ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

ஒரு நேர்மறைப் பதிவு

                    Image result for சூரிய உதயம்
இன்று காலை எழுந்திருந்தேன். இப்போதெல்லாம் காலையில் எழுந்திருப்பதே ஒரு ஆனந்தம். ஆஹா, இன்னும் ஒரு நாள் நான் இந்த சுவர்க்க பூமியில் இருக்கப்போகிறேன் என்பதே ஒரு ஆனந்தமல்லவா?

பல் விளக்கி வந்தவுடன் சூடாக ஒரு காப்பி கிடைத்தது. காப்பி சூப்பராக இருந்தது. பிறகு நடைப் பயிற்சிக்குப் போனேன். தெருக்களெல்லாம் பளிச்சென்று சுத்தமாக இருந்தன. துப்புரவுத் தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

நாளை சுதந்திர தினமல்லவா? மக்களுக்கு தேச பக்தி பொங்கி வழிவதை என் இரு கண்ணாலும் பார்த்தேன்.

கார்க்காரர்கள் நடைப் பயிற்சிக்காரர்ளைக் கண்டவுடன் வேகத்தைக் குறைத்து தள்ளிப்போனார்கள். பைக்கில் போகிறவர்கள் சைக்கிள் வேகத்தில் போனார்கள். நடைப் பயிற்சி முடித்தவுடன் வீட்டிற்கு வந்து குளித்து விட்டு ரெடியானவுடன், எனக்கு மிகவும் பிடித்த இட்லி-சாம்பார் டிபன் ரெடியாக இருந்தது.

ஒரு அரை டஜன் இட்லிகளை சாம்பாருடன் விழுங்கி விட்டு அப்படியே சேரில் சாய்ந்தேன்.  அன்றைய பேப்பர்களைப் பார்த்தேன். எல்லாம் நல்ல செய்திகளாகவே இருந்தன. அதில் முக்கியமான செய்தி- ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத்தை அதிகரிக்கப் போவதான செய்தி. அப்படி வரும் அதிக ஓய்வூதியத்தை என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

 அப்படியே கொஞ்சம் தூங்கி விட்டேன் போல இருக்கிறது. வீட்டுக்காரி என்னை எழுப்பி சாப்பிடக்கூப்பிட்டாள். பகல் சாப்பாடு பிரமாதமாக இருந்தது. சாப்பிட்டு விட்டு கட்டிலில் படுத்து நன்றாகத் தூங்கினேன்.

மாலை 5 மணிக்கு விழித்தவுடன் நல்ல மணமான காப்பி வந்தது. குடித்து விட்டு கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து இந்தப் பதிவை தட்டச்சினேன். மனம் நிறைவாக இருந்தது.

நான் எதிர்மறையாளனாக மாறிவிட்டேன் என்று பலரும் குறைப்பட்டுக்கொண்டதால் இந்த நேர் மறைப் பதிவை எழுதினேன். இதிலும் போதுமான அளவு நேர்மறை இல்லையென்றால் பின்னூட்டத்தில் கூறவும். ஆனால் நான் அதற்கு ஒன்றும் செய்யமுடியாது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

          

19 கருத்துகள்:

  1. நேர்மறையோ வஞ்சப் புகழ்ச்சியோ எப்படியானாலும் இருக்கட்டும். கடைசியில் உள்ள காத்திருக்கும் பெண் படம் எதிர்மறை தானே? ஆமாம் அந்தப் பெண் யார்?

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த காத்திருக்கும் பெண் எதிர்மறை என்றால் எப்படி என்று கூறினால் அது யார் என்று கூறுகிறேன்.

      நீக்கு
    2. Jayakumar:
      எதிர்மறை என்றால் அதாவது, ஐயாவின் எதிர்த்த வீட்டில் இருக்கும் பெண், ஐயாவைப் பார்த்தவுடன் மறைந்து விடுவார்கள்!
      So, எதிர்மறை!

      நீக்கு
    3. என் வீட்டிற்கு எதிருல் ஒரு காலி இடம்தான் இருக்கிறது. அங்கு இரவில் ஏதாவது மோகினிப் பிசாசு வரலாம். நான் பார்த்ததில்லை.

      நீக்கு
  2. இது வெத்து மண்டை ஐயா... இதுக்கு நேர்மறையும் தெரியாது எதிர் மறையும் தெரியாது....... நல்லா திங்கத் தெரியும், அதனால இட்லி சாம்பார், காபி, லஞ் இதுகளை மட்டும் வாசிச்சேன் :P :P :P

    பதிலளிநீக்கு
  3. இந்த நேர்மறைப் பதிவுக்கு பொருத்தம் இல்லாமல் பெண் படம் போட்டது எதிர்மறை என்று எனக்கு தோன்றியது. மேலும் அப்படி நேர்மையான படம் போட வேண்டும் என்றால் வீட்டுக்காரம்மா படம் போட்டிருக்கலாம்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  4. நேர்மறையோ எதிர்மறையோ
    கடைசியில் குப்புறப்படுத்திருக்கும்
    பெண்ணைப் பார்க்கையில் நமக்கு
    ஓர் குதூகலம் ஏற்படத்தான் செய்கிறது. :)

    ஆமாம். அந்தப்பொண்ணு யாரு?????

    படுக்கையில் சுதந்திரமாகப் படுத்திருப்பதாலும்
    தலையில் சுகந்தமான மலர்கள் சூடியுள்ளதாலும்
    ஒருவேளை அவளே சுதந்திரதேவியாகவும் இருக்கலாம்
    என்ற சந்தேகமும் ஏற்படத்தான் செய்கிறது.

    யாராக இருந்தாலும் வாழ்க !

    இனிய சுதந்திரத்திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் படம் கூகுளிலிருந்து எடுத்தது. அநேகமாக கோபுலு வரைந்ததாக இருக்கலாம். அது யாரென்று அவரைக் கேட்கலாம் என்றால் அவர் வேற, திரும்பி வராத ஊருக்குப் போய்ட்டாராமே!

      நீக்கு
  5. "மாலை 5 மணிக்கு விழித்தவுடன் நல்ல மணமான காப்பி வந்தது. குடித்து விட்டு கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து இந்தப் பதிவை தட்டச்சினேன். மனம் நிறைவாக இருந்தது." - இதுக்கு அப்புறம் விடுபட்டுப்போன பத்தி கீழே கொடுத்துள்ளேன்.

    "மன நிறைவால், 'அப்பா...' என்று எண்ணிப்பார்த்தால், சன்னல் வழியாக சூரிய ஒளி என் முகத்தில் அறைந்தது. அடடா.. சீக்கிரம் எழுந்துக்கணும்னு வச்ச அலாரம் அடிக்காம சதி பண்ணிடிச்சே.. இப்போ 7 மணிக்கு எங்க நடைப்பயிற்சி போறது.. இன்னைக்குப் போகாமல் இருந்துடவேண்டியதுதான்."

    பதிவில் கொடுத்துள்ள படம் அருமை.ஐயா வயசு, நாளாக நாளாக, வருஷக்கணக்கில் குறைந்து வருவது தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் நல்லாத்தான் இருக்கு.

      வயசு ஒடம்புல இல்ல, தம்பி, மனசில இருக்கு.

      நீக்கு
  6. இந்த வார பாஸிட்டிவ் செய்திகளுக்கு எடுத்துக் கொள்ளலாமா என்று யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்றால் சொல்கிறேன் ஒரு சொல் வழக்கு நினைவுக்கு வருகிறது” வெச்சால் குடிமி, சரைத்தால் மொட்டை “ ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் கோபித்துக் கொள்ள என்ன இருக்கிறது. உண்மையைத்தானே சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு இந்த இரண்டும்கெட்டான் வேலையெல்லாம் பிடிக்காது. இந்தக் கோடி அல்லது அந்தக்கோடி. நடுவில சுவர் மேல் பூனையாக இருக்கப்பிடிக்காது.

      நீக்கு
  8. Mano Swaminathan of Muthusidhara appears to have drawn the picture
    http://muthusidharal.blogspot.com/2010/04/blog-post.html

    -Babu

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் 02.01.2011 முதல் மட்டுமே என் வலைத்தளத்தினில் தொடர்ந்து பதிவுகள் வெளியிட்டு வந்துள்ளேன்.

      என்னை வலைப்பதிவு எழுதுமாறு தூண்டி விட்டவர்களில் மிக முக்கியமான ஒருவரான திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்களின் பதிவுகளை நானும் 2011 முதல் தொடர்ந்து பார்த்து, படித்து, ரஸிப்பது உண்டு.

      இருப்பினும் அவர்களால் வரையப்பட்டு, தன் பதிவினில் வெளியிடப்பட்டுள்ள இந்தப்படம் 2010 ஏப்ரல் மாதமே (நான் வலைப் பதிவு உலகுக்கு வருவதற்கு முன்பே) வெளியிடப்பட்டுள்ளதால், இந்தப்படம் யார் வரைந்தது என என்னால் தங்களுக்குச் சுட்டிக்காட்ட முடியாமல் போய் விட்டது.

      எனினும் வெளியிட்டுள்ள தங்களுக்கும், உயிரூட்டமுள்ள அந்தப்படத்தை வரைந்துள்ள மிகப்பிரபல பதிவரான திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்களுக்கும் என் பாராட்டுகள் + வாழ்த்துகள் + நன்றிகள்.

      நீக்கு