என சொல்வது, குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போல்தான்... என்னசார் கருத்து கந்தசாமி சார்...

    பதிலளிநீக்கு